அத்தியாயம் 27
நேற்று போலவே இன்றும் அதிகாலையில் அவள் எழும் பொழுது அவள் அருகில் தீரன் இல்லை..
நேற்று போலவே அலுவலகம் சென்றுவிட்டானோ சீக்கிரமாகவே?? அப்படி என்ன பெரிய வேலை தினமும் மீட்டிங் வைப்பார்களா என்ன??அப்படி என்ன வேலை பிழிந்து எடுக்கும் அளவிற்கு??
என்னவோ.. ??!!என்று நினைத்துக் கொண்டு அவளும் எழுந்து குளிக்க சென்று விட்டாள்..
அவனும் கிளம்பி விட்டான், அறைக்குள் யாரும் இல்லை கீழே வீட்டில் அத்தை மட்டுமே அடிப்படையில் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.. தோட்டக்காரர்களும் மற்ற வேலை செய்யும் ஆட்களும் ஒன்பது மணிக்கு தான் வந்து சேருவார்கள் அதனால் வீட்டில் யாரும் இல்லை என்கிற சுதந்திரத்தோடு குளியலறையில் இருந்து ஒற்றை டவலை உடலில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் மித்ரா..
ஈர கால்களோடு வேகமாக வந்தவள் தரையில் கால் பதித்த அடுத்த கணம் அவள் பாதங்கள் வழுக்கி கொண்டு சென்றது டைல்சில்..!!
” அம்மா”, என்ற அலறலோடு கீழே விழப் போனவளை தாங்கி பிடித்தது இரும்பு கரம் ஒன்று..!!
பயத்தில் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு, இன்னும் கீழே விழாமல் இருக்கிறோமே என்னாயிற்று ?? ஒருவேளை படத்தில் வருவது போல மிதந்து கொண்டிருக்கிறோமோ காற்றில்?? என்று ஏடா கூடமாக அவளுடைய எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது..
அப்படி எல்லாம் நடப்பதற்கு இது ஒன்றும் திரைப்படம் அல்லவே நிஜ வாழ்க்கை ஆயிற்றே..
இந்நேரத்திற்கு விழுந்திருக்கணும் ஆனால் இன்னும் விழாமல் இருக்கிறோமே யாரோ தாங்கி பிடித்தது போல இருக்கிறது ஒருவேளை அவனாக இருக்குமோ?? என்று யோசித்துக் கொண்டு மெல்ல கண்களை திறந்து பார்த்த பொழுது தான் அவளுக்கு விஷயம் விளங்கியது..
அவளுடைய கணிப்பு பொய்யாகவில்லை..
அவள் நினைத்தது போலவே அவளை தாங்கி பிடித்து கொண்டு நின்றிருந்தது, அவளுடைய கணவன் தீரன் தான்..!!
அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பி சென்றவன் மறந்து ஒரு பைலை வைத்துவிட்டு சென்றுவிட்டான்..
அதை எடுப்பதற்காக மீண்டும் அறைக்கு வந்த பொழுதுதான் அவள் கீழே விழுவதை கண்டதும் ஓடி சென்று அவளை பூ பந்துகளை தாங்குவது போல தாங்கினான்..
இப்போ அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசுவதையே தவிர்த்திருந்தான் தீரன்..
அதிகபட்சம் இரவில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அவளுடைய முகத்தை சந்திக்க நேர்ந்தது.. மற்றபடி காலையில் அவள் எழும் முன்பே எழுந்து குளித்து சென்று விடுகிறான் அலுவலகத்திற்கு..
கடந்த இரண்டு தினங்களாக இந்த கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது..
எப்படியாவது அவளை பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான் வீதி அவனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தது, அந்த பைல் காணாமல் போயிருந்த காரணத்தினால்..!!
அப்படி வந்ததால் தானே தன்னுடையவளை இப்பொழுது தாங்கிக் கொண்டு நிற்க முடிந்தது??, என்று அவனுடைய இன்னொரு மனமும் யோசித்தது..❤️❤️
இருவரின் கண்களும் அசைய மறுத்து ஒருவரை ஒருவர் ஆழமான பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்..
அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு
உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்❤️❤️
இன்று..பழைய மாதிரி அவனை தட்டிச் செல்லவும் இல்லை அவள்..
அவனும் இறுக்கி அணைத்து பழைய மாதிரி முத்தம் கொடுக்கவும் முயலவில்லை..!!
எந்தவித அணைப்புகளும் முத்தங்களும் இல்லாமல்.. இருவரின் பார்வை மட்டுமே தழுவிச் சென்றது அங்கே தென்றலாக..❤️❤️
அன்று ஒரு நாள் குளித்துவிட்டு அவள் இதே போல ஒற்றை டவலை சுற்றிக்கொண்டு வெளியே வந்த போது அவன் என்னவெல்லாம் சில்மிஷங்கள் செய்தான் என்று அவளுக்கு இன்றும் நன்றாகவே நினைவில் இருக்கிறது..
ஒருவேளை இன்றும் அதே போல் ஏதாவது செய்வானோ என்கிற கேள்வியோடு அவன் கண்களை அவள் பார்த்திருந்தாள் மித்ரா..
ஆனால் அவன் கண்களில் எந்த வித காம உணர்ச்சியும் தென்படவில்லை..
மாறாக அழகிய மலரை மொய்க்கும் வண்டு போல அவளை ரசித்துக் கொண்டிருந்தது அவனுடைய விழிகள்..
அந்த இரும்பு கரங்கள் அவள் இடையை வளைக்க நினைக்கவில்லை..
தடித்த உதடுகள் அவள் இதழ்களை சுவைக்க நினைக்கவில்லை..
சூடேறிய அவனுடைய விரல்கள் அவளை தழுவ முயலவில்லை..
ஆனால் அவள் மீது பதிந்திருந்த கண்களை மட்டும் அவனால் அங்கும் இங்கும் நகர்த்தவே முடியவில்லை..!!
எங்கே தன்னை பழைய மாதிரி ஆட்கொள்ள நினைப்பானோ என்று நினைத்திருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..
பழைய தீரனாக இருந்திருந்தால் இப்பொழுது அவள் இருக்கும் நிலைக்கு.. அப்படியே கையில் குழந்தையை போல் ஏந்தி சென்று கட்டிலில் கிடத்தி அவளை புரட்டி போட்டு ஒரு வழி செய்திருப்பான்..
ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அவனுடைய மனம் படும் பாடு அவனுக்கு மட்டும் தான் தெரியும்.. குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான் அவன்..
பேரம் பேசி விலைக்கு மாட்டை வாங்குவது போல இவளை திருமணம் என்கிற பெயரில் அழைத்து வந்து சித்திரவதை செய்கிறோமோ என்கிற எண்ணம் அவன் மனதில் தோன்றியிருந்தது..
அம்மா சொல்லுவது போல சிரித்த முகமாய் திரிந்து கொண்டிருந்தவளின் முகத்தில் சமீப காலமாய் வெறுப்புணர்ச்சி வருவதற்கு தான் தான் காரணமோ?? என்று பலவகையாக யோசித்துக் கொண்டிருந்தது அவனுடைய மனம்..
அதன் காரணமாக அவளுடைய முகத்தை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் விடிந்ததும் விடியாததுமாக முதல் ஆளாக எழுந்து குளித்து முடித்து அரவம் இல்லாமல் மெதுவாக கிளம்பிச் சென்று விடுகிறான் அலுவலகத்திற்கு..
அவள் பார்க்கும் முன்னமே கிளம்பி விடுகிறான்.. அவள் உறங்கிய பிறகுதான் வீட்டிற்கு வர நினைக்கிறான் அவன்..
அவனுடைய இந்த விலகலில் அவனுக்கு எப்படியோ தெரியவில்லை..
ஆனால் அவளுக்குத்தான் சிரமமாக இருந்தது..
உடும்பு பிடியாக பிடித்து அடம்பிடிக்கும் சிறு பிள்ளை போல அவளை தன் கைக்குள் வைத்துக் கொண்டிருந்த தீரன் எங்கே??
இப்பொழுது தன்னை கண்டாலே பதறி அடித்துக் கொண்டு ஓடிச் செல்லும் தீரன் எங்கே??, என்று அவனுடைய இரு குணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா..
இவனுக்கு என்ன ஆச்சு?? ஏன் ஒரு மாதிரியா இருக்கான்?? இவனுடைய இயல்பு இது கிடையாது.. ஒருவகையில் அவன் மொத்தமாக மாறிக் கொண்டிருக்கிறானோ என்று தோன்றுகிறதே என்று எண்ணிக்கொண்டாள்..
” ஏன் அவன் உன்னை நெருங்கி முத்தம் கொடுத்து கட்டி அணைக்கவில்லை என்று உன் மனம் ஏங்குகிறதா?? கணவனின் அணைப்பில் உறங்கும் சிறு பிள்ளையாக மாறிவிட்டாயோ??”, என்று சிரித்துக் கொண்டே கிண்டலாக அவளுடைய மனசாட்சி அவளைப் பார்த்து கேள்வி கேட்க..
” என்னது ?? இவனுக்காக நான் ஏங்குகிறேனா?? இவனுடைய அன்பிற்காக நான் தவிக்கிறேனா?? கிடையவே கிடையாது.. சரியான முரடன் இவன்.. இவனுக்காக யாராவது ஏங்குவார்களா ?? இவன் என்ன பெரிய மன்மதனா?? பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் கூட தெரியாத மூடன் முரடன் மூர்க்கன் இவன்.. இவன் மீது எனக்கு அன்பு அக்கறை ஈர்ப்பு இதெல்லாம் ஒரு காலத்திலும் வராது”, என்று சிலுப்பி கொண்டு நின்றது அவளுடைய சண்டைக்கோழி குணம்..!!
பாக்குறதுக்கு இம்புட்டு அழகாக இருக்கிறாளே..இப்படி பக்கத்தில் வச்சுக்கிட்டு என்னால ஒன்னும் பண்ண முடியல, எதுவும் பண்ணவும் தோணல.. அவளுடைய மனச ஏற்கனவே நோகடிச்சிட்டேன்..
மேலும் என்னுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும், என்னுடைய சந்தோஷத்தை முதன்மையாக கொண்டும்.. அவளை இனிமே நான் எப்பொழுதும் சித்திரவதை செய்யவே மாட்டேன்.. அவளுடைய அனுமதியின்றி இனி அவளை நான் நெருங்க கூட மாட்டேன் என்று மனதிற்குள் சபதம் எடுப்பது போல எடுத்துக் கொண்டான் தீரன்..
இருவரும் மனதிற்குள்ளேயே கதைத்துக் கொண்டு வெளியே முகத்தை பாவமாக வைத்திருந்தார்கள்..
ஒரு கட்டத்தில் கையை விட்டு தான் ஆகணும் இல்லையா??
அதனால் அவளை விலக்கி நிப்பாட்டி வைத்துவிட்டு..
” சாரி.. கீழே விழ போன அதனால் தான் தாங்கி பிடிச்சேன்.. சாரி”, என்று நேருக்கு நேராக அவளை ஒரு நொடி மட்டுமே பார்த்து பேசியவன், விருட்டென்று திரும்பி அங்கே கபோர்ட்டில் இருந்த முக்கியமான அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு அவளை திரும்பி கூட பார்க்காமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான் அவன்.
ஏதோ உலகின் எட்டாவது அதிசயத்தை பார்ப்பது போல அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மித்ரா..
நிஜமாகவே இப்பொழுது எனக்கு உதவி செய்துவிட்டு எதுவும் கண்டு கொள்ளாமல்.. அதுவும் , மனம் வந்து என்னை மன்னித்துவிடு என்று சாரி கேட்டு விட்டு செல்வது என்னுடைய கணவன் தானா ?? எனக்கு தாலி கட்டிய அந்த அரக்கன் தீரன் தானா?? என்பது போல சந்தேகமாக அவனையே பார்த்துக் கொண்டு அசந்து போய் நின்றிருந்தாள் மித்ரா..!!
நிச்சயமா இவனுடைய குணத்திலும் பழக்கவழக்கத்திலும் ஏதோ மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக அவனுடைய நடவடிக்கை ஒன்றுமே சரியில்லை..
கவனிக்கணும் என்ன என்று பார்க்கணும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் உடனே தலையை சிலுப்பிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானாள்..
வேக வேகமாக அந்த லாவண்டர் நிறத்தில் இருந்த சாட்டின் சேலையை உடுத்திக் கொண்டு தலையில் ஒரு முழம் மல்லிகை பூவை சூடிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள்..
” அம்மாடி ஆபீஸ் கிளம்பியாச்சா?? சரி சரி வா சாப்பிடு”, பெற்ற தாயைப் போல தன்னிடம் அன்பு காட்டும் தன் மாமியார் வசுந்தராவை பார்த்து அன்போடு ஒரு சிரிப்பை உதிர்த்தவள்..
” இல்ல அத்தை.. எனக்கு இன்னைக்கு சாப்பாடு வேண்டாம் ரொம்ப லேட் ஆயிடுச்சு நான் சீக்கிரம் கிளம்பியாகணும்.. சாரி அத்தை நான் சாயங்காலம் வந்து எல்லாத்தையும் ஒன்னு விடாம சாப்பிடுறேன்”, என்று கூறி விட்டு வேகமாக மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றாள்..
ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்தை நோக்கி வந்தவள் அவள் வழக்கமாக போகும் பேருந்திற்காக காத்திருந்தாள்..
ஆனால் நேரம் கடந்ததே ஒழிய பேருந்து வரவே இல்லை..
இது என்னடா இது சோதனை?? நேரம் வேற ஆகிக்கொண்டிருக்கிறது வேலைக்கு சேர்ந்த புதிதில் இத்தனை தடங்கலா??
கையில் இருந்த வாட்ச்சை திருப்பி பார்த்துவிட்டு இன்று அலுவலகம் செல்வது சந்தேகம் தானோ?? என்று பதட்டமாக அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே..
விலை உயர்ந்த அந்த ஃபோர்டு கார் அவள் முன்பாக வந்து நின்றது கம்பீரமாக..!!
– தொடரும்..
