ஆடி வரும் வண்ண மயிலே-10
அத்தியாயம்:10
குழந்தைகள் கூட தடுமாறிய மயூரியை விழுந்து விடாது…பவதீப் பிடித்தான் மயூரி நிமிர்ந்து பார்க்க அவனும் அவளை தான் ஒரு கணம் அவனும் பார்த்தான்.
அவனின் பார்வையின் அழுத்தம்…மயூரின் உயிர் வரை சென்று தாங்கியது அதை அவள் உடல் பிரதிபலிக்க…அவளை பிடித்து கொண்டு இருந்த பவதீப் அதை உணர்ந்து கொண்டான்.
அவளை மெதுவாக விலக்கி நிறுத்தியவன்…தர்ஷனை பாதுகாப்பாக இறக்கி விட்டவன்.
“ ஐ யம் எக்ஸ்ட்டீம்லி ஸாரி மேடம் உங்க அனுமதி இல்லாது…உங்களை பிடித்தற்க்கு குழந்தைங்க கீழே விழுந்து விடுவாங்க…என்பதால் தான் நான் இப்படி நடந்து கொள்ள வேண்டி இருந்தது…ஸாரி எகேன்…” என்றான் பவதீப்.
மயூரிகா மனதில் “என் அனுமதியா..? அது எதற்க்கு உங்களுக்கு நானே உங்க சொந்தம் இல்லையா..? என்னை தொட்டு தூக்கும் முழு உரிமையும் உங்க ஒருவருக்கு தான் உண்டு.
அப்படி இருக்கும் போது இந்த சின்ன விஷயத்துக்கு நீங்க போய் மன்னிப்பு கேட்பதா..?என் காதலை எப்போ தான் உணர்ந்து கொள்ள போகிறீங்க” என நினைத்தவள்… அவனுக்கு பதில் சொல்ல வாய் திறக்க போக…
“ என்ன தம்பி இதற்க்கு எல்லாம் போய் மன்னிப்பு கேட்டு கொண்டு…நீங்க என்ன வேணும் என்றா இப்படி நடந்து கொண்டீங்க…பிறகு எதற்காக இந்த மன்னிப்பு எல்லாம்.
ஆனால் உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கிறேன்…வயசு ஆனாலே இந்த ஞாபக மறதி வந்து விடும்…தம்பி எங்களை உங்களுக்கு தெரியுமா..? என கேட்டார்.
பவதீப் அமைதியாக நின்று இருக்க…
குரு “ கல்யாணி இவனை நீ பார்த்து இருக்க முடியாது மா…இவன் ராணுவத்தில் பணி புரிந்தவன் மேஜராக இருந்தவன்…ஒரு பெரிய உயிர் ஆபத்தில் இருந்து என்னை காத்தவன்.
அது தான் காஷ்மீர்க்கு நான் போய் இருந்த போது…ஒரு அட்டாக் நடந்ததே அதில் இருந்து என்னை தன்…உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.
அது தான் என் பர்ஷனல் கார்ட்டாக…கவர்மெண்ட் கிட்ட பேசி இவனிடம் கெஞ்சி இங்கே வரவழைத்தேன்…
இவன் தான் இந்த உயிரை எனக்கு பிச்சையாக போட்டான்…இவனுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கிறேன் மா.
இவனை நீ நேரில் பார்த்து இருக்க முடியாது…டிவி இல்ல நியூஸ் பேப்பரில் பார்த்து இருப்ப…இவன் நாட்டுக்காக செய்த சாதனைகள் அதிகம் மா…” என்றார்.
கல்யாணி “ ஆ! இப்போ தான் ஞாபகம் வருகிறது அண்ணா…உங்க அட்டாக் பற்றி டிவியில் சொன்ன போது இந்த தம்பியின் போட்டோ கூட வந்தது…
ஏன் பாப்பா நீயும் ஒரு தடவை காஷ்மீர்க்கு புரோகிராமுக்கு போன போது… உன்னை கடத்த முயற்ச்சி செய்தார்கள் இல்லையா..?
அப்போ யாரோ ஒருவர் உன்னை காப்பாற்றியதாக சொன்ன…அவர் முகம் மட்டும் தான் பாட்டி எனக்கு ஞாபகம் இருக்கு…அவரை பற்றிய மற்ற விபரம் ஏதும் தெரியாது என்று சொன்ன…
உன் தாத்தா கூட நம்ம ஆளுங்களை அனுப்பி…அவரை பற்றி விசாரிக்க சொன்னார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு…
அவர் கூட ஏதோ ராணுவத்தில் வேலை செய்வதாக சொன்னார்…எனக்கு ஞாபகம் இருக்கு…” என்றார்.
அவர் சொன்னதும் மயூரியின் முகத்தில் பயரேகை தெரிய…அதை கண்டு கொண்டவள் புவனா சட்டென பேச்சை மாற்றினாள்.
“ என்ன பா இது வாசலிலே வைத்து தான் இதை எல்லாம்…பேச வேணுமா..? முதலில் ஆன்ட்டி, மயூவை உள்ளே அழைத்து போகலாம் வாங்க…பவா நீயும் வா டா “ என அழைத்தாள்.
பவதீப் “ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மேடம்…முதலில் உங்க ரிலேடிவ்ஸை பாருங்க பிறகு நான் வருகிறேன்…” என சொல்லி விட்டு போகும் அவனை ஏக்கத்தோடு மயூரி பார்க்க…புவனா அவள் கையை பற்றி உள்ளே அழைத்து போனாள்.
உள்ளே வந்த மயூரி அவள் பாரினில் இருந்து குழந்தைக்கு வாங்கி வந்தை கொடுத்தாள்…தர்ஷனுக்கு ரிமேட் கார், ஏரோ பிளேன்,ரோபோ பொம்மைகள்.
தியாவுக்கு அழகான குட்டி பார்பி பொம்மைகள், டெடிபியார் கூடவே… டிரஸ், சாக்லேட், பிஸ்கெட் எல்லாம் கொடுத்தாள்.
குருமூர்த்திக்கு தங்க நிறத்தில் வைர முட்கள் பதித்த வாட்ச், தங்க பேனா…புவனா, மீனாவுக்கு புடவை, நகைகள் என கொடுத்தாள்.
மீனா “ என்ன கல்யாணி எதற்காக இந்த பொருளை எல்லாம் வாங்கின…பணத்தை எதற்காக வீண் செலவு செய்கிற இதில் பாப்பாவுக்கு… நகைகள், பட்டு புடவை வாங்கி இருக்கலாம் இல்லையா…?
அவள் தான் வயசு பெண்ணு நாளை பின்ன அவள் கல்யாணத்துக்கு உதவும்…நான் வயசானவள் இதை எல்லாம் எங்கே கட்டி கொண்டு போக போகிறேன்…” என்றார்.
மயூரி “ பாட்டி இதை எல்லாம் யூத் தான் கட்ட வேணும் என்ற சட்டம் இருக்கா..?
பாருங்க உங்களை விட வயதான ஆளுங்க… எல்லாம் எப்படி டிரஸ் பண்ணுகிறாங்க என்று..
நீங்களும் கோவில், ஏதும் பங்கஷன் என்றால் கட்டி போங்க பாட்டி…அக்கா இது லேட்டஸ் டிசைனர் புடவை, நகை நீயும் கட்டி போ கா அழகாக இருப்ப…” என்றாள்.
புவனா “ இதை எல்லாம் கட்டி போன காலம் போய் விட்டது பாப்பா…அப்போ உன் மாமா இருந்தார் பார்த்து ரசிக்க இப்போ அவர் இல்லை…பிறகு எதற்க்கு இது எல்லாம்.
இப்போ உனக்கு தான் இது எல்லாம் தேவை மா…” என்றார்.
கல்யாணி “ என்ன பேசுகிற புவனா…உனக்கு என்ன அப்படி வயதாகி விட்டது உன்னை விட வயதாவங்க எல்லாம்….நல்லபடியாக புது வாழ்க்கை ஆரம்பித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க.
நானும், மீனாவும் கிட்ட தட்ட நான்கு வருடமாக உன் கிட்ட போராடி கொண்டு இருக்கிறோம்…நாங்க வயதாவங்க எப்போ எங்களுக்கு அழைப்பு வருமோ தெரியாது…
உன்னை, மயூவை அப்படியே அம்போ என்று தனியாக விட்டு போக முடியுமா..? என்ன தான் வசதி வாய்ப்பு இருந்தாலும் கூட…உன்னை, குழந்தைகளை பார்த்து கொள்ள ஒருவர் வேணாமா..?
மறுமணம் இப்போ எல்லாம் ரொம்ப சாதாரணமாக போய் விட்டது…இதை விட கள்ளகாதல், டைவர்ஸ் கேஸ் தான் அதிகமாக நாட்டில் நடமாடுகிறது…நாங்க சொல்வதை கேளு புவனா.
உனக்கு மட்டுமல்ல மயூவுக்கும் சேர்த்து தான் இதை சொல்கிறேன்…” என்றார்.
மீனா “ நானும் இவரும் இது பற்றி இவளிடம் பேசி பேசி ரொம்ப களைத்து போய் விட்டோம்…
பெரிதாக குடும்ப விஷயத்தில் தலையிடாத பவன் கூட… இது பற்றி இவளிடம் இரண்டு, மூன்று தடவை பேசினான்.
குழந்தைகள் சின்ன வயதாக இருக்கும் போதோ…இவள் கல்யாணம் பண்ணினால் தான் சரியாக இருக்கும்…
இவள் கேட்டால் தானே பிசினஸ்ஸில் கூட… இவள் பெண்ணு, புருஷன் இல்லாதவள் என்று சிலர் வாலாட்ட.
இவள் அது பற்றி எங்க கிட்ட வாய் திறக்கவே இல்லை…காரணம் அப்பா பெயரை டேமேஜ் செய்து விடுவாங்க என்ற எண்ணத்தில்…
கடைசியில் இதை தெரிந்து கொண்ட பவன் தான்… அவர்களின் வாலை ஓட்ட நறுக்கி உட்கார வைத்தான்.
அதற்காக தான் நாங்க இவளுக்கு ஒரு துணை வேணும் என்று சொன்னோம்…இத்தனைக்கு இவள் அப்பா இந்த நாட்டின் சி.எம் அவர் பெண்ணுக்கே இந்த நிலை என்றால்.
சாதாரண பெண்ணுங்கள் நிலை எப்படி இருக்கும்…இதை எடுத்து சொன்னால் கூட இவள் புரிந்து கொள்ள… மறுக்கிறாள் அதுவும் பெண் குழந்தை வேறு உள்ளது.
சரி கல்யாணி நம்ம பாப்பாவுக்கு நீயும் அண்ணும் மாப்பிள்ளை ஏதும் பார்க்கிறீங்களா..? நானும் இவரும் கூட புவனா, மயூவுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
வந்து ராகவனிடம் இது பற்றி பேச வேணும்…அவனின் மூத்த வாரிசு தானே மயூரி அவனும் பெரிய இடத்தில் பார்த்து சொல்வான்…” என்றார்.
மீனாட்சி என குரலை உயர்த்தினார் குரு மூர்த்தி…மயூரி வாங்கி கொடுத்த பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டு இருந்த…குழந்தைகளின் முகத்தில் அவரின் சத்தத்தால் பயம் தெரிய சட்டென அமைதியாக இருந்தார்.
மயூரி,புவனா குழந்தைகளை சமாதானப்படுத்த…குரலை தணித்து.
குரு “ மீனாட்சி உனக்கு என்ன புத்தி பேதலித்து போய் விட்டதா..? யாரு கிட்ட எந்த பொறுப்பை கொடுக்க வேணும் என்ற… விவஸ்தை கூடவா உனக்கு இல்ல.
ஓ ! வளர்த்த மகன் பாசம் இல்லையா..? உன் பையன் இப்போ உன் பையனாக இல்ல…அவன் இப்போ என்னை இந்த சீட்டில் இருந்து இறக்கி அவன் முதல்வர் நாற்காலியில் அமர…
செய்ய கூடாத வேலைகளை எல்லாம் சேர கூடாத… ஆளுங்க கூட சேர்ந்து செய்து கொண்டு இருக்கிறான்…
அவன் கிட்ட போய் நம்ம பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்கிற…ஏன் நானும் சக்கராவும் செத்தா போய் விட்டோம்.
அவன் சொந்த பெரியப்பா நான் எனக்கு பிறகு… எல்லாம் அவனுக்கு தான் வரும் என்று தெரிந்தும் கூட என்னை பதவியில் இருந்து இறக்க…இல்ல மொத்தமாக அழிக்க நேரம் பார்த்து கொண்டு இருக்கிறான்.
காதலித்து கல்யாணம் பண்ணியவளை பாதுகாக்க தெரியாத முட்டாள் பயல்…என் பேத்திக்கு எப்படி நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பான்.
இது வரைக்கும் தன் பெண்ணுக்கு ஒரு ஹேர் பின் இல்ல ஒரு சின்ன சாக்லேட்…வாங்கி கொடுத்து இருக்கிறானா..? இவளை இந்த அளவுக்கு உருவாக்கியது சாக்ரா,கல்யாணி தான்.
தன் சொந்த தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே…அவள் சின்ன குழந்தைங்க கூட தனியாக நிற்கிறாள் …பெரியப்பா, பெரியம்மா வேறு வயதாவங்க.
நம்ம அவளுக்கு துணையாக நிற்போம் என்ற எண்ணம் இல்லாது இருக்கிறான்…ஒரு வார்த்தை எப்படி தங்கச்சி இருக்க என கேட்டு இருக்கிறானா…?
இல்ல என்ன உதவி தேவை என்றாலும்… அண்ணா கிட்ட கேளு என சொல்லி இருக்கிறானா..? சொல்லு.
பவதீப் நமக்கு என்ன உறவா மீனா…அவன் நம்ம குடும்பத்தின் மேலே வைத்திருக்கும்… அன்பு கூட இந்த முட்டாளுக்கு இல்லை அந்த பாண்டி பயல் கூட… சேர்ந்து ஆடி கொண்டு இருக்கிறான்.
சொல்ல கூடாது என்று தான் நினைக்கிறேன்…ஆனா அவன் இப்படி என்னை பேச வைக்கிறான்…பாண்டியால் தான் உன் பையனுக்கு சாவு.
அழகான,அன்பான பெண்ணு கிடைத்தும் வாழ தெரியாமல்…அந்த பாண்டி பயல் தங்கச்சி கூட வாழ்ந்து கொண்டு இருக்கிறான்…அந்த பெண்ணு சரியான பணபேய் அதை விட அவள் மகள் பேராசை பிடித்தவள்.
பாரு இது எல்லாம் ஒரு உத்தம பெண்ணின் கண்ணீருக்கான தண்டனை…சக்ரா என்னை நம்பி தான் தன் பெண்ணை கொடுத்தான்…அவன் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
திரும்பவும் அவனை கஷ்டப்பட சொல்கிறாயா..? நான் அவன் நண்பன் மட்டுமல்ல மயூரியின் தாத்தா கூட…
எனக்கும் பெண்ணு, பேத்தி இருக்கு… நான் செய்யும் பாவம் அவங்களை தான் காவு வாங்கும்.
சியாமளாவின் கண்ணீர் தான் நம்ம பெண்ணு…புருஷனை இழந்து நிற்க காரணம் திரும்ப அதைய தப்பை செய்ய நான் முட்டாள் இல்லை…
திரும்ப ஒரு தடவை மயூரி விஷயத்தில்…அவன் பேச்சை எடுத்த நான் மனுஷனாக இருக்க மாட்டேன்…” என்றார்.
மயில் ஆடி வரும்…
