இறைவனுக்கே ஈடில்லா அன்பை எதை கொடுத்து விலை பேச…!
உன்னில் சிறையாகிறேன் – 19
மகிழருவி சமையலறை சுவற்றில் சாய்ந்து நின்றபடியே, தட்டில் இருந்த இட்லியைப் பிய்த்து வாயில் போட்டு அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்,
”அருவிம்மா உட்காந்து மெதுவா சாப்பிடும்மா விக்கிக்க போவுது, சந்துரு இன்னும் குளிச்சிட்டே வரல, அவனாவது அஞ்சு நிமிஷத்துல வர்றதாவது, நீ பொறுமையா சாப்பிடு” என்று சிரித்தபடி சொன்னாள் தாமரை,
“எனக்கு காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சு பொறுமையா சாப்பிட நேரம் இல்ல, நீ சீக்கிரமா லஞ்ச பேக் பண்ணும்மா” என்று தன் வேகத்தை தாயிற்கும் புகுத்தினாள் அருவி,
“விஷ்வா, வண்டி சாவியை எடுத்துக்கோப்பா, இன்னைக்கு ஜனனியை செக்கப் கூட்டிட்டு போகணும்னு சொன்னியே, மறந்துட்டியா?” என்றார் ராகவன்,
விஷ்வா சட்டையை மாட்டிக்கொண்டே வந்தான்,
“ஞாபகம் இருக்குப்பா, குட்டிமாவை காலேஜ்ல விட்டுட்டு வந்துட்டு அப்புறமா ஜனனியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்னு பார்க்கிறேன்” என்றான் விஷ்வா
”இல்ல அண்ணா, சந்துருவே கொண்டு போய் விடுவான், நீ அண்ணியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ, அவங்களுக்கு ஸ்கேன் பண்ணும் போது நீ கூடவே இரு, பாப்பா எவ்ளோ பெருசா வளந்திருக்கான்னு பார்த்துட்டு வந்து சொல்லு” என்றாள் அருவி,
சந்துரு தலைமுடியைத் துடைத்துக் கொண்டே ஓடி வந்தான்,
“வந்துட்டேன்… வந்துட்டேன், கிளம்பலாமா தெய்வமே, எம்மா… எனக்கு ரெண்டு இட்லியைப் பார்சல் பண்ணி கைல குடுமா, அப்படியே வண்டில போக போக சாப்பிட்டுப்பேன்,” என்று சந்துரு சொல்ல, விஷ்வா சிரித்துக் கொண்டே அருவியின் தலையை வருடினான்,
“பத்திரமா போயிட்டு வாடா குட்டிமா, சாயந்தரம் வரும்போது உனக்கு பிடிச்ச சிக்கன் தந்தூரி மோமோஸ் வாங்கிட்ட வேரன் ஓகேயா” என்று கேட்டான் விஷ்வா,
“வாவ் அண்ணா, சூப்பர் எனக்கு பிடிச்ச மோமோஸ் வாங்கிட்டு வர்றியா” என்று துள்ளி குதித்தாள் அருவி,
“ஹை மோமோஸூ அப்படியே எனக்கு வாங்கிட்டு வாண்ணா, அந்த மோமோஸ மையோனஸ்ல தொட்டு வாயில போட்டா எப்படி இருக்கும்” என்று சந்துரு சொல்ல,
“ம்ம்… நல்லா தான் இருக்கும், இப்ப காலேஜ்க்கு டைம் ஆகுது, டிராப் பண்ண வர்றியா இல்லியா” என்று
தன் பேக்கை எடுத்துக் கொண்டு அவசரமாக சொன்னவள் அவனுக்கு முன்பாக ஓட, அவள் பின்னால் ஓடி வந்த சந்துரு வண்டியை எடுக்க,
“அண்ணா சந்துரு அண்ணா, என் செல்ல அண்ணா இல்ல” என்று தன் குரலை கெஞ்சலாக கொஞ்சலாக மாற்றி பேசினாள் அருவி,
“என்ன மேடத்தோட டோனே மாறுது, சொல்லுங்க மேடம்” என்றான் சந்துரு,
“எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா, இன்னைக்கி ஒருநாள் மட்டும் ப்ளீஸ் அண்ணா” என்று அவள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்ச,
“நீ கெஞ்சுறதை கேட்கும் போதே மனசுக்கு சுகமா இருக்கு, ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் பாவமாவும் இருக்கு, அதனால பொழைச்சு போ இந்தா” என்று
பைக்கின் முன் இருக்கையை அவளிடம் கொடுத்து விட்டு நகர்ந்து பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டான்,
“என் செல்ல அண்ணன், நான் எது கேட்டாலும் உடனே செஞ்சிடுவான்” என்று செல்லஞ் கொஞ்சியவாறே
வண்டியை இயக்கிய மகிழருவி,
காற்றில் பறக்கும் தன் தலைமுடியை ஒதுக்கியபடி சாலையோரக் காட்சிகளை ரசித்துக் கொண்டு வண்டியை ஓட்டினாள் அருவி,
”ஏன் அருவி, இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடுவியா? இல்ல ஊர் சுத்த ஏதாவது பிளான் வச்சிருக்கியா?” என்று சந்துரு கிண்டலாகக் கேட்க, அருவி அவனை முறைத்தாள்,
”டேய் அண்ணா பையா இன்னைக்கு காலேஜ்ல ஒரு ஸ்பெஷல் செமினார் இருக்குடா, முடிஞ்சதும் அண்ணனுக்கு போன் பண்றேன், விஷ்வா அண்ணா வந்து என்னை பிக்கப் பண்ணிப்பாங்க” என்றாள்.
”ஏன், நான் வந்தா என்னவாம், அண்ணன் மேல தான் பாசம் அதிகமோ?” என்று சந்துரு போலியாகக் கோபித்துக் கொண்டான்.
”அப்படி இல்லடா… அண்ணன் ஈவ்னிங்ல தான் காலேஜ் முடிஞ்து பொண்ணுங்களா வருவாங்க, அவங்க யாராவது உன்னை பார்த்து கண்ணு வச்சுட்டா என்ன பண்றது” என்று அருவி சொல்ல, பதிலுக்கு சந்துரு ஏதோ சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டே காலேஜ் வாசலை அடைந்தனர்,
”சரி சரி காலேஜ் கேம்பஸ் வந்திடுச்சு இறங்கு வாலு, சாயந்தரம் அண்ணன் வரலன்னா சொல்லு, நானே வர்றேன்,” என்று கூறிய சந்துரு கிளம்பிச் சென்றான்,
அவனுக்கு கையசைத்து டாடா சொல்ல திரும்பியவள் முன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாள் தமிழினி,
“ஹாய் மேடம், என்னாச்சு ஏன் முஞ்சிய இப்படி வச்சிருக்கீங்க, ஏன் என்னாச்சு,நேத்து உடம்பு சரியில்லன்னு பாதியில கிளம்பிட்டியே, இன்னும் சரியாகலையா” என்று அருவி கேட்ட அருவி அவளை தொட்டு பார்க்க,
“உடம்புக்கு ஒன்னும் இல்லடி இது வேற ஒரு பிரச்சனை” என்றாள் தமிழினி,
“இப்ப என்ன புதுசா பிரச்சனை” என்று கேட்டவள் கையில் ஒன்றைக் கொடுத்தாள் தமிழினி, அதை வாங்கி பார்த்த மகிழருவி சந்தோஷத்தில் குதித்தாள்,
“ஹேய், நீ அம்மா ஆகிட்டியா, ஹைய்யா இன்னொரு பேபி வரப்போகுதா” என்று கூறி தமிழினியைக் கட்டிக் கொண்டாள்,
“ஆமா அருவி, இன்னைக்கி காலையில தான் கன்பார்ம் பண்ணேன், அதான் மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றாள் தமிழினி,
“குட்நியூஸ் தானா இதுல வருத்தப்பட என்ன இருக்கு” என்று அருவி சாதாரணமாக கேட்டாள்,
“என்ன இருக்கா, வருதப்படாம என்ன செய்ய, என்னோட நிலமை தெரிஞ்சும் நீயே இப்படி பேசினா எப்படி அருவி” என்றாள் தமிழினி,
“இங்க பாரு தமிழ், உன்னைபத்தியும் தெரியும் ஜீவாவை பத்தியும் தெரியும், உங்க இரண்டு பேரைப்பத்தி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு யாருக்கு தெரியும் சொல்லு” என்று அருவி கேட்க,
“அதனால தான் இந்த விஷயத்தை உங்கிட்ட சொல்றேன் அருவி, லவ் பண்றதுல இருந்து கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிற வரைக்கும் எல்லாத்திலேயும் அவசரப் பட்டுட்டேனோன்னு தோணுதுடி” என்று தன் மனவேதனையை தோழியிடம் தெரிவித்தாள் தமிழினி,
“எதையுமே செய்யுறதுக்கு முன்னாடி யோசிக்கனும், இப்படி எல்லாமே முடிஞ்சதுக்கப்புறம் யோசிக்கிறது வீண், இனிமே இப்படி கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காதடி,
சரி ஜீவா என்ன சொல்றார், முதல்ல அவர்கிட்ட விஷயத்தை சொன்னியா, அவர் ஹேப்பி தான” என்று அருவி கேட்க,
“ஜீவாகிட்ட சொல்லிட்டேன் ரொம்ப ஹேப்பின்னு தான் சொன்னான், ஆனா எனக்கு தான்டி மனசே சரியில்ல, காலேஜ்ல மறுபடியும் வயித்த தள்ளிட்டு வந்து நின்னா எல்லாரும் சிரிப்பாங்கடி” என்றாள் தமிழினி,
“நான் இருக்கும் போது நீ எதுக்கும் வருத்தப்படவே கூடாது, வர்ற செமஸ்டர் எக்ஸாம் மட்டும் முடிஞ்சா போதும், அப்புறம் நீ ப்ரீ ஆகிடுவ, நீ கன்சீவா இருக்கிறது கூட யாருக்கும் தெரியப்போறது இல்ல” என்றாள் அருவி,
“ஆமால்ல இதை ஏன் நான் யோசிக்கவே இல்ல, எக்ஸாம் மட்டும் முடிஞ்சா போதும்” என்றாள் தமிழினி,
“இப்ப ஹேப்பியா இது ஒரு விஷயம்னு இதுக்கெல்லாம் பீல் பண்ணிட்டு இருக்காம ஹேப்பியா இருடி” என்று கன்னம் கிள்ளினாள் அருவி,
“நீ இருக்கும் போது நான் எதுக்கு பீல் பண்ணனும், சின்ன கன்ப்யூஸ் தான் இப்ப சரியாகிடுச்சு” என்றாள் தமிழினி,
“சரி சரி ஹேப்பி நியூஸ் சொன்னா மட்டும் பத்தாது, இன்னைகைகே ட்ரீட் குடுக்கனும்” என்று அருவி கேட்க,
“அதை எங்கிட்ட கேட்காத அவன்கிட்ட போய் கேளு, இதுக்கு அவன் தானே காரணம்” என்று வயிற்றை தொட்டு தமிழினி காட்ட,
“அடிக்கள்ளி அமுங்கினி மாதிரி இருந்துட்டு, இரண்டு குழந்தைக்கு அம்மா ஆகிட்ட, நினைச்சா என்னால நம்பவே முடியலடி” என்று கூறி,
வாயில் கை வைத்துக் கொண்டாள் அருவி, வெட்கத்தில் மருதானியாய் சிவந்தாள் தமிழினி,
மறுபுறம் வீட்டில்… விஷ்வா அப்போதுதான் தயாராகி வந்தான்,
“ஜனனி கிளம்பலாமா, டிப்போர்ட் எல்லாம் எடுத்துட்டியா” என்று விஷ்வா கேட்க,
“அதெல்லாமே பேக்ல எடுத்து வச்சிருக்கேன் விஷ்வா” என்று தன்னிடம் இருந்த பையை காட்டினாள் ஜனனி,
“சரி சரி மெதுவா வா, படிக்கட்டுல பார்த்து இறங்கு” என்று தன் மனைவியின் கையைப் பற்றிக் கொண்டான் விஷ்வா, இருவரும் போவதைப் பார்த்த ராகவன்,
“ஏய் தாமரை, வாசலுக்கு போய் விஷ்வா கிட்ட சொல்லி பைக்க மெதுவா ஓட்டச் சொல்லு,” என்றார் ராகவன்,
”நீங்க வேற, நம்ம விஷ்வா பத்தி உங்களுக்குத் தெரியாதா, அவன் நிதானத்துக்குப் பேர் போனவனாச்சே, அதெல்லாம் ஜனனியைப் பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு வருவான்,
நீங்க இப்படியே உட்காந்துட்டு இருக்காம சீக்கிரமா போய் குளிச்சுட்டு வாங்க, டிபன் ஆறிட்டு இருக்கு” என்று தாமரை சொல்ல,
“ஏன் தாமரை, நம்ம வீட்ல ஒரு கார் இருந்தா எப்படி இருக்கும், மருமகளை செக்கப்புக்கு வண்டில கூட்டுட்டு போறதா பார்த்தா மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு தாமரை” என்றார் ராகவன்,
“ஏங்க நம்ம இருக்கிற நிலமையில கார் வாங்க முடியுமா, கனவு தான் கண்டுக்கனும்” என்று தாமரை சலிப்பாக சொல்ல,
“நீயே இப்படி சலிச்சுக்கிட்டா எப்படி, நான் வேனா என்னோட பென்ஷன் பணத்துல ஒரு காரை புக் பண்ணட்டுமா” என்று ராகவன் கேட்க,
“ம்ம்ம் புக் பண்ணலாம், காரும் வாங்கிடலாம், ஆனா மாசா மாசம் டியூ கட்டனுமே அதுக்கு என்ன பண்றது, பெரியவன் சம்பளம் ஜனனியோட செக்கப்பெக்குவ் பேரனோட ஸ்கூல் பீஸ்க்கும் போக
ஏதோ கொஞ்ச நஞ்ச மிச்சம் பிடிச்சு வச்சது, நாளைக்கு டெலிவரிக்கு சரியா போயிடும், சின்னவன் வேலைக்கு போறது அவன் செலவுக்கு கூட எடுத்துக்காம முழுசா குடுக்கிறதால தான்,
மாசத்துக்கு தேவையான மளிகை காய்கறி பாலு, கரெண்டு பில்லுன்னு மொத்த செலவையும் பண்ணிட்டு இருக்கேன், உங்க பென்ஷன் பணத்துல தான் அருவி காலேஜ் பீஸ் மத்த செலவுன்னு ஏதோ குடும்பத்த ஓட்டிட்டு இருக்கோம்,
இப்ப கார் வாங்கனும்னா உங்க பிஎப் பணத்தை தான் எடுத்தாகனும், அப்படி எடுத்தா பின்னு பிறகு அருவிக்கு நல்ல இடத்துல இருந்து மாப்பிள்ள அமைஞ்சா எப்படி கல்யாணம் பண்றது” என்று தங்களின் குடும்ப நிலவரத்தை தாமரை எடுத்துச் சொல்ல,
“நீ சொல்றதும் சரி தான் தாமரை, நம்மள மாதிரி ஆளுக எல்லாம் கார் வாங்கனும்னு ஆசைப்படவே கூடாது, கனவுல வந்தாக் கூட காண முடியாது போல” என்று மனம் வருந்த கூறினார் ராகவன்,
“இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசை படாம, எழுந்து போய் குளிச்சிட்டு வாங்க டிபன் எடுத்து வைக்கிறேன்” என்றவாறு தாமரை அடுக்களைக்குள் தன்னை புகுத்திக் கொள்ள,
மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு குளிக்கச் சென்றார் ராகவன், இருவரின் உரையாடலையும் கேட்டவாறு நிலவாசலோரம் நின்றான் விஷ்வா,
“என்ன விஷ்வா இங்கயே நின்னுட்ட, சீக்கிரம் வா போகலாம்” என்று சொன்ன மனைவியைப் பார்த்தான், காலை வெயிலின் தாக்கத்தில் வியர்வையில் குளித்திருந்தாள்,
அப்பாவுக்கு தோன்றியது, இவ்வளவு நாளும் தனக்கு ஏன் தோணாமல் போயிற்று,
‘ஒரு கார் இருந்திருந்தால் ஜனனி இப்படி வெயிலில் கஷ்டப்பட வேண்டாமே’ என்ற எண்ணம் அவனை வாட்டியது,
”என்ன விஷ்வா… என்ன யோசனை? வண்டிய எடுங்க” என்ற ஜனனியின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தான்,
”ஒன்னும் இல்ல ஜனனி, நீ என்னை நல்லா பிடிச்சுக்கோ” என்றவன் மெதுவாக வண்டியை நகர்த்தினான்,
சாலையில் செல்லும் போது ஒவ்வொரு காரைக் கடக்கும் போதும், அவன் மனதில் ராகவனும் தாமரையும் பேசிக்கொண்டது தான் ஓடிக்கொண்டிருந்தது,
‘அடுத்த வருஷம் அருவிக்குக் கல்யாணம் பண்ணனும், ஆனா அதுக்குள்ள எப்படியாவது ஒரு செகண்ட் ஹேண்ட் காராவது வாங்கிடணும்’ என்று தனக்குள் உறுதி பூண்டான் விஷ்வா,
பெரிதாக மாட மாளிகை சொகுசு கார், சொடக்கிட்டாள் வேலை செய்ய பணியாட்கள், விதவிதமாக அணிந்து கொள்ள விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் என்ற ஆடம்பரம் இல்லாவிடினும்,
சிறு கூட்டில் அதுவும் அன்பால் பின்னப்பட்ட கூட்டில் அளவில்லா மகிழ்ச்சியோடு இளவரசியாக வாழ்ந்தவள் தான் மகிழருவி…!
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
