கண்கள் பேசுதே அத்தியாயம் -12

அத்தியாயம் -12

அவள் நெருங்கி வந்ததும் அவன் மனம் ஏனோ தடுமாறியது. இதுவரை உணராத உணர்வுகள் அவனுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. தான் ஒரு asexual என்பதை மறந்துப்போன தருணம் அது.

அவளுடன் வாழ்ந்த நாட்களில் அவன் பெரிதாக அவளிடம் ஈர்ப்பு கொண்டு நெருங்கியதில்லை ஆனால் இன்று அவள் தன் மனைவி என்ற எண்ணம் அவனுக்குள் விதைத்தது. 

“ராஜா….”என்றாள் அவனோ கண்களை மூடி மெல்ல அவளை உணர்ந்தான். நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் நெற்றியில் முத்தம் பதித்தான். அவள் அதை தவறாக நினைக்கவில்லை மாறாக அவன் தன்னுடைய குறைபாடுகளை மறைத்து உணரும் தருணம் என்று நினைத்து புன்னகையித்தாள். 

அதன் பின் அவனும் அவளும் எதுவும் முன்னேறி செல்லவில்லை. சேலையை உடுத்தி வெளியேறினாள். அவனும் வெளியே வந்து”பாட்டி நாங்க ரெடி என்றான்”

“அழகா இருக்கா டா உன் பொண்டாட்டி “என்றார் பாட்டி.

“அவ எப்பவுமே அழகு தான் பாட்டி “என்றான்.

இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை மறந்து ஏனோ கணவன் மனைவி போல் உணர ஆரம்பித்தனர். அவனுடைய குறைபாடுகள் எல்லாம் காணாமல் போனது. அவன் மீதுள்ள கோபம் எல்லாம் காணாமல் போனது. அப்படி என்றால் இருவரும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா என்றால் வாய்ப்பு உள்ளது எனலாம் ஆனால் காலம் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.

இருவரும் கிளம்பி அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றனர் குழந்தை பாக்கியம் காக சில தம்பதியினர் தொட்டில் கட்டிக்கொண்டு இருந்ததை கவனித்தால் ரோஜா அவளும் அதே போல் தொட்டில் கட்டலாம் என்று நினைத்தாள் ஆனால் ஒரு நிமிடம் இன்று யோசித்தவர் அதான் நாங்கள் இருவரும் கணவன் மனைவி இல்லையே தற்போது இன்று எதற்காக குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்ட வேண்டும் சரி எதுவும் வேண்டாம் அப்படியே சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி விடலாம் என்று நினைத்தாள்.

“ரோஜா அங்க பாரேன்”என்று ஒரு தம்பதியினர் தூக்கிக் கொண்டு வந்திருந்த குழந்தையை காண்பித்தான். அந்த குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தது அந்த சிரிப்பில் இருவரும் லைத்து போய் கொண்டு இருக்கிறோம் ரோஜாவும் எதையெதையோ சிந்திக்க தொடங்கினாள்.

“ராஜா வாங்க சாமி கும்பிட்டு போலாம்”

“ம்ம்”

“ராஜா உங்களை தான்”

“ரோஜா ஐலவ் யூ”என்றான் ராஜா. 

தன்னுடன் வாழும் நாட்களில் அவன் இப்படி எல்லாம் பேசியதும் இல்லை நடந்து கொண்டதுமில்லை இப்போது அவன் பேசுவது நடந்து கொள்வது எல்லாம் தனித்துவமாக இருந்தது இப்படித்தான் இருக்க வேண்டும் என முன்பு நினைத்துக் கொண்டிருந்தாள் ஆனால் அப்போது அவள் நினைத்த மாதிரி இவன் இல்லை ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்வது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது இதையெல்லாம் இணைத்து சந்தோஷப்படுவதா அல்லது காலம் தாழ்த்தி நடக்கிறதே என்ற வருத்தப்படுவதா எல்லாம் முடிந்து விட்டது அல்லவா எதை நினைத்து வருந்துவது அல்லது மகிழ்வது என்று நினைத்துக் கொண்டு…

“தேங்க்ஸ் ராஜா என்றாள்”

“ஐ லவ் யூ சொன்னா ஐ லவ் யூ டூன்னு சொல்லுவாங்க இது என்ன தேங்க்ஸ் எல்லாம் சொல்ற இந்த தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம் என்றான் ராஜா.

“வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க என்றால் ரோஜா”

“சரி நீ எதுவும் சொல்ல வேணாம் வா கோவில்ல சுத்திட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்றான் ராஜா.

இருவரும் பாட்டி சொன்னபடி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர் வீட்டுக்கு வந்ததும் அங்கு ராஜாவின் தூரத்து உறவுக்காரர் ஒருவர் வந்திருந்தார் அவர் தன் வீட்டில் நடக்கும் சிறு சிறு மகிழ்வான நிகழ்வுகளை எல்லாம் கூறி சிரித்துக்கொண்டிருந்தார் தன் மகனும் மருமகளும் வாசலில அமர்ந்து கோலம் போடுவது முதல் அவர்கள் சிரித்து பேசி மகிழும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ரசித்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தார் அதை கேட்டதும் ராஜாவுக்கு இன்னும் ஆழமாக ரோஜாவின் மீது அன்பானது. 

அன்பாய் இல்லை அது அன்பு என்று சொல்லிவிட முடியாது அது காதல் தான் ஆம் அவன் அப்போது ரோஜாவை நடத்திய விதமோ இப்போது ரோஜாவை நடத்தும் விதமோ சற்று வித்தியாசமாக இருக்கிறது ஆனால் இப்போது அவன் நடந்து கொள்ளும் விதம் தான் ரோஜா விரும்பியது ஆனால் அப்போது அவளுக்கு அப்படி எதுவும் அமையவில்லை. 

அதுதானே அவர்களுக்குள் பிரச்சனையாக இருந்து விரிசல் வரவும் காரணமாக இருந்தது இப்போது எல்லாம் முடிந்து விட்டது என்ற போது அவள் எதிர்பார்த்த அந்த அழகான வாழ்க்கை அவளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற போது அவளுக்கு மனது சற்று தடுமாறியது. 

சமீபமாக மதியழகன் மீது அவளுக்கு இருக்கும் நல்லா அபிப்பிராயமும் அவனுடன் செலவிட்ட நாட்களும் அவள் கண் முன்னே வந்து சென்றது. அமைதியைத் தேடி ஊருக்கு சென்றவள் அங்கு மதியழகனின் அன்பு அரவணைப்பு எல்லாம் பார்த்துவிட்டு வந்த பின்பு அதுதான் அழகான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என்று தோன்றியது. 

ஆனால் இப்போது பாட்டி வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஏதோ கனவு போல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாழ்க்கையை அப்போதே கிடைத்திருந்தால் ஒருவேளை ராஜாவை விட்டு அவள் பிரியாமல் இருந்திருப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது என்ன முடிவு எடுப்பது என்று அவளுக்கே தெரியவில்லை. முடிவு எடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இதையெல்லாம் மறக்கவோ மறுபடியும் நினைக்கவோ அவளால் இயலாது. 

முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் ஏன் மறுபடியும் முடிந்து போன ஒரு விஷயத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அவள் மனம் நினைத்தது. ஆனால் தன் குறைபாடுகளை எல்லாம் மறந்து அவன் இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதெல்லாம் கெடுக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம் நாம் சற்று நிதானமாகவே இருப்போம் எது எப்படி நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு சென்னைக்கு திரும்பி விடுவோம் என்று ரோஜா நினைத்தாள்.

பாட்டி வீட்டில் அவள் பாட்டி மீது பாட்டிய அன்பும் அரைவனைப்பும் பாட்டுக்கு மிகவும் பிடித்த போனது. இவர்கள் கிளமும் நாட்கள் வந்ததும் இன்னும் சற்று நாட்கள் இங்கேயே இருந்து விட்டு போகலாமே என்று பாட்டி கூறினார். 

“இல்லை பாட்டி நாங்க போயே ஆகணும்”

“ஓஹோ அப்படினா சரி அடுத்த முறை வரும்போது குழந்தையோடு வரணும் சரியா?” என்றார் பாட்டி.

“கண்டிப்பா பாட்டி அதுக்கு என்ன வந்துடுரோ என்றான் ராஜா.

எந்த நம்பிக்கையில் ராஜா பாட்டியிடம் இவ்வாறு கூறுகிறார் என்று ரோஜா நினைத்துக் கொண்டிருந்தாள் ஆனால் அப்போதைக்கு பாட்டியை சமாதானம் செய்ய அப்படித்தான் கூறியாக வேண்டும் என்று ரோஜாவுக்கும் புரிந்தது இருவரும் விடை பெற்று காரில் ஏறிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டனர். காரில் ஏறியதும் இருவருக்கும் நடுவே அமைதி நிலவியது அவனாக எதுவும் அவளிடம் பேச்சை ஆரம்பிக்கவும் இல்லை அவளாக அவனிடம் எதுவும் பேச்சை ஆரம்பிக்கவும் இல்லை அப்படியே அமைதியாக இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர் இடையிடையே காரில் காதல் பாடல்கள் ஒலிக்கப்பட்டிருந்தது அந்தப் பாடல்களை எல்லாம் மெதுவாக கேட்டுக் கொண்டே இருவரும் பயணம் செய்தனர். 

சென்னைக்கு சென்றதும் மீண்டும் வழக்கம் போல் ராஜா ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் இவளோ யோகா கிளாஸ் அது இது என்று தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்கிறேன் என்ற பேர்வழி என்றபடி ஏதோ செய்வாள் இப்படித்தான் வாழ்க்கை நகரப் போகிறது ஆனால் வாழ்க்கையின் அடுத்த கட்ட முடிவு பற்றி என்ன என்பதை இருவருக்கும் புரியவில்லை. 

இருவரின் மனதிலும் ஏதோ கேள்வியாகவே இருந்தது ஆனால் கேள்விக்கு பதில் தான் தெரியவில்லை…

“பிறை தேடும் இரவிலே உயிரே…

எதை தேடி அலைகிறாய்…..”என்ற பாடல் ஒலிக்கும் போது இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பின்பு ரோட்டில் கவனம் செலுத்தி ராஜா காரை செலுத்திக் கொண்டிருந்தான் இவளோ அசதியில் சற்று சாய்ந்து கண் மூடினாள். அவன் காரை ஓட்டிக்கொண்டே அவ்வப்போது திரும்பி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அழகாக அமைதியாக அவள் உறங்கிக் கொண்டிருக்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான் இதெல்லாம் அவனுக்கே புதிதாக தான் இருந்தது ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தவறவிட்டோமே என்று அவனுக்குள் வருத்தம் எட்டிப் பார்த்தது. 

ஒரு கட்டத்தில் அசதியாக இருக்கவே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவன் தேநீர் அருந்த கடைக்குச் சென்றான் அந்த தேநீர் வாங்கிக் கொண்டு மீண்டும் காரின் உள் வந்து அமர்ந்தான் தேநீரை சுவைத்து கொண்டே அவள் உறங்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான். பிறகு அவளும் பசியோடு இருப்பாளே என்று அவளை மெல்ல எழுப்பினான் அவள் கண்களை திறந்தவரே என் காரி நிறுத்திட்டீங்க என்று வினவினாள். 

“டையர்டா இருக்கு அதான் டீ. உனக்கு எதாவது வேணும்னா சொல்லு வாங்குறேன் “என்றான் ராஜா.

“எனக்கு ஒரு மில்க் போதும் “

அவள் கேட்டபடி சூடான பாலை சீனி போட்டு ஆர்த்தி கொடுத்த கடைக்காரரிடம் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தான் அவள் அவன் வந்ததும் தன் கூந்தலை சரி செய்து கொண்டு அவன் கையில் இருந்த பால் கப்பை எடுத்து குடிக்கலானாள். பாலை குடித்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

“அசதி இப்போ போயிடுச்சா கொஞ்ச நேரம் தூங்குறதா இருந்தாலும் தூக்கிட்டு அப்புறம் கிளம்பலாம் என்றாள்”

“எனக்கு அப்படியெல்லாம் கார்ல தூக்கம் வராது பரவால்ல நான் கார் ஓட்ட என்றால் ராஜா”

“ஒருவேளை எனக்கு டிரைவிங் தெரிஞ்சா நானும் ஓட்டுவேன் என்றால் ரோஜா. 

அவன் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே டிரைவிங் தெரியலன்னா நான் கத்து தரேன் என்றான். இப்படியே அவர்களுக்குள் ஆரோக்கியமான உரையாடல்கள் போய்க்கொண்டே இருந்தது இவர்கள் பேசிக்கொண்டு வந்ததில் சென்னை வந்து சேர்ந்ததே தெரியவில்லை. அவள் வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டு அவன் வீட்டை நோக்கி புறப்பட்டான் இவளும் வீட்டினுள் நுழையும் போது ஏதோ ஒரு வித்தியாசமான முகம் வளர்ச்சி உடன் வீட்டின் உள் நுழைந்தால் அதை பார்த்து தமிழரசி மற்றும் பிரபஞ்சன் ஆச்சரியமாக பார்த்தனர். 

“என்ன ஆளே வித்தியாசமா இருக்க”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே நான் எப்பவும் போல தான் இருக்கேன்”என்றாள் ரோஜா.

“ஓஹோ ரைட்டு “என்று தமிழரசி தன் வேலையை துவங்கினாள். பிரபஞ்சன் வியாபாரத்திற்கு கிளம்புவது கூறிவிட்டு கிளம்பினார் மதிய வேளையில் தமிழகத்தில் வேலையை முடித்துவிட்டு பிரபஞ்சனின் கடைக்கு சென்றார் பரபரப்பாக வந்த சரக்குகளை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தபோது அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று விரும்பினார் தமிழரசி. 

“நம்ப பொண்ணு ராஜா கூட ஊருக்கு போய்ட்டு வந்ததுல இருந்து ரொம்ப ஹேப்பியா இருக்க மாதிரி தெரியுது”

“அதுக்கென்ன”

“மறுபடியும் உங்க ரெண்டு பேர் ஒன்னு சேர்ந்துடுவாங்க அப்படின்ற மாதிரி தோணுது”

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல அவ அப்படி ஒரு எண்ணத்தில் அவன் கூட போகவே இல்ல அந்த பாட்டி பார்க்கணும்னு ஆசைப்பட்டதுனால தான் அவங்க கூட போனா”என்றார் பிரபஞ்சன்.

“சரி அவ வாழ்க்கைய பத்தி நீங்க என்ன முடிவு எடுப்பீங்க என்று கேட்டார் தமிழரசி.

“அவ இப்போதைக்கு சந்தோஷமா இருந்தா போதும் அதைத் தவிர வேற எந்த முடிவும் அவ வாழ்க்கையில நான் எடுக்கப் போறதா இல்ல அவளா ஒரு முடிவு எடுத்து ஒரு நாள் நம்ம கிட்ட வந்து சொல்லுவா அதுவரைக்கும் நம்ம காத்துட்டு தான் இருக்கணும். 

“சரி மதியழகன் அவளுக்கு கட்டி வைத்தால் என்ன”என்றார் தமிழரசி. 

“அதெல்லாம் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல இப்போதைக்கு நம்ம எதைப் பற்றியும் அவகிட்ட பேச வேண்டாம் ஒருவேளை மதியழகன் கத்துக்கணும்னு அவளுக்கு தோணுனாலும் அதுவும் அவளா வந்து நம்ம கிட்ட சொல்லுற வரைக்கும் நம்ம எந்த முடிவும் எடுக்க வேண்டாம்”என்றார்.

“இல்லைங்க ஊர்ல இருந்து கோப்பெருந்தேவி அண்ணி வந்து போன் பண்ணி கேட்டாங்க இந்த மாதிரி நம்ம ரோஜா  தான் விவாகரத்து ஆயிடுச்சு அதனால மதியழகனுக்கு  கட்டி வச்சாடா என்ன? அப்படின்னு கேட்டாங்க அவங்களுக்கு ரோஜாவை மருமகளா ஏத்துக்க விருப்பம் தான் போல இருக்கு. மதியழப்பு ரோஜாவை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. “என்றார் தமிழரசி.

“ம்ம் இத பத்தி நீயே உன் பொண்ணு கிட்ட பேசலாமே”

“ஏற்கனவே ராஜா கூட சண்டை போட்டப்போ நான் இப்படி பேசுனதுனால தான் அவ கூட சண்டை வந்து கோச்சிக்கிட்டு ஊருக்கு போனேன் இப்ப மறுபடியும் மதியழகன் கூட சேர்ந்து வாழ நான் அவகிட்ட பேசினா தேவையில்லாம நம்ம மூணு பேருக்குள்ள பிரச்சனை தான் வரும் அதனால பிரச்சினை வராத மாதிரி நீங்களே பேசிடுங்களேன். “என்றார் தமிழரசி. 

எல்லா விஷயத்துலயும் என்ன கோர்த்துவிட்டு நீ அழகா விலகுகிடுற ல இங்க பாரு தம்பி கோபியர் தேவி அண்ணி சொல்றது எல்லாம் சரிதான் அது சரியான முடிவா தான் இருக்கும்னு எனக்குமே தோணுது ஆனா ரோஜாவை ஒருவேளை நம்ம வற்புறுத்தையோ இல்ல அவள கன்வின்ஸ் பண்ணியும் நம்ம கட்டி வச்சாலும் நாளைக்கு அந்த வாழ்க்கையில ஏதாவது பிரச்சனைனா மறுபடியும் நம்ம கிட்ட தான் வருவார் தேவையில்லாமல் நம்ம எடுக்கிற முடிவுனால தான் அவ வாழ்க்கை போயிடுச்சுன்னு நினைப்பான். அதனால அவ மனசுக்கு என்ன முடிவு எடுக்கணும்னு தோணுதோ அந்த முடிவு அவளாவே எடுக்கட்டும் அதுக்கு நம்ம கால அவகாசம் கொடுக்கலாம். என்றார் பிரபஞ்சன்.

“இப்படியே எவ்வளவு நாள் தான் நம்ம கால அவகாசம் எல்லாம் கொடுக்க முடியும் அடுத்து ரவிவர்மனுக்கும் பொண்ணு பார்த்து நம்ம கல்யாணம் பண்ண வேண்டாமா” என்றாள் தமிழரசி. ஆம்பள பையனுக்கு எவ்வளவு லேட்டா பண்ணாலும் ஒன்னும் பிரச்சனை இல்லாத மட்டும் இல்லாம அவனும் சின்ன பையன் தான் ரொம்ப ஒண்ணும் வயசுல ஆகல அதனால மனசுல போட்டு நீ எதையும் குழப்பிக்காம நீ முதல்ல ஆரோக்கியமா சந்தோஷமா இருக்கிற வழியை பாரு. 

“உங்ககிட்ட பேசினா ஏன் குழப்பம் தீரும்னு பார்த்தா உங்க கிட்ட பேசினா தான் இன்னும் குழப்பமாவே இருக்கு என்று உச்ச கொட்டியபடி நகர்ந்தார் தமிழரசி. தமிழரசியை சமாதானம் செய்வதற்காக அவர் ஏதேதோ பேசினாலும் தன் மகள் ரோஜாவை பற்றின கவலை பிரபஞ்சனுக்கும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாத ஒரு தந்தையாக தன் இயலாமையோடு இருப்பதை நினைக்கும் போது அவருக்கு வருத்தமாக இருந்தது. 

பெற்றோர் பிள்ளைகளின் வாழ்க்கையில் முடிவெடுப்பது தவறு இல்லை தான் ஆனால் ஒரு முறை தவறான முடிவு எடுத்துவிட்டு மறுபடியும் அதே மாதிரியான ஒரு முடிவு எடுத்து விடுவோமோ என்ற பயம் ஒரு பெற்றோராக பிரபஞ்சனுக்கு இருந்தது ராஜா விஷயத்தில் ஏதோ அவசரமாக முடிவு எடுத்ததால் தான் இப்படி ஒரு நிலை என்று அவருக்கு தோன்றியது. ஒருவேளை மீண்டும் ராஜாவுடன் அவள் சேர விருப்பம் இருந்தாலும் பரவாயில்லை அந்த முடிவும் அவளே எடுக்கட்டும் அல்லது மதியழகனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவள் சொன்னாலும் அந்த முடிவும் அவளை எடுக்கட்டும் ஆனால் மொத்தத்தில் எல்லாம் அவளுடைய முடிவாக இருக்க வேண்டும் என்ற பிரபஞ்சன் நினைத்தார். 

தொடரும்

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page