அத்தியாயம் 28
பேருந்து இன்னும் வரவில்லையே என்ற கவலையில் நின்று கொண்டிருந்தவளின் முன்பாக அந்த ஆடம்பரமான ஃபோர்டு கார் வந்து நின்றது..!!
யாருடைய கார் என்று அவளுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை சாட்சாத் அவளுடைய கணவன் தான் வந்திருந்தான்..
கார் கதவின் கண்ணாடியை இறக்கியவன், உள்ளே ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அமர்ந்திருந்தான் அவன்..
அவ்வளவு வேகமாக வேலைக்கு கிளம்பி போனான்.. இப்போ எதுக்காக இங்க வந்து நிற்கிறான்?? என்று புரியாமல் அவனைப் பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா.
அசையாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் கார் ஹாரனை அழுத்தினான்..
“பாக்குறவங்க என்ன நினைப்பாங்க அவன் பாட்டுக்கு வந்து நின்னு ஹாரன் அடிச்சுக்கிட்டு இருக்கானே..??!!
கொஞ்சமாவது புத்தி இருக்கா?? என்னமோ காதலன் போல வந்து நிற்கிறான் என்னை பிக் அப் செய்வதற்காக?? அப்படி கூட்டிட்டு போகணும்னு நினைச்சவன் வீட்டிலிருந்து என்னை அழைச்சிட்டு போய்ருக்கலாமே அதை விட்டுட்டு எதற்காக இங்கே வந்து நிக்கணும்??
ஒருவேளை ஆபீஸ் போக கூடாது என்று சொல்லி வம்பு செஞ்சு என்னை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு போய் விட்டு விடுவானோ?? என்றெல்லாம் டிசைன் டிசைனாக அவளுடைய மனம் யோசித்துக் குழம்பியது..
இவள் இப்படியே நின்று கொண்டிருக்க..
பொறுமை கைவிட்ட நிலையில் கார் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கி வந்தான் தீரன்..
மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன் அவளுடைய கைகளை இறுக பற்றி கொண்டு இழுத்துச் சென்றான் காரை நோக்கி.
“ என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும் பாக்குறாங்க இது பப்ளிக் ப்ளேஸ் கையை விடுங்க”
” பார்த்தா தெரியல.. கைபிடிச்சு இழுத்துட்டு போறேன்.. அண்ட் ஒன் மோர் திங் யாரும் எதுவும் என்னை சொல்ல முடியாது அது பப்ளிக் ப்ளேஸாகவே இருந்தாலும்.. பிகாஸ் யூ ஆர் மை வைஃப்..”, என்று கடைசி வரிகளை மட்டும் அழுத்தம் திருத்தமாக கூறியவன் ஆழமாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கார் கதவை திறந்து அவளை உள்ளே அடைத்தான்..!!
சுற்றிலும் உள்ள நபர்களின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு தலை குனிந்த வண்ணம் அப்படியே சீட்டில் அமர்ந்திருந்தாள் அவள்..
மேலும் இங்கு நின்று அவள் விவாதம் செய்ய முடியாது செய்தாலும் ஏறுக்கு மாறாக ஏதாவது பேசுவான் என்று அவள் நன்கு அறிவாள்..
எனவே அமைதியாக இருப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லாமல் போனது..!!
காரில் அவளை ஏற்றியவன் நேராக வீட்டிற்கு அவளை அழைத்து சென்று விடுவானோ என்ற பயத்தில் தான் அமர்ந்திருந்தாள் அவள்..
ஆனால் அவள் எதிர்பார்த்தது போல கார் நேராக வீட்டிற்கு செல்லாமல் அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தை நோக்கிச் சென்றது..
ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் வந்துவிட அவனை திரும்பிப் பார்த்தாள் மித்ரா..!!
அவனோ முகத்தில் எந்தவித மாற்றத்தையும் வெளிப்படுத்தாமல் பாறாங்கல்லை முழுங்கியவன் போல ரோட்டை மட்டுமே பார்த்துக் கொண்டு வண்டியை ஒட்டி சென்றான்..
அதிசயமாக இருக்கிறது ??!!
என்ன இந்த அரக்கன் என்னை வேலைக்கு அனுப்புவதற்கு அனுமதி தந்து விட்டானா என்ன?? அந்த அளவுக்கு நல்லவன் இல்லையே..?? என்று சந்தேகமாக அவனை ஓர கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தாள்..
ஆனால் அவனோ இவள் பக்கம் திரும்பக் கூட இல்லை..
கடிவாளம் போட்ட குதிரையாக அவனுடைய கவனம் முழுவதும் ரோட்டின் மீது தான் இருந்தது..
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளுடைய அலுவலகத்திற்கு முன்பாக வந்து நின்றது அவனுடைய கார்.
அவள் இறங்குவதற்கு தோதாக கார் கதவை திறந்து விட்டு அவளுக்கு வழி விட்டான்..
எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தவள் மௌனமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
” நீ வேலை பாக்குற ஆபீஸ் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் நீ இறங்கலாம்..”, என்றான் கடுமையான குரலில் உரைப்பது போல..
எதுக்காக மூஞ்சியை இப்படி இஞ்சி தின்ன ஏதோ போல வைத்திருக்கிறான்?? நான் வேலைக்கு போறது பிடிக்கலன்னா அத நேரடியா வெளிப்படுத்த வேண்டியது தானே அன்னைக்கு நடந்து கிட்ட மாதிரி..
இப்போ எதுக்காக நல்லவன் மாதிரி நடிக்கணும் ?? எல்லாம் வேஷம் போல நம்பவே கூடாது என்று நினைத்துக் கொண்டவள் அவன் முகத்தை கூட பார்க்காமல் பேருக்கு நன்றி என்று உரைத்து விட்டு வேகமாக காரை விட்டு இறங்கி கதவை சாற்றி விட்டு அலுவலகம் நோக்கி நடந்தாள் ..
அவள் போகும்வரை ரோட்டின் மீது மட்டுமே கண்களை பதித்திருந்தவன் அவள் உள்ளே வாசலை நெருங்கும் வேளையில் திரும்பி பார்த்தான் அவளை..
ஆனால் அவள் அவனை திரும்பி கூட பார்க்காமல் வேக வேகமாக சென்று விட்டாள்..
நீண்ட நெடிய கருங்கூந்தல் அவளின் இடையை தொட்டுரசி நடனமாடியே அவளுடைய நடையின் வேகத்தை காட்டி கொடுத்தது..!!
அழகு ஓவியமாய் உள்ளே செல்லும் தன் மனைவியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு கார் கதவை சாற்றி விட்டு மெல்லிய புன்னகை உதட்டில் தோன்ற காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..
இப்பொழுதெல்லாம் அவளை அருகில் வைத்து அழகு பார்க்க தோன்றவில்லை.. போக விட்டு தூரத்தில் நின்று ரசிக்கத்தான் தோன்றியது அவனுக்கு 💓💓
அவள் அருகில் இருக்கும் நேரமெல்லாம் அவனுடைய இதய துடிப்பு அதிகரித்தது பேசுவதற்கு வார்த்தைகள் தடுமாறியது.. எதற்கும் நடுங்காதவன் கைவிரல்கள் அவளின் நெருக்கத்தில் மட்டும் லேசாக நடுக்கம் கண்டது..
இவை எல்லாவற்றையும் தவிர்ப்பதற்காகவே அவளை நேருக்கு நேராக பார்ப்பதையும் அவளின் அருகில் வெகு நேரம் இருப்பதையும் தவிர்த்துக் கொண்டு வந்தான் அவன்..
ஆனால் அவளோ நல்ல பேர் வாங்குவதற்காக தன்னிடம் தன் கணவன் இப்படியெல்லாம் நடிக்கிறானோ என்று சந்தேகப்பட்டாள்..
ஒருவேளை உண்மையாக அவனுடைய நடவடிக்கை மாறிவிட்டதா?? இல்லை சிறுத்தை தன்னுடைய புள்ளிகளை மறைப்பதற்கு முயற்சி செய்கிறதா என்று தீரனை நினைத்து குழம்பினாள்..
அலுவலகம் வந்த பிறகு அவளுடைய மனம் முழுவதும் தீரன் தான் ஆக்கிரமித்திருந்தான்..
பெயருக்கு கணினியை உயிர்பித்து அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..
‘ பொது இடமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் நீ என்னுடைய மனைவி.. உன்னிடம் எனக்கு உரிமை இருக்கிறது ‘, என்பதை அழுத்தம் திருத்தமாக அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்து போனது..
‘ எத்தனை தைரியம் இருந்தால் அவன் அப்படி எல்லாம் நடந்து கொள்வான் பொது இடம் என்பதெல்லாம் அவனுக்கு பொருட்டே இல்லையாமே?? காரணம் நான் அவன் மனைவியாம்.. எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கிறதாம்.. இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை, ஆனால் இரண்டு நாட்களாக எதற்காக மூஞ்சியை மட்டும் பாறாங்கல் போல் வைத்திருக்கிறான்?? நல்லவன் போல நடிக்கிறானா அல்லது நிஜமாகவே நல்லவனாக மாற முயற்சிக்கிறானா??
என்னவோ நமக்கு எதற்கு அது?? நம்ம வேலையை முதலில் கவனிப்போம்’, என்று நினைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாக வேலையை செய்ய தொடங்கினாள்..
ஆனால் அங்கு தீரனின் நிலைமையோ படுமோசமாக இருந்தது..
பார்க்கும் இடமெல்லாம் அவன் கண்களுக்கு மித்ரா தான் தென்பட்டாள்..
யாருடைய குரலை கேட்டாலும் அவளுடைய குரல் போலவே கேட்டது..
இப்படி எல்லாம் இருந்தால் சரி வராது.. இல்லை என்றால் அன்று போல இன்றும் ஏதாவது கலவரம் ஆகிவிட்டால் என்ன செய்வது ??
மித்ரா என்று நினைத்து கொண்டு பெரிய தொழிலதிபரை கட்டி அணைத்து முத்தமிட்ட கதை எல்லாம் அவனுக்கு ஞாபகம் வரவும் வெக்கம் தாங்காமல் தலை குனிந்த வண்ணம் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவன்..❤️❤️
மாலை 5 மணி..
சீக்கிரமாக வேலை முடிந்து விட தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள் மித்ரா..
” ஹாய் மித்ரா.. காலையிலிருந்து ரொம்ப வேலையோ??”, என்று கேட்டுக்கொண்டே அவளுடன் நடந்து வந்தான் அருண்.
“ ஆமா அருண் கொஞ்சம் அதிகமா தான் இருந்தது.. ஏன் கேக்குற??”
” இல்ல இன்னைக்கு என் பக்கம் கூட நீ திரும்பல ஏன் யாரையும் நீ நிமிர்ந்து கூட பார்க்கல.. அந்த அளவுக்கு குனிஞ்ச தலை நிமிராம வேலை பார்த்துக்கிட்டே இருந்த அதனால தான் கேட்டேன்..”, என்றான் அவன்.
“ வேலை இருந்தா செஞ்சு தானே ஆகணும்??”
“ சரிதான்.. கடமை தவறாமல் இருப்பதும் நல்லது தான் ஆனால் உன்கிட்ட இன்னொரு விஷயம் கேக்கணும் பேசலாமா??”
“ சொல்லு அருண் என்கிட்ட என்ன பர்மிஷன் கேட்டுட்டு இருக்க தாராளமா பேசு..”
பேசிக்கொண்டே இருவரும் பேருந்து நிலையம் வரை வந்திருந்தனர்.
“ அங்க இருக்குற காபி ஷாப் உள்ள போய் பேசலாமா??”
அப்படி என்ன விஷயம் பேச போகிறான் என்று அவனை குழப்பமாக பார்த்தவள் சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு அவனிடம் தலையை ஆட்டினாள் போகலாம் என்று..
பிறகு இருவரும் அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்து ஓரமாக இருந்த டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர்..
“ சொல்லு அருண்.. என்ன விஷயம்??”
” நிச்சயமாக இது முக்கியமான விஷயம் தான் ஆனால் இது உன்னுடைய விஷயம்.. உன்னை பற்றிய விஷயத்தை தான் பேசப்போகிறேன்.. அதுக்கு எனக்கு அனுமதி இருக்குன்னு நான் நம்புறேன்.. ஒன்னும் இல்ல எப்படி நீ..?? அது வந்து.. நிஜமாவே நீ சந்தோஷமா தான் இருக்கியா?? விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா ?? அவரு அத்தனை பேரு முன்னாடி உன்னை போட்டு அடிக்கிறாரு.. கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இப்படித்தான் வீட்டிலேயும் நடந்துப்பாரா ?? இவ்வளவு முரட்டுத்தனமான ஆளு கூட எப்படி குடும்பம் நடத்துற?? எனக்கு தெரிஞ்சு நீ அவசரப்பட்டு தப்பான முடிவு எடுத்துட்டியோ அப்படின்னு எனக்கு தோணுது..”, என்றான் அவன் அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்து.
அவன் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தவள் பிறகு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு பேச தொடங்கினாள்..
” இங்கே பாரு.. உனக்கு என் மேல அக்கறை இருக்கு அன்பு இருக்கு நட்பு ரீதியா.. அதை நான் மதிக்கிறேன்.. என்னுடைய விஷயத்தைப் பற்றி நீ பேசக்கூடாது அப்படின்னு நான் சொல்லல தாராளமா நீ பேசு உனக்கு உரிமை இருக்கு.. ஆனால் அவரைப் பற்றி நீ தவறாக பேசாதே அதுக்கு உனக்கு எந்த வித உரிமையும் கிடையாது.. அவர் என்னுடைய கணவர்.. அவரைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. அவர் கோபக்காரர் தான் ஆனால் நல்லவர்.. இன்னொரு முறை அவரைப் பற்றி தப்பா என்கிட்ட பேச வேணாம்.. அன்னைக்கு அவர் எல்லார் முன்னாடியும் என்னை போட்டு அடிச்சாருன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.. அது கணவன் மனைவி எங்களுக்குள் இருக்கிற விஷயம் தயவு செஞ்சு அந்த விஷயத்தை வச்சு அவர நீ தப்பாக எடை போடாதே இன்னொரு முறை அவரைப் பற்றி இந்த மாதிரி பேசுற வேலை வேண்டாம்.. தப்பா எதுவும் நினைச்சுக்காத அருண்..”, என்று கூறிவிட்டு ஹேண்ட் பேக் எடுத்துக்கொண்டு வேகமாக எழுந்து சென்றாள்.
” சாரி மித்ரா சாரி ஒரு நிமிஷம்..”, என்று சொல்லிக் கொண்டே அவன் எழுந்து அவள் பின்னாடியே செல்ல முற்பட..
அங்கே…
கண்களில் அனல் பறக்க கோபமாக நின்று கொண்டிருந்தான் ஆகர்ஷதீரன்..🔥🔥
– தொடரும்..
