அவளை மறக்கத்தான்

.5. அவளை மறக்கத்தான்

“நான் என்னங்க  பண்ணினேன். வண்டி சரியா ஓட்டலயா – என் தப்பு எதுவுமில்லை. ஆட்டோ குறுக்கே  வந்து விட்டான். நான் என்ன செய்வேன். வேறு வழி தெரியாமல் சடன் பிரேக் போட்டு விட்டேன். அதற்கு போய்  முட்டாள் என்று திட்டு கிறீர்கள்” என்று பாவமாக சொல்ல,

அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவளாய்  “ஸாரிங்க உங்களை திட்டல. அந்த  ஹோட்டலில் நடந்ததை நினைத்துக் கொண்டேன்.  கோபமாக வந்தது.”

“சரிங்க.”

ஜெனி அவனிடம், “ இனிமேல் இந்த ங்க வேண்டாம். எனக்கும் சொல்ல பிடிக்கல. என்னையும்  நீங்கள்  சொல்ல வேண்டாம்.

“ஓகே. ஜெனி  ங்க வேண்டாம். வயசான மாதிரி இருக்கு” என்று அவனும் சொல்ல,

“சரிடா இப்ப எங்க போறது.i

“என்னது டா வா”… என்று ஜெனி கேட்க,

ஒரு ப்ளோவில் வந்து விட்டது.

சிரித்துக் கொண்டாள்.

“நீ சாப்பிட்டியா.” என்று தினேஷை கேட்க

“இல்லை.’ என்றான்.

“நானும் சாப்பிடல.. முதலில் எதாவது நல்ல ரெஸ்டாரெண்ட் போவோம்.

ஆனால், கூட்டம் இருக்கக் கூடாது. “

“ஓகே. எனக்கு அப்படி ஒரு இடம் தெரியும்.”

என்று அழைத்து போனான்.

  அப்படி ஒரு ரெஸ்டாரென்ட்  சைதாபேட்டையில்  வந்தது.  பகட்டாக இல்லை. ஆனால் சுத்தமாக இருந்தது.

இவனைப்பார்த்ததும், “வாங்க டாக்டர்” என்று ஒரு பாய் வரவேற்றார்

“ அத்தா …உங்க பிரியாணியையும்  மட்டன் சுக்காவையும் சாப்பிட   ஸ்பெஷல் கெஸ்ட்டை   அழைத்து வந்து இருக்கிறேன்..

அவளை பார்த்து வரவேற்றார்.

“பிரஷ்ஷா கொண்டு வாருங்கள்..”

அரைமணியில் சுடசுட தயாராகி வந்தது.

பிரத்யோக தனி அறையில்  இவர்களை அமர வைத்தார்.

முதன்முதலில் இவள் வருவதால் ஸ்வீட். குலாப்ஜாமூன் வைத்தார்.

மட்டன் பிரியாணியும், மட்டன் சுக்கா.வும் டேஸ்ட் அள்ளியது. எந்த ஸ்டார் ஹோட்டலிலும் வராத டேஸ்ட் ..

பாய், லெமனேட் எடுத்து வர  உள்ளே போனார்.

இவரை சாதாரணமாக எடை போடாதே ஒரு  மாசத்தின் டர்ன் ஓவரே 50 கோடி இருக்கும். உலகமெங்கும் இவர் பிரியாணி ஏற்றுமதி  ஆகிறது. :கெட்டு போனதா சரித்திரமே இல்லை.”.

‘எனக்கு இவரைசின்ன வயதிலிருந்தே தெரியும். நான் டாக்டர் ஆனதில்,  இவருக்கு பெருமிதம்.”

பொறுமையாக ரசித்து  மெள்ள பேசிக் கொண்டே சாப்பிட்டாள்.

பிரசாத்துடன் இருந்த கடுப்பெல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்தாள்.

தினேஷ் சிரிக்க சிரிக்க பேசினான்.

சாப்பிட்டு முடித்தவுடன், தினேஷ் ஒரு ரோஜா வை அவளிடம் நீட்டினான்.

“ப்ளீஸ்’… இதை ஏற்றுக்  கொள். முதன்முதலில் என்னோடு  வருகிறாய்,”

தீடீரென்று ஏற்பட்ட சந்திப்பு . ஐ.டி.சி. யில் உள்ளே வரும்போதே எடுத்து விட்டேன்.

அழகான  சிகப்பு. ரோஜா.  

அவன் ஆசையாக கொடுத்ததும். மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டான்

“ஜெனி…உனக்கு இந்த உடையும், இந்தக்  கலரும் ரொம்ப பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கு.”

.

இந்த உடை இவனுக்காக போடவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கிக் கொண்டனர்.

இருவர் மனதில், ஐ லவ் யூ சொல்லு என்று கட்டளையாக வந்தது.

ஆனால் சொல்ல முடியாமல் தவித்தனர்.

“ஜெனி”… என்று கிறங்க கூப்பிட்டான்.

“ம்ம்ம்”… என்றாள்.

“நான் உன்னை”…..    வாய் குழற,

பட்டென்று,”  ஒரே ஒரு தடவை உன் கையை பிடித்துக் கொள்ள வா” என்று கேட்டான்.

ஏன்  என்பது போல் அவள் பார்க்க,

“எனக்கு எதாவது ஒரு விஷயம் சொல்ல முடியாமல் தவிக்கும் போது, அவர்கள் கையை பிடித்துக் கொண்டால் நன்றாக இருப்பது போல் தோன்றும். நான் சொல்ல வந்த விஷயம்  கைகள் சொல்லுவது போல் இருக்கும்.”

மறுப்பேதும் சொல்லாமல், தன் மிருதுவான கையை நீட்ட, அதை விட மிருதுவாக பற்ற இருவருக்கிடையே மின்சாரம் பாய, தன் வாயால் சொல்லாத ஐ லவ் யூ வை கைகளில் கடத்தினான்.

அதை அவள் தன் கண் அசைப்பில் ஏற்றுக் கொண்டாள்.

பாய் இந்த அறை பக்கமே எட்டி பார்க்கவில்லை

டாக்டர் தம்பி, முதன் முதலில் ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கு அவர்கள் யாரோ நல்லா இருக்கட்டும் என்று மனதார வாழ்த்தினார்.

சாப்பிட்டு முடித்தவுடன்,  சாப்பிட்டதற்கான  பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

“டாக்டர் தம்பி. என்  மகன் போன்றவர்.

முதன்  முதலில் பெண் நண்பர் ன்று உங்களைத் தான் அழைத்து வந்திருக்கு. அதற்கு போய் நான் காசு வாங்குவேனா”..

“அல்லா உன்னை ஆசிவதிக்கட்டும்” என்று வாழ்த்தி விடை கொடுத்தார்’

பைக்கில் அமர்ந்துக் கொண்டாள்.

அவனிடம் நெறுக்கமான அவனை ஒட்டிப்படி,யே பெண்களுக்கு ஓர் ஆண் மகன் மீது நம்பிக்கை வைத்து விட்டால் போதும், அவனை தன்னவனாக ஏற்றுக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

கண்ணாடி வழியாக அவள் முகத்தை பார்த்தான்.

வரும் போது குழப்பத்தில் கடுமையாக இருந்தது.

இப்போது பரிபூரண அமைதியுடன மகிழ்ச்சியாக, அந்த நிலவைப் போல் ஒளிரும் தன்மையுடன் இருப்பதைக் கண்டான்.

மெல்ல அவன் தோளை பற்றிக்  கொண்டாள்.

எங்கே போவது என்று தெரியாமல் வீடு எங்கே என்று கேட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

R.A.Puram

இரவு. 10 மணி.

பிரசாத் தன் தங்கை மதிவதனிக்கு   போன் செய்தான்.

ஹலோ… மதி  ஒருகையால்  போனை முடிக்கொண்டே தன் மாமியாரிடம்  என் அண்ணன் தான்..

பேசு. பேசு… என்றார்.

“ஹலோ  அண்ணா’.

“ஹலோம்மா……அந்த அடங்காப்பிடாரி வீட்டிற்கு வந்து விட்டாளா”

இதைக் கேட்டதும்   மதிவதனி  வெலவெலத்து போய், தன் மாமியாரிடமிருந்து விலகி தூர நின்றுக் கொண்டாள்.

“அண்ணா என்ன சொல்கிறீர்கள்

யாரை” ……. என்று குழப்பமாக மெல்லிய குரலில்  கேட்க,

“அதான் உன் நாத்தனார்.”

“அவளா…உங்களுடன் தானே போனாள்”.

“என்னிடம்  சொல்லாமல்   என்னை என் நண்பர்களிடத்தே அவமானப் படுத்தி விட்டு போய் விட்டாள். இன்னுமா வரவில்லை.”

“இல்லனா’..

“எல்லாம் வருவாள்’.

“அண்ணா எனக்கு பயமா இருக்கு. எப்ப போனாள். “

“சாப்பிட வே இல்லை.”

“நாங்கள் டிரிங்ஸ் சாப்பிட ஆரம்பிக்கும் போதே போய் விட்டாள்.’

‘ரெஸ்ட் ரூமிற்கு  போய் இருப்பாள் என்று நினைத்தால், ஹோட்டலை விட்டே யாருடனே பைக்கில் போய் விட்டாளாம்.”

“பைக் டாக்ஸியா இருக்குமோ”…

“எதோ ஒன்று மா. நான் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள முடியாது”.

“ஐய்யோ… என் மாமியார் நாம் பேசுவதையே  பார்த்துக் கொண்டு இருக்கிறார்.”

“என் மாமனாரும், அவரும் என்ன சொல்வார்களோ… கடவுளே இந்தப் பெண் பத்திரமாக வீடு வர வேண்டும்.”

“என்னம்மா. – நீ அவர்களுக்கு இவ்வளவு பயப்படுகிறாய்.

“நான் மருமகள் தானே  எனக்கு என் புருஷன்  முரளியை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.”

அப்போது  எதிர்முனை சைலண்டாக இருக்க

“ஹலோ அண்ணா”  ….

“இருக்கிறாயா..?

“ம்ம்ம்… சொல்லு.”

“நீ அவளுக்கு போன்  பண்ணியா”?

‘பண்ணாமல் இருப்பேனா  . அந்த பேரழகி எடுக்க வே இல்லை.”

“சரிண்ணா நீ வை.’

‘நான்  பண்ணி பார்க்கிறேன்.”

இவளையே பார்த்துக் கொண்டியிருந்த சுதா,  இவள் போனை  வைத்ததும்

“என்னாச்சி. … எல்லாம் சரியா போச்சி   தானே.”.

“உன் அண்ணன் பிரபோஸ் பண்ணினானா . ஜெனி அதை ஏற்றுக் கொண்டா கொண்டாளா”…….

‘சே  …….என்ன அம்மா   இவள்

..என் அண்ணன்  ஜெனியை திருமணம் செய்து கொள்வதே  அவளிடமிருந்த

கம்பெனி ஷேர்ஸ் . அது தன் கணவனுக்கு ஈக்குவால   வைத்து இருக்கிறாள். அது  மாமனார் ஏற்பாடு.

பெங்களூர் லேண்ட். அப்புறம் தான் அவள் அழகு  என்பதெல்லாம்.

இந்த மாமியார் என்ன என் அண்ணனிடம் எதிர் பார்க்கிறார்.

அந்த லேண்ட்   என் அண்ணன் கைக்கு வந்தால் தான் அவரால்   தலை நிமிர முடியும். எல்லாம்  கடனில் போய்க் கொண்டு இருக்கிறது. இது புரியாமல் இந்த மாமியார் கிழம்  அவனுக்கு தன் மகளை கட்டி,எங்கள் சொத்தை ஆட்டய போட பாக்குது.’

மதி… மதி… என்று  உலுக்கினாள்.

“நான் என்ன கேட்டேன்’ நீ எதோ யோசனையா இருக்கியே..”

ஜெனி இப்போது வந்து  விடுவாளாம்.  அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ரொம்ப தலைவலிக்கிறது” என்று சொல்லிவிட்டு, அவர் பதிலை கூட எதிர் பார்க்காமல் போய் விட்டாள்.

ஜிம்மிலிருந்து வந்த அவள் கணவன் முரளி, எங்கடி உன் அண்ணனுடன்  போன  என் தங்கச்சி யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு பண்ண. என் அம்மாவும் இதற்கு உடந்தையா ……. . ஜெனி அப்படி போக கூடியவள் இல்லையே  எதோ நடந்து இருக்கு.”  என்று சரமாரியாக கேள்விகளில் துளைக்க

‘எனக்கு தூக்கம் வருகிறது. உங்க தங்கை.ஒன்றும் குழந்தையில்லை. என் அண்ணன் கூப்பிட்டதும், அவளாகத் தான் போனாள். நான் கூட சாதாரணமா கேஸுவலா போ என்றேன்.

அவள் தான் நீங்கள் வாங்கிக் கொடுத்த அந்த லைலாக் டிரஸ்ஸை போட்டுக் கொண்டு போய் இருக்கிறாள்.”

“யார்  … ஜெனி யா… ?  இதை நான் நம்பணும். i

மேலும் பேச்சை வளர்த்தாமல் குட் நைட் என்று சொல்லி, தலைவரை  இழுத்து போர்த்திக் கொண்டாள்.

இவளுக்கு உள்ளூர உதறல் எடுத்துக் கொண்டியிருந்தது.

ஜெனி பத்திரமாக வர வேண்டும். அந்த பைக் டாக்ஸி காரனுடன் போனவள். இவ்வளவு நேரம் ஆகியும் வராமல் இருக்கிறாள்.

போனும் நாட் ரீச்சபிள் என்றேவருகிறது.

இந்த அண்ணனுக்கு எதாவது அறிவு இருக்கிறதா : இவளை டேட்டிங்க்கு கூட்டிட்டு போனார்.  அவளிடம் தனியே பேச வேண்டியது தானே. பிரண்ட்ஸ்ஸையும் எதற்கு ‘ அழைத்தார்.அதுவும் அந்த சினிமாக்காரன் ஏடாகூடமா பேசுவானே:

என்னிடமே வழிந்தான் . இவளோ தேவதை மாதிரி மாதிரி  இருப்பாள்.

என்ன சொன்னானோ……என்ன நடந்ததோ… இவளு|ம் சொல்லாமல் கிளம்பி விட்டாள். கிளம்பி நேரா வீட்டிற்கு வர வேண்டியது தானே. எங்கே போனாளோ.. எதாவது நடந்தா முரளி நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவாரே என்று   போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு, தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

ராஜம்மா  இந்தப்பெண் வரவில்லையே என்று வாசலில் வாட்ச்மேன் அறையிலே  காத்துக் கிடந்தாள்.

மோட்டார் பைக் சத்தம் கேட்டதும், யாரென்று பார்க்க, ஜெனி இறங்கினாள்.

பைக்கில் வந்தவனை பேசாக அணைத்தபடி விடை கொடுத்தாள்.

தூரத்திலிருந்து பார்த்ததால் முகம் சரியாக தெரியவில்லை.

வந்தவர் பைக் ஓட்டின் சென்றது, கம்பீரமாக இருப்பதாக பட்டது.

நல்லவேளை அந்த பிரசாத்துடன் வரவில்லை.

மரியாதை தெரியாத அண்ணன் தங்கை.

காவலாளி அறையிலிருந்து ராஜம்மா வெளிப்பட்டதும், “என்னம்மா நீங்கள் தூங்கவில்லையா.”?

“நீ வரலேயே. எனக்கு எப்படி தூக்கம் வரும். வா உனக்காக அம்மாவும்,தம்பியும் கூட தூங்கல.”

“அம்மா வுமா “…

அப்ப பிரச்சனை இருப்பது கன்பர்ம்…

என்று நினைத்தபடியே உள்ளே சென்றாள்.

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page