அத்தியாயம் 17
ரஞ்சித் விதுரனின் அறையை கண்களால் நோட்டமிட்டு கொண்டிருக்க, ” என்னாச்சு ரஞ்சித் என்னத்த பாக்குற? “என்று கேட்டான் விதுரன்.
விதுரனின் கேள்வியில் ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தாலும், சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு,” ஒன்னும் இல்ல மச்சான்! நான் போன தடவை வந்தப்ப உன்னோட ரூம்ல இந்த இன்டீரியர் டிசைன் இருந்த மாதிரி இல்லையே, புதுசா இன்டீரியர் டிசைன் பண்ணுனியா? “என்று கேட்டான் ரஞ்சித்.
“இல்ல போன தடவை நீ வந்தப்பையும் இப்படித்தான் இருந்துச்சு நீ சரியா பாக்கல போல!” என்று கூறினான் விதுரன்.
“அப்படியா சொல்ற இல்லையே, எனக்கு வேற இன்டீரியர் டிசைன் தான் இருந்த மாதிரி ஞாபகத்துல இருக்கு!” என்று ரஞ்சித் சொல்ல ” நீ சரியா பார்த்திருக்க மாட்ட!” என்று விதுரன் கூறினான்.
“எங்க, நீ இருக்கிற பிஸில உன்னைய மீட் பண்றதுக்கு எனக்கு டைம் கிடைக்கிறது இல்ல, நீ ஃப்ரீயா இருக்கும்போது எனக்கு வேலை வந்துருது, அப்புறம் எங்க ரெண்டு பேரும் பார்த்து பொறுமையா பேச, ரூமை எல்லாம் பார்க்க!” என்று கூறினான் ரஞ்சித்.
“அதைச் சொல்லு, பேசாம சின்ன பிள்ளைங்களாவே இருந்திருக்கலாம் போல, இப்ப நம்ம வாழ்க்கையில நடக்கிற எந்த பிரச்சனைகளும் நடக்காம இருந்திருக்கும்!” என்று தன்னுடைய திருமணத்தை எண்ணி கூறினான் விதுரன்.
இருவரும் பேசிக்கொண்டே ரஞ்சித் விதுரனுக்கு வேஷ்டியை கட்டி விட்டான். “எப்படியோ வேட்டி கட்டியாச்சு, ஆனால் இத போட்டுட்டு ஒரு நாள் முழுவதும் எப்படி மேனேஜ் பண்ண போறேன்னு தெரியல, அம்மா கிட்ட சொன்னால் , புது மாப்பிள்ளை வேஷ்டி கட்டுனால் தான் நல்லா இருக்கும்னு சொல்றாங்க! உன்னோட கல்யாணத்துக்கு வந்த எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அத கொஞ்சம் கூட யோசிக்காம, நான் புது மாப்பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க!”என்று சலித்துக் கொண்டான் விதுரன்.
“சரி அதுக்காக என்ன பண்றது நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு. அத பத்தி இனிமேல் பேசி என்ன ஆகப்போகுது, அடுத்து நடக்க வேண்டியத தான் என்னனு யோசிக்கணும்!” என்று ரஞ்சித் சொல்ல,
“ஆமாம், ரஞ்சித் இப்பதான் ஞாபகம் வருது டைவர்ஸ் பண்றதுக்கு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” என்று கேட்டான் விதுரன்.
ரஞ்சித் எதை மனதில் வைத்து இப்படி விதுரனிடம் பேசினானோ அதையே விதுரனும் கேட்க மெலிதாய் புன்னகைத்துக் கொண்டே,
“டாக்குமெண்ட் ரெடி பண்ணியாச்சு. நீங்க ரெண்டு பேரும் சைன் பண்ணிட்டால் கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணிடலாம்” என்று கூறினான் ரஞ்சித்.
“கோயிலுக்கு போயிட்டு வந்த உடனே ஆபீஸ்க்கு போய் சைன் பண்ணிருவோம்!” என்று விதுரன் கூறினான்.
நேற்று இரவு பார்த்த காட்சியை வைத்து கொஞ்சம் விதுரனை சந்தேகித்தவன் விதுரன் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.
” நேரமாகிட்டு சீக்கிரம் வாங்க?” என்ற சரஸ்வதியின் குரல் கேட்க, “அம்மா கூப்பிட்டு இருக்காங்க வா போகலாம்” என்று விதுரன் கூறி முன்னே செல்ல ரஞ்சித் பின்னே சென்றான்.
அங்கு அனைவரும் கோயிலுக்கு செல்வதற்காக ரெடியாகி நின்று கொண்டிருந்தனர். ரேணு பிரதிக்ஷாவிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவரும் சிரித்து பேசுவதை பார்த்த மனிஷாவின் கண்கள் கோபத்தில் சிவந்தது.
அனைவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து விதுரன் தன் காரில் ஏற, மனிஷா விதுரனோடு காரில் ஏறினாள்.
“மனிஷா அவங்க ரெண்டு பேரும் ஒரு கார்ல வரட்டும், நீ எங்க கூட வா?” என்று அம்பிகா சொல்ல, விதுரனை பார்த்தாள் மனிஷா.
ஏற்கனவே நேற்று இரவு கண்ணால் பார்த்த காட்சியே மனிஷாவின் மனதில் உறுத்திக் கொண்டிருக்க இப்போது அம்பிகா சொல்லவும் அப்படியே விதுரனை பார்த்த படியே நின்றாள்.
“அம்மா என் கூடயே மனிஷாவும் வரட்டும், நீங்க வேணும்னா இவள உங்க கூட கூட்டிட்டு வாங்க!” என்று பக்கத்தில் இருந்த பிரதிக்ஷாவை பார்த்து விதுரன் சொல்ல மனிஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“விதுரா , அம்பிகா சொன்ன மாதிரி நீயும் பிரதிக்ஷாவும் ஒரு கார்ல வாங்க. நாங்க எல்லாரும் ரஞ்சித்தோட கார்ல வரோம்!” சரஸ்வதி சொல்ல, மறுப்பு எதுவும் சொல்லாமல் அமைதியாகினான் விதுரன்.
இப்போது மனிஷாவின் முகத்தை பார்த்த பிரதிக்ஷா நக்கலாக புன்னகைத்தாள். ரஞ்சித் விதுரனை தவிர்த்து மற்ற மூவரும் உதட்டுக்கே வலிக்காமல் புன்னகை சிந்தினார்கள். அவர்களின் சிரிப்பு மனிஷாவின் கண்ணில் பட அவளின் கோபம் அதிகமானது. “இருடி இரு சிரிக்கவா செய்ற, இன்னைக்கு ரஞ்சித் பண்ண போற காரியத்துல இதே சிரிப்பு உன் முகத்துல இருக்குதான்னு பார்க்கிறேன், உன் முகத்தில மட்டும் இல்ல இவங்க முகத்துல கூட எந்த சிரிப்பும் இருக்காது!” என்று வன்மமாக புன்னகைத்தாள்.
விதுரன் காரை ஓட்ட பிரதிக்ஷா அவனின் அருகில் அமர்ந்தாள். மற்ற அனைவரும் ரஞ்சித்தின் காரில் ஏற ரஞ்சித்தின் கார் முன்னே சென்றது.
விதுரன் பிரதிக்ஷா பக்கத்தில் அமர்ந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக அப்படியே காரை மட்டும் ஓட்டிக் கொண்டிருக்க, காரில் உள்ள பிளேயரை ஆன் செய்தால் பிரதிக்ஷா.
அதில் தன் மொபைலில் இருந்து ப்ளூடூத்தை கனெக்ட் பண்ணி, ” கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்!” என்ற பாட்டை ஒளிர விட காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் விதுரன்.
“என்னாச்சு காரை எதுக்கு நிறுத்தினீங்க?” என்று தெரியாதது மாதிரி பிரதிக்ஷா கேட்க , ” இது என்ன பாட்டு? என்று கேட்டான் விதுரன்.
“நீங்க கேட்கலையா,
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு மச்சான், பருத்திக்குள்ள பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்!
என்று விதுரனை பார்த்துக்கொண்டே கிறக்கமாக அவளின் குரலில் பாடி காட்ட,
“அடச்சீ… என்ன பாட்டுன்னு கேட்கல, இது என்ன பாட்டுனு கேட்டேன்” என்று கூறிவிட்டு பிளேயரை ஆஃப் பண்ணினான் விதுரன்.
“ஏன் இந்த பாட்டு உங்களுக்கு புடிக்கலையா? எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு ஒரு தடவை கேட்டு பாருங்க, ரொம்ப சூப்பரா இருக்கும் அப்புறம் நீங்களும் அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிடுவீங்க!”என்று பிரதிக்ஷா சொல்ல,
“எனக்கு பாட்டு கேக்குறதுல இன்ட்ரஸ்ட் இல்ல அதுவும் உனக்கு புடிச்ச பாட்டுன்னு சொல்லிட்ட, அதனால கண்டிப்பா இந்தப் பாட்ட கண்டிப்பா நான் கேக்குறதுக்கு வாய்ப்பே கிடையாது!”என்று விதுரன் அவளிடம் சொல்ல, உதட்டை சுழித்தாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷாவின் உதட்டசைவுகளை பார்த்தவன் என்ன நினைத்தானோ,”இங்க பாரு! இதே மாதிரி இன்னொரு தடவை இந்த உதட்டை சுழிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்க கூடாது ” என்று அவளை எச்சரித்தான்.
“ஏன் அத்தான், அப்படியே சுழிச்சா என்ன பண்ணுவீங்க!” என்று பிரதிக்ஷா கண்ணடித்துக் கொண்டே கேட்க, அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்து கொண்டாலும், அதனை தெரியாதது போல் காட்டிக்கொண்டு”மூஞ்சி முகரையை ஒடச்சிடுவேன்!” என்று கோபமாக கூறினான்!.
“அதான பார்த்தேன், இப்படித்தான் சொல்லுவீங்கன்னு எனக்கும் தெரியும்!” என்று பிரதிக்ஷா கூறிக்கொண்டே மீண்டும் உதட்டை சுளித்தாள். பெண் அவள் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை புரிந்து கொண்டதனாலோ என்னவோ
இந்த முறை ஆடவனின் கண்கள் அவள் உதட்டு வரிகளில் மையலிட்டது.
‘இவ லிப்ஸ்டிக்கே போட்ட மாதிரி இல்ல ஆனாலும் அவளோட உதடு எப்படி இவ்வளவு சிவப்பா இருக்கு’ என்று அவன் மனதில் கேள்வி பிறக்க, அதிர்ந்து போனான் விதுரன்.
‘என்னாச்சு எனக்கு, ஏன் இப்படி ஒரு எண்ணம் தோணுது, மனிஷாவோட கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா லவ் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன். ஒரு நாள் கூட அவளை பார்த்து எனக்கு இந்த மாதிரி தோணுதே கிடையாது, இப்போ இவளை பார்த்ததுக்கு அப்புறம் ஏன் இப்படி தோணுது!’ என்று அவன் மனம் குழம்பியது.
இவ ஏதோ பண்றா, இவ என்னைய மயக்குறத்துக்கு ஏதேதோ திட்டம் போடுறா,கண்டிப்பா எக்காரணத்தைக் கொண்டும் இவகிட்ட மயங்கிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டு பிரதிக்ஷாவின் பக்கம் திரும்பாமல் காரை ஓட்டினான்.
பிரதிக்ஷா விதுரனிடம் பேச முயற்சிக்க விதுரன் அவளிடம் பேசக்கூடாது என்ற வைராக்கியத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க பிரதிக்ஷாவும் ஒரு கட்டத்தில் அமைதியானாள்.
பிரதிக்ஷாவிற்கு காரின் அமைதி போர் அடிப்பதை போல் தோன்ற காரின் கண்ணாடி ஜன்னலை திறந்தாள். கண்ணில் தெரிந்த பசுமையும் குளிர்ந்த காற்றும் இதமாய் வருட சிறிது நேரம் ரசித்துக்கொண்டே வந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.
பிரதிக்ஷா தூங்கியதும் சீட்டிலிருந்து அவள் தலை மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருந்ததை பார்த்தான் விதுரன்.
அச்சச்சோ அவளுக்கு கழுத்து வலிக்குமே என்று அவளின் உள் உணர்வு சொல்ல, ‘வலிச்சா வலிக்கட்டும்’ என்று அவனின் மற்றொரு மனமும் மனசாட்சியே இல்லாமல் சிந்தித்தது.
ஏனோ அவனின் கோபமும் வீம்பும் அவளிடம் தோற்றுப் போக காரை அவள் தூக்கம் கலைந்து விடும் என்று மெல்லமாய் நிறுத்திவிட்டு அவளின் கழுத்தை நேராக வைக்க அவளின் பக்கத்தில் நெருங்கினான்.
சிறு பிள்ளை போல் தூங்கி வழியும் அவள் அழகு முகமும், வெண் சங்கு போன்ற அவளுடைய கழுத்தும் அதில் சிறு புள்ளி போன்ற கருமச்சமும் அவன் கண்களில் பட்டது. அவள் மூச்சு விடும் போது அவளின் கழுத்து வளைவுகளில் ஏற்பட்ட சிறு அசைவுகள் எல்லாம் ஆடவனின் மனதில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
கழுத்தில் அணிந்திருந்த புது பெண்ணுக்குரிய தாலியும் மிளிர, தனக்கானவள், தன்னுடையவள் என்ற எண்ணம் அவனை அறியாமலே அவனுள் எழ, உரிமையாக அவளை ரசித்து கொண்டிருந்தான். அவன் வாகனத்தை நிறுத்திய இடத்திற்கு அருகில் சென்ற பைக் ஓட்டி ஒருவன் அடித்த ஹாரனில் தன்னிலை திரும்பினான் விதுரன்.
‘டேய் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க’ என்று அவனின் மனசாட்சி கேள்வி எழுப்ப, ‘பாவம் கழுத்து வலிக்கும்ல’ என்று அவனின் மனச்சாட்சிக்கு பதில் கூறினான்.
‘அப்போ வந்த வேலைய மட்டும் பாரு’ என்று அவன் மனசாட்சி சொல்ல மெல்லமாய் அவளின் முகத்தை திருப்பி அவள் கழுத்தை சீட்டில் நேராக வைத்தான்.
மிக நெருக்கமாக பிரதிக்ஷாவின் அருகில் விதுரன் இருந்ததால் அவள் கழுத்தில் தோன்றிய புதுவித வாசம் ஆடவனின் கட்டுப் பாடுகளை தகர்த்தெறிந்து கொண்டிருந்தது. அக்கழுத்து வளைவுகளில் இன்னும் ஆழமாக புதைந்து அதன் வாசத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தோன்ற தவித்துக் கொண்டே மெல்லமாய் அவளின் கழுத்து வளைவுகளில் தன்னுடைய முகத்தை கொண்டு சென்றான்.
விதுரனின் மூச்சுக்காற்று பிரதிக்ஷாவை தீண்ட தூக்கத்திலிருந்து கலைந்தவள் தன் கண்களை திறந்து பார்த்துவிட்டு திருடன் திருடன் என்று கத்தினாள்.
விதுரனோ அதிர்ந்து, “ஏண்டி இப்ப கத்துற? “என்று கேட்டுக்கொண்டே அவளின் வாயை தன் கையால் இறுக்கமாக பொத்தினான்.பிரதிக்ஷாவோ பயத்தில் அவளின் விழிகளை அகல விரித்தாள்.
கதையைப் படித்து விட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களின் எண்ணங்களை விமர்சனமாக பதிவேற்றிச் செல்லுங்கள்.
