அத்தியாயம் 13

இன்னைக்கு சரஸ்வதி அத்தையும், அம்பிகா அத்தையும் சேர்ந்து செஞ்ச இந்த அலங்காரம் எல்லாம் வேஸ்ட் ஆகிட்டு நினைக்காதீங்க! நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் நிறைய பூ வாங்கி அலங்காரம் பண்ணி இன்னைக்கு தவறவிட்ட  சடங்க நாளைக்கு பண்ணிக்குவோம்!” என்று கண்ணடித்துவிட்டு மெத்தையில் ஏறி படுத்து விட்டாள் பிரதிக்ஷா . படுத்த அடுத்த நொடியிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு அவள் சென்று விட்டதாய் அவளின் குறட்டை சத்தம் உணர்த்த அதிர்ந்தான் விதுரன்.

“ஏய்  எந்திரிடி! அது எப்படிடி படுத்த உடனேயே தூக்கம் வரும் நடிக்கிறியா? ” என்று விதுரன் கேட்க,” சும்மா இருங்க அத்தான், எனக்கு தூக்கம் வருது!” என்று சிணுங்கி கொண்டே  திரும்பி படுத்தாள்  பிரதிக்ஷா.

“திரும்பி படுத்த அவளின் ஆடை சற்று விலகி, அங்கங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த அவளின் மார்பு பகுதியும்  இடையும் லேசாக  தெரிய, எச்சில் விழுங்கினான் விதுரன். பெண்ணவளை அந்த நிலையில் பார்த்ததும்  ஆண்களுக்கே உரித்தான தடுமாற்றம் அவனுள் எழ, சுதாரித்துக் கொண்டு சட்டென்று தன் பார்வையை திருப்பிக்  கொண்டான்.

இதற்குமேல் அவளை எழுப்ப முயற்சி செய்து, தேவையில்லாத எண்ணங்கள் அவனுள் வர வேண்டாம் என்று நினைத்து விட்டு, அவனுடைய  அறையில் இருந்து வெளியேறி மாடிக்கு சென்றான்.

அதீத கோபம் வரும்போதும், அவனுடைய மனம் கோபத்தில் ஆழ்ந்திருக்கும் போது  அதை சமன்படுத்துவதற்காக  புகைப்பது அவனுடைய வழக்கம். அதனால் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துவிட்டு தன் மனதில் தோன்றிய கோபம் குழப்பத்தை எல்லாம் புகையாக புகைத்து தள்ளிக் கொண்டு இருந்தான்.

இங்கு ஆடவனின் நிலை தெரியாமல் பெண்ணவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் பல நாள் கனவு இன்று நிறைவேறியதே அவளின் நிம்மதியான உறக்கத்திற்கு காரணம். 

விதுரனை திருமணத்திற்கு  ஒரு வாரத்திற்கு முன்னால் மாப்பிள்ளை தோழனாக பார்க்க பிரதிக்ஷாவால் நம்ப முடியவில்லை. இத்தனை நாள் தன் கனவில் வந்து காதலை சொல்லிக் கொண்டிருந்த விதுரனை கண்முன்  பார்க்க அதிர்ந்து போனாள்.

கல்யாணம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஒவ்வொரு முறையும் ரஞ்சித்தை கடந்து விதுரனை சந்திக்க பிரதிக்ஷா முயற்சி செய்யும்போது, அது முடியாமல் போய்க்கொண்டே இருந்தது! இன்று விட்டால் இனிமேல் விதுரனை  தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள இயலாது என்ற நிலையை உணர்ந்த பிரதிக்ஷா, யார் தன்னைப் பற்றி எப்படி நினைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து விட்டு தன் தோழி ரம்யாவின் உதவியுடன் திருமணத்தை நிறுத்தி வெற்றிகரமாக விதுரனையும் திருமணம் செய்து விட்டாள்.

பாவம் யார் அவளுக்கு சொல்வது! ஆசைப்பட்ட காதலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக   அவள் செய்த இந்த தவறு அவள் வாழ்நாள் முழுவதும் அழ வைக்கப் போகிறது என்று!!

இங்கு அறையில் சரஸ்வதியும் அம்பிகாவும் பேசிக் கொண்டிருந்தனர். “சரஸ் நம்ம சேர்ந்து முடிவு எடுத்து ரெண்டு பேருக்கும் முதலிரவுக்கான ஏற்பாட்ட பண்ணிட்டோம்,  இப்ப அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிக்கிட்டு இருப்பாங்க!” என்று அம்பிகா தனது சந்தேகத்தை கேட்க,”எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும்  சண்டை தான் போட்டுக்கிட்டு இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு!” என்று சரஸ்வதி கூறினார். 

சரஸ்வதி சொல்லியதும், ” நீ சொல்றத பார்த்தால் எனக்கு  பயமா இருக்கு!” என்று அம்பிகா சொல்ல,” இதுல பயப்படறதுக்கு என்ன இருக்கு! சண்டை போட்டால், போடட்டும்” என்று சாதாரணமாக கூறினார் சரஸ்வதி. சரஸ்வதியின் பேச்சில் அதிர்ந்த அம்பிகா சரஸ்வதியை பார்க்க, அம்பிகாவை பார்த்து சிரித்தார் சரஸ்வதி.

“என்ன சிரிக்கிற? நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீ சிரிச்சுகிட்டு இருக்க?” என்று அம்பிகா கேட்க, ” நீ சீரியஸா கேட்டாலும் நான் சிரிச்சுகிட்டு பதில் சொன்னாலும் நான் சொல்றது தான் அங்க நடந்துகிட்டு இருக்கும்!” என்று கூறினார் சரஸ்வதி.

“அப்படியா அப்ப நம்ம நினைச்ச மாதிரி எதுவுமே நடக்காதா?” என்று அம்பிகா சோகமாக கேட்க,” கொஞ்சம் யோசிச்சு பாரு, இந்தக் கல்யாணம் எந்த சூழ்நிலையிலே நடந்துச்சுன்னு! அது தெரிஞ்சும்   எல்லாம் நல்லபடியா நடக்கும்னு  நீ கற்பனை பண்ணுனால் அது எவ்வளவு முட்டாள்தனம்!” என்று கேட்டார் சரஸ்வதி.

“அதுவும் சரிதான்,  ஆனால் ஒரு தாயா மகனோட வாழ்க்கையில நல்லது நடக்கனும்னு ஆசைப்படுறது நியாயம் தானே!” என்று அம்பிகா சொல்ல, “அதுக்காகத்தான்   பிரதிக்ஷா பண்ணுனது முழுக்க முழுக்க தப்புன்னும் தெரிஞ்சும், அவ பின்னாடி நம்ம ரெண்டு பேரும் நிக்கிறோம். கண்டிப்பா பிரதிக்ஷா இப்படி ஒரு பழிய போட்டு விதுரன கல்யாணம் பண்ணி இருக்கானா அதுக்கு பின்னாடி ஸ்ட்ராங்கான காரணம் இருக்கும், அது என்னன்னு நம்மளே கண்டுபிடிக்கலாம்.ஆனால் எனக்கு அதுல விருப்பம் இல்ல! என்னைக்கு பிரதிக்ஷா வாயால அந்த உண்மைய நம்ம கிட்ட சொல்லனும்னு நெனச்சு சொல்றாளோ அன்னைக்கு கேட்டு தெரிஞ்சுக்கலாம். ஆனால்  அவ ஒவ்வொரு முறையும் விதுரன பாக்கும்போது அவன் மேல அவ வச்சு இருக்கிற அந்த ஆழமான காதல் அவ கண்ணுல  எனக்கு தெரியுது.

கல்யாணத்துக்கு முன்னாலேயே விதுரன், ரஞ்சித் நம்ம எல்லாரும் பிரதிக்ஷா வீட்டுக்கு போனப்ப, பிரதிக்ஷா ரஞ்சித்த பார்த்ததைவிட விதுரன பார்த்தது அதிகம். ஏன் இந்த பொண்ணு விதுரன இப்படி பார்க்கிறான்னு நானே சந்தேகப்பட்டேன், கடைசில பாத்தால்  கல்யாணத்துல இப்படி ஒரு குண்ட தூக்கி போடுவான்னு நான் நினைச்சு கூட பாக்கல!”என்று கூறினார் சரஸ்வதி.

“நீ சொல்றது புரியுது சரஸ், ஆனால் ரஞ்சித  நினைச்சு தான் கவலையா இருக்கு!” என்று அம்பிகா சொல்ல, “ரஞ்சித் பிரதிக்ஷாவை நல்ல எண்ணத்தோட கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு இருந்தால் கண்டிப்பா  ரஞ்சித்தோட நிலைமை என்னைய ரொம்ப வருத்தப்பட வச்சிருக்கும், ஆனால் ரஞ்சித் பிரதிக்ஷாவை கல்யாணம் பண்ணனும்னு திட்டம் போட்டது எந்த எண்ணத்துக்குனு நமக்கு நல்லாவே தெரியும், எனக்கு தெரிஞ்சு பிரதிக்ஷா கூட அந்த கடவுளுடைய ஆசிர்வாதம் இருக்குன்னு நினைக்கிறேன்! அதனாலதான்   ரஞ்சித்தோட நடக்க இருந்த கல்யாண நின்னு விதுரனுக்கு மனைவியாய் மாறி இருக்கா,

ஆனால், ரஞ்சித்தும் மனிஷாவும் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறதுக்கு திட்டம் போட்டு கிட்டு இருக்காங்க! எனக்கு தெரிஞ்சு ரஞ்சித் பிரதிக்ஷாவை பழிவாங்குவதற்கு எந்த எல்லைக்கும் போவான், இதையெல்லாம் பிரதிக்ஷா  கடந்து   தான் விதுரன் கூட வாழ ஆரம்பிக்கணும்! 

இதுவரை விதுரன  நம்ம சமாளிச்சு எப்படியோ வீடு வர பிரதிக்ஷாவ கொண்டு வந்துட்டோம், இதுக்கு மேல நம்ம ஒன்னும் பண்ண முடியாது, வாழ்ற ரெண்டு பேரு தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனைகளை பேசி தீர்த்து சுமூகமா வாழ முயற்சி பண்ணனும்! இனிமேதான் என்ன நடக்கும்னு தெரியும்.

நாளைக்கு காலைல பிரதிக்ஷாவையும் விதுரனையும் கோயிலுக்கு கூட்டிட்டு போயி செய்ய வேண்டிய பூஜை எல்லாம் பண்ணிட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்! அவர் வேற கோவமா போயிருக்காரு. அவர வேற சமாதானப்படுத்தணும். ரஞ்சித்தோட பத்தி சொல்லவும் முடியாம, விதுரன விட்டுக் கொடுக்கவும் முடியாமல்  தயங்கி கிட்டு இருக்கேன், 

ரஞ்சித் ஆசைப்பட்டு தான் பிரதிக்ஷவ கல்யாணம் பண்றதுக்கு முயற்சி பண்ணுனான்னு  தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காரு! பிரதிக்ஷாவ கல்யாணம் பண்றத விட  அவ கூட வாழ்றதை விட அவளை பழிவாங்குற எண்ணம் தான் ரஞ்சித் மனசுல இருந்துச்சு, அத தெரிஞ்சுகிட்ட பின்னாடி பழிவாங்கறதுக்காக கல்யாணம்கிற ஆயுதத்தை கையில எடுக்கிறது தப்புன்னு ஏற்கனவே ரஞ்சித்த நான் கண்டிச்சேன்.  ஆனால் நான் சொன்னது எதையும் கேட்காம, அவங்க அப்பாவ வச்சு பிரதிக்ஷாவோட சித்தப்பா கிட்ட பேசி  எப்படியோ இந்த கல்யாணத்தை பேசி முடிச்சிட்டான். என்னாலயும்  ஒன்னும் பண்ண முடியல, சரி கடவுள் விட்ட வழின்னு எது நடந்தாலும் பாத்துக்கலாம்னு   நானும் கல்யாண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சேன்.

அந்த பொண்ணுக்கு நல்ல வழி காட்டுங்கன்னு சாமிகிட்ட வேண்டிட்டு அமைதியா இருந்துட்டேன். கடைசில கல்யாணம்  நின்னு விதுரன் அவ கழுத்துல தாலியை கட்டிட்டான். 

பிரதிக்ஷா சொன்னதும் விதுரன வலுக்கட்டாயமா பிரதிக்ஷா கழுத்துல தாலி கட்ட வச்சதுக்கு ரஞ்சித்தும், அவரும் என் மேல ரொம்ப கோவத்துல இருக்காங்க, எனக்கு தெரிஞ்சு இனிமேல் அவங்க ரெண்டு பேரும் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசுறதுக்கு வாய்ப்பு இல்ல, ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் தவறு செஞ்சால் அந்த தவறை திருத்துற இடத்துல நான் இருக்கேன்! 

கூடிய சீக்கிரத்துல ரஞ்சித் பிரதிக்ஷா, விதுரன்  மேல இருக்கிற வன்மத்தை மறந்துட்டு அவனோட வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கிறனும்னு  ஒரு அம்மாவா ஆசைப்படுறேன். கூடிய சீக்கிரம் நடக்கணும், அதுக்கு அந்த கடவுள் தான் உதவி புரியணும்!” என்று கண்கலங்கினார் சரஸ்வதி.

“கவலைப்படாத சரஸ்,  கூடிய சீக்கிரத்துல எல்லாம் சரியாகும். நீ நெனச்ச மாதிரி ரஞ்சித்  மனசு மாறுவான், பேசாம அவன் கிட்ட நம்ம உண்மைய சொன்னா என்ன?” என்று அம்பிகா கேட்க, அதிர்ந்து போனார் சரஸ்வதி.

சரஸ்வதியின் அதிர்ச்சியை உணர்ந்த அம்பிகா,” உண்மைய சொன்னால் ரஞ்சித் மனசு மாறுவான்ல, அதுக்காக சொன்னேன்!” என்று சொல்ல,

“உண்மைய சொல்றதா இருந்தா நானும் அவரும் எப்பவோ சொல்லி இருப்போம்! ஆனா ரஞ்சித் அதைக் கேட்டால் மனசு உடைஞ்சிடுவான். அதனால அவன்கிட்ட உண்மைய சொல்ற ஐடியா எங்க ரெண்டு பேருக்குமே இல்ல, கூடிய சீக்கிரத்துல  அவன்  பண்றது தப்புன்னு அவனே புரிஞ்சுகிட்டு திருந்துவான் அதுவரை பொறுமையா இருக்க வேண்டியதுதான்!” என்று  கூறினார் சரஸ்வதி.

“ரஞ்சித்த நெனச்சு நீ வருத்தப்பட்டதால, உண்மையைச் சொல்லலாம்னு சொன்னேன், அப்புறம் உன் இஷ்டம்!”என்று அம்பிகா கூறிவிட்டு சரஸ்வதியின் கவலையை திசை திருப்ப,

“கல்யாணம் திடீர்னு  நடந்திருச்சு, நாளைக்கு நம்ம சித்தர் சாமிகிட்ட ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயி அருள்வாக்கு கேட்கலாம்னு இருக்கேன், நீ என்ன நினைக்கிற?” என்று அம்பிகா கேட்க,

“நானும் அதை தான் நினைச்சேன்! ஆனாலும் ஏதோ ஒரு பயம் எனக்குள்ள வருது. ஏதாவது சித்தர்சாமி சொல்லிட்டால் நம்ம மனசு  தாங்காதே!” என்று சரஸ்வதி கூறினார். 

“சரஸ் நீ தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்கிற! இந்த கல்யாணம் நம்ம எல்லாரும் திட்டம் போட்டு நடத்துனது கிடையாது, அந்தக் கடவுளோட ஆசிர்வாதம் இருந்ததால தான் இப்படி ஒரு கல்யாணம் நடந்திருக்கு! அதனால சித்தர்சாமியும் அதைத்தான் சொல்லுவாரு, நீ வேணா பாரு! அந்த சிவனுக்கும் பார்வதி மாதிரி பொருத்தம் விதுரனுக்கும் பிரதிக்ஷாவுக்கும் இருக்கும்னு சொல்லுவாரு!” என்று அம்பிகா கூற,” சித்தர்சாமி வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்துட்டா அதைவிட சந்தோசம் என்ன இருக்க போகுது!” என்று சரஸ்வதியும் கூறி புன்னகைத்தார்.

“சரி நேரம் ஆகிட்டு! நீ தூங்கு, நான் போகலைன்னா ரேணு மொபைல் வச்சுக்கிட்டு விடிய விடிய தூங்காம இருப்பா! நான் போனால் தான் பயந்துகிட்டு தூங்குவா, காலையில வந்து உன்னைய எழுப்புறேன்!” என்று சரஸ்வதியிடம்  சொல்லிவிட்டு அம்பிகா  வெளியேற, ” அம்மா, காப்பாத்துங்க!” என்ற அலறல் சத்தம் விதுரனின் அறையில் இருந்து கேட்க அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து, விதுரனின் அறையை நோக்கி ஓடினர்.

கதையைப் படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள் நண்பர்களே!

 

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
973 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page