அத்தியாயம்- 29

பாகம் – 29

“விளக்கு வைக்கும் நேரம்.. இந்த நேரமா போய் இதெல்லாம் செய்வாங்க..” என்கிறாள்..

” ஏங்க அமிர்தன் வந்து கதவை தட்டினால் அசிங்கமாக போய் விடுங்க..என்கிறாள்..

” அதெல்லாம் அவனுக்கு எதுவும் புரியாது ..அவன் வருவதற்குள் நான் சீக்கிரமே காரியத்தை முடிக்கிறேன்..” அவள் மேல் வேகமாக பாய்கிறான்.. அவளுக்கு சிரிப்புதான் வருகிறது..

” அநியாயம் செய்றீங்க. பட்டப்பகலிலேயே என்னை ரேப் பண்றீங்களா .. “

“உன் சம்மதம் இல்லாமல் செய்தால் தானே அது கற்பழிப்பு ..இது முதல் இரவு என்பதை விட முதல் பகல் என்று சொல்லிக் கொள்வோமா.. இனி இது மாதிரி எத்தனை பகல் வரப்போகிறதோ யார் கண்டது ..இரவு நேரத்தை விட இது இன்னும் நன்றாக இருக்கிறது.. த்ரில்லிங்காக வேற இருக்கிறது.. “

“இரவு உன் பையன் தூங்குவதற்குள் நாம் இரண்டு பேரும் தூங்கி விடுகிறோம். இனிமேல் இந்த டைமை குறித்து வைத்துக் கொள் .. செமையா இருக்குடி..” என்று அவளை ஒரு வழியாக்குகிறான்.. ஒரு அற்புதமான தாம்பத்தியம்  அரங்கேறி முடிகிறது..

மித்ரா இப்பொழுது எந்த காப்பு தடையும் இல்லாமல் இருக்கவும் அவர்களின் செல்ல மகள் மித்ராவின் வயிற்றுக்குள் குடி போகிறாள்..

இது ஒரு புதிய அனுபவமாய் இருப்பதோடு இல்லாமல், தினமும் ஆபீஸ் முடிந்து அவன் அறைக்கு வரும் நேரம் தாத்தா பாட்டியின் அறை தாழ் போட்டு இருக்கிறது.. பேரன் வெளியே ஓடி விடுவான்.. தங்களால் அவனை ஓடிச் சென்று பிடிக்க முடியாது என்ற முன்னெச்சரிக்கையினால்..

அவர்கள் வைத்துக் கொண்டு விளையாடுவது அரவிந்திற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது ..ருசி கண்ட பூனையாய் தினமும் அதே நேரத்திற்கு வீட்டுக்கு வந்து விடுகிறான்.அதனால் அவனுடைய வருகைக்காக இப்பொழுது எல்லாம் மெல்லிய அலங்காரம் செய்து காத்துக் கொண்டிருக்கிறாள் மித்ரா..

மனைவியை பார்த்ததுமே பசி தாகம் எல்லாம் மறந்து போய் விடுகிறது.. ஆனாலுமே அவன் வருவதற்குள் அவனுக்கு கொஞ்சம் நொறுக்கு தீனிகள் ஜூஸ் என தயாராகத்தான் வைத்திருக்கிறாள் ..

‘பாவம் தன் மீது  காதல் இருந்தாலுமே பசியோடு தானே இருப்பாங்க.., என்று வந்ததும் அவனை பிரஷ்ஷாக்கி விட்டு அதற்குப் பிறகு வயிறு நிரம்பவும் இன்னும் எனர்ஜியாகி விடுகிறான்.. அவளுக்குமே இது மிகுந்த ஆனந்தமாக தான் இருக்கிறது. அவனிடம் இதை கேட்கிறாள் ..

“நம்ம ஏங்க கல்யாணம் ஆன புதிதில் கூட  இப்படி எல்லாம் இல்ல .. “

“அப்பொழுது இந்த மாதிரி சூழ்நிலை கிடைக்கலடி .கல்யாணம் ஆன புதுசுல நீ வெட்கப்பட்டுக் கொண்டு என்கிட்டயே வரமாட்டே..இரவு நேரம் தான் நமது நேரம்.. மற்ற சமயம் நான் நெருங்கினால் கூட மாமா ஏதாவது சொல்லுவாங்க மாமி ஏதாவது சொல்லுவாங்க என்று பயப்படுவ. அடுத்ததா தான் உன் பையன் நந்தி மாதிரி குறுக்க வந்து விட்டானே.. இப்பொழுதுதான் மூன்று பேர் தொல்லையும் இல்லாமல் நம்ம கல்யாணம் அந்த புதுசுல என்ஜாய் செய்ய முடியாததை எல்லாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்.. “

இது தினசரி பழக்கமாக ஆகவுமே  நாட்கள் ஓடுவதே தெரியாமல் மாதக் கணக்கில் ஓடுகிறது.. திடீரென ஒரு நாள் கயல் கேட்கிறார்..

“என்னடா திருட்டுப் பூனை மாதிரி இப்பொழுதெல்லாம் ஆபீஸ்ல இருந்து வர்றதும் தெரிய மாட்டேங்குது… நீ வீட்டில் இருப்பதும் தெரிய மாட்டேங்குது..நான் நேத்து தான் எதேச்சையா பாக்குறேன்.. உன்னுடைய செப்பல் மட்டும் உன் அறை வாசலில் கிடக்கு ..உன்னை வீடு முழுக்க தேடி பார்க்கிறேன் ஆளையே காணோம்..அப்புறமா தான் கவனிக்கிறேன்..உங்க அறைக் கதவு உள்தாழ்ப்பா போட்டு இருக்குன்னு..சின்ன நப்பாசை உங்க அறைக்கதவு திறந்து இருக்குமோன்னு. லேசா அசக்கியும் பார்த்தேன்.. தாழ் போட்டு இருந்தது. சரின்னு திரும்பி வந்து.விட்டேன் ..வந்ததுமே உள்ள புகுந்துட்டியாடா மவனே..” உனக்கு வெட்கமே இல்லையாடா.. “கயல் இவ்வளவு பேசியுமே  அவன் அம்மாவைத் திட்டாமல் தலை குனிந்து வெட்கப்படுகிறான்..

” அடப்பாவி அப்படி என்றால் நிஜமாகவே நீ இப்படித்தான் செய்கிறாயா..”என்றதும் அதே வெட்கத்துடன் ஆம் என்று தலையசைக்கிறான்..

” சரி சரி பிழைச்சுப் போ .நாங்கதான் பைத்தியம் மாதிரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று உன்னை பெத்துட்டு உன்கிட்ட மாட்டிக்கிட்டு விழிக்கிறோம் ..நீயாவது நல்ல ஒரு யோசனையா அடுத்த பிள்ளையை பெற்கிற வழியை பாரு. ” என்றதும் அம்மாவே பாவமாய் பார்த்து விழிக்கிறான் ..

“எப்படியோ ஏதாவது செய்து எங்களுக்கு ஒரு  பேத்தியை கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டால் போதும்டா
..அவளையும் அமீர் குட்டியையும் வைத்துக் கொண்டு நாங்கள் ஆசை தீர விளையாடுவோம்..இன்னும் இரண்டு வேண்டும் என்றாலும் பெற்றுக் கொள்ளடா.. நாங்க பார்த்து கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.. “

” கவலைப் படாத கிழவி..  அதற்கான ஏற்பாடு தான் ஜரூரா ஆகிகிட்டு  
இருக்கு.. “

இவ்வளவு நேரம் கொஞ்சம் கூட கூச்சமே படாமல் தான் கயல் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார் .இப்பொழுது அவன் பதில் சொல்லியதும்  அந்த விஷயம் விரசம் என்றே அவருக்கு தெரிகிறது …

“அடேய் அம்மா கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதாடா.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம பச்சை பச்சையா பேசறியே அறிவு கெட்டவனே..இங்க நின்னால் உன்னோடு சேர்ந்து நானும் வீணா போய் விடுவேன்டா.. நான் போகிறேன்பா.. என் பேரன் என்னை தேடுவான்..” என்று சொல்லி விட்டு அவர் வெட்கத்துடன் திரும்பி செல்கிறார்..

மறுநாள் காலையிலேயே அம்மாவின் அறையை தட்டுகிறான் ..

“ஏன்டா எங்களை தூங்க விடாமல் இப்படி தொல்லை பண்ற ..இதுக்குத்தான் நான் இன்னொரு பிள்ளை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்.. அது கடைசியில நடக்காம போயிட்டு பாரு.. இப்ப எதற்காக இப்படி தொந்தரவு கொடுக்கிறே..”

” கிழவி உனக்கு அடுத்தது பெற்ப்பதற்கு துப்பு இல்லை. சும்மா இதையே சொல்லிக் கொண்டிருக்கிற.. வேணும்னா இப்பதான் இன்னும் ஒன்னு பெற்றுக் கொள்ளேன். யார் வேண்டாம் என்றது.. “

“அட  நாயே அம்மாவிடம் பேசும் பேச்சாடா இது ..நானும் அப்பாவும் தெய்வத்தோட தெய்வமா ஆகிட்டோம்உனக்குத் தெரியாதா..”

“ஆமாமா ஊருல சொல்லிக்கிட்டாங்க கிழவி.. அப்பா பக்கத்துல உக்காந்துகிட்டு அவரு தொடை மேல கைய வச்சிக்கிட்டு நீ டிவி பாக்குறதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா. “

‘அடப்பாவி இதையெல்லாம் இவன் பார்த்து வச்சிருக்கானா.., என்று தனக்குள் முணுமுணுக்கிறார் கயல் …

” அது ,அது சும்மா ஒரு அன்னியோன்யம்டா .. டீவி பார்க்கறது ஒரு குத்தம்னு அதற்காக இப்படி  அசிங்கமா பேசாதடா.. “

“இதிலெல்லாம் என்ன கிழவி அசிங்கம் இருக்கிறது.. கணவனும் மனைவியும் ஒற்றுமையா இருக்கிறது எல்லாம் மகிழ்ச்சியான விஷயம் தானே..பாரு சும்மா சாதாரணமா பேச வந்ததுக்கு போய் பிரச்சனை ஆக்கி விட்டுட்ட ..இதற்கெல்லாம் நான் தான் அப்பா கிட்ட சொல்லி இன்னொரு அம்மா வாங்கி இருக்கணும்.. தப்பு செஞ்சிட்டேன் பாரு ..இனிமேலாவது இந்த யோசனையை அப்பா கிட்ட போய் பேசி எனக்கு ஒரு சித்தியை கொண்டு வருகிறேனா இல்லையா என்று பார்.. “

அவனுக்கு தான் என்ன பேச வந்தோம் என்ற செய்தியே மறந்து போய் விட்டது .. கயல் படுத்திய பாட்டில்…

“என் குடும்பத்துல குழப்பம் செய்வதற்கு என்றே எனக்கு ஒரே பையனா பிறந்திருக்கடா..சரி சரி நான் உன்கிட்ட அப்புறமா வம்பு பேசிக்கிறேன் . என்னை ஆளை விடு நான் முதலில் போய் தூங்கணும் .. “ஹாவென பெரிய கொட்டாவி ஒன்றை விடுகிறார்..

“கிழவி இனிமே உனக்கு தூக்கம் எல்லாம் கிடையாது. “

“உனக்கு என்ன நீ ஜாலியா இருக்க.. நீ ஏன்டா இதையெல்லாம் சொல்ல மாட்ட.. சாயந்திரமா ஆனாலே எங்ககிட்ட உன் பிள்ளையை அனுப்பி விட்டு நீ ஜல்சா பண்ற ..சீக்கிரம் சொல்லு நான் போய் தூங்கணும்.”

“அதுவா கிழவி “என சிரிக்கிறான்..

அவன் கிழவி என்று ஆரம்பித்ததுமே ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை தான் பேசப் போகிறான் என்று அதைக் கேட்க ஆர்வத்தோடு தயாராகிறார் கயல்..

” இனிமே உனக்கு ஓய்வே கிடையாது.. அதை சொல்லத்தான் வந்தேன் .. “

” ஏன்டா பரிமளம் நின்னுட்டாளா.. அச்சச்சோ நான் என்ன செய்வேன். அவ இல்லன்னா வேற நேரத்துக்கு வீட்ல வேலையாகாதே. நல்ல ருசியான சாப்பாடு கிடைக்காதே..அவசரத்துக்கு இவள மாதிரி ஆளும் கிடைக்காதே..”

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொள்கிறான்..” அது சரி மித்ரா இல்லன்னா கூட நீ கவலைப்பட மாட்ட போல இருக்கு ..சமையல்காரம்மா பரிமளம் இல்லன்னா தான் நீ அவ்வளவு கவலைப்படுற.. உன் கவலை உனக்கு. உன்கிட்ட வந்து நான் ஒரு நல்ல செய்தியை சொல்ல வந்தேன் பாரு. என்னை சொல்லணும் .. ” என்று கோபத்துடன் திரும்புகிறான். சிரிப்பு முகம் மாறாமல் செல்கிறான்..

கயல் பின்னேயே வேகமாக ஓடி வருகிறார் …  நல்ல வேளைடா பரிமளம் போகல .. அப்படின்னா நீ வேற ஏதோ ஒரு நல்ல செய்தி சொல்ல போகிறேதான .. உனக்கு இன்னும் நிறைய சம்பளத்தோட நல்ல வேலையா கொடுத்துட்டாங்களா என்ன .. “

“ஆமா இனிமே நான் சம்பாதிக்கிறதே பத்தாது. அந்த மாதிரி ஒரு வேலையாயிட்டு.. “
.
” ஏன்டா அந்த மாதிரி இடத்தை எல்லாம் விட்டுட்டு வேற நல்ல கம்பெனியா போய் தொலையேண்டா..”

” அப்படி எல்லாம் போக முடியாது கிழவி. நான் நல்ல சிக்கலில் போய் மாட்டிக்கிட்டேன் ..எல்லாம் உன்னால தான்..”

“ஐயோ கடவுளே இவன் என்னை பைத்தியம் ஆக்குறானே.. டேய் என்ன தான்டா உனக்கு பிரச்சனை..ஒழுங்கு மரியாதையா சொல்றியா.. இல்ல அடி வாங்கிட்டு ஓடப் போறியா..”

கணவனை துணைக்கு அழைக்கிறார்.. “ஏங்க இங்க வந்து இவனை என்னன்னு கேளுங்களேன் .தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி என்னை பாடாமல் படுத்துறான்..பொண்டாட்டி மாட்டிகிட்டு கஷ்டப்படுறாளே என்று இல்ல.. உங்களுக்கு அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு.. “

“இந்த பாரு கிழவி. நம்ம இரண்டு பேரும் மட்டும் தானே பேசிக் கொண்டிருந்தோம்.. எதற்கு இப்ப தேவையில்லாமல் உன் புருஷனை இங்க வம்புக்கு இழுக்குற. அவர் வேற வந்து என்னை திட்டுவதற்கா..”

“இங்கு யாரு திட்டுறது .யாரை கேட்டுகிட்டு இருக்கிறது என்று தெரியவில்லைடா. நீதான்டா என்னை வச்சி செய்ற .விஷயமே சொல்லாம வம்பு செய்றது நீ மட்டும் தான். இவ்வளவு நேரம் பேசினியே .என்ன விஷயம் என்று சொன்னியா ..”

“நீ எங்கேயாவது என்ன விஷயம்னு கேட்டியா கிழவி என்றதும் தான் கயல் அட ஆமாம் ல என்று யோசிக்கிறார்..

தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page