அத்தியாயம் 16
விதுரன் முறைக்க’ ஏன் முறைக்கிறாரு’ என்று பிரதிக்ஷா நினைத்து யோசிக்க அவள் நிற்கும் நிலை ஞாபகம் வந்தது!
தானாகவே வெட்கமும் தயக்கமும் வந்து ஒட்டிக் கொள்ள, சூட்கேஸிலிருந்து எடுத்த தன்னுடைய ஆடையை மார்பில் வைத்து மறைத்தபடி விதுரனுக்கு புற முதுகு காட்டி நின்றாள்.
திடீரென்று பிரதிக்ஷா செய்த செயல் விதுரனின் ஈகோவை டச் செய்ய “என்ன இவ்வளவு நேரம் பாத்துகிட்டு இருந்துட்டு இப்ப ரொம்ப நல்லவ மாதிரி நடிக்கிற?” என்று அவளின் பக்கம் நெருங்கி வந்தான் விதுரன்.
அவளோ எதுவும் சொல்லாமல் தன் நிலை கருதி அமைதியாக அங்கிருந்து நகர அவளின் கையைப் பிடித்து அவளை நிறுத்தினான்.
ஆடவனின் தொடுதல் பெண்ணவளுக்குள் புதுவிதமான எண்ணத்தை தோற்றுவித்தாலும் அவன் கைகளை பிடித்த அழுத்தத்தில் அவன் கோபத்தின் அளவை உணர்ந்து கொண்டவள் அவளையும் சமநிலைப்படுத்தி அவனைப் பார்க்க,
“நீ இப்படி அரைகுறையா என் முன்னாடி நின்னா கூட எனக்கு ஒன்னும் தோணாது! நீ என்னைய கரெக்ட் பண்றதுக்கு இப்படி திட்டம் போடாத அசிங்கமா இருக்கு!” என்று விதுரன் கூறினான்.
“ஏங்க நான் வேணுமே பண்ணல! குளிச்சிட்டு மாத்துறதுக்கு டிரஸ் எடுக்காம போயிட்டேன்.. அதை எடுக்கறதுக்கு தான் வந்தேன். நீங்க நின்னது எனக்கு தெரியாது, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை என்று பிரதிக்ஷா தன்னிலை விளக்கம் கொடுக்க, அவளை கீழிருந்து மேலாக பார்த்துவிட்டு நீ எதையும் திட்டம் போட்டு பண்ணலைன்னு நீநிக்கிற தோரணையை பார்த்தாலே தெரியுது “என்று நக்கலாக கூறினான் விதுரன்.
ஆடவனின் நக்கல் பேச்சு பெண்ணவளுக்குள் கோபத்தை உருவாக்க “நான் உண்மையிலேயே வேணும்னு பண்ணல, அதனால தேவையில்லாம கற்பனை பண்ணி பேசாதீங்க?” என்று கோபமாக பேச,
“பண்றதெல்லாம் பண்ணிட்டு உனக்கு கோபம் வேற வருதா!” என்று அவளின் முகவாய் கட்டையை பிடித்து அழுத்தமாக கேட்டான் விதுரன்.
“இங்க பாருங்க நான் வேணும்னு எதையும் பண்ணல, நீங்க நம்புனா நம்புங்க நம்பலைனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, அப்புறம் என்ன சொன்னீங்க இப்படி நிற்கிறது உனக்கு வெட்கமா இல்லையா அசிங்கமா இல்லையான்னு கேக்குறீங்க! உங்களுக்கு அசிங்கமா இல்லையா, நீங்க எப்படி நிக்கிறீங்கன்னு ஒரு தடவை பாருங்க! நான் இந்த ரூம்ல இருக்கிறது உங்களுக்கு தெரியும் தானே அப்ப எதுக்கு நீங்க இப்படி வெளியில வந்தீங்க!” என்று விதுரனை பார்த்து சொல்ல இந்த முறை என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான் விதுரன்.
“அது வந்து.. என்று விதுரன் தடுமாற, உங்கள மாதிரி எல்லாம் நான் கேட்க மாட்டேன். “நீங்க என்னைய மயக்குறதுக்கு வந்து இருக்கலாம்!” என்று கண்ணடித்தாள் பிரதிக்ஷா.
“ஏய் ரொம்ப ஓவரா பேசுற!” என்று விதுரன் சொல்ல “நீங்க பேசின போது உங்களுக்கு ஓவரா தெரியல நான் பேசணும் போது மட்டும் ஓவரா தெரியுதோ?” என்று சொல்லிவிட்டு, ” நீங்க என்னோட புருஷன் உங்ககிட்ட ஒளிச்சு மறைச்சு எதையும் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! இன்னைக்கு உங்களுக்கு என்மேல எந்த அபிப்பிராயமும் எண்ணமும் இல்லாமல் இருக்கலாம்! ஆனா நான் உங்க பொண்டாட்டி, ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீங்களே என்கிட்ட வருவீங்க, அந்த நாளுக்காக வெயிட்டிங் மாம்ஸ்!” என்று சொல்லிவிட்டு தன்னுடைய சூட்கேஸில் எடுத்த உடையை எடுத்துவிட்டு டிரஸ் மற்றும் அறைக்குள் நுழைந்தாள் பெண்ணவள்.
ஆரம்பத்தில் விதுரன் சாதாரணமாக காட்சியளித்தாலும் பிரதிக்ஷாவை பார்க்கும் போது அவன் உள்ளத்திலும், உடலிலும் எழுந்த உணர்வுகளை இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது அவனுக்கு தானே தெரியும்!
பிரதிக்ஷா செல்லவும் மூச்சை இழுத்து விட்டு கொஞ்ச நேரம் ஆசவாசப்படுத்தி விட்டு அப்படியே மெத்தையில் அமர்ந்தான்.
‘இப்படியே போனா சரி வராது, நம்ம கற்புக்கு கலங்கம் வந்துரும் போல முதல்ல இவகிட்ட இருந்து தப்பிக்கணும்! நாளையிலிருந்து இந்த ரூம் பக்கம் கூட வரக்கூடாது விதுரா’ என்று யோசித்துக் கொண்டிருக்க அவனின் அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது யார் என்று பார்க்க சரஸ்வதி தான் அடித்துக் கொண்டிருந்தார்,
‘இவங்க வேற சும்மா இருக்க மாட்டேங்கிறாங்க, இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம’ என்று சலித்துக் கொண்டு அவசர அவசரமாக அவனும் கேஷுவலாக அணியும் டிராக் பேண்ட்டும், அதற்கு பொருத்தமான டி-ஷர்ட்டும் மாற்றிவிட்டு வெளியே சென்று விட்டான்.
இங்கு பிரதிக்ஷா அழகான மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு அதற்கு ஏற்றவாறு ஆபரணங்களை அணிந்து அழகு மங்கையாக ரெடியாகி இருந்தாள்.
வெளியே வந்தவள் விதுரனை பார்க்க அவன் அணிந்திருந்த டவல் மட்டும் ஈரத்தோடு மெத்தையில் கிடக்க அதை எடுத்து குளியல் அறையில் காய போட்டு விட்டு தலைவார ஆரம்பித்தாள்.
தலையை வாரி கொண்டிருக்கும் போது அவளின் கதவை திறந்து உள்ளே வர யார் என்று பார்க்க அம்பிகா தான் வந்திருந்தார்,
“இந்தப் புடவையில் ரொம்ப அழகா இருக்க, இந்த பூவ வச்சுட்டு கிளம்பி வா எல்லாரும் ரெடி ஆயிட்டோம் நீ வர்றதுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம்!”என்று சொல்லிவிட புன்னகை புரிந்தாள் பிரதிக்ஷா.
அவளின் புன்னகையே எல்லாம் சுபம் என்பது போல் அம்பிகாவிற்கு தோன்ற அவரும் சந்தோஷத்தோடு வெளியில் சென்றார்.
முதல்முறையாக கண்ணாடியை பார்த்து அலங்காரத்தை முடித்த பிரதிக்ஷாவிற்கு தன் நெற்றியில் குங்குமம் இட்ட விதரனின் நினைவு வர அங்கு இருந்த குங்குமத்தை எடுத்து மனதார விதுரனை நினைத்து அவள் நெற்றியில் திலகமிட்டு அவன் கட்டிய தாலியிலும் வைத்துக் கொண்டாள்.
ரெடியாகி கிளம்பி மாடியில் இருந்து பிரதிக்ஷா இறங்கி வந்தாள். அங்கு சரஸ்வதியும் அம்பிகாவும் விதுரனை திட்டிக் கொண்டிருந்தனர்.
“என்ன டிரஸ் போட்டுட்டு வந்து இருக்க, கோயிலுக்கு போறோம்னு தெரியாதா? கோயிலுக்கு போகும்போது வேட்டி சட்டை கட்டுனு எத்தனை தடவை சொல்றது இப்ப நீ புது மாப்பிள்ளை வேற இந்த டிரஸ் நல்லாவா இருக்கும் போ போய் வேஷ்டி சட்டை போட்டுட்டு வா” என்று அவனை கண்டித்து கொண்டு இருந்தார் சரஸ்வதி.
“அம்மா வேஷ்டி கட்டி மேனேஜ் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க எனக்கு இதான் கம்பேர்ட்டா இருக்கும்!” என்று சொல்ல, “இப்ப நான் சொல்றத செய்ய முடியுமா? முடியாதா?” என்று கோபமாய் சரஸ் கேட்டார் சரஸ்வதி.
“இப்ப எல்லாம் உங்களுக்கு கோவம் ரொம்ப வருது,இப்ப என்ன நான் வேஷ்டி கட்டிட்டு வரணும், ஆனால் எனக்கு தான் கட்ட தெரியாதே?” என்று விதுரன் சொல்ல “உனக்கு நான் கட்டிவிடுறேன்” என்ற குரல் கேட்க அங்கு ரஞ்சித் நின்று கொண்டிருந்தான்.
ரஞ்சித் புது மாப்பிள்ளை போல வேஷ்டி சட்டை அணிந்து இருந்ததை பார்க்க சரஸ்வதிக்கு ஏதோ சந்தேகம் வலுத்தது.
“ரொம்ப தேங்க்ஸ் மச்சான், வந்து கட்டி விடு ” என்று சொல்லிவிட்டு விதுரன் திரும்ப அப்போதுதான் மாடி இறங்கி வந்தவளை பார்க்க ஒரு கணம் சிலிர்த்துப் போனான்.
ஏனோ மணக்கோலத்தில் அவளின் அழகை கோபத்தில் ரசிக்காமல் விட்டு விட்டான் ஆனால் இன்று,
வானவில் போன்று அவள் அணிந்திருந்த சேலையில் பல வண்ணங்களில் மின்னிக் கொண்டிருக்க, அவள் அணிந்த ஆபரணங்களும் அவளுக்கு இன்னும் அழகைக் கூட்டி இருக்க அவள் நெற்றியில் இட்ட திலகமும் அவள் கழுத்தில் தொங்கும் புது மஞ்சள் தாலியும் பார்க்க மெய் மறந்து விட்டான்.
இதைவிட அவளின் முகத்தில் தோன்றிய புன்னகையும் அவள் கண்களின் பார்வையும் ஆடவனின் இறுக்கத்தை ஏதோ ஒரு பக்கம் குறைத்து கொண்டிருந்தது.
ஆனாலும், தன்னுடைய இறுக்கமான இருதயத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றான்.
கீழே நின்று கொண்டிருந்த அனைவரும் பிரதிக்ஷாவை பார்த்து பிரமித்து போயினர். “என்னாச்சு ரெண்டு பேரும் நின்னுகிட்டு இருக்கீங்க சீக்கிரமா போயி டிரஸ் மாத்திட்டு வாங்க! நேரம் ஆகிக்கிட்டு இருக்கு!”என்று சரஸ்வதி சத்தமிட இருவரும் மாடி ஏறினர்.
முதலில் விதுரன் ஏற அடுத்த படியில் சந்துரு வந்து கொண்டிருக்க விதுரனை பார்த்தபடி மாடியிலிருந்து இறங்கினாள்.
விதுரன் அவளைப் பார்த்து ரசித்தாலும் பிரதிக்ஷா பார்க்கவும் அலட்சியமாய் பார்ப்பதைப் போல அருவருப்பான பார்வை ஒன்றை உதிர்த்து விட்டு நகர இங்கு சந்துருவோ வன்மமாக அவளை பார்த்து விட்டே சென்றான்.
ரஞ்சித்தின் பார்வையை பார்த்த பிரதிக்ஷாவும் அலட்சியமாய் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“இருடி இரு என்னை வா அலட்சியமா பாக்குற? இன்னைக்கு என்ன பண்ண போறேன் பாரு” என்று நினைத்துக் நுழைந்தான்.
“அண்ணி ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள பார்க்கும் வானத்திலிருந்து வந்த தேவதை மாதிரி இருக்கீங்க?” என்று ரேணு புகழ்ந்து தள்ள, இங்கு மனிஷா பற்களை கடித்தால்.
‘எத்தனையோ தடவை இதே விட நல்ல நல்ல சேலையெல்லாம் கட்டிட்டு விதுரன பாக்குறதுக்கு நான் வந்து இருக்கேன் ஆனால் ஒரு தடவை கூட நான் நல்லா இருக்கேன்னு இந்த குள்ளச்சி சொல்லி இருக்காளா? இப்ப அண்ணியாம் அண்ணி! இருடி இரு உனக்கு உங்க அம்மாவுக்கு அந்த சரஸ்வதிக்கு எல்லாருக்கும் இருக்கு. முதல்ல விதுரன கல்யாணம் பண்ணி என் கைக்குள்ள வச்சுக்கிறேன் அதுக்கப்புறம் நான் ஆடுறது தான் ஆட்டம்!நீங்க எனக்கு பண்ணின எல்லாத்தையும் உங்களுக்கு திருப்பி பண்றேன்’ என்று நினைத்துக் கொண்டாள் மனிஷா.
மனிஷாவின் எண்ணம் சரஸ்வதிக்கு புரிந்ததோ என்னமோ, ” இப்போ உள்ள போயி உப்பு கடுகு எல்லாம் எடுத்துட்டு வா, அண்ணிக்கு சுத்தி போடுவோம், பொல்லாத கண்ணெல்லாம் உன் அண்ணி மேல தான் இருக்கு!” என்று சாடைமாடையாக அம்பிகா சொல்ல! இங்கு மனிஷாவிற்கு கோபம் உயர்ந்து கொண்டே போனது.
உள்ளே சென்ற சந்துரு, அவர்களின் அறை எப்படி இருக்கிறது என்பதை தன்னுடைய ஓர கண்ணால் நோட்டமிட்டான். அவன் தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காகத்தான் ரஞ்சித்திற்கு வேஷ்டி கட்டி விடுகிறேன் என்று சொல்லி அவன் அறைக்கு வந்தது.
அம்மா வேற வேஷ்டி கட்டுனு சொல்லிக்கிட்டு இருக்காங்க! எப்படித்தான் கட்டிக்கிட்டு மேனேஜ் பண்ண போறனோ? என்று சொல்லி புலம்பிக்கொண்டு தன்னுடைய அலமாரியில் இருந்த வேஷ்டி சட்டை எடுத்து விதுரன் கொடுக்க ரஞ்சித் அதை வாங்காமல் அந்த அறையை தன் கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு ரஞ்சித் என்னத்த பாக்குற?” என்று விதுரன் கேட்க அப்படியே அதிர்ந்து போனான் சந்துரு.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களின் எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள் நண்பர்களே!
