இதயத்தின் மொழி _21

“அடுத்த நாள்…அபி வீடே ஜே ஜே ன்னு இருந்தது.. அவ்வளவு சொந்தக்காரங்க”..
 

 

“காலையில சீக்கிரமே அபியை எழுப்பி..அவங்க அத்தைங்க ரெண்டு பேர் சித்தி பெரியம்மா பாட்டின்னு எல்லாரும் நழுங்கு வைச்சு தலைக்கு தண்ணீ ஊத்தி..புது புடவை கட்டி விடுறாங்க”..
 

 

“எல்லாரும் பேசி சிரிச்சு..வீடே ஒரே கலகலன்னு இருக்கு”..
 

 

“பார்லர்ல இருந்து வந்த பொண்ணு அபிக்கு முதல்ல மெஹந்தி வைச்சு விடுறாங்க”..
 

 

“ரொம்பவே அழகா போட்டு கையில அர்ஜூன் பேரையும் யாருக்கும் தெரியாதா மாதிரி எழுதி இருந்தா..அது அபிக்கு மட்டும் தெரியும்”..
 

 

அந்த பொண்ணு : “இதை உங்க உட்பீ கிட்ட கேளுங்க..சரியா கண்டுபிடிச்சா உங்க மேல ரொம்ப பாசம் வைச்சு இருக்காருன்னு அர்த்தம்”.
 

 

அபி :” இது கேட்டு தான் தெரிஞ்சுக்கணும்ன்னு இல்ல..அவருக்கு உண்மையாவே என் மேல நிறைய பாசம் இருக்கு”.
 

 

அபி பாட்டி : “அடி ஆத்தி..இங்க பாரு மா..உன் பொண்ணு என்ன சொல்றாருன்னு”..
 

 

கௌசல்யா : “ஆமா அத்தை..உண்மை தான்.. இவளுக்கு உடம்பு சரி இல்லன்னு பம்பாய் ல இருந்து அடிச்சு பிடிச்சு வந்து இருக்காரு”..
 

 

அபி சின்ன அத்தை : “அண்ணி…இந்த காலத்து பசங்க இப்போ இப்படி தான் இருப்பாங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் தான் உண்மையான முகம் தெரியும்”.
 

 

கணபதி : “இல்ல லதா.. மாப்பிள்ளை அப்படி இல்ல.. ரொம்ப தங்கமான பையன்..நீயே நாளைக்கு பாக்க தானே போறா..அப்போ பாரு”.
 

 

லதா : “அண்ணா.. நான் மாப்பிள்ளையை குறை சொல்லல..பொதுவாக சொன்னேன்”.
 

 

“அப்போ அபிக்கு அர்ஜூன் கால் பண்றான்”.
 

 

“அபி கையில மெஹந்தி இருந்ததால லஷ்மி எடுத்து ஸ்பீக்கர் ல போட்டு அபி மடியிலே வைச்சா”..
 

 

அர்ஜூன் : “ஹாய்.. பொண்டாட்டி..

 

எல்லாரும் : ஷாக்கா பாக்குறாங்க” ??
 

 

அபி : “என்ன இது புதுசா பொண்டாட்டி ன்னு சொல்றீங்க..எப்பவும் போலவே பேசுங்க”..
 

 

அர்ஜூன் :  “இன்னும் ஒரு நாள் தானே… அப்பறம் பொண்டாட்டி தானே”..
 

 

அபி : “அர்ஜூன்..என் கையில மெஹந்தி வைச்சு இருக்கேன்”.
 

 

அர்ஜூன் : “ஹோ..வைச்சாச்சா.. சூப்பர்.. அப்பறம் நீ சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல”.
 

 

அபி : “ம்ம்..இருக்கு.. நான் அப்பறம் கால் பண்றேன்னே..( ட்யூப் லைட் )”.
 

 

அர்ஜூன் :” ஏன் ?? இப்ப என்ன பண்ற”..
 

 

அபி : “இல்ல எல்லாரும் இருக்காங்க”..
 

 

அர்ஜூன் : “இங்கயும் தான் இருக்காங்க..நமக்கு ஒன்னும் வேலை இல்லையே..சோ பேசலாம்.. நாளைக்கு நான் வராட்டா..இல்ல நீ வரீயா..

 

யாரு முதல்ல தராது”.
 

 

அபி : “ஆச்சோ..ஏய்.. எருமை கட் பண்ணு டி..ன்னு கத்த லஷ்மி கட் பண்ணிட்டா..

 

சுத்தி இருந்தா எல்லாரும் ஒரே சிரிப்பு தான்”..
 

 

“அபிக்கு ஒரே தர்ம சங்கடமா போச்சு..( கடவுளே இவனை எல்லாம் என்ன தான் பண்றது )”.
 

 

அபி பாட்டி : “என்ன மா மாப்பிள்ளை கேட்டாரு.. என்ன தரேன்னு சொன்னாரு”..
 

 

அபி : “அது அது பாட்டி சாக்லேட்.. அன்னைக்கு இரண்டு பேரும் ஒரே கலர் ட்ரஸ் போட்டு இருந்தோம்..அதுக்கு நான் அவருக்கு வாங்கி தரணும்..அவரு எனக்கு வாங்கி தரணும்..அதா சொன்னாரு”..
 

 

பாட்டி : “ஓகே..அதுக்கு ஏன் கட் பண்ண.. நானும் வாங்கி தரேன்னு சொல்லு’..
 

 

அபி : “நீங்களா..😳😳 ( ராமா.. நான் சொல்ற சாக்லேட் வேற பாட்டி…)”.
 

 

“மறுபடியும் அர்ஜூன் கால் பண்றான்”.
 

 

“அபியோட அத்தை பொண்ணு வேணும்னு அட்டன் பண்ணி ஸ்பீக்கர் ல போடுறா”..
 

 

அர்ஜூன் : “ஹே.. எதுக்கு டி கட் பண்ண.. அதுவும் எருமைலா சொல்ற.. அப்படி கத்துற” ??
 

 

அபி : “நான் அப்பறம் கால் பண்றேன் டா… ச்சோ..சாரி.. அப்பறம் பண்றேன் ங்க”..
 

 

அர்ஜூன் : “இப்போ எதுக்கு மரியாதை எல்லாம்”..
 

 

அபி : “பேசுறது வைச்சு புரிஞ்சுக்க மாட்டியே… சரியான ட்யூப் லைட்..நீ”.
 

 

அர்ஜூன் : “ஹே..சும்மா ட்யூப் லைட் சொல்லாதா..என் ஆப்பீஸ் லா நான் தான் ரொம்பவே ஸ்மார்ட் அன்ட் வெரி இன்டலிஜன்ட்”..
 

 

அபி : “அதா நீ தான் சொல்லிக்கணும்”.. 
 

 

“அர்ஜூன்..என் கையில மெஹந்தி இருக்கு டா”..
 

 

அர்ஜூன் : “அதா முதல்லயே சொன்னீயே”..
 

 

அபி : “அறிவுக்கெட்டவனே.. அது தான் டா யோசிக்க மாட்டியா.. மெஹந்தி இருக்கும் போது எப்படி என்னால பேச முடியும்.. ஃபோன் ஸ்பீக்கர் ல இருக்கு.. எல்லாரும் இருக்காங்க”.
 

 

அர்ஜூன் :  “அடிப் போடி இவளே..முதல்லயே சொல்ல வேண்டியது தானே..இனி போன்னே பண்ண மாட்டேன் போ..ன்னு கட் பண்றான்..

 

அபிக்கு ம்ம் சிரிப்பு வருது.. எல்லாரும் சிரிக்குறாங்க”..
 

 

எல்லாரும் : “பரவால்ல மாப்பிள்ளை நல்ல தான் பேசுறாரு”..
 

 

“அன்னைக்கு பொழுது முடியுது”…
 

 

“அபி ரூம்ல அபிக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து வைக்குறாங்க”..
 

 

கௌசல்யா : “அபி”..
 

 

அபி : “சொல்லு மா”..
 

 

கௌசல்யா : “கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு எல்லாமே மாப்பிள்ளை தான்..இனி அவரு குடும்பம் தான் உன் குடும்பம்.. அப்பறம் தான் நாங்க”.
 

 

அபி : “போ..மா.. எனக்கு நீங்க தான் முதல்ல.. அப்பறம் தான் யாரா இருந்தாலும்”.
 

 

கௌசல்யா : “அப்படிலா சொல்லக்கூடாது அபி.. கல்யாணம் ஆனா புருஷன் பொண்ணுக்கு எல்லாம்”..
 

 

அபி : “எனக்கு அப்படி இல்ல மா”..
 

 

கௌசல்யா : “எல்லா பொண்ணுங்களும் இப்படி தான் டி சொல்லுவாங்க.. ஆனா கல்யாணம் ஆனா பெத்த அம்மா கிட்டயே புருஷன் காக சண்டை போடுவாங்க.”.
 

 

அபி : “சரி பாக்கலாம்”..
 

 

கௌசல்யா : “அப்பறம் இங்க பேசுற மாதிரி கூட கூட பேசுறதுல இங்கயே விட்டுட்டு போ”..
 

 

அபி : “ம்ம். ட்ரை பண்றேன் மா”.
 

 

கௌசல்யா : “சமையல் லா செஞ்சுருவ..அதுலாம் சரிதா..ஆனா அவங்களுக்கு என்ன பிடிக்கும் எவ்வளவு காரம் உப்பு சேத்திப்பாங்கன்னு பாத்து செய்யணும்”..
 

 

அபி : ம்ம்..
 

 

கௌசல்யா :” என்ன கல்யாணம் ஆகி ஒரு 10 நாள் தா உன் மாமியார் வீட்டுல இருப்ப.. அப்பறம் மாப்பிள்ளை கூட பெங்களூர் போய்டுவ”..
 

 

அபி : “மா.. நான் பெங்களூர் லா போக மாட்டேன் மா..இங்க நம்ம வீட்டுக்கு தா வருவேன். இங்க இருந்து தான் படிக்கப் போறேன்”.
 

 

கௌசல்யா : “ஹே..ஒரு நிமிஷம் அப்படியே அமைதியா யோசிக்குறாங்க..( இப்போ பேசுனா பிரச்சினை தான் வரும்.. கல்யாணம் ஆகட்டும்.. அப்பறம் பேசி புரிய வைக்கலாம். )..சரி அது அப்பறம் பேசலாம்”.
 

இந்த உன் மாத்திரை…இத உன் பேக்ல முன்னாடி வைச்சுக்கோ.. தினமும் மறக்கமா சாப்பிடணும்”.
 

 

அபி : “மா..என்ன மா..அங்க போயும் மாத்திரை சாப்பிட சொல்ற “??
 

 

கௌசல்யா :” எங்க போனாலும் சாப்பிடணும் டி”..
 

கணபதி உள்ள வராரு”..

 

எல்லாம் எடுத்து வைச்சா சா.. நாளைக்கு காலையில நாமா தான் முதல்ல மண்டபத்துக்கு போகணும்..நாமா தான் மாப்பிள்ளை வீட்டுக் காரங்களை வரவேற்கணும்”.
 

 

கௌசல்யா : “ஆச்சுங்க..கிளம்பிடலாம்”.
 

 

கணபதி : “அபி மா..நீ தூங்கு டா..நல்லா தூங்குன்னா தான் முகம் நல்லா இருக்கும்”.
 

 

அபி : சரி பா..
 

 

கௌசல்யா : “சரி நீ தூங்கு.. நான் காலையில எழுப்பி விடுறேன்”.
 

அபி தூங்குறா..ஆனா அவளுக்கு தூக்கமே வரலை…அவ என்ன தான் இங்க தானே இருக்க போறோம்ன்னு நினைச்சாலும்.. கல்யாணம் ஆனா எனக்கும் இந்த வீட்டுக்கும் இருக்க பந்தம் குறைஞ்சுருமா..ன்னு ஒரு எண்ணம் அவளை தூங்கவே விடலை”..
 

அதே சமயம்.. கௌசல்யா கணபதி தூங்கமா வேண்டிய எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டு இருந்தாங்க”..
 

 

அர்ஜூன் : “அடிப்பாவி நைட் கால் பண்ணுவான்னு பார்த்தா..பண்ணவே மாட்டிக்குறா..நாமா பண்ணாலமா.. இல்ல மறுபடியும் ஸ்பீக்கர் ல போட்டுட்டா.. எதுக்கு வம்பு..இப்ப நேரம் வேற ஆச்சு..தூங்கு மூஞ்சி தூங்கி இருப்பா..ன்னு புலம்பிட்டே தூங்குறான்”..
 

அடுத்த நாள் பொழுது விடிய..அபி அழகா ரெடி ஆகி இருந்தா.. அளவான மேக்கப் தா..ஆனா பாக்க சும்மா தேவதை மாதிரி இருந்தா”..
 

வீட்டுல இருந்த சாமியை கும்பிட்டு..தாத்தா பாட்டி ன்னு எல்லார் காலுலயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குறா”..
 

கடைசியா அவ அம்மா அப்பா காலுல விழுகுறா”..
 

அபி அப்பா அம்மா கண்ணுலா கலங்குது..அதை அப்படியே துடைச்சுட்டு சிரிச்சிட்டே அவளை ஆசிர்வாதம் பண்றாங்க”.
 

கௌசல்யா கட்டி பிடிச்சுக்குறா”..
 

அபி எப்பயும் யார் முன்னாலையும் அழுகவே மாட்டா..அதானால ரொம்பவே கன்ட்ரோல் பண்ணிக்குறா”.
 

ப்ரியா அவளும் ரொம்ப அழகா ட்ரஸ் பண்ணிட்டு அபி கூட கார்ல வரா… லஷ்மி அபி பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டே வரா”..
 

இவங்க மண்டபத்துக்கு போய்..1/2 மணி நேரத்துக்கு அப்பறம் அர்ஜூன் குடும்பம் வராங்க”..
 

அவங்க வரும் போது பட்டாசு வெடிக்குது..

 

ப்ரியா : ஐஐஐ..அக்கா மாமா வந்துட்டாங்க”..
 

அபி ஓடி வந்து ஜன்னல் ல பாக்குறா..

 

அர்ஜூன் : பட்டு வேட்டி கட்டி எல்லோ கலர் சேர்ட்”..
 

அபி வைச்ச கண்ணு வாங்கமா பார்த்துட்டே இருக்கா”..
 

அர்ஜூன் கண்ணு அபியை தான் தேடுது”..
 

 

அசோக் : “டேய் அண்ணா அண்ணியைத் தானே தேடுற”..
 

 

அர்ஜூன் :” இல்லையே ??
 

 

அசோக் :” இல்லையா !! நான் கூட அண்ணியை தான் தேடுறன்னு நினைச்சேன்..சரி விடு..அண்ணி உன்னை தான் பாக்குறாங்க”.
 

 

அர்ஜூன் “: எங்க டா இருக்கா..
 

 

அசோக் : “அதா நீ இல்லன்னு சொல்லிட்டா இல்ல”..
 

 

அர்ஜூன் : “டேய்.. ரொம்ப பண்ணாதா‌ சொல்லு”.
 

 

அசோக் :” டக்குன்னு பாக்க மா..மெல்ல மேல பாரு”.
 

 

அர்ஜூன் : “டக்குன்னு பார்த்தா அபி ஒளிஞ்சுக்கிட்டா”.
 

 

அசோக் : “டக்குன்னு பாக்கதான்னு சொன்னேன் இல்ல”…
 

 

அர்ஜூன் : “சரி கூட வா டா..போய் பேசிட்டு வரலாம்”.
 

 

அசோக் : “ம்ம்..சரி ன்னு..போறாங்க..
 

 

ஆர்த்தி : “டேய்.. அசோக் கொஞ்சம் வா டா..மாமா பஸ் ஸ்டாப் ல இருக்காரு..நீ போய் கூட்டிட்டு வருவ”..
 

 

அசோக் : “சாரி டா அண்ணா..நீ தனியா போ.. நான் மாமா வை கூட்டிக்கிட்டு வரேன்”.
 

 

அர்ஜூன் : “ம்ம்..சரின்னு போறான்..அபி ரூம்க்கு”..
 

 

தொடரும்..
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page