“அபி வீட்டுக்கு வந்து இறங்கியதும்..அவ அம்மா… வாசல்லயே இருங்க ன்னு உள்ள போய் ஆராத்தி எடுத்துக் கிட்டு வராங்க”.
கௌசல்யா : “என்னாங்க நீங்க இப்படி வாங்க..ன்னு அவரை மட்டும் விட்டுட்டு அபி அர்ஜூன் ப்ரியாக்கு ஆராத்தி எடுக்குறாங்க”.
கௌசல்யா :” எல்லாரும் தாண்டி வாங்க”..
அபி : “வலது காலா மா”..
கௌசல்யா :” ஆமா டி..வாங்க”..
அர்ஜூன் : “அத்தை மாமா.. நான் கிளம்பறேன்”.
கணபதி :” இப்போ வா ?? உள்ள வாங்க மாப்பிள்ளை.. காலையில போவீங்க.. இந்த டைம்ல எப்படி”..
அர்ஜூன் : “பரவால்ல.. மாமா. நான் டாக்ஸி பிடிச்சு போய்டுவேன்”.
அபி : “இந்த டைம்ல டாக்ஸி யா.. வாங்க காலையில போவீங்க”.
அர்ஜூன் : “இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி”..
அபி :” அது லாம் ஒன்னும் இல்ல வாங்க..
ன்னு உள்ள போறா..அர்ஜூனும் போறான்”.
கௌசல்யா : “உட்காருங்க… நான் தோசை சுடுறேன்”.
அர்ஜூன் :” எனக்கு வேண்டா அத்தை..அன் டைம்ல லா நான் சாப்பிட மாட்டேன்”.
ப்ரியா “: வரும்போதே சாப்பிட்டிங்களா” ??
அர்ஜூன் :” இல்ல ப்ரியா”..
அபி : “அப்பறம் பசிக்காதா” ??
அர்ஜூன் : “நோ”..
அபி : “ஓ.. நான் லா அப்படி இல்ல பா..எந்த டைம்லா பாக்க மாட்டேன். பசிச்சா ஃபூல் லா சாப்பிடுவேன்”.
ப்ரியா : “ஆமா மாமா.. நடுராத்திரியில் போய் மாதிரி முறுக்கு எடுத்து சாப்பிடுவா” ??
அபி :” ஏய்..உன்ன கேட்டாங்களா” ??
கௌசல்யா : “அவ அப்படி தான் மாப்பிள்ளை..பசி தாங்க மாட்டா..அதே சமயம் நான் தூங்கிட்டா என்னை எழுப்ப மாட்டா.. ஸ்நாக்ஸ் இருந்தா அதை சாப்பிடுவா..அது இல்லன்னா பாவம் தண்ணீயை குடிச்சுட்டே இருப்பா”.
அர்ஜூன் :” ம்ம்”…
அபி :” டிவி பாக்குறீங்களா” ??
அர்ஜூன் :” ம்ம் பாக்கலாம்..ஆன் பண்ணு”..
ப்ரியா போய் ஆன் பண்றா…
80′ ஸ் சாங்ஸ் போய்ட்டு இருந்தது..
பூவே செம் பூவே…உன் வாசம் வரும்..வாசல் என் வாசல் உன் பூங்கா வனம்……….நீ தான் ஒரு பூவின் மடல்…..பாட்டு கேட்டுட்டு பார்த்துக்கிட்டு இருக்கும் போது..அந்த சாங் முடியும் போது அபி தூங்கிட்டா.. ப்ரியாவும் தூங்கிட்டா..
அர்ஜூன் : “ஹே..ஒரு சாங் தான்.. அதுக்குள்ள தூங்கிட்டிங்க”..
கௌசல்யா : “அவங்க அப்படி தான் மாப்பிள்ளை.. வாங்க சாப்பிடலாம்.”
அர்ஜூன் : “இல்ல அத்தை..வேண்டா”..
கணபதி : “சரி கொஞ்சமா பால் சாப்பிடுங்க”..
அர்ஜுன் : “ம்ம் சேரி மாமா”..
கௌசல்யா : “பால்ல அடுப்புல வைச்சுட்டு ப்ரியா வை எழுப்புறாங்க..அவ தூங்கிட்டே சாப்பிடுறா”..
“அர்ஜூன் அபியை எழுப்ப போறான்”.
கௌசல்யா : அவ எழுப்பாதீங்க மாப்பிள்ளை..அவ எழ மாட்டா..
அர்ஜூன் :” அப்போ அவளுக்கு சாப்பாடு”..
கணபதி :” நீங்களே பாருங்க..என்ன நடக்கும்ன்னு”…
அர்ஜூன் :” அப்படி என்ன நடக்கும்”.
ப்ரியா :” ஹா..எங்க அம்மா ஊட்டி விடுவாங்க”.
அர்ஜூன் :” அதுக்கு அவ எழுந்திருக்கணும் இல்ல”..
ப்ரியா : “இவ எழ மாட்டா”..
அர்ஜூன் : “அப்பறம் எப்படி”..
ப்ரியா : “அதுக்கு தான்..வைட் பண்ணுங்க..மாமா”..
“கௌசல்யா ஒரு கைல பால் டம்ளர் , ஒரு கையில ப்ளேட் எடுத்துக் கிட்டு வராங்க”..
“பாலை அர்ஜூன் கிட்ட கொடுத்துட்டு அபி பக்கத்துல உட்காரு ராங்க..
அர்ஜூன் என்ன பண்ண போறாங்கன்னு பாக்குறான்..
கௌசல்யா கொஞ்சமா தோசையை எடுத்து அபி வாயில கொஞ்சம் கஷ்டப்பட்டு திணிக்குறாங்க..
அர்ஜூன் : இப்படி வைச்சா அவ எப்படி சாப்பிடுவா அத்தை..
கௌசல்யா : சாப்பிடுவா மாப்பிள்ளை..
அவங்க சொன்ன மாதிரி…அபி வாய் மட்டும் அசைந்தது..
அர்ஜூன் கண்ணை அகல விரிச்சு பாக்குறான்..
ப்ளேட் ல இருந்த ஃபூல் தோசையும் காலி…
அர்ஜூன் : தூங்கிட்டே சாப்பிட்டுட்டா..
கணபதி : அவ குழந்தையா இருக்கும் போது அதிகம் சாப்பிட மாட்டா..அப்போல அவ தூங்குன்ன அப்பறம் இப்படி தான் ஊட்டி விடுவோம்..அது இன்னமும் அப்படியே போய்ட்டு இருக்கு.
அர்ஜூன் : அபி உங்களுக்கு ரொம்ப செல்லம் போலா இருக்கே..
ப்ரியா : ஆமா மாமா.. நான் தானே சின்ன பொண்ணு..ஆனா இவங்களுக்கு இன்னமும் இவ தான் செல்லம்.
கணபதி : ப்ரியா.. நீயும் தான் டா செல்லம்.. இப்போ போய் தூங்கு.
ப்ரியா உள்ள போறா..
கணபதி : எங்களுக்கு கல்யாணம் ஆகி 4
வருஷத்துக்கு அப்புறம் தான் அபி பொறாந்த மாப்பிள்ளை..அதானால எங்களுக்கு அவ கொஞ்சம் ஸ்பெஷல்..அவ வந்த அப்பறம் தான் எங்க வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைச்சாது… இப்போ தான் அவளை கையில வாங்குன்ன மாதிரி இருக்கு.. அதுக்குள்ள வளர்ந்துட்டா… எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவ முகத்தை பார்க்கும் போது எல்லாம் காத்தா பறந்துரும்..
அர்ஜூன் : ஃபீல் பண்றீங்களா மாமா…
கணபதி : இல்ல இல்ல மாப்பிள்ளை..சும்மா சொன்னேன்.
அர்ஜூன் : எதுக்கு மாப்பிள்ளை மாப்பிள்ளை ன்னு சொல்றீங்க..உரிமையா பேரு சொல்லுங்க மாமா..
கணபதி : முறைன்னு இருக்கு இல்ல பா..
அர்ஜூன் : இல்ல எனக்கு நீங்க பேரு சொல்லி கூப்பிட்டா தான் பிடிக்கும்.
கணபதி : சரி பா.. அப்படியே கூப்பிடுறேன். இப்போ வாங்க தூங்குவீங்க..
கௌசல்யா : வா பா.. போலாம் ன்னு அபி ரூம்க்கு கூட்டிட்டு வராங்க..
இது அபி ரூம் தான் பா.. நீங்க இங்க தூங்குங்க..
அர்ஜூன் : அப்போ அபி..
கௌசல்யா : அவதான் கீழே சோஃபா ல தூங்கறா இல்ல.. நீங்க இங்க தூங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போறாங்க..
அர்ஜூன் ரூம்மை பாத்துட்டு பெட் ல உட்காருரான்.
நல்லா தூங்குறா..இதுக்கு எதுக்கு நான் இங்க இருக்கணும்..லூசு.. இருங்கன்னு சொல்லிட்டு தூங்குறா..
இவளை வைச்சுட்டு நான் என்ன தான் பண்றது..ஒரு லவ் யூ கூட சொல்ல மாட்டிக்குறா…அச்சோ என் நிலைமை இப்படி ஆகிடுச்சே..நடு ராத்திரியில் புலம்ப விட்டாளே..என்ன டா அர்ஜூன் உனக்கு இப்படி ஒரு சோதனை யா ??
ன்னு ரூம் ல என்ன இருக்குன்னு பாக்குறான்..
டேபிள் மேல அபி வரைஞ்ச ட்ராயிங் புக் இருக்கு..
எடுத்து பாக்குறான்..
பரவாயில்லையே ரொம்ப நல்ல வரையுறா…செமயா இருக்குன்னு அடுத்து அடுத்து பாத்துட்டு வரான்.
கடைசி பேஜ்…
அப்படியே ஷாக் ஆகிட்டான்…அவன் கண்ணை அவனாலயே நம்ப முடியலை..
அர்ஜூனை தான் வரைஞ்சு இருந்தா.. அப்படியே தத்ரூபமா…
கீழே மை ஹீரோ ன்னு இருந்தது..
அர்ஜூன் : அப்போ உன் மனசுல நான் லைட்டா இல்ல..சேர் போட்டே உட்கார்ந்து இருக்கேன் னா… இரு டி உன்னை என்ன பண்றேன்னு மெல்ல கதவை திறந்து யாராவது இருக்காங்களான்னு பாத்து பாத்து பூனை மாதிரி ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு வரான்.
தொடரும்..
