அத்தியாயம் 14
விதுரன் அறையில் கேட்ட சத்தத்தை கேட்டு அதிர்ந்து அம்பிகாவும் சரஸ்வதியும் விதுரனின் அறையை நோக்கி ஓடினர்.
மாடியில் இருந்த விதுரனும் பிரதிக்ஷா கத்துவதை கேட்டு அவசர அவசரமாக இறங்கி பார்க்க, ” அம்மா காப்பாத்துங்க! அவருக்கு உயிர் இருக்கு, வைத்தியர்ட்ட கூட்டிட்டு போனால் காப்பாத்திரலாம்! அம்மா காப்பாத்துங்க” என்று கதறி அழுது கொண்டிருந்தாள்.
கண்களை திறவாமலே அவள் முகம் முழுவதும் குறுவேர்வை பூத்திருக்க கனவில் அழுது கொண்டிருந்தவளின் கண்களிலும் கண்ணீர் வழிந்து ஓடியது.
‘என்ன ஆச்சு இவ எதுக்கு இப்படி புலம்பிக்கிட்டு இருக்கா’ என்று நினைத்துக் கொண்டே “ஹேய், என்னடி கத்திக்கிட்டு இருக்க! முதல்ல கண்ண தொறந்து பாரு!” என்று விதுரன் சொல்ல, அதை காதில் வாங்காமல் “அம்மா காப்பாத்துங்க!” என்று மீண்டும் கத்தினாள் பிரதிக்ஷா.
‘கெட்ட கனவு கண்டுட்டா போல’ என்று நினைத்துக் கொண்டு பிரதிக்ஷாவை பார்க்க தூக்கத்திலும் அவள் முகம் முழுவதும் பதட்டத்தில் அங்கங்கு வியர்வை பூத்திருக்க, அவள் கண்களின் ஓரங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
பிரதிக்ஷாவை கண்ணீரை பார்த்த விதுரனின் உள்ளம் அனிச்சையாக செயல்பட ஆரம்பித்தது. மெதுவாக படுத்திருந்த புலம்பிக் கொண்டிருந்த பிரதிக்ஷாவின் அருகில் அமர்ந்து அவளின் கன்னத்தை மெதுவாக தட்டி, “இங்க பாரு, நான் இங்கதான் இருக்கேன்! யாருக்கும் எதுவும் ஆகல, நீ ஏதோ கெட்ட கனவு கண்டிருக்க போல! முதல்ல கண்ண தொறந்து பாரு!” என்று கூறினான் விதுரன்.
ஆறுதலான வார்த்தைகள் பிரதிக்ஷாவின் காதுகளில் ஒலிக்க, அந்த ஆறுதலை பிடித்துக் கொள்ள எண்ணி கண்ணை திறவாமலே பக்கத்தில் இருந்த விதுரனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.
இங்கு விதுரனின் அறைக்கு வந்தவர்கள் கதவை தட்ட கதவு திறக்கவே படவில்லை! காரணம் விதுரனின் கைகளை கெட்டியாக பிரதிக்ஷா பிடித்திருந்தாள், “ நில்லுங்க வாரேன்! என்று விதுரன் சொல்லிக்கொண்டே கதவை திறக்க முயற்சிக்க, ”என்னைய விட்டு எங்கேயும் போகாதீங்க” என்று சொல்லிவிட்டு அவன் கைகளை இன்னும் இறுக்கி பிடித்தாள் பிரதிக்ஷா.
“என்னாச்சுன்னு கதவை ரெண்டு பேரும் திறக்க மாட்டேங்கிறாங்க, எனக்கு என்னமோ பயமா இருக்கு! கோபத்துல விதுரன் பிரதிக்ஷாவ ஏதாவது பண்ணி இருப்பானோ?”என்று அம்பிகா தன் சந்தேகத்தை கேட்க, சரஸ்வதி அம்பிகாவை பார்த்தார்.
அம்பிகா சொல்லியதும் சரஸ்வதியின் மனம் கலங்கியது. இந்த அறையோட சாவி இருந்தால வேகமா எடுத்துட்டு வா, நம்மளே தொறந்து உள்ள போய் பார்ப்போம்!” என்று சரஸ்வதி சொல்ல அவசர அவசரமாக மாடியிலிருந்து இறங்கி அம்பிகா ஸ்பேர் கீ வைத்திருக்கும் இடத்திற்கு சென்று வேறொரு சாவியை எடுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தார்.
ஏற்கனவே பிரதிக்ஷாவின் கதறல் சத்தம் கேட்டதால் அங்கு தங்கி இருந்த ரஞ்சித்தும்,மனிஷாவும் தங்களின் அறைகளிலிருந்து வெளியே வந்து பார்க்க அம்பிகா அவசர அவசரமாக பதட்டப்பட்டு மாடியை நோக்கி ஓடும் காட்சி அவர்கள் கண்ணில் பட்டது.
அம்பிகா வேகமாக வந்து சாவி எடுத்துவிட்டு ஓட, இவர்கள் இருவரும் அவசர அவசரமாக அம்பிகாவின் பின்னே சென்றனர். தன்னுடைய அறையில் இருந்த ரேணுவுக்கும் பிரதிக்ஷா கத்திய சத்தம் கேட்க, அவளும் தன் அறையில் இருந்து வெளியே வர, அம்பிகா அவசர அவசரமாக மாடி ஏறும் காட்சியும் அவருக்கு பின்னால் ரஞ்சித்தும் மனிஷாவும் மாடியேறும் காட்சியும் தெரிய ரேணுவும் பயந்து கொண்டு மாடிக்கு விரைந்தாள்.
“ஏய் ஒன்னும் இல்ல! நீ பயந்து கத்துனதுல எல்லாரும் பயந்து கதவை தட்டிக்கிட்டு இருக்காங்க! முதல்ல என்னோட கைய விடு நான் கதவை திறந்துவிட்டு வாரேன்!” என்று விதுரன் சொல்லிக் கொண்டிருக்க மெல்லமாய் கண் திறந்தவள், “ உங்களுக்கு ஒன்னும் ஆகலையே? நெஞ்சில இருந்து ரத்தம் வந்துச்சு!” என்று சொல்லிவிட்டு அவனின் மார்பு பகுதியை தடவி பார்க்க, எவ்வித காயமும் அவன் உடம்பில் இல்லாதிருந்தது!
அப்போ நான் கண்டது கனவு தான் போல! நல்லவேளை உங்களுக்கு எதுவும் ஆகல, கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு விதுரனை அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள் பிரதிக்ஷா.
கதவை திறந்து உள்ளே வந்தவர்கள் பார்த்தது விதுரனை அணைத்து பிரதிக்ஷா முத்தமிடும் காட்சி தான். என்னமோ ஏதோ என்று பயந்து கதவை திறந்து உள்ளே வந்த அனைவரும் அக்காட்சியை கண்டு உறைந்து நின்றனர்.
திடீரென்று பிரதிக்ஷா இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காத விதுரனும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து நிற்க , அறைக் கதவை திறந்து கொண்டு அனைவரும் வந்து நின்றனர்.
வாசலில் வந்து நின்றவர்களை பொருட்படுத்தாது , முத்தத்தை கொடுத்து விட்டு சிறு குழந்தை போல் படுத்து தூங்க ஆரம்பித்தாள் பிரதிக்ஷா.
அங்கு நடந்த காட்சியை அம்பிகாவும் சரஸ்வதியும் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர். பின்னால் நின்ற சந்துருவும் மனிஷாவும் கண்கள் சிவக்க கோபத்தோடு நின்று கொண்டிருந்தனர்.
அவர்களின் பின்னால் நின்று கொண்டிருந்த ரேணுவிற்கு இந்த காட்சி வெட்கத்தை தர மென்புன்னகையை உதிர்த்தாள்.
ரேணுவை பார்த்த அம்பிகா “உனக்கு இங்க என்ன வேலை?”என்று தன்னுடைய குரலை உயர்த்த, “ ஏதோ அலற சத்தம் கேட்டுச்சு மா அதான் வந்து பார்த்தேன்!” என்று சொல்ல, “பாத்துட்டில்ல போ” என்று ரேணுவை எச்சரிக்கும் சாக்கில் பின்னால் நின்று கொண்டிருந்த மனிஷாவையும் ரஞ்சித்தயும் பார்த்து கூறினர்.
மனிஷாவின் முகத்தில் தோன்றிய கோபத்தை பார்த்த விதுரன் நகர்ந்து விளக்கம் கொடுக்க வர, ” சாரி விதுரா பிரதிக்ஷா கத்துற சத்தம் கேட்கவும் நாங்க தப்பா நினைச்சுட்டு வந்துட்டோம்! எங்கள மன்னிச்சிரு! நாங்க வெளில போறோம்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, ” நீங்க ஏன் ரெண்டு பேரும் ஏன் நின்னுக்கிட்டு இருக்கீங்க! நீங்களும் போங்க!” என்று சரஸ்வதி அவர்கள் இருவரையும் பார்த்து சொல்ல இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் விதுரனின் அறையை விட்டு வெளியே சென்றனர்.
இங்கு விதுரன்,
“இவ வேணுமே பிளான் பண்ணி இப்படி பண்ணி இருப்பாளோ?” என்று சந்தேகப்பட்டு கொண்டு அவளை தட்டி எழுப்ப, ” என்னாச்சு தூங்க விடாம தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க!” என்று கோபமாக பேசிவிட்டு அந்த பக்கம் திரும்பி துயில் கொள்ள ஆரம்பித்தாள் பிரதிக்ஷா.
‘என்னது நான் தொந்தரவு பண்றேனா? கத்தி ஊர கூட்டி எல்லாரையும் ரூமுக்குள்ள பதட்டப்பட்டு ஓடி வர வச்சிட்டு, எல்லார் முன்னாடியும் என் கன்னத்தை எச்சில் பண்ணிட்டு, நான் அவள டிஸ்டர்ப் பண்றேன்னு சொல்றா’ என்று தனக்குள்ளாக புலம்பினான்,
புலம்பியவன் மனதில் மனிஷா நின்று கொண்டிருந்த காட்சி கண்ணில் பட, “அச்சச்சோ மனிஷா வேற கோபமா பாத்துகிட்டு இருந்தாலே, அவ கிட்ட இங்க நடந்ததை சொல்லி புரிய வைக்கணும்’ என்று நினைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே போக அவனின் அலைபேசியில் அழைப்பு வந்தது.
சரஸ்வதி தான் அழைத்திருந்தார். ” விதுரா யாருக்காவது விளக்கம் சொல்றேன்னு நெனச்சுக்கிட்டு ரூமை விட்டு வெளியில் போகாத! கதவை பூட்டிட்டு போய் படுத்து தூங்கு! உன் விளக்கத்தை எல்லாம் காலையில சொல்லிக்க ” என்று சொல்ல எச்சரிக்க, எதுவும் சொல்லாமல் அழைப்பை அணைத்துவிட்டு தனது செல்போனை மெத்தையில் வீசி எறிந்தான்.
எல்லாத்துக்கும் காரணம் இவதான் என்று நினைக்க விதுரனுக்கு பிரதிக்ஷாவின் மேல் கோபம் வந்தது. ஆனால் அவனின் கோபத்திற்கு சொந்தக்காரி கொள்ளை அழகோடு ஆனந்தமாய் உறங்கிக் கொண்டிருந்தாள், இல்லை இல்லை தூங்குவதைப் போல் நடித்துக் கொண்டிருந்தாள்!
‘அவசரப்பட்டு முத்தம் கொடுத்துட்டோம், எப்படியோ தூக்க கலக்கத்துல கொடுத்தது மாதிரி சமாளிச்சுட்டு படுத்துட்டோம், நான் மட்டும் தெளிவா கொடுத்தேன்னு தெரிஞ்சிருந்தா இந்நேரம் ஆடி இருப்பாரு! நல்லவேளை நம்ம தூக்கத்துல தான் இருக்கும்னு நம்பிட்டாரு போல, அப்படியே இதையே மெயின்டன் பண்ணிருவோம்!’ என்று தனக்குள்ளாக நினைத்துக் கொண்டே புன்னகைத்தாள்.
இங்கு வெளியில் வந்த பிரதிக்ஷாவும் ரஞ்சித்தும், அம்பிகாவும் சரஸ்வதியும் தங்களின் அறைக்குள் நுழைந்ததை பார்த்துவிட்டு ஹாலில் அப்படியே நின்று பேசத் தொடங்கினர்.
“ரஞ்சித் என்னமோ சொன்ன ரெண்டு பேருக்கும் எதுவும் நடக்காது, சீக்கிரத்துல டைவர்ஸ் வாங்கி கொடுத்துட்டு விதுரனை எனக்கு கட்டி வைக்கிறேன்னு சொன்ன அங்க என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு பார்த்தியா? இதுக்கு என்ன பதில் சொல்லப் போற!” என்று கோபமாய் கேட்க,
“அதான் எனக்கும் புரியல, நம்ம பார்த்த காட்சி உண்மைதானா!” என்று மனிஷாவை பார்த்து கேட்டான் ரஞ்சித். ரஞ்சித்தை பார்த்து முறைத்தாள் மனிஷா.
“இப்ப எதுக்கு முறைக்கிற?” என்று ரஞ்சித் கேட்க, ” கண்ணால பார்த்திருக்கோம் நம்ம பார்த்தது உண்மைதானனு கேட்கிற!” என்று பிரதிக்ஷா காட்டமாக பேசினாள்.
“கரெக்ட் நம்ம கண்ணால பார்த்தது உண்மைதான். அதை உண்மையானு கேட்கல, வேணுமே நம்மள வெறுப்பேத்தறதுக்காக பிரதிக்ஷா திட்டம் போட்டு நம்ம எல்லாரையும் அவளோட ரூமுக்கு வர வச்சு, விதுரனுக்கு முத்தம் கொடுத்து அத நம்ம எல்லாரும் பாக்குற மாதிரி பண்ணியிருப்பாளோனு! எனக்கு சந்தேகமாயிருக்கு அதனால அப்படி கேட்டேன்” என்று கூறினான் ரஞ்சித்.
“திட்டமா? “என்று மனிஷா சந்தேகமாய் கேட்க, ” ஆமா பிரதிக்ஷாவை பத்தி உனக்கு தெரியாது, முத்தம் யாரு குடுத்தான்னு நீ பார்த்தியா! விதுரன் கொடுக்கவே இல்ல, விதுரன கட்டிப்புடிச்சு பிரதிக்ஷா தான் குடுத்தா!” என்று ரஞ்சித் சொல்ல,
“அப்படி அவ தான் கொடுத்தானா, இவனுக்கு எங்க போச்சு புத்தி. விருப்பம் இல்லாதவன் அவளை தட்டி விட்டுட்டு ஒரு அரை அறைஞ்சு இருக்கலாமே! ஆனால் அவ குடுத்த முத்தத்தை ரசிச்சுகிட்டு இருந்தானே!” என்று மனிஷா கோபமாக கூறினாள்.
“விதுரன் ரசிக்கல, அந்த சம்பவத்தை பார்த்து நம்ம எப்படி அதிர்ச்சியில உறைஞ்சு நின்னோமோ அதே மாதிரி விதுரனும் அதிர்ச்சியில தான் இருந்தான், அதை நீ பார்க்கல , விதுரன பத்தி எனக்கு நல்லா தெரியும்! அவன் இதுக்கெல்லாம் மயங்குற ஆள் கிடையாது, அப்படி மயங்கறவனா இருந்தா என்னைக்கோ உன்கிட்ட மயங்கி உன் மடியில சாஞ்சு இருக்கணும்!
இன்னும் வர உன்னைய காதலிக்கிறேனு விதுரன் சொன்னாலும் உன்னோட சுண்டு விரல கூட அவன் இதுவரை டச் பண்ணது கிடையாதுல, நல்லா யோசிச்சு பாரு!” என்று ரஞ்சித் சொல்ல மனிஷாவும் யோசித்துப் பார்த்தாள்.
ரஞ்சித் சொல்லுவது உண்மைதான். எத்தனையோ முறை மனிஷா விதுரனை தன் வலையில் விழ வைக்க எண்ணி டேட்டிங் என்ற பெயரில் அழைத்துச் சென்று ஹோட்டலில் ரூம் போட்டது உண்டு. ஆனால் அப்போதெல்லாம் விதுரன் ஏதாவது காரணம் சொல்லி அங்கிருந்து ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளுக்கு மனிஷாவை கூட்டிச் செல்வது உண்டு! இதையெல்லாம் யோசிக்க விதுரனுக்கும் பிரதிக்ஷா முத்தம் கொடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டாள் மனிஷா.
“என்னவோ, இதுக்கு முன்னாடியாவது விதுரன் எனக்கு கிடைப்பான்னு கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு, இப்ப நடந்தத பாத்தா இனிமேல் விதுரன் எனக்கு கிடைக்க மாட்டானோனு தோணுது!” என்று மனிஷா சலித்துக் கொள்ள,
“கவலைப்படாத! விதுரன் உனக்கு தான். பிரதிக்ஷவ இந்த வீட்டை விட்டு எப்படி துரத்தனும்னு எனக்கு தெரியும்! எனக்கே இன்ப அதிர்ச்சியா குடுக்குறா? நாளைக்கு காலையில எல்லாரும் கோயிலுக்கு போறாங்கல்ல, அங்க வச்சு அவளை என்ன பண்றேன்னு மட்டும் பாரு!” என்று ரஞ்சித் சொல்ல,
“அப்படி என்ன செய்யப் போற ரஞ்சித்?” என்று கேட்டாள் மனிஷா. “அதை நாளைக்கு காலையில கோயில்ல பாரு” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தன்னுடைய அறைக்கு கோபமாக சென்றான் ரஞ்சித்.
‘என்ன நடக்குதுன்னு தெரியல! விதுரன கல்யாணம் பண்ணி இந்த சொத்துக்கெல்லாம் அதிபதி ஆகலாம்னு பார்த்தா, பழையபடி அஞ்சுக்கும் பத்துக்கும் தான் நடிக்கணும் போல!’ என்று சலித்துக் கொண்டு அவளுடைய அறைக்கு சென்றாள் மனிஷா.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து கேட்ட அம்பிகாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள்.
