அர்ஜூன் சுத்தி முத்தி பார்த்துக்கிட்டே மணமகள் ன்னு எழுதி இருந்த டோர் யை தட்டுறான்.
அபி : திறந்து தான் இருக்கு வாங்க..
அர்ஜூன் கதவை திறந்து உள்ள வரான்.
அபி : நீங்களா ?? இங்க எதுக்கு வந்தீங்க..முதல்ல வெளியே போங்க.
அர்ஜூன் : ஹே..என்ன தூரத்துற..நீ என்ன சொன்னா..நேருல பார்த்தா ஒன்னு சொல்றேன்..ஒன்னு தரேன்னு சொன்னா இல்ல..
அபி : அதுலா இப்ப முடியாது.. நாளைக்கு பாத்துக்கலாம் போங்க..
அர்ஜூன் : நாளைக்கு நீ என்ன சொல்றது..அதுலா நான் பாத்துப் பேன். எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வேணும்..சொல்லு..
அபி : டேய்..
அர்ஜூன் : டேய் யா.. ரொம்ப வாய் நீளுது..
அபி : ரொம்ப முக்கியம் பாரு..என் தங்கச்சி உள்ள தான் இருக்கா..
அர்ஜூன் : இந்த கதை எல்லா வேண்டா.. இப்போ ஐ லவ் யூ சொல்ற ?? கிஸ் பண்ற !!
அபி : ஹே…சரி ஐ லவ் யூ..போ..
அர்ஜூன் : ஏய்..என்ன இது.. இப்படி இல்ல..நல்லா ஃபீல் பண்ணி சொல்லு.
அபி : ராமா..ராமா..
அர்ஜூன் : யாரு டி அது ??
அபி : சாமி டா..
அர்ஜூன் : ஒன்னு சொல்லாட்டா..
அபி : ம்ம்..
அர்ஜூன் : இந்த பிங்க் கலர் புடவைல சும்மா சூப்பரா இருக்கா..
அபி : உண்மையா வா ??
அர்ஜூன் : சும்மா ஒரு பொய் சொல்லி பாக்கலாம் ன்னு சொல்லி பார்த்தா.. இப்படி வெட்கபடுற..
அபி : அப்போ நான் அழகா இல்ல..
அர்ஜூன் : இந்த கோபத்துல கூட அழகா இருக்க..
அபி : ஒன்னும் தேவை இல்ல.. இதுவும் பொய் தானா..
அர்ஜூன் : இல்ல..இது உண்மை.. நான் எப்பவும் பொய் பேச மாட்டேன்.. அதுவும் உன்கிட்ட சொல்லவே மாட்டேன்..நீ தான் டி அழகே.. ன்னு அபி கொஞ்சமும் எதிர்ப்பார்காத நேரத்துல அவ கன்னத்துல ஒரு முத்தம் கொடுக்குறான்..சும்மா நச்சுன்னு..
அபி : 😲😲☺️
அர்ஜூன் : எப்படி ??
அபி : முத்தம் கொடுத்தீட்டீங்க..
அர்ஜூன் : ஆமா..நாங்களா யாரு..ன்னு சட்டை காலரை தூக்கி விடுறான்.
அபி : இதுக்கே இப்படியா..
அர்ஜூன் : பொறு மா..நீ போறா ராக்கெட் ஸ்பீடு லா நமக்கு சரிப்பட்டு வராது.. நாளைக்கு பாரு..உன் பர்மிஷன் லா தேவை இல்ல..
அபி : அப்படி என்ன பண்ண போறேன்னு தான் பாக்குறான்.நம்ம அன்னைக்கு பேசுனது..
அர்ஜூன் : ஹா..ஹா ஞாபகம் இருக்கு.. நான் என் லிமிட் க்ராஸ் பண்ண மாட்டேன்.யூ டோண்ட் வோரி..
அபி : அது நான் என்ன சொல்ல வரேன்னா…
அர்ஜூன் : விடு டி..எனக்கு புரியுது.. நான் ஜஸ்ட் கிஸ் தான் பண்ணுவேன்..அதுக்கூட கூடாதா..
அபி : நான் சொல்றதையே கேட்க மாட்டா..சரியானா ட்யூப் லைட்.
ப்ரியா ரெஸ்ட் ரூம் ல இருந்து வெளியே வரா..
அபியும் அர்ஜூனும் சைலண்ட் ஆகிட்டாங்க.
ப்ரியா : மாமா..நீங்களா ?? செமயா இருக்கீங்க மாமா..சும்மா டாப்பு டக்கர்..
அர்ஜூன் : அப்படியா..பொய் சொல்லக் கூடாது டா ..
ப்ரியா : நான் ஏன் மாமா பொய் சொல்ல போறேன்..சும்மா ஹூரோ மாதிரி இருக்கீங்க மாமா.. நீங்க வரும் போது அக்கா உங்களையே தான் சைட் அடிச்சுட்டு இருந்தா..
அர்ஜூன் : அப்படியா..ஆனா பார்த்தா அப்படி தெரியலையே டா..
அபி : ( எருமை மாடு போட்டு கொடுத்துட்டா )
ப்ரியா : நான் பாத்தேன் மாமா.. நீங்க வேணும்ன்னா கேளுங்க.
அர்ஜூன் : ம்ம்.. ப்ரியா சொல்றது உண்மையா ??
அபி : அதுலா ஒன்னும் இல்ல… நீங்க போங்க..
ப்ரியா : ஏன் மாமா வை தூரத்துற.. நீங்க வாங்க மாமா நாம பேசலாம்.
அசோக் : அண்ணா…அண்ணா…ன்னு அபி ரூம்க்கு வரான்.
அபியை பாக்குறான்..
அண்ணி சூப்பாரா இருக்கீங்க.. அவ்வளவு அழகாக இருக்கீங்க..
அபி : தேங்க்ஸ் அசோக்.
அசோக் : பரவால்ல அண்ணி.. தேங்க்ஸ் லா எதுக்கு ?? சரி ஒரு நிமிஷம் அண்ணி..டேய் அண்ணா..மாமா வந்துட்டாங்க..அம்மா உன்னை கூப்பிட்டாங்க.
அண்ணி நீங்களும் ரெடியா இருங்க..இங்க எல்லாரும் வருவாங்க.
அபி : ம்ம்.. ஓகே அசோக்.. நான் ரெடி தான்.
அசோக் : சரி அண்ணி.. நான் வரேன்னு..அர்ஜூனை இழுத்துக்கிட்டு போறான்..
ஆர்த்தி ஹஸ்பன்ட் ரவி… லண்டன் ல வோர்க் பண்றாரு.. கல்யாணத்துக்கு அப்புறம் மறுபடியும் லண்டன் போய்டுவாரு.. ஸ்ரீயா குட்டி க்கு 2 வயசு ஆனா அப்பறம் ஆர்த்தியும் லண்டன் போய்டுவாங்க…
அர்ஜூன் : மாமா.. எப்படி இருக்கீங்க..
ரவி : நான் நல்லா இருக்கேன்
அர்ஜூன்..நீ எப்படி இருக்க..
அர்ஜூன் : நல்ல இருக்கேன் மாமா..
ரவி : எங்க என் தங்கச்சி..
அர்ஜூன் : ரூம்ல இருக்கா மாமா..
அப்போ அபியோட குடும்பம் வராங்க… அவங்ககிட்ட ரவியை அறிமுகம் செய்றாங்க..
கொஞ்ச நேரம் எல்லாரும் பேசி சிரிச்சுட்டு இருக்காங்க.. சொந்தகாராங்களா வர ஆரம்பிக்குறாங்க..
ரவி : அர்ஜூன் !!
அர்ஜூன் : சொல்லுங்க மாமா..
ரவி : பொண்ணு உனக்கு பிடிச்சு இருக்கு தானே..கல்யாணமே வேண்டாம்னு சொன்ன..இப்ப எப்படி ஒத்துக்கிட்ட..
அர்ஜூன் : அது அவ குணம் தான் மாமா காரணம்.. நான் அவகிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல தான் போனேன்..அங்க யாரோ ஒரு பாட்டியோட பழம் லா கீழே கொட்டி இருந்தது..
அவங்களுக்கு எந்த கௌரவமும் பாக்க மா ஹேல்ப் பண்ணா மாமா..அந்த நிமிஷம் அவளை ரொம்பவே பிடிச்சு போச்சு மாமா..யாரு என்னன்னு தெரியாத ஒருத்தங்களுக்கு உதவி செய்றவ கண்டிப்பா அவ இருக்குற குடும்பத்தையும் நல்லா பாத்துப் பா ன்னு நம்பிக்கை தான் மாமா..அதோட அவளை பாக்குற அப்போ என் மனசு என்கிட்டயே இல்ல மாமா..
ரவி : பாரு டா..என்ன லவ்வா ??
அர்ஜூன் : ஆமா மாமா..லவ் தான்.. அதுவும் கொஞ்ச நஞ்சம் இல்ல.. ரொம்ப சத்தமா கத்தி சொல்லணும்ன்னு தோணுது..
ரவி : கத்தி சொல்ல வேண்டியது தானே..
அர்ஜூன் : எப்படி மாமா.. எல்லாரும் இருக்காங்க இல்ல..
ரவி : டேய்..இதுலா ஒரு பதில்ல.. நானும் ஆர்த்தியும் உங்களை எல்லாம் கண்டுக்குறோம்மா..
அர்ஜூன் : அடப்போங்க மாமா.. என்னால லா முடியாது.
ரவி : டேய்…நீ ஏன் டா இப்படி வெட்கபடுற..
அர்ஜூன் : நானா..இல்ல மாமா..
ரவி : என் தங்கச்சி கிட்ட லவ் சொல்லிட்டீயா..
அர்ஜூன் : சொன்னேன் மாமா..ஆனா அவ வேற மாதிரி சொல்லு ன்னு சொல்றா மாமா..அதோட வார்த்தைக்கு வார்த்தை ட்யூப் லைட் ன்னு திட்டுறா மாமா..
ரவி : என்னது ட்யூப் லைட் டா..அது ஏன் டா அப்படி..
அர்ஜூன் : அதா தெரியலை மாமா..எது பண்ணாலும் திட்டுறா..
ரவி : அப்போ நீ எல்லாம் தப்பா பண்ணி இருப்ப..
அர்ஜூன் : இல்ல மாமா..ன்னு அபி தூங்கிட்டு இருந்த அப்போ நடந்தது, குளிக்கும் போது வெளியே போக சொன்னது எல்லாம் சொல்றான்.
ரவி : ஆச்சோ சாமி முடியலை டா..யாப்பா…
மண்டபத்துல இருக்க எல்லாரும் பாக்குறாங்க..
ரவி சிரிக்குறதை பார்க்கும் போது மத்தவாங்களுக்கும் சிரிப்பு தானா வருது..
அசோக் : என்ன மாமா..ஏன் இப்படி சிரிக்குறீங்க..
அர்ஜூன் : ஹே.. ஒன்னும் இல்ல போடா..
ஆர்த்தி : ஏங்க ?? நீங்க சொல்லுங்க..என்ன ஆச்சு ங்க..
அர்ஜூன் : மாமா..ப்ளீஸ் சிரிக்காதீங்க..
ரவி : உனக்கு மட்டும் நான் அப்பறம் சொல்றேன்..
ஆர்த்தி : இப்போ சொல்லுங்க..
அர்ஜூன் : மாமா..ப்ளீஸ் மாமா..
நளினி : என்ன ஆச்சு பா..
அர்ஜூன் : ஒன்னும் இல்ல மா..
மோகன் : சரி ஆர்த்தி நீ போய் அபி ரெடியான்னு பாரு.. மேடைக்கு கூட்டிட்டு வா.. அர்ஜூன் நீ போய் ரெடி ஆகிட்டு வா..
அர்ஜூன் : ம்ம்..சரிப்பா..ன்னு போறான்..ரவி கையை பிடித்து மாமா..ப்ளீஸ் யாருக்கிட்டயும் சொல்லாதீங்க ன்னு போறான்.
ஆர்த்தி : ஏங்க என்ன ஆச்சு ?? என்ன சொல்ல வேண்டாம்னு சொல்றான்.
ரவி : அது வந்து உங்க அண்ணன்…
அசோக் : ம்ம் சொல்லுங்க மாமா..
ரவி : ஹே..நீ என்ன டா பண்ற இங்க..
அசோக் : அட சொல்லுங்க மாமா..
ரவி : ஆர்த்தி நீ போய் என் தங்கச்சி யை பாரு..
ஆர்த்தி : நீங்களும் வாங்க..ன்னு கூட்டிட்டு போகும் போது ஆர்த்திக்கு மட்டும் சொல்றான்..
ஆர்த்தி யும் சிரிச்சுட்டு வரா..
ரவி : ஏன் டி இவன் இப்படி இருக்கான்.
ஆர்த்தி : அது அவனுக்கு அனுபவம் இல்லல..
ரவி : ஐய்ய…
ஆர்த்தி : உள்ள வரலாமா ??
அபி : வாங்க அண்ணி..
ரவி : ஹாய்…அபி
அபி : ஹாய் அண்ணா..
ரவி : நான் யாருன்னு தெரியுமா ??
அபி : ஐ திங்க் நீங்க ஆர்த்தி அண்ணி ஹஸ்பன்ட் தானே.
ரவி : எஸ்… எப்படி கண்டுபிடிச்ச..
அபி : அதுலா அப்படி தான்..
ஆர்த்தி : அர்ஜூன் சொன்னான்னா ??
அபி : இல்ல.. அசோக் மாமா வந்து இருக்காரு ன்னு சொன்னா..அதோட.. நீங்க
ஆர்த்தி : எங்களுக்கு என்ன ??
அபி : இல்ல அண்ணா உங்க மேல கைப் போட்டு நீங்க இருக்க க்ளோஸ் பாக்கும் போது நல்லாவே தெரியுது.
ரவி : வாவ்..வெறி ஸ்மார்ட்..
அபி : இது யாரா இருந்தாலும் கண்டுபிடிப்பாங்க அண்ணா.
ஆர்த்தி : இவ இப்படி அபி..
அபி : பரவால்ல அண்ணி..இதுல என்ன இருக்கு.
ரவி : அப்படி சொல்லு அபி..என் தங்கச்சி என்ன மாதிரி..
அபி : 😊😊😊
ஆர்த்தி : ஓகே அபி..நீ ரெடி தானே.. கூப்பிட்டாங்க..வா போலாம்..போட்டோ சூட்லா இருக்கு.
அபியும் லஷ்மி ப்ரியாவை கூட்டிட்டு வரா..
எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு நிக்குறா..
முதல்ல அர்ஜூன் அபியை தனித்தனியா போட்டோ எடுக்குறாங்க.
ரவி : போதும் பா.. எவ்வளவு நேரம் தனியாவே எடுப்பீங்க..ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க.
அபி அர்ஜூனும் ஒன்னா நிக்குறாங்க..
ரவி : டேய்…நல்லா நெருங்கிவாடா..தள்ளி தள்ளி நிக்குற..
அசோக் : அண்ணி..சிரிங்க..அண்ணா பீரியா நில்லு டா..
அர்ஜூன் மேல சாயுற மாதிரி..தூக்குற மாதிரி ன்னு எல்லா மாடல்லயும் எடுக்குறாங்க..
நைட் சாப்பிட்டு வந்த அப்பறம் ஏதோ சடங்குலா செஞ்சுட்டு எல்லாரும் தூங்க போறாங்க..
அபிக்கும் அர்ஜூனுக்கும் தூக்கமே வரலை..
தொடரும்..
