அத்தியாயம் 20
அங்கே அவன் கண்டது என்னமோ இது தான்.
அஸ்வந்த்தின் செல்ல மகன் சுஜித் தரையில் படுத்திருந்தான்.
அபிராமி தரையில் பெட் சீட் ஒன்றை விரித்து அதன் மேல் தான் பிறவா மகனை கிடத்தி இருந்தாள்.
அவனும் தான் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதற்கு அடையாளமாய் அவனின் பிஞ்சு கைகால்களை அசைத்து குப்புற விழ முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இதை கண்டு தான் அஸ்வந்த் திகைத்து நின்றான்.
அபிராமி அவனின் அருகிலேயே அமர்ந்து அவனை ரசித்து கொண்டிருக்க,
அந்த குழந்தை சுஜித் குப்புற விழ மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முடியாமல் அழ ஆரம்பித்து விட்டான்.
அச்சச்சோ என் தங்கம் எதுக்கு அழுறிங்க? இன்னும் ரெண்டு மூணு டைம் ட்ரை பண்ணா என் பையனும் தவழுவானே என்றாள் அபிராமி.
ஆனால் அவனோ துள்ளி கொண்டு அழ, அபிராமி அவனை அள்ளி தூக்கி முத்தம் வழங்கி சமாதானப்படுத்தி மறுபடி அவனை தரையிலேயே படுக்க வைக்க இப்பொழுது தான் அஸ்வந்த் அறைக்குள் நுழைந்தான்.
அவனும் அபிராமியின் அருகில் அமர்ந்தான்.
அவனின் மகன் வெறும் தரையில் நீச்சல் அடித்து கொண்டிருந்தான்.
பிறந்த குழந்தை கீழே தரையில் படுக்க வைத்தால் இப்படி எல்லாம் செய்யுமா என்று தான் பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த்.
என்னங்க இவனுக்கு நீங்க தொட்டில் வாங்கிட்டு வாங்க. அம்மா அவங்க புடவை யூஸ் பண்ணி தொட்டில் கட்டுனாங்க. ஆனால் எனக்கு இங்க பயமா இருக்குங்க என்றாள் தன் அருகில் அமர்ந்திருக்கும் கணவனிடம்.
என்ன சொல்லுற அபி எனக்கு புரியல. ஏன் பயம்? அத்தை தொட்டில் கட்டுன மாதிரி இங்கயும் ஒரு தொட்டில் ரெடி பண்ணிரலாம் என்றான் அஸ்வந்த்.
இல்லைங்க. அவன் அழும் போது குதிக்கிறான். கீழே விழுந்துட்டா அடி பட்டுருங்க அவனுக்கு என்றாள் அக்கறையாக.
அவனுக்கு அடி பட்டு விடும் என்று கவலை கொள்கிறாளா! என்று நினைத்தான் அஸ்வந்த்.
மரத்தால செஞ்சிருக்கும்ல அந்த தொட்டில் வாங்கிருவோம். அப்போ நான் இவனை என் பக்கத்துலயே படுக்க வச்சிப்பேன். இவன் அழுதா உடனே என்னால தூக்க முடியும்.
புடவை வச்சி செஞ்சா மேல இருந்து தொட்டில் தொங்கும். ஒரு வேலை தொட்டில் கீழே அறுந்து விழுந்துருச்சுனா என்னால தாங்க முடியாதுங்க. இவன் வேற சின்ன பையன். நம்ம தான் இவனை பார்த்துக்கணும் என்றாள் .
இது தேவை இல்லாத பயம் அபி. அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது என்றான் அஸ்வந்த்.
நீங்க வாங்கிட்டு வருவீங்களா? மாட்டிங்களா? அது மட்டும் சொல்லுங்க என்றாள் பிடிவாதமாக.
சரி சரி வாங்கிட்டு வரேன். நீ டென்ஷன் ஆகாத என்றான் அஸ்வந்த்.
இதோ அவர்களின் செல்ல மகன் அவர்களை தான் விழி உருட்டி பார்த்து கொண்டிருந்தான்.
இருவரும் தனக்காக தான் எதோ பேசி கொண்டிருக்கின்றனர் என்று புரிந்து விட்டான் போலும்.
என்ன டா தங்கம். அம்மாவும் அப்பாவும் உனக்காக தொட்டில் வாங்க பிளான் பண்றோம்னு உனக்கு தெரிஞ்சிட்டா என்று அபிராமி கேட்க, அஸ்வந்த் கலங்கிய விழிகளோடு அவளை ஏறிட்டான்.
பட்டு குட்டி சீக்கிரமே உங்களுக்கு பேர் வைக்க போற பங்க்சன் வைக்க போறோம். எல்லாரும் குட்டி பையனை பார்க்க வருவாங்க என்று அவனை பார்த்து அபிராமி கொஞ்ச,
அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் சுஜித்.
அபிராமியை விழி மூடாமல் பார்த்தான் அஸ்வந்த்.
அவனை கொஞ்சி விட்டு தன் கணவனை பார்த்த அபிராமி என்னாச்சு ரெண்டு பேரும் என்னையே பார்க்குறீங்க என்று சிரித்து கொண்டே கேட்டாள்.
ஆஹ் ஒன்னும் இல்லை என்றான் அஸ்வந்த் சட்டென்று.
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ வவ் என்று சத்தம் வைத்தான் சுஜித்.
அஸ்வந்த் தயக்கத்தோடு அபிராமியின் முகம் பார்த்தான்.
அவனின் மனது சிறிது கல்லாகி விட்டது போல் உணர்ந்தான்.
அபி உன்கிட்டே ஒன்னு சொல்லணும் என்றான் சுஜித்தை பார்த்தப்படி.
கேள்வியாக அஸ்வந்த்தின் முகம் பார்த்த அபிராமி, சொல்லுங்க என்றாள் .
நீ,நான் அப்பறம் சுஜித் இது தான் நம்ம உலகம் உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான்.
அபிராமி திகைத்து அவன் முகம் பார்த்தாள்.
அவன் சாதாரணமாக கேட்டு விட்டான். அவளின் மனதை பற்றி அறியாமல் அவன் கேட்டது பெரிய தவறு என்று அவன் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
ஏங்க இவனை நான் ஒழுங்கா பார்த்துக்க மாட்டேன்னு பயப்படுறீங்களா? என்று கேட்டாள் அபிராமி.
இல்லை அபி. நீ அவனை நல்லா பார்த்துப்ப எனக்கு தெரியும். நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியுதா என்று அவளின் விழிகளை பார்த்தான் தயங்கியபடியே.
புரியுதுங்க நம்ப மூணு பேர் தவிர்த்து நமக்கு வேற யாரும் வேணாம்னு சொல்லுறீங்க எனக்கு நல்லாவே புரியுது என்றாள் அபிராமி.
அஸ்வந்த் மூகம் கூம்பி போனது அவளின் சிவந்த விழிகளை பார்த்து.
அபிராமி வேதனையை முகத்தை காட்டாமல் இருக்க பெரும் பாடு பட்டாள்.
“நான் இவனை நல்லா பார்த்துப்பேங்க. நீங்க பயப்படாதீங்க” என்று கூறிவிட்டு அவனை கையோடு தூக்கி கொண்டு அறை விட்டு வெளியே சென்று விட்டாள்.
******
அகிலா இரண்டு நாட்கள் கழித்து தான் அலுவலகத்திற்கு சென்று இருந்தாள்.
வேலையில் கவனமாக இருந்தவளை அருகில் வந்து தொந்தரவு செய்ய மனம் இல்லாமல், தான் இருந்த இடத்தில் இருந்து ரசித்தான் கார்த்திக்.
ஆனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த அகிலாவிற்கு அவனின் துளைக்கும் பார்வை தெரிந்தது.
இருந்தாலும் அமைதியாக இருந்தாள்.
அவளின் மனம் லேசாக பட படத்தது. இதயம் தடக் தடக் என்று சத்தம் போட்டது.
அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தவளின் கைகள் லேசாக சில்லிட்டு இருந்தது. உள்ளங்கை கூட வியர்த்து வடிந்தது.
அவனின் பார்வை இவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
பயத்தில் தானாக கீழ் இதழை அழுந்தக் கடித்து கொண்டாள் அகிலா.
கார்த்திக் அவளின் ஒவ்வொரு செய்கையையும் ஆசையாக ரசித்தான்.
தனக்கு முன் இருந்த கணினியை பார்த்து கொண்டிருந்தவளின் விழிகள் லேசாக மேல் எழுந்து அவனை பார்க்க, அவனோ அவளின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி தவித்து கொண்டிருந்தவன் நொடியில் அவளின் விழிகளில் விழுந்தான்.
அவன் உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தொற்றி கொண்டது.
அகிலாவின் விழிகள் சட்டென்று கணினியில் மேல் வந்து ஒட்டி கொண்டது.
அங்கு இருக்க முடியாமல் இருக்கையில் இருந்து எழுந்தவள் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து அலுவலகத்தின் முன் வாயிலில் வந்து நின்றாள்.
காற்றில் மரங்களும் செடிகளும் அசைந்தாடி அதனின் வாசனையை அளிக்க, அந்த காற்றை சுவாசித்து உள் இழுத்து வெளியே விட்டாள் அகிலா.
ஏற்கனவே மூன்று நான்கு பேர் காற்றை சுவாசித்த வண்ணம் தான் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை விட்டு சற்று தொலைவில் தான் அகிலா நின்று இருந்தாள்.
அந்த முன் வாசலில் கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கண்டிசன்ஸ் என்று ஒன்றும் கிடையாது. அன்றன்று உள்ள வேலையை அன்றே முடித்துக் கொடுத்தால் போதும்.
அவ்வப்பொழுது வரும் புராஜெக்ட் அனைத்தையும் சரியாக செய்து அலுவலகத்திற்கு நல்ல பெயரை சேர்க்க வேண்டும்.
இது வரை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது இந்த அலுவலகம்.
இதோ நம் அகிலாவிற்கு பின் நின்று இருந்தான் கார்த்திக்.
அவனின் மூச்சு காற்று அவளின் முதுகில் பட்டது போல் உணர்ந்தாள் அகிலா.
அவன் நிற்பது அவளை விட்டு இரண்டடி தள்ளி தான். ஆனால், நம் அகிலாவிற்கு அவன் நெருங்கி நிற்பது போல் தோன்ற அச்சத்தோடு நின்று இருந்தாள்.
என்ன அகி? நான் கேட்டதுக்கு பதில் எதும் சொல்லாமல் இருக்குற? என்று கேட்டான் கார்த்திக்.
என்ன கேட்டிங்க? பயத்தில் திக்கி திணறி வார்த்தையை வெளியிட்டாள் அகிலா.
என்னைய கட்டிக்கிறியா டி? என்று உரிமையாக.
டி யா என்றவள் ஏகத்துக்கும் திரும்பி பார்த்து அவனை மொறைத்தாள்.
இங்க பாருங்க. பார்த்து பேசுங்க சொல்லிட்டேன் என்றாள் விரல் நீட்டி.
அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பது கேமராவில் ரெகார்ட் ஆகிக்கொண்டே இருந்தது.
ஆனால் அவர்கள் அதை துளியும் கவனிக்கவில்லை. அது ஒன்று அங்கு பொருத்தப்பட்டுள்ளது என்றே மறந்து விட்டனர்.
அவனின் விழிகளை பார்த்தவளுக்கு கோபம் கூட பல அடி தள்ளி போனது.
கண்களை தாழ்த்தி கொண்டாள். உங்க அப்பா எப்படி இறந்து போனாங்க தரையை பார்த்தப்படி கேட்டாள்.
ஹார்ட் அட்டாக் என்றான்.
விழிகளை நிமிர்த்தி அவனை பார்த்தாள். எப்படி திடிர்னு? என்றாள்.
அவருக்கு விதி அவ்ளோ தான் என்றான் கசிந்த கண்ணீரை வெளியே விடாமல்.
ஆனால் அகிலாவுக்கு தெரிந்து விட்டது. அவளின் விழிகள் அவன் முகத்தை ஆராய்ந்தது.
தனக்குள் இருக்கும் கஷ்டத்தை வெளியே காட்டாமல் அனைவர் முன்னும் சிரித்த முகமாக இருந்திருக்கிறான் என்று புரிந்தது.
தங்கச்சிக்கு என்னவாயிற்று என்று கேட்க துடித்தது அவளின் உள்ளம். ஆனால், இதை ஏன் அவனிடம் கேட்குறாய்? நீ என்ன அவனோடு சேர்ந்து வாழவா போகிறாய் என்று அசிங்கமாக கேட்டது அவளின் மூளை.
அமைதியாக அடி எடுத்து நகர்ந்து சென்றவளை, பதில் சொல்லிட்டு போ அகி என்றான்.
சே எஸ் ஆர் நோ என்றான்.
பதில் கூற முடியவில்லை அவளால்.
அவளின் விழிகள் கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை இவனால்.
ஆனால் அவளின் குளிர்மையான விழிகளுக்குள் புதைந்து கொள்ள தோன்றியது அவனுக்கு.
இல்லைனு சொல்லுறதுக்கு உனக்கு என்ன தயக்கம் என்று அவளிடமே கேள்வி கேட்டது அவளின் மூளை.
என்னனு தெரியல இப்போ ரெண்டு மூணு நாளா அவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் வருது என்று கூறியது இதயம்.
சரி அதுக்கு? என்று வாக்கு வாதம் செய்தது மூளை.
அதுக்கு என்னனா புடிச்சிருக்கு என்று எகிறியது இதயம்.
பட படவென்று தனக்குள் துடித்து கொண்டிருந்த இதயத்தை அடக்கி விட்டு அவனின் முகம் பார்ப்பதை தவிர்த்து விட்டு நடந்து விட்டாள் அகிலா.
ஆண்கள் பாவம் தான் போலும். தன்னுடைய காதலை” காதல் கொண்ட பெண்ணிடம் தெரிவித்து விட்டு அவளின் பதில் வேண்டி நிற்கும் கொடுமை “ஆண்களுக்கு மட்டும் தான் தெரியும்.
இதோ இப்பொழுது அகிலாவின் இதயத்தை படிக்க முடியாமல் நின்று இருந்தான் கார்த்திக்.
பிடிச்சிருந்தா ஒரு ஸ்மைலி கொடுங்க நண்பர்களே.
