இதழ் – 21

அத்தியாயம் – 21

அருவியை அணைத்தவாறே தன்னை அறியாமல் உறங்கிய ராகவன் அதிகாலையில் கண் விழித்தான்.

‘இப்ப மட்டும் இவ கண் முழிச்சு பார்த்தா அவ்வளவுதான்…’ என்று நினைத்தவன் வேகமாக எழுந்து குளித்து, உடை மாற்றிக்கொண்டு தோட்டத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அறைக்கு வந்து பார்த்தான். அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக அவளுக்கு நைட்டியை மாற்றிவிட்டான். பிறகு கிச்சனுக்குச் சென்று அவனே சமைத்தான்.

மீண்டும் குளித்துவிட்டு ஆபீசுக்கு ரெடியாகிக் கொண்டிருந்தான். அப்போதுதான் மெல்ல கண் விழித்தாள் அருவி.

அவள் அவனைப் பார்க்க,  

“எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு. அதனால உனக்கும் சேர்த்து பிரேக்ஃபாஸ்ட் செஞ்சு வச்சிருக்கேன். மறந்துடாம சாப்பிட்டு, டேபிள்ல இருக்குற மாத்திரையை போட்டுக்கோ. ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, நல்லா ரெஸ்ட் எடு. நான் சீக்கிரம் வந்துடுறேன். ஏதாவது எமர்ஜென்சினா எனக்கு போன் பண்ணு” என்றவன் அவள் முகம் பார்க்காமலே சென்று விட்டான்.

‘நம்மளுக்கு என்ன நடந்துச்சு…? அத்தை மாமாக்கு கடைசியா பேசலாம்னு சவரை ஆஃப் பண்ணிட்டு ஒரு எட்டு வைக்கும்போது தலை சுத்தி அப்படியே மயங்கிட்டோம்… ஆனா நைட் வரைக்கும் என்ன நடந்துச்சுனு நம்மளுக்கு தெரியலையே! அப்போ இவர்தான் நம்மள கவனிச்சிருக்காரு… பரவாயில்ல, மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு போல…’ என்று நினைத்தவள் எழுந்து ஃப்ரெஷ் ஆகி வந்தாள். டைனிங் ஹாலில் அவன் செய்து வைத்திருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மாத்திரையை போட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள்.

அப்போது அவள் அம்மா போன் செய்தாள்.

“சொல்லுங்கம்மா… நான் நல்லா இருக்கேன். நீங்க அப்பா எப்படி இருக்கீங்க?”

“நாங்க நல்லா இருக்கோம். மாப்பிளை எங்க?”

“அவரு வேலைக்கு போயிருக்காரு. அத்தை மாமா ஊருக்கு போயிருக்காங்க.”

“பக்கத்துல தானே நம்ம வீடு… ஒரு எட்டு வந்துட்டு போலாம்ல?”

“இல்லம்மா… இன்னிக்கு வர முடியாது. இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்” என்று போனை வைத்தாள்.

மதியம் வழக்கம்போல அவளே வேலைகளைச் செய்தாள்.

மாலையில் வீட்டில் அவள் மட்டும் தனியாக இருந்ததால் ஏதோ போல இருந்தது. தோட்டத்திற்குச் சென்று பூச்செடிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவள், சற்று நேரம் அந்தப் பூக்களுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தாள்.

இரவில் வீட்டுக்கு வந்த ராகவன் அவளிடம் எதுவும் பேசாமல், அவள் சமைத்ததைச் சாப்பிட்டு உறங்கினான். இப்படியே மௌனமாக இரண்டு நாட்கள் கழிந்தன.

அடுத்த நாள் ஆபிஸ் முடிந்து கருக்கருக்கில் வந்தான். அப்போது அவன் நண்பன் ரகு போன் செய்தான்.

“ஹாய் மச்சான், சொல்லுடா… புது மாப்பிளை என்ன பண்ற?” என்று ராகவன் கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன். எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதனால இன்னிக்கு எல்லா பிரண்ட்ஸ்க்கும் பேச்சுலர் பார்ட்டி கொடுக்கிறேன். மறந்துடாம வந்துடு டா.”

“டேய்! அது வந்து…”

“ப்ளீஸ் மச்சான்… மறக்காம வாடா.”

“சரி” என்று ராகவன் போனை வைத்துவிட்டு அவன் சொன்ன ஹோட்டலுக்குச் சென்றான்.

அங்கு ரகு வாசலில் நின்றிருந்தான்.  

“வாடா மச்சான்… உனக்காகத்தான் எல்லாரும் வெயிட்டிங்” என்றவன் அவனை உள்ளே அழைத்துச் சென்றான். டேபிளில் அனைத்து உயர்தர மதுபானங்களும் இருந்தன. அவனது மற்ற நண்பர்களும் இருந்தனர்.

அனைவருக்கும் ராகவனை அறிமுகம் செய்து வைத்தவன், “இவன் என்னோட கிளாஸ் மேட். கொஞ்ச நாள் டச் விட்டு போச்சு… ஆனா எப்பவும் எனக்கு இவன் ஸ்பெஷல் பிரண்ட்” என்றான்.

அப்போது ரகுவின் போன் அடித்தது.  

“ஹலோ, சொல்லு ரேணு.”

“நான் இப்பவே உன்ன பாக்கணும்” என்றாள்.

“ஏய்… நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு பேச்சுலர் பார்ட்டி வச்சுட்டு இருக்கேன். இப்ப எங்கயும் வர முடியாது. என்னனாலும் போன்ல பேசு” என்றான் ரகு.

“ரகு, யாருடா போன்ல?” என்று ராகவன் கேட்டான்.

“இல்லடா… என் ஆள் தான் பேசுறா. என்னைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருக்கா.”

“ஓகே டா… நீ கிளம்பு.”

“அதில்லடா… உன்ன தனியா விட்டுட்டு…”

“அதான் உன் பிரண்ட்ஸ் இருக்காங்கள்ல. நான் பாத்துக்குறேன். நீ கிளம்பு.”

“தேங்க்ஸ் மச்சான்” என்று அனைவரிடமும் விடைபெற்று ரகு சென்றான்.

பிறகு ரகுவின் மற்ற நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். ராகவன் கூல்ட்ரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ பிரண்ட்… நீங்களும் சரக்கு அடிக்க வேண்டியதுதானே?” என்றான் ஒருவன்.

“இல்ல… எனக்கு வேண்டாம்” என்று மறுத்தான் ராகவன்.

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆமா.”

“அப்போ உங்க பொண்டாட்டிக்கு பயமா?” என்று கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.

“பயம்னு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.”

“அப்போ குடிங்க பாஸ்” என்றனர்.

“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.”

“எதுவுமே நம்ம கூடவே பிறந்த பழக்கமில்ல… பாஸ், நம்மளா பழகிக்க வேண்டியதுதான்.”

“எனக்கு இந்த பழக்கம் இல்லைன்னு சொன்னா விட்ருங்க. கம்பெல் பண்ணா எனக்கு பிடிக்காது” என்றான் சற்று கோபமாக.

“ஓகே பாஸ்… நாங்க உங்கள கம்பெல் பண்ணல” என்றான் ஒருவன்.

ராகவன் மற்ற நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்க, “நீ சரக்கு அடிக்க மாட்டியா? மவனே… இன்னிக்கு உன்னை போதையே அடிக்க வைக்கிறேன்” என்றவன் தன் கையில் இருந்த போதை மாத்திரையை ராகவன் குடித்துக் கொண்டிருந்த கூல்ட்ரிங்ஸில் கலந்தான்.

மற்றொருவனும் பேசிக் கொண்டே அந்த கூல்ட்ரிங்ஸை கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான் ராகவன். பாதி குடித்ததும் அவனுக்கு ஏதோ போல இருக்க, அப்படியே வைத்துவிட்டு எழுந்தவன் அனைவரிடமும் விடைபெற்று வெளியே வந்தான்.

அவர்கள் தங்களுக்குள் மர்மமாகச் சிரித்துக் கொண்டனர்.

வீட்டிற்கு வந்தவன் காலிங் பெல்லை அழுத்தும் போதுதான் அவனுக்கு ஏதோ “கிறுகிறு” என்று வருவது போல இருந்தது.

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் அருவி. கதவைத் திறந்ததும் தடுமாறி அவள் மேல் விழுந்தான்.

“என்னாச்சுங்க?”

“ஒண்ணும் இல்ல.”

“நீங்க குடிச்சிருக்கீங்களா?”

“இல்லையே! கூல்ட்ரிங்ஸ் தான் குடிச்சேன். ஆமா அத எதுக்கு நீ கேக்குற? நீ என்ன என் பொண்டாட்டியா? ரொம்ப ஓவரா பேசாத… புரியுதா?” என்றான்.

“நான் உங்க பொண்டாட்டி இல்ல… பரதேவதை.”

தடுமாறியவனை மெதுவாக அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“மாடிக்கு போய் என்னை கீழே தள்ளிவிடுறதுக்குத்தானே கூட்டிட்டு போற?”

“நான் நெனச்சிருந்தா அதை எப்பவோ செஞ்சிருப்பேனே” என்றாள்.

“என்ன சொன்ன?”

“ஒண்ணும் இல்ல… பேசாம வாங்க.”

அறைக்கு வந்ததும், “நீ போய் ஓரமா தனியா தூங்கு. என்கிட்ட வராத.”

“ஏன்?”

“நீ என்னை ஏதாவது பண்ணிடுவ” என்றான் அவளைப் பார்த்தபடி.

“யாரு? நானா? ஆமா… அது ஒண்ணு தான் இப்ப எனக்கு குறையா இருக்கு” என்றவள் தலையில் அடித்துக் கொண்டே, “சரி… நீங்க குளிங்க” என்றாள் சேலையை இடுப்பில் சொருகியபடி.

“எதுக்கு நான் குளிக்கணும்.”

“நீங்க குளிச்சா தான் கொஞ்சம் உங்களுக்கு போதை தெளியும் நினைக்கிறேன். குளிங்க” என்றாள்.

அப்போது அவனுக்கு சுயநினைவு கொஞ்சம் இழக்க ஆரம்பித்தது. வேகமாக அவளை கீழே தள்ளிவிட்டான்.

“என்னை எதுக்கு தள்ளி விட்டீங்க?” என எழுந்தவள் அவன் அருகில் வர,

“என்கிட்ட வராத… நீ வெளில போ” என்றான் தலையைப் பிடித்தபடி.

“என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டுக் கொண்டே, “வாங்க… நீங்க குளிச்சீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்” என்றாள்.

“நான் உன்ன தான் சொன்னேன்… ஒழுங்கு மரியாதையா இந்த ரூம விட்டு வெளியில போயிடு. என்னைப் பாத்துக்க எனக்கு தெரியும்.”

“ஏன் இப்படி பண்றீங்க?” எனக் கேட்டவளின் கன்னத்தில் பளார் என அறைந்தவன், “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? புரிஞ்சுக்கோ… எனக்கு என்னென்னமோ தோணுது. நீ இங்க இருந்தா நான் உன்னை ஏதாவது பண்ணிடுவேன்.”

“நீங்க என்னை எவ்வளவு அடிச்சு, கொடுமைப்படுத்தி இருக்கீங்க… இதுக்கு மேல பண்றதுக்கு என்ன இருக்கு?” என அவள் கேட்டாள்.

“சொன்னா புரிஞ்சுக்கடி… எனக்கு வேற மாதிரி ஃபீல் ஆகுது. நீங்க இருந்தா அதுக்கு மேல நான் சொல்ல விரும்பல. தயவுசெய்து இங்கிருந்து போ” என்று கத்தினான்.

“ஏங்க… அப்படி சொல்றீங்க? நான் உங்க மனைவி தானே… உங்களை இந்த நிலைமையில் விட்டுட்டு நான் எப்படி போவேன்?” என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே…

“இதுக்கு மேல என்னால முடியாது” என்றவன் வேகமாக கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளைத் தூக்கி வந்து மெத்தையில் பொத்தெனப் போட்டான்.

அவன் செய்கையில் அதிர்ந்தவள் மருட்சியுடன் அவனைப் பார்த்தாள்.

அவள் மேல் படர்ந்தவன் அவள் இதழைத் தன் இதழால் கவ்விச் சுவைத்தான். அவன் மேல் மது வாசனை வரவில்லை… ஆனால் அவன் கண்களில் அதிக போதையைப் பார்த்தாள் அருவி.

அவள் இதழை விட்டவன், “நான் தான் சொன்னேன்ல… என்னை விட்டு போயிடுனு. ஆனா நீ கேக்கல. இப்ப நானே நினைச்சா கூட உன்னை விட முடியாது” என்றான் கண்களில் அதிக போதையோடு.

“ப்ளீஸ்ங்க… என்ன விடுங்க… எனக்கு பயமா இருக்கு” என்றாள் அருவி நடுக்கத்துடன்.

“இப்போதைக்கு நானே நெனச்சாலும் முடியாது. ப்ளீஸ்… என்னை கொஞ்சம் பொறுத்துக்கோ. பயப்படாத… நான் உன்னோட புருஷன் தானே.”

“ஆமா…”

“நீ என்னோட பொண்டாட்டி” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் அவள் முகமெங்கும் முத்தம் வைத்தான்.

அவன் செயலில் தடுமாறினாள் பாவை.

முதலில் வேகமாக ஆரம்பித்தவன் தன் ஆடைகளைக் களைந்து, அவளது ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்தான். பெண்ணவளின் தேகத்தைப் பார்த்தவன் அவள் அழகில் பித்தனாகிப் போய், வேகமாகவே அவளைக் கையாண்டான்.

அவள் உடலெங்கும் முத்த மழை பொழிந்தான். மெல்ல மெல்ல அவளை வருடி, தன் கைகளாலும் இதழாலும் தீண்டி தீண்டி பெண்ணவளைச் சிலிர்க்க வைத்தான்.

முதலில் பயந்தவள், மெல்ல மெல்ல அவன் தீண்டலில் தன்னை மறந்தாள். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவளுக்குள் தன்னை இணைத்தான். 

அவள் வலி தாங்காமல், “ஆ… என்னால முடியல” எனக் கத்தினாள்.

அவள் இதழைக் கடித்தபடி, அவள் கர்ப்ப பையில் தன் உயிர்நீரை நிரப்பிவிட்டு விலகினான்.

முதல் கூடலில் வலி தாங்க முடியாமல் துடித்துப் போனாள் அருவி. சற்று நேரம் கண்ணயர்ந்தவன், கண் திறக்கும் போதெல்லாம் அவளோடு மீண்டும் மீண்டும் கூடினான்.

பெண்ணவள் துவண்டு அரை மயக்கத்துக்கு சென்றாள்.

விடிந்ததும் அதிகாலையில் கண் விழித்தவன், தன்னருகில் ஆடை இல்லாமல் தன் மார்பில் தலை வைத்து உறங்கிய அருவியைப் பார்த்தவனுக்கு பயங்கர கோபம் வந்தது.

“அருவி!” எனக் கத்தினான்.

♥️ 🤔 போச்சு… இப்ப அவளை என்ன பாடு படுத்தப் போறானோ அந்த லூசு பையன்…  

தெரிஞ்சுக்க நாளைக்கு எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ்… ❤️

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,353 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page