அத்தியாயம் 26

அவள் காதலெனும் நதியில் மூழ்கி முத்தெடுத்தவன், அவளை மார்போடு சாய்த்து பெண்ணெனும் போதையில் மயங்கியிருந்தான். 

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ…

முதல் முறை காதல் அழைக்குதோ…

நதியா இதழோரம் புன்னகை ததும்பப் பாடியவள், அவன் மார்பை வருடியவாறு “மிதுனா..” என்றழைக்க, “ஹ்ம்ம்.. என்னடா நதிமா” அவனது குரலிலும் இன்னும் தீராத மோகம்.

“இந்த ரோபோவுக்கு இவ்வளவு காதல் பண்ண வருமா?”

“ஏன் என்னைப் பார்த்தா காதல் பண்ற மாதிரி தெரியலையா?”

அவள், “தெரியலையே..” என்றதும் தலையைக் குனிந்து மார்பில் படுத்திருந்தவளைப் பார்த்தான்.

தன்னைக் கேள்வியாய்ப் பார்த்திருப்பவனின் முகத்தை மெல்ல நிமிர்ந்து நோக்கியவள், “இது கனவா நிஜமான்னு தெரியலையே..” என்றாள்.

அவள் உடலோடு மனதையும் புரிந்தவன், “நதிமா.. இது நிஜம் தான். நான், என்னோட இந்தக் காதல் எல்லாமே நிஜம் தான்” என்று தன்னைக் காப்பாற்றியவளுக்காக அவன் காத்திருந்த கதையைச் சொன்னான்.

“அப்போ நான் உங்களைக் காப்பாத்தினதுக்காகத் தான் என்னை லவ் பண்றீங்களா?”

“அது மட்டும் காரணமில்ல. எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.. ஹ்ம்ம்.. என்னைக் காப்பாத்தினது, வைஷாலிக்காக நீ பண்ணினது, குழந்தை பெத்துக் கொடுக்க இங்க வந்தது, யாருன்னு தெரியாத எங்களுக்காக இதெல்லாம் நீ ஏன் பண்ணனும்? எனக்கும் உன் மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. அது ஏதோ ஒரு தருணத்துல காதலா மாறிடுச்சு. ஆனா என் மனசுல இருக்கிற பொண்ணும் நீதான் அப்படிங்கிறது, எனக்கு பெரிய சர்ப்ரைஸ் தான். நீ எப்படி வேணும்னா இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கலாம். இப்போ நீ என்னோட நதிமா, எனக்கு மட்டுமே சொந்தம்” ஒருவழியாகத் தன்னுடைய மனதில் இருந்த காதலை வார்த்தைகளாய்க் கோர்த்திருந்தான்.

காதலில் மட்டுமல்லாது, அவனது பேச்சிலும் கரைந்தவளின் கண்ணீர் அவன் மார்பை நனைத்தது. அவளை மொத்தமாய் அள்ளித் தன் மீது போட்டுக் கொண்டவன், “நதிமா.. வேணாண்டா.. அழாத.. சாரி.. நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேனா” என்க,

“ஹான்.. நான் ஒண்ணும் அதுக்காக அழல” கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “நீங்க மெத்தையை விட சாஃப்ட்டா இருக்கீங்க” பேச்சை மாற்றி விளையாட்டாய்ப் பேசினாள்.

“அப்போ தினமும் இப்படியே படுத்துக்கோ”

“நான் தூங்கினா முழிக்க மாட்டேனே. அப்புறம் எப்படி கம்பெனிக்கு போவீங்க?”

“பரவாயில்ல நதிமா.. போதும் கம்பெனிலாம் தம்பிங்க கிட்ட, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கொடுத்துட்டு நான் உனக்கு எப்பவும் மெத்தையா, இங்கேயே இருக்கப் போறேன். உனக்கு எவ்வளவு தூங்கணுமோ நீ பேசாம அவ்ளோ தூங்கி ரெஸ்ட் எடு”

“சும்மா சொல்லாதீங்க. நீங்கதான் நைட் எல்லாம் தூங்க விடாம என்னை இம்சை பண்ணுவீங்களாம். நீங்கதான் என்னை தூங்க வைக்க போறீங்களாக்கும்”

“உனக்குப் பிடிக்கலைனா நான் இனிமே உன்னை எதும் பண்ணமாட்டேன்”

“நிஜமாவா?”

“எஸ் நதிமா..”

“எனக்குத்தான் உங்களைப் பிடிக்குமே. நான் வேணாம்னு சொல்லமாட்டேன்” அவள் குறும்பாய்ச் சிரித்திட, சிரித்த இதழைச் சிறைப்பிடித்தான்.

மிதுனின் இந்தச் சில மாதத் தேடலுக்கு முற்றுப்புள்ளியாய் அமைந்த அழகான தருணமிது. அவளது அருகாமையிலும் அணைப்பிலும், அவளது சிரிப்பிலும் குறும்புத்தனமான பேச்சிலும் மிதுன் தன் பழைய அடையாளங்களை இழந்து, ஒரு தீராத காதலின் ஆழத்தில் மொத்தமாய் தொலைந்தான்.

காற்றெல்லாம் காதல் நிரம்பியிருந்த அறையில், இருவரும் அந்த பகலுக்குள் இரவை நுழைத்து காதலோடு கூடி மகிழ்ந்திருந்தனர்.

இரவு உணவு தர பணியாள் அறையின் அழைப்பு மணியை அழுத்த அசதியோடு எழுந்தான் மிதுன். “வெளியே வச்சிடுங்க. நாங்க எடுத்துக்கிறோம்” இண்டர்காமில் பணியாளுக்கு கட்டளையிட்டவன், குளித்து முடித்து தன் காதலிக்கு அருகில் வந்தமர்ந்தான்.

சோர்வில் தனது செவ்விதழ்கள் விரித்து உறங்கியவளைக் கண்டு முகம் மலர்ந்தவன், “நதிமா.. யூ ஆர் அமேஸிங். தூங்கும்போது கூட சோ க்யூட்.. எழுந்திருடா” மிதுன் அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப, அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

நீண்ட நேரம் அவன் எழுப்பிய பிறகு எழுந்து அமர்ந்தவள், தூக்கக் கலக்கத்திலேயே இருக்க, “நதிமா.. போய் குளிச்சுட்டு வா. சாப்பிடலாம்” என்க, ‘இந்நேரத்துக்கு எவனாவது குளிப்பானா?’ தனக்குள்ளே புலம்பியவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

“ஹே சோம்பேறி.. எழுந்து ஃப்ரெஷ்அப் ஆகிட்டாச்சும் வா” அவன் கிண்டலாகச் சொல்லிட சிணுங்கியவாறு எழுந்து சென்றாள். அவள் வருவதற்குள் உணவை உள்ளே எடுத்து வந்தவன், அங்கிருந்த உணவு மேஜையில் அமர்ந்திருக்க, நதியா வந்ததும் அவளுக்குப் பரிமாறியபின் சாப்பிட ஆரம்பித்தான்.

“நல்ல பசி.. ரொம்ப ஓவரா ஒர்க் பண்ணிட்டேன் போல” அவன் கள்ளத்தனமாய்ச் சிரித்திட, அவளோ திகைத்துப் போய் அவனைப் பார்த்திருந்தாள்.

கனவுக் காதலி கிடைத்து விட்டாள், தன்னுடைய வாழ்விலும் காதலும், கலவியும், காதல் தரும் பேரின்பமும் அவளால் சாத்தியமாகி விட்டது என்ற மனநிறைவில் காதலுக்கான தேடலை முடித்திருக்கிறான் மிதுன். ஆனால் நதியாவோ இப்போதுதான் காதலுக்கான தேடலைத் தொடங்கியிருக்கிறாள். அது தரும் தவிப்பை உணர ஆரம்பித்திருக்கிறாள். 

அவனுடைய ஒவ்வொரு அசைவும், செயலும் அவளுக்கு பிரமிப்பைத் தருகிறது. அவனது இந்த திடீர் மாற்றம் அவள் மனதில் நெருடலையும் தந்திருக்கிறது. இருவரும் சாப்பிட்டு முடித்தபின் அவன் லேப்டாப் எடுத்து வேலையில் மூழ்கிவிட, அவளோ அவனைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

‘முதல் நாள் நான் ஆபீஸில் பார்த்த மிதுனா இது. கம்பீரமும், கணீர் குரலும், கட்டளையிடும் பார்வையும், அதிர வைக்கும் நடையும், நறுக்குத் தெறித்தாற்போலப் பேச்சுகளும் அப்படியே ஒரு ரோபோவைப் போலத் தெரிந்தான். இப்போது இந்த டிஷர்ட், ஷார்ட்ஸில் கச்சிதமாய் செதுக்கியதுபோல் தெரியும் அவன் உடற்கட்டுகளும், அவன் பேசும் காதல் வார்த்தைகளும், ஆளையே மயக்கிடும் அவனுடைய வசீகர புன்னகையும் எப்படி திடீர்னு மாறிட்டான். அவன் மாறிட்டானா? இல்ல எனக்கு ஏதாவது போதை மருந்தைக் கொடுத்துட்டானா? அதான் அவன் எது பண்ணாலும் அழகாத் தெரியுதோ?’ அது காதல் போதை என்று அறியாத பேதைப் பெண்ணவள் மனதிற்குள்ளே நினைத்திருக்க, 

மெல்ல நிமிர்ந்து பார்த்தவன், நொடிப்பொழுதில் லேப்டாப்பிற்குப் பதிலாக அவளைத் தன் மடியில் இடம்மாற்றியிருந்தான். அவன் தீண்டலில் சிந்தனை கலைந்தவள் அதிர்ந்து விழிக்க, “என்னடா நதிமா.. ஏதோ பலமான யோசனை போல” இதழ் விரித்து சிரித்தவனின் விழிகளையே பார்த்தாள்.

அவனது தேனிற விழிகளில் காதல் நிரம்பியிருக்க, மீசைக்கு கீழ் விரிந்திருந்த இதழ்களில் அவள் பார்வை மையல் கொண்டது. “அ..து.. வந்..து..” அவனது அருகாமையில் அவளுக்கு எல்லாம் மறந்து போனது. அவனும், அவன் காதலும் மட்டுமே தெரிகிறது. 

அவள் இதழ் பேசும் வார்த்தைகளை விட, விழி பேசும் காதல் மொழியை அவனால் உணர முடிந்தது. “நதிமா.. எல்லாரும் காதலைச் சொல்லிட்டுத்தான் மொத்தமா எடுத்துப்பாங்க. நான் உன்னை மொத்தமா எடுத்துக்கிட்டுத் தான் என்னோட காதலைச் சொல்லியிருக்கேன். யூ ஆர் மை எவ்ரிதிங். நவ் யூ ஆர் மைன். நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? இந்த சந்தோஷத்துக்கு நீ மட்டுந்தான் காரணம். லவ் யூ டா நதிமா..” அவன் வார்த்தை ஜாலத்திலேயே மயங்கியவள், அவன் தந்த இதழ் முத்தத்தில் தன்னையே இழந்தாள்.

அவளை அணு அணுவாய் ரசித்தவனோ அந்த இரவிற்குள் பகலை நுழைத்து, அவன் காதலில் தொலைந்து போயிருந்தவளை மீட்டு, அவளுக்குள் தொலைந்திட்டான். காதலிலும் காமத்திலும் தொலைந்து போனவர்கள், காற்றுகூடப் புகாவண்ணம் இடைவெளியின்றி அணைத்தவாறு படுத்திருந்தனர். 

மிதுனின் காதல் குறும்புகளில் லயித்திருந்த நிலவிற்கு இரவு கடந்து போனது தெரியும்முன், கதிரவன் அவனது காதலைக் காண வந்திருந்தான். 

மிதுன், காலை எழுந்தவன் தன்னவளைத் தொந்தரவு செய்யாமல் குளித்து ஆபீஸுக்குக் கிளம்பியிருந்தான். அவளுக்கருகில் சென்றவன், “நதிமா.. வேக்கப்.. சாப்பிட்டுத் தூங்கு” அவள் காதில் மெல்லமாய்ச் சொல்லி, காதுமடலில் அவன் முத்தம் வைக்க சிலிர்த்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள். 

“அடடா ஒருதடவை கூப்பிட்டதும் முழிச்சிட்ட. இவ்ளோ நாளா இது தெரியாமப் போயிடுச்சே. உன்னை இனிமேல் தினமும் இப்படியே எழுப்பிவிடுறேன்”  கொஞ்சலாய்ப் பேசியவன், போர்வையோடு அவளைக் கைவளைவிற்குள் கொண்டு வந்து அணைத்தான்.

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், “எனக்கு மெத்தையா.. என் கூடத்தான் இருப்பேன்னு சொன்னீங்க. இப்போ ஆபீஸ் கிளம்பிட்டீங்க” மோகக் குரலில் பேசிட, 

அவள் முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றைகளைக் காதோரம் ஒதுக்கியவன், “நதிமா.. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, அவாய்ட் பண்ண முடியல. அதை முடிச்சுட்டு வந்துடுறேன். நீ எழுந்து குளிச்சுட்டு சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. ஈவ்னிங் உன்னை வெளில கூப்பிட்டுப் போறேன்” என்றவன் குரலிலும் அத்தனைக் குழைவு. 

“மிதுனா..” உதட்டைப் பிதுக்கி அவள் சிறுகுழந்தையாய்ச் சிணுங்கிட, “லவ் யூ டா நதிமா.. மிஸ் யூ” என்றவன் கிளம்புவதாகத் தெரியவில்லை. அவள் முகம், கண்கள், கன்னம், இதழ், கழுத்து, மார்பு என்று முத்தமழை பொழிந்து கொண்டிருந்தான். 

“உன்னை விட்டு போக மனசே இல்லடா. யூ ஆர் அமேஸிங்” அவள் மீதிருக்கும் காதல் தீராமல் அறைக்கதவின் முன்பு நின்று பறக்கும் முத்தமும் தந்து சென்றான். 

மிதுன் சென்ற பின்பு கைகளை விரித்து ஆசுவாசமாய் மெத்தையில் விழுந்தவள், அவன் அள்ளித் தந்த காதலையும் முத்தங்களையும் எண்ணி பூரித்துப் போயிருந்தாள். 

நதியா எழுந்து குளித்து சாப்பிட்டபின், அவன் இல்லாத அறை அவளுக்கு வெறுமையாய் இருந்தது. அவனது ஆளுயர புகைப்படத்தின் முன் நின்றவள், “மிதுனா.. ஐ மிஸ் யூ. சீக்கிரம் வாடா. நீ இல்லாம நல்லாவே இல்ல” தனியாய்ப் புலம்பினாள்.

கீழே சென்று தன்னுடைய அம்மாவைப் பார்த்து விட்டு, கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தவள், சோர்வாக இருந்ததால் மீண்டும் அறைக்கு வந்து தூங்கினாள். ஆபீஸில் வேலையைச் சீக்கிரமே முடித்து காதலியைத் தேடி ஆவலாய் வந்தவன், அவள் தூக்கத்தில் இருந்ததால் வேகமாக அவளுக்கு அருகில் சென்றவன், அவளிதழில் முத்தமிடத் திடுக்கிட்டு கண் விழித்தவள், மிதுனைப் பார்த்ததும் கை நீட்டி அழைத்தாள். 

அவள் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தவன், அவளது மார்பில் தலைசாய்த்தான். 

“என்ன சீக்கிரமாகவே ஆபீஸ்ல இருந்து வந்துட்டீங்க?” அவன் கன்னத்தை வருடியவள் கேட்க, 

“உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு அதான்” வருடிய அவளது விரல்களை எடுத்து வலிக்காதவாறு மெல்ல கடித்தான்.

“ஸ்ஸ் ஆஆ..” எனச் சிணுங்கியவள், “நிஜமாவா?” என்க,

ஆமா.. சரி டிரெஸ்ஸை ரிமூவ் பண்ணு. உன்னைப் பார்க்கணும்” 

“அய்யோ.. ச்சீ”

“என்ன இது வெட்கமா? எல்லாம் நான் பார்த்தது தானடா நதிமா”

“ஹையோ இதுக்குத்தான் இப்போ வந்தீங்களாக்கும்? ஆபீஸ்ல உங்களுக்கு வேலை இல்லையா?”

அங்க நிறைய வேலை இருக்கு. ஆனா அதைவிட முக்கியமான வேலை இங்கதான் இருக்கு.

“என்ன வேலை?”

“உன்னை கொஞ்சுற வேலை தான்டா நதிமா.. லவ் யூ” என்றவன், அவள் இதழில் ஆக்கிரமிப்பைத் தொடங்கி அவளை மொத்தமாய் ஆட்கொண்டான்.

“மிதுனா..” 

“ஹ்ம்ம்.. சொல்லுடா நதிமா”

“நான் நேத்திலருந்து சரியா குளிக்கல. காலைல பிரஷ் கூட பண்ணாம இருந்தேன். நீங்க எதும் சொல்லல. எனக்கு கிஸ் பண்றீங்க. உங்களுக்கு ஓசிடி இருக்கு தான. என்மேல கோபம் இல்லையா?” 

“நீ என்னோட நதிமா. நீதான் நான். உன்னோட எச்சில்கூட எனக்கு அமிர்தம்தான். உன்னோட லிப்ஸ்ல சம்திங் ஏதோ இருக்கு. இட்ஸ் அமேஸிங் டா” என்றவன் அவனிதழ் கொண்டு அவளிதழில் எவ்வளவு சுவை இருக்கிறதென்ற ஆராய்ச்சியைத் தொடங்கியிருந்தான்.

காதல் எத்தனை சுகங்களை அள்ளித் தருமோ.. அத்தனை வலிகளையும் தரும். காதலில் திளைத்திருக்கும் இரு உள்ளங்களும், அது தரும் ரணங்களில் துவளப் போகும் காலம் வெகு விரைவில்…

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மோகம் தீர்க்கும் நதியவள்
5,940 177 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page