அத்தியாயம் 19
இரண்டு நாட்கள் மறு வீட்டில் விருந்து சாப்பாடு நடந்தது அஸ்வந்த் மற்றும் அபிராமி இருவருக்கும்.
ஊர்வன, நடப்பன, பறப்பன அனைத்தையும் சமைத்து விருந்து வைத்தார் கௌரி.
இரண்டு நாட்களும் அகிலாவும் அலுவலகம் செல்லவில்லை.
மனேஜேர் மாமன் அவள் வீட்டில் இருக்கும் பொழுது வேலைக்கு செல்ல வேண்டுமா என்ன?
இதோ குட்டி கண்ணனோடு சுற்றி திரிந்தாள் அகிலா.
இப்பொழுது மறுவீடு முடிந்து தன் மகளை காரில் மாப்பிள்ளையோடு அனுப்பி வைத்தனர் கௌரி மற்றும் கல்யாண்.
அபிராமி தன் பிறந்த வீட்டுக்கு வருத்த முகத்தோடு டாடா காட்டி கணவனோடு காரில் சென்றாள் .
கார் புறப்பட்டது. கல்யாணும் கௌரியும் தோய்ந்த முகத்தோடு வீட்டிற்குள் திரும்பினர். அகிலா வாடிய முகத்தோடு அமர்ந்திருந்தாள்.இனி இவர்கள் இதை ஏற்று கொள்ள தான் வேண்டும். அபிராமி அங்கு நலமோடு வாழ்கிறாள் என்று நினைத்து இவர்களும் சந்தோசமாக இருப்பார்கள்.
தன் கணவனின் அருகில் அமர்ந்திருந்த அபிராமி, “என்னங்க இவனுக்கு நான் நேம் செலக்ட் பண்ணிட்டேன் ” என்றாள்.
இவன் பிறந்து ஒரு நாள் கூட இவனுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று அஸ்வந்த் நினைக்கவில்லை.
இப்பொழுது வந்த அபிராமி நினைத்திருக்கிறாள். மகனை அவள் தூக்க கூடாது. கொஞ்ச கூடாது என்று தாயிடம் கூறி அவன் பல கண்டிசன்ஸ் போட்டிருந்தாலும் அதை அபிராமியிடம் கூறுவதற்கு அவன் மனம் தயங்குகிறது.
நாம் பெயர் தேர்வு செய்திருக்கிறோம் என்று கூறி வெகு நேரம் ஆகிவிட்டது. கணவன் இன்னும் எதுவும் நம்மிடம் கேட்கவில்லையே என்று அவன் முகம் பார்த்து யோசித்தாள் அபிராமி.
என்னாச்சுங்க? நான் நேம் செலக்ட் பண்ணது உங்களுக்கு புடிக்கலையா? என்று கேட்டாள் அபிராமி.
ச்ச அப்படி எல்லாம் இல்லை அபி. சொல்லு. என்ன பேரு செலக்ட் பண்ணிருக்கிற என்று கேட்டான் அஸ்வந்த்.
தன் செம்பருத்தி இதழ்களால் அழகாக புன்னகை செய்த நம் நாயகி ” சுஜித் ” என்றாள்.
தன் இதழ்கள் விரிய அழகாக சிரித்தான் அஸ்வந்த்.
அழகா இருக்கு பேரு என்றான்.
சொந்தகாரங்க எல்லாரையும் அழைச்சி பேரு வைக்கலாமா இவனுக்கு? என்று தான் பிறவா மகனின் பட்டு கன்னங்களில் முத்தம் வைத்து கேட்டாள்.
வச்சிரலாம் அபி. உனக்கு எப்படி வைக்க தோணுதோ அது மாதிரி வச்சிரலாம் என்றான் அஸ்வந்த்.
ம்ம் சரிங்க.
கார் ஓட்டுநர் இருவர் பேசுவதையும் கவனித்து கொண்டு தான் இருந்தார். அபிராமிக்கு தெரிந்த கார் ஓட்டுநர் என்பதால் அஸ்வந்த் பேசுவதை கேட்டவர் அபிராமி இனிமேல் நன்றாக வாழ்வாள் என்று நம்பினார்.
வீட்டு வாசலில் காரை நிறுத்தினார் ஓட்டுநர்.
அண்ணே போய்ட்டு வரோம். நீங்க பார்த்து மெதுவா போய்ட்டு வாங்க என்றாள் அபிராமி.
சரி மா என்றார் ஓட்டுநர்.
அஸ்வந்த் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினான் ஓட்டுநரிடம்.
ஏற்கனவே பணம் தந்தாச்சு தம்பி என்றார் டிரைவர்.
மெல்லிய புன்னகை சிந்திய அபிராமி எங்க அப்பா கொடுத்துருப்பாரு என்றாள்.
கையில் எடுத்த பணத்தை திருப்பி பாக்கெட்டில் வைக்க மனம் இல்லாத அஸ்வந்த் வலுக்கட்டாயமாக ஓட்டுனரின் கையில் திணித்தான். அவர் எவ்வளவு மறுப்பு சொல்லியும் அவன் கேட்கவில்லை.
வாங்கிக்கோங்க அண்ணா என்றாள் அபிராமி.
ஓட்டுநரும் மறுக்கமுடியாமல் வாங்கி கொண்டு கிளம்பினார்.
வா அபிராமி என்று பாரிஜாதம் புன்னகை தூவி அழைத்தார்.
இரண்டு நாட்கள் மாமியார் தரிசனம் கிடைக்காமல் இருந்தவள் அவரோடு சேர்ந்து அமர்ந்து பேசினாள்.
சங்கர் அலுவலகம் சென்று விட்டார் போல.
மகனுக்கு பெயர் செலக்ட் செய்ததை கூறினாள் அபிராமி.
பாரிஜாதம் அவளின் அன்பில் நெகிழ்ந்தார்.
மூவரும் இருந்தும் தன் பேரனுக்கு பெயர் வைக்கும் விஷயத்தையே மறந்து விட்டோமே என்று கலங்கினார்.
அத்தை சொந்த காரங்களை அழைச்சி பண்ணுவோம் அத்தை என்றாள் அபிராமி.
சொந்தக்காரங்களா என்று யோசித்த பாரிஜாதம், நம்ப ரெண்டு குடும்பம் அப்பறம் அஸ்வந்த் ஆபீஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் அழைப்போம் என்றார் பாரிஜாதம்.
சரிங்க அத்தை என்றாள் அபிராமி.
அத்தை இவனுக்கு நான் பசும் பால் கொடுத்தேன். நல்லா குடிச்சான். எதுவுமே பண்ணல இவனுக்கு என்றாள்.
எத்தனை நாள் தன் பேரனுக்கு பசும் பால் காய்ச்சி கொடுத்திருக்கிறார் பாரிஜாதம். ஆனால் அவனோ அதை குடிக்காமல் வாந்தி எடுத்து விடுவான்.
அபிராமி கொடுத்ததும் குடித்து விட்டானா? கேட்ட பாரிஜாதத்திற்கே அதிர்ச்சியாக தான் இருந்தது.
ஒரு வேளை அந்த பிஞ்சு மொட்டுக்கு தன் அம்மா யார் என்று தெரிந்து விட்டதோ!
அத்தை நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமா? என்று தயக்கமாக கேட்டாள் அபிராமி.
எதாவது நினைத்து விடுவாரோ என்று அவள் நினைக்க, இது உன் வீடு அபி எப்போ என்ன வேணாலும் நீ செய்யலாம் என்று பாரிஜாதம் கூறியதும் சரி அத்தை என்றவள் சுஜித்தையும் தூக்கி கொண்டு சென்றாள்.
இதோ தான் கட்டிய மனைவி அறைக்குள் சென்று கதவை தாழிடும் சத்தம் கேட்டதும் அஸ்வந்த் கோபமாக தாயை பார்த்தான்.
அவனின் கோபத்தை புரிந்த பாரிஜாதம் மகன் எதுவோ அபிராமியை பற்றி கூற வருகிறான். குழந்தை அவள் கையில் இருப்பதற்கு கோபப்படுவான் என்று நைசாக எழுந்து கழண்டு கொள்ள நினைக்க,
ஏன் மா இப்படி பண்ணீங்க? என்று அவரை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது அஸ்வந்தின் குரல்.
என்ன டா? நான் என்ன பண்ணேன்? என்று கேட்டார் பாரிஜாதம்.
ஏன் என்கிட்டே பொய் சொன்னிங்க. உங்களுக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்க எப்படி மனசு வந்துச்சு என்று கோபத்தில் கத்தினான்.
நான் எந்த பொண்ணோட வாழ்க்கையையும் அழிக்கலையே ப்பா என்றார் பாரிஜாதம்.
என்ன மா இன்னும் நடிக்கிறிங்க? இதோ அபி வாழ்க்கையை அழிச்சிட்டிங்களே! அவளுக்கு இது வரைக்கும் கல்யாணமே ஆகல. ஆனால் நீங்க என்கிட்டே பொய் சொல்லிருக்கீங்க என்றான் அஸ்வந்த்.
கண்களை மூடி திறந்தார் பாரிஜாதம். ப்பூ இவளோ தானா என்று நினைத்தவர், அவள் வாழ்க்கை நல்லா தானே இருக்கு. அவளை ஒரு நல்ல பையனுக்கு தான் நான் கட்டி வச்சிருக்கேன் என்றார் அந்த தாய் .
ம்மா என்ன பேசுறீங்க நீங்க? அவளுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆயிருக்கு. குழந்தை பொறக்காதுனு சொன்னிங்க. நானும் அதை நம்பி தான் மா அபியை கல்யாணம் பண்ணேன். ஆனால் நீங்க என்னைய ஏமாத்திட்டிங்க. அது மட்டும் இல்லாமல் அவளையும் ஏமாத்திட்டிங்க என்று பொங்கினான் அஸ்வந்த்.
நான் யாரையும் ஏமாத்தல ப்பா. என் புள்ளை அவன் பொண்டாட்டியோட சேர்ந்து வாழணும்னு ஆசைப் பட்டேன் அவனுக்கேற்ற மாதிரி பொண்ணு பார்த்து கட்டி வச்சேன் என்றார் பாரிஜாதம்.
அவளுக்கு குழந்தை பொறக்காதுனு தான் மா நான் அவளை கட்டிக்கிட்டேன் என்றான் அஸ்வந்த். அவனின் விழிகள் கலங்கியது.
பாரிஜாதம் மகனின் தோள்களை பிடித்தார். எந்த தாய்க்கு தான் தன் மகன் கண்ணீர் வடித்தால் பிடிக்கும். அஸ்வந்த் கண்ணீர் வடிப்பது இந்த தாய்க்கு தன் நெஞ்சில் ரத்தம் வழிந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட, இதோ தன் மகனின் திண்ணிய தோள்களை வருடி கொடுத்தார்.
சுகன்யாவும் குழந்தை பொறந்ததும் என்னைய விட்டு போய்ட்டா. இப்போ அபி. அவள் நல்லா இருக்காள். அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ம்மா. ஆனால் அவளுக்கும்” தானும் அம்மா ஆகணும்னு ஆசையா இருக்கும்ல.” ஆனால் அது நடக்காதுனு தெரிஞ்சா அவள் எப்படி மா தாங்குவாள் என்று கதறினான் அஸ்வந்த்.
ஏன் பா என்னாச்சு ? பாரிஜாதம் முகம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. ஏன் அவளுக்கு குழந்தை பொறக்காது என்று அதே அதிர்ச்சியில் கேட்டார்.
ரெண்டு பேரும் நல்லா தானப்ப இருக்கீங்க?
நல்லா தான் மா இருக்கோம் ஆனால், என்னால அவளுக்கு ஒரு குழந்தை கொடுக்க முடியாது மா என்றான்.
ஏன் ப்பா ஏன்? உனக்கு என்னாச்சி? நீ நல்லா தான இருக்குற அவனின் வார்த்தையில் கொஞ்சம் பயந்தார் பாரிஜாதம்.
என்னால அவக்கிட்டே நெருங்க முடியாது மா. சுகியும் என் பையன் பொறந்ததும் என்னைய விட்டு போய்ட்டா. இப்போ அபியும் என்னைய விட்டு போய்ட்டா நான் நிஜமா அநாதை ஆயிருவேன் மா என்று அழும் மகனை தேற்றினார் பாரிஜாதம்.
டேய் சுகியையும் அபியையும் ஒண்ணா பார்க்காத டா. சுகி விதி முடிஞ்சு போச்சு ப்பா. நீ அதையே நினைச்சிட்டு அபியை கவனிக்காமல் விட்டுறாத. அபி ப்ரெக்னெண்ட் ஆயிட்டானா நான் அபியை நல்லா பார்த்துக்கறேன். நீ அழாத ப்பா அம்மாவால தாங்க முடியாது என்றார் பாரிஜாதம். பாவம் அவர் கண்களில் இருந்தும் நீர் சொட்டுகிறது.
இந்த ரெண்டு நாளுல அபியை பற்றி நான் கொஞ்சம் ஓரளவு புரிஞ்சிக்கிட்டேன். அவள் எது சொன்னாலும் புரிஞ்சிப்பா. காலம் முழுதும் இவன் ஒருத்தன் தான் நம்ப புள்ளைன்னு சொன்னா அபி “கண்டிப்பா சுஜித் மட்டும் போதும்னு நான் சொன்னதை ஏத்துப்பா என்றான் அஸ்வந்த்.”
பாரிஜாதம் மகனை அரண்டு விழித்தார். அவர் கைகளை அஸ்வந்த்தின் தோள்களில் இருந்து பிரித்து எடுத்தார்.
தாயின் முக மாற்றத்தை கவனித்த அஸ்வந்த், எனக்கு இதை தவிர வேற வழி தெரியல ம்மா.
எனக்கு அபியை புடிச்சிருக்கு. என்கிட்டே அன்பா நடந்துக்குறா. சுஜித் மேல பாசமா இருக்குறா. இது போதுமா எனக்கு என்றான். வழிந்த கண்களை துடைத்தான்.
இது வரைக்கும் அவன் கண்களில் இருந்து வழிந்த நீருக்கு காரணம் சுகன்யாவின் பிரிவு. இன்று அவன் வடிக்கும் கண்ணீருக்கு காரணம் அபியை பிரிந்து விட கூடாது என்பதற்காக.
இது சரி இல்லைப்பா என்றார் பாரிஜாதம்.
எங்க ரெண்டு பேருக்குள்ள எது நடந்தாலும் நீங்களும் அப்பாவும் வரக்கூடாது மா என்று முடிவாக கூறி விட்டு சென்றான் அஸ்வந்த்.
மகனிடம் திருமணத்திற்கு முன்பே அபிராமியை பற்றி கூறி இருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து யோசித்தார் பாரிஜாதம்.
சங்கர் இருந்திருந்தால் அழுது புலம்பி இருப்பார் அவரிடம். தன் மன வலிகளை அவரிடம் கூறி இருப்பார் பாரிஜாதம்.
இப்பொழுது தன்னந்தனியாக அந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார்.
அஸ்வந்த் தன் முகத்தை கைக்குட்டை கொண்டு அழுந்த துடைத்து தன் அறை கதவில் கை வைத்தான்.
அவன் கை வைத்ததும் அறை கதவு திறந்து கொண்டது.
அங்கு தன் அறைக்குள் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான் அஸ்வந்த்.
தொடரும்.
