அத்தியாயம் 24

அத்தியாயம் 24

“ரொம்ப அருமையான பொண்ணுடா அவ அப்பேர்ப்பட்ட பெண்ணை இந்த உலகத்தில் நீ எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டாள்.. ரொம்ப அன்பான அமைதியான பொண்ணு.. யாரையும் வெறுக்க தெரியாதவள்.. ஆனால் கொஞ்ச நாளாக அவள் கண்ணில் வெறுப்புணர்ச்சியை பாக்குறேன்.. அதுக்கு காரணம்… “, என்று சொல்லிய வசுந்தரா.. கூர் விழிகளால் தீரனை ஒரு பார்வை பார்த்தார்..!!

எதற்காக அம்மா இப்படி நம்மை பார்க்கிறார் ஒருவேளை அதற்கு காரணம் நான் தான் என்று சொல்லப் போகிறாரோ என்று அவன் முழுதாக யோசித்துக் கூட முடிக்கவில்லை அதற்குள் அவர்..

” இதுல என்னப்பா சந்தேகம் ?? அந்த வெறுப்புணர்ச்சிக்கு காரணமே நீதான்.. என்ன ஆச்சரியமா பாக்குற உனக்கு தெரியாதா?? அமைதியா நிதானமாக அவ வாழ்க்கை போயிட்டிருந்திருக்கும் நீதான் அதை வந்து கெடுத்துட்ட அப்படின்னு நான் சொல்லல ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நிம்மதியா தூங்கி எழுந்துட்டு இருந்தா அவளுடைய வாழ்க்கையில், திருமணத்திற்கு முன்பு..

  உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகு அவ வாழ்க்கையும் நல்லா இருக்கும் நீயும் நல்லா இருப்பேன்னு நினைச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சேன்.. ஆனால் தினம் தினம் அவள் கண்ணிலிருந்து வரும் கண்ணீர் சோகமான முகபாவனை இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எடுத்த முடிவு தவறோ அப்படின்னு எனக்கு தோணுது.. அவளுடைய இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் நிச்சயமா இந்த அளவுக்கு பொறுமையா இருந்திருக்க மாட்டா.. ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் அதை அவளே முழுசா உணரவில்லை அதை உணர்வதற்குள்ளாகவே அவளுடைய மனதை நீ காயப்படுத்திட்ட..

  அதுக்கு உதாரணம், அன்னைக்கு அவள் உன்னை நினைத்து சந்தோஷப்பட்ட விஷயங்கள் தான்..

ரொம்ப சின்ன விஷயம் தான்.. அவளுக்கு உடம்பு சரியில்லாத போது நீ பார்த்துகிட்ட அதை நான் அவளிடம் சொன்ன போது அவ முகத்தில் தென்பட்ட சந்தோஷம் பரவசம் இருக்கே..அத என்னால இப்ப கூட உணர முடியுது..

நிச்சயமா அவளுக்கு உன்னை பிடிக்கும்.. அதுக்கான முயற்சிகள் நீ எடுத்தா நிச்சயமா நீங்க உங்க வாழ்க்கையில சந்தோஷமா இருப்பீங்க.. எனக்கு தெரிஞ்சு இவளை விட பொருத்தமான ஒரு பொண்ணு உனக்கு இந்த உலகத்தில் கிடைக்க வாய்ப்பில்லை.. ஏற்கனவே இந்த வீட்டில் நான் தனிமையில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன் இப்போ மருமகள் என்கிற ஸ்தானத்தில் எனக்கு ஒரு மகள் கிடைச்சிருக்கா.. அவள் முகத்தில் நான் எப்பவும் சந்தோஷத்தை மட்டும் தான் பார்க்க நினைக்கிறேன்.. இனிமேலாவது நீ அவ கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்காமல் இரு.. அவ ரொம்பவே பாவம் அவளுக்குன்னு இந்த உலகத்தில் யார் இருக்கா ??

அப்பா மட்டும்தான் இருக்காரு.. அவரும் அவள் மேல எந்தவித அக்கறையும் காட்டுவதில்லை.. இப்படி யாருடைய அன்பும் ஆதரவும் இல்லாமல் தனித்து நிற்கிற ஒரு பெண்ணோட மனச மேலும் மேலும் நீ நோகடிக்கணுமா ??

ஏற்கனவே இந்த சமுதாயத்தால பல அடிகளை அவள் வாங்கிருப்பாள் பல விதங்களில் பல சூழ்நிலைகளில்.. அதை எல்லாம் தாங்கி, தாண்டி தானே இப்போ உன்னுடைய மனைவி என்கிற பதவியில் வந்து நிற்கிறாள்.. அப்பவும் அவளுக்கு நீ நிம்மதியை கொடுக்காமல் கஷ்டத்தை தான் கொடுக்கணுமா ஏற்கனவே அடி வாங்கிய பாம்பை மீண்டும் மீண்டும் அடிப்பதில் எந்த வித அர்த்தமும் இல்லையே.. நான் சொல்றது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் முடிந்தால் அவளுக்கு நீ ஆதரவாக இருக்க பாரு இல்லையா அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் ஒதுங்கியாவது இரு.. எனக்காக ஏதாவது பண்ணனும்னு நினைச்சா இதை மட்டும் பண்ணு தீரா.. 

மாத்திரை மருந்துகளால் என்னுடைய மனமும் உடலும் சரியாகாது.. சரியான அக்கறையும் அன்பும் கிடைக்காத பட்சத்தில் மனிதர்கள் சோர்வடைகிறார்கள், எதிலும் நாட்டம் இல்லாமல் தோய்ந்து போய் விடுகிறார்கள்.. ஏற்கனவே நான் அந்த நிலையில் தான் இருக்கிறேன் தயவு செஞ்சு இன்னொரு வசுந்தராவை நான் இந்த வீட்டில் பார்க்க விரும்பல.. அது உன்னுடைய கையில் தான் இருக்கு “, என்று கூறிவிட்டு அவர் எழுந்து சென்று விட்டார்.

ஆனால் அவனுக்கு தான் எந்த பேச்சும் வரவில்லை..

யாரையும் நோகடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அவன் இதுவரை வாழ்ந்தது கிடையாது.. ஆனால் , தன்னை எதிர்த்து நிற்கும் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவனுடைய ஆழ்மனதில் அழுத்தமாக படிந்திருந்தது.. 

இப்பொழுதும் அதேதான் தோன்றுகிறது தன்னை எதிர்த்து தன்னிடம் நேருக்கு நேராக நின்று தைரியமாக பேசிக் கொண்டிருக்கும் தன் மனைவி மித்ராவை அவன் வீழ்த்த நினைக்கிறான்.. 

எவனோ ஒருவனிடம் சிரித்து பேச தோன்றுகிறது அவளுக்கு ஆனால் கட்டிய கணவனிடம் புன்னகைக்க கூட அவளுக்கு இதழ்கள் வலிக்கிறது என்றால் அந்த அளவிற்கு நான் மோசமானவனா?? என்கிற கேள்வி சிறிது நாட்களாகவே அவன் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..

இப்பொழுது வசுந்தரா பேசிவிட்டு போன பிறகு அவனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை எண்ணங்கள் அனைத்தும் உறைந்து போனது போல் ஆகிவிட்டது..!!

“அந்த அளவிற்கு நான் வில்லன் போல் நடந்து கொள்கிறேனா??”, தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டான் அவன்.

“இதில் என்ன சந்தேகம் ?? நீ பக்கா வில்லன்.. விருப்பம் இல்லன்னா, பொண்டாட்டியாகவே இருந்தாலும் அவளை நெருங்க கூடாது என்று நினைப்பவன் தான் உண்மையான ஆண்மகன்.. ஆனால் நீ அவளை அப்படியா நடத்துற உனக்கு விருப்பம் இல்லனாலும் பரவாயில்லை என்னுடைய விருப்பத்துக்கு நீ இணங்க வேண்டும் என்பது போல் தானே தினமும் அவளை பாடாயப்படுத்துகிறாய்.. ஒரு நாளாவது அவளுடைய விருப்பத்திற்கு நீ இடமளித்திருக்கிறாயா?? என்று அவனுடைய மனசாட்சியே அவனிடம் கேள்வி கேட்டது..

தன் அன்னை பேசிய பேச்சிருக்கும் அவனிடம் பதில் இல்லை.. அவனுடைய மனசாட்சி கேட்ட கேள்விகளுக்கும் அவனிடத்தில் பதில் இல்லை..!!

முதல்முறையாக தோற்றுப் போனது போல உணர்ந்தான் ஆகர்ஷ தீரன்.

இதுவரை அவன் வாழ்வில் சந்தித்திராத ஒரு சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.. இதை எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை..

யாரும் அவனிடம் சண்டை போடவில்லை, எதிர்த்து நிற்கவில்லை, நியாயம் கேட்டு தர்க்கம் செய்யவில்லை..

ஆனால் அவனுடைய அம்மாவும் சரி மனைவியும் சரி அமைதியாக இருந்து அவன் மனதிற்குள் பல மாற்றங்களை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள்..!!

யாரிடமும் தலைவணங்கி போகாதவன் முதல் முறையாக தலைகுனிந்து நடந்து சென்றான்..

வாழ்க்கையில் வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்தித்தவனால் சூழ்நிலையை தாராளமாக எதிர்கொள்ள முடியும்..

ஆனால் வெற்றிகளை மட்டுமே சந்தித்தவனுக்கு தோல்வியை முதல்முறையாக சந்திப்பதற்கு கூட மாபெரும் அச்சம் மனதில் உண்டாகும்..

தோல்வி என்கிற சொல்லை கேட்டாலே அலர்ஜி தான் ஏற்படும்.. இப்பொழுது தீரன் அந்த நிலையில் தான் இருந்தான்..

எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றம் இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வந்தவன் முதல்முறையாக அகமித்ரா விஷயத்தில் தடுமாறி போய்விட்டான்..!!

அலுவலகத்திலிருந்து முக்கியமான மீட்டிங் இருப்பதாக கால் வரவும் அதைக் கூட ஏற்காமல் கட் செய்து விட்டான்..

அலுவலக விஷயங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நேராக காரை எடுத்துக் கொண்டு பாருக்கு சென்றான்..

இருக்கும் வேதனைக்கு மூக்கு முட்ட குடிக்க தோன்றியது ஆனால் வீட்டில் அம்மா இருக்கிறார்கள் முக்கியமாக மித்ரா இருக்கிறாள் இருவரும் என்ன நினைப்பார்கள் என்ற யோசனை வரவும் அளவாக குடிக்க நினைத்தான்..

ஆனால் குடிக்க குடிக்க அவன் மனம் முழுக்க மித்ரா வியாபித்திருந்தாள்..💓💓

அவளை மறக்க வேண்டும் என்று நினைத்து தான் இங்கே வந்தான்.. 

ஆனால் மதுவை உள்ளே இறக்க இறக்க.. மாதுவின் நினைவு அவனை பாடாய்படுத்தியது..💓💓

எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அதனுடைய நினைவுதான் நமக்கு அதிகமாக வருமாம் அது போல தான் இப்பொழுது அவனுக்கும் ஏற்பட்டது..

மித்ராவை மறக்க வேண்டும் என்று நினைத்தால் கண்முன்னே மித்ரா தான் வந்து நின்றாள் எங்கு பார்த்தாலும் மித்ராவின் தோற்றம் தான் தோன்றியது.. இவ்வளவு ஏன் மது கோப்பைக்குள் கூட மித்ராவின் முகம் தான் தென்பட்டது அவனுக்கு..

தாங்க முடியாத கோபமும் இயலாமையும் தோன்றி விட உடனே அந்த மது கோப்பையை தூக்கி எறிந்தான் அவன்..

அழுத்தமாக தலையை கோதி கொண்டவன் இதற்கு மேல் இங்கு இருந்தால் சரி வராது என்று நினைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினான்..

அவன் வீட்டிற்குள் நுழையும் பொழுது மணி சரியாக பதினொன்று…!!

சிறு தள்ளாட்டத்துடன் மாடிக்கு வந்தான்..

அறைக்குள் நுழைந்தவன்.. அங்கே எந்தவித சலனமும் இல்லாமல் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கும் மித்ராவை பார்த்தான்..

தள்ளாடிக்கொண்டே எப்படியோ அவளிடம் வந்து சேர்ந்தான்..

மெதுவாக அருகில் குனிந்து அவளின் கன்னத்தை தொட்டுப் பார்த்தான்..

” நான் உன்னை அவ்வளவு கொடுமை பண்றேனா , எங்க அம்மா சொல்றாங்க.. ??ஆனா தினம் தினம் நீ  என்னை கொடுமை பண்றியே என்கிட்ட வராம.. யாருமே இதுவரைக்கும் என்னை ஒதுக்கியது கிடையாது தெரியுமா முதல் முறையா என்னை ஒதுக்கி வைக்கிறது நீதான்.. அப்போ எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் சொல்லு அதனாலதான் உன்கிட்ட அளவுகடந்த கோபத்தை வெளிப்படுத்துகிறேன்.. இது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது?? என்னைப் பார்த்து சிரிச்சு பேசற அளவுக்கு கூட நான் தகுதி இல்லாதவனா?? அப்படி என்னடி பண்ணிட்டேன் நான் உனக்கு உதவி தானே செய்தேன்.. யூ ஸ்டுப்பிட்”, என்று உளறலாக மொழிந்து விட்டு அவள் அருகில் படுத்தான்.

நிலவு வெளிச்சத்தில் அழகு ஓவியமாய் படுத்திருந்த மித்ராவை பார்க்கையில் அவனுக்கு என்னென்னவோ தோன்றியது..

தன் மனசாட்சி கேள்வி கேட்டது, தன் அன்னை கூறிய புத்திமதி இப்படி எல்லாமும் அவன் கண்முன்னே வந்து போனாலும்..

அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு அவள் மீது அவன் வைத்திருக்கும் ஆசை முன் வந்து நின்றது வேகமாக..!!

இதழ் வளைத்து சிரித்தவன் அவள் இடை மீது கை போட்டு மெல்ல அவளை நெருங்கினான்..!!

“டேய் சொன்னா கேளு அவ கிட்ட போகாத இவ்வளவு நேரம் உங்க அம்மா சொன்ன எதுவும் மண்டைக்குள்ள ஏறலயா ?? அத்தனை தூரம் நான் சொன்னேனே என் பேச்சும் உன் காதுக்கு கேட்கலையா ?? அட மானங்கெட்டவனே.. நில்லடா சொன்னா கேளு.. “, அவனுடைய காதுக்குள் ஒலித்து கொண்டிருந்த அவனுடைய மனசாட்சியின் குரலை அவன் சட்டை செய்யவே இல்லை..

மேலும் அவளை நெருங்கி தன்னோடு இறுக்கி அணைத்துக் கொள்ள முற்பட்டான்……!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page