அத்தியாயம் 29

அத்தியாயம் 29

” சாரி மித்ரா சாரி ஒரு நிமிஷம்..”, என்று சொல்லிக் கொண்டே அருண் எழுந்து மித்ரா பின்னாடியே செல்ல முற்பட..

அங்கே…

கண்களில் அனல் பறக்க கோபமாக நின்று கொண்டிருந்தான் ஆகர்ஷதீரன்..🔥🔥

அவனைப் பார்த்து விட்டு மித்ராவும் ஒரு நொடி திகைத்து விட்டாள்..!!

அவளை ஒரு முறை பார்த்து விட்டு பிறகு அருணை பார்த்து முறைக்க தொடங்கினான் தீரன்..

ஏதாவது திட்டுவான் சண்டைக்கு போவான் அடிக்கப் போவான் என்று கண்டதையும் யோசித்து பதறிக் கொண்டிருந்தாள் மித்ரா..

ஆனால் அவனோ..  தன் அருகில் நின்று கொண்டிருக்கும் தன் மனைவியை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்..

அந்த பார்வையில் தெரிந்தது கோபமா ??வருத்தமா ??மகிழ்ச்சியா?? ஆச்சரியமா?? அது என்னவென்று அவளால் வகையறுக்க முடியவில்லை..

ஆனால் எப்பொழுதும் இருக்கும் கடுமை  இப்பொழுது அவன் முகத்தில் தென்படவில்லை.. மாறாக சிறிது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான் தென்பட்டது..

கையில் இருக்கும் கார் சாவியை பார்த்துவிட்டு நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தான் தீரன்..

பிறகு அங்கிருந்து திரும்ப வாசல் பக்கம் நடந்து சென்றுவிட்டான்.

அவன் பார்வையில் என்ன உணர்ந்து கொண்டாளோ அவள்..பிறகு எந்த மறுபேச்சும் பேசாமல் அருகில் நின்று கொண்டிருந்த அருணை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேக வேகமாக தன் கணவன் பின்னாடியே ஓடிவிட்டாள் மித்ரா..

என்ன அதிசயம் சண்டைக்கு போவான் என்று பார்த்தால் எதுவும் பண்ணாமல் அமைதியாக வந்து விட்டானே நிஜமாகவே திருந்திட்டானா இல்லை இதுவும் நடிப்பா ??.. ஒன்னும் புரியல ஆண்டவா , என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே அவனுடன் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் அவள்..

கிளம்பி வா வீட்டுக்கு போகலாம் என்று அவன் வாய் விட்டு எதையும் கூறவில்லை என்றாலும் அந்த விஷயத்தை அவன் கண்கள் உணர்த்திவிட்டது போல அவளிடம்..

அதனால்தான் பதறியடித்துக் கொண்டு கணவன் பின்னாடியே ஓடி வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் ..

நடந்த காட்சிகள் அனைத்தையும் அவனால் ஜீரணிக்க முடியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் அருண் இன்னொரு புறம்..!!

அவளுக்காகத்தானே பரிந்து பேசினோம் கடைசியில் நம்மை திட்டிட்டு போய்ட்டாளே.. அதுவும் இந்த அரக்கனுக்கு சப்போர்ட் செய்து பேசி விட்டு செல்கிறாள்..

 இந்த பெண்கள், கழுத்தில் மூன்று முடிச்சு ஏறும் வரை தான் ஜான்சிராணி போல இருக்கிறார்கள்.. மூன்று முடிச்சு ஏறிய பிறகு அப்படியே மொத்தமாக மாறி வள்ளுவனின் வாசுகியாக மாறி விடுகிறார்கள்.. என்னவோ நமக்கு என்ன வந்தது?? , என்று நினைத்துக் கொண்டு அவனும் அங்கிருந்து சென்று விட்டான்.

காரில் அவனுடன் பயணிக்கும் பொழுது வாய் திறந்து அவள் எதுவும் பேசவில்லை ஆனால் மனதிற்குள் குழப்பம் மட்டும் அதிகமாகிக் கொண்டே போனது..

இந்த இரண்டு நாட்களாக அவளின் நிலை இதுதானே??

தீரன் பதில் எதுவும் பேசாமல் ஏன் அவளிடம் எந்த கேள்வியும் கூட கேட்காமல் அமைதியாக காரை ஓட்டி சென்றான் வீட்டை நோக்கி..

எல்லாம் சரிதான்.. ஆனால் எப்படி கரெக்டாக அந்த சமயம் பார்த்து இவனும் காபி ஷாப் வந்தான்??  அதுதான் புரியவில்லை.. ஒருவேளை நம்மை வேவு பார்த்துக் கொண்டே இருந்திருப்பானோ ?? வேலைக்கு நல்லவன் போல் அனுப்பி விட்டு அங்கேயே நின்று கொண்டு நான் என்ன செய்கிறேன் எங்கே போகிறேன் என்று கண்காணித்திருப்பானோ??,  என்றெல்லாம் அவளுடைய மனம் எண்ண தொடங்கியது ..!!

ஆனால் உண்மையில் , தீரன் அவளை கண்காணிக்கவும் இல்லை பின் தொடரவும் இல்லை.. வேலை முடிந்து அந்த வழியாக வரும்போது காபி ஷாப் சென்று ஒரு காபி அருந்தலாம் என்று தான் அவன் அங்கு வந்தான்..

வந்த இடத்தில் மித்ராவை அழைத்துக் கொண்டு அருண் அந்த கடைக்கு செல்வதை பார்த்ததும் இவனும் பின் தொடர்ந்து வந்தான்..

அப்பொழுதுதான் அருண் அவளிடம் கேட்ட கேள்வியும் அதற்கு மித்ரா கொடுத்த பதிலடியும் அவன் காதுகளில் விழுந்தது..!!

நிஜமாகவே மித்ரா தான் இப்படி எல்லாம் பேசுகிறாளா என்று ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டான் அவன்..!! 

தான் கொடுத்த டார்ச்சரில் , இந்நேரம் அவள் எதையாவது புலம்பி திட்டியிருக்க வேண்டும் குறைந்த பட்சம் எனக்கு எந்தவித சப்போர்ட்டும் செய்யாமல் அமைதியாகவாவது இருந்திருக்க வேண்டும்.. ஆனால் இது இரண்டையும் அவள் செய்யாமல் எனக்காக அவனிடம் பரிந்து கொண்டு சண்டைக்கு சென்றிருக்கிறாளே..??!!

என் கணவனை பற்றி எனக்கு தெரியும் அவரைப்பற்றி இன்னொரு முறை இந்த மாதிரி தப்பாக பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத என்று அவள் அதட்டலாக கூறவில்லை என்றாலும் சிறு கடுமை நிறைந்த குரலில் அவள் கூறிய பொழுது நிஜமாகவே தீரனுக்கு அந்த நிமிடம் தலையில் கூடை நிறைய பனிக்கட்டிகளை அள்ளி கொட்டியது போல தான் உணர்ந்தான்..❤️❤️

அளவில்லாத சந்தோசத்தை அந்த நொடிதான் அவன் உணர்ந்து கொண்டான்..

எந்த இடத்திலுமே அவள் அவனை விட்டுக் கொடுத்ததே இல்லை..

 அன்று ஆஸ்பத்திரியிலும் சரி, தன் அம்மாவிடமும்  சரி , ஏன் இப்பொழுது கூட தன் நண்பனிடம் அவள் தன்னை விட்டுக் கொடுக்கவில்லை என்கிற எண்ணமே அவனுக்கு மனதிற்குள் மகிழ்ச்சியை உண்டாக்கியது..!!

சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷத்தை மனதிற்குள் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டு முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் தீரன்..!!

ஒரு பெண் தன்னை நேசித்தாளோ அல்லது தன்னிடம் அக்கறை காட்டினாளோ எப்படி இருக்கும் என்பதை முழுமையாக கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருந்தான் அவன்..

நாம் ஒருவரை நேசிக்கிறோம் என்பதைவிட ..  ஒருவரால் நாம் நேசிக்கப்பட்டோம் என்கிற உணர்வு தனி சிறப்பு அல்லவா??

இப்பொழுது அவனுக்கும் அதே போன்ற உணர்வு தான் ஏற்பட்டது..

 ஒருவேளை அவனே போய் தனக்காக பேசி சண்டை போட்டிருந்தால் கூட அவனுக்கு இத்தனை திருப்தி இருந்திருக்காது ஆனால் அவனுக்காக அவள் பேசினாள் அல்லவா அந்த நொடி அந்த நிமிடம் தான் அவனுக்கு ரெக்கைகள் முளைத்து காற்றில் மிதப்பது போல இருந்தது..

என் மனைவி எனக்காக பேசுகிறாள்.. எனக்காக தன் நண்பனிடமே எதிர்த்து சண்டை போடுகிறாள்.. என்கிற உணர்வு மீண்டும் மீண்டும் அவன் மனதிற்குள் தோன்றி அவனை உற்சாகமடைய செய்தது..❤️❤️

ஆனால் அந்தக் கள்வன் மனதிற்குள் அனுபவித்துக் கொண்டிருந்த சந்தோஷத்தை இம்மியளவு கூட முகத்தில் காட்டாமல் அப்பொழுதும் கடுமையாகவே முகத்தை வைத்துக் கொண்டு காரை ஓட்டி சென்றான்..!!

வீட்டிற்குள் கார் நுழைந்ததும் அவள் இறங்கிய பிறகு கார் கதவை சாற்றி விட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்ப எண்ணினான்.

இன்ஜின் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்த மித்ரா ஏன் என்பது போல அவனைப் பார்த்தாள்.

” முக்கியமான ஆபீஸ் வேலை ஒன்னு இருக்கு நான் வெளியே போகணும்.. நீ நல்லா ரெஸ்ட் எடு..”, என்று கூறினான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்.

பதில் எதுவும் கூறாமல் அவனையே பார்த்திருந்தாள் அவள்.

காரை எடுத்துக் கொண்டு அவன் பாட்டுக்கு வெளியே சென்று விட்டான்.

கிட்டத்தட்ட வேலை எல்லாம் இந்நேரம் முடிந்திருக்கும் வீட்டுக்கு வர்ற நேரம் தான்.. ஆனால் உள்ளே வராமல் எதுக்காக மறுபடியும் வெளியே போறான் அப்படி என்ன முக்கியமான வேலை??  வர வர இவனுடைய நடவடிக்கையே சரி இல்லை..

நல்லா ரெஸ்ட் எடு என்று சொல்கிறானே.. அதை கொஞ்சம் முகத்தை நல்லா வச்சுக்கிட்டு சொல்ல கூடாதா?? ஏதோ பரம எதிரி கிட்ட பேசுற மாதிரி மூஞ்சியை இப்படி வச்சிருக்கான்.. உண்மையிலேயே இவன் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டானா இல்ல அத்தனையும் நடிப்பா ?? ஆண்டவா எனக்கு ஒன்னும் புரியல சரி நாம போய் நம்ம வேலையை பார்ப்போம்.. என்று ஒருமனதாக வீட்டிற்குள் நுழைந்தாள்.

” என்னம்மா வழக்கத்தை விட இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்ட??”, காபி தயாரித்துக் கொண்டிருந்த வசுந்தரா அவளை பார்த்ததும் கேட்டார்.

“ அதுவா அத்தை அவர் தான் என்னை கொண்டு வந்து இறக்கி விட்டுட்டு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி இப்போதான் கிளம்பி போனாரு..”

” ஓஹோ உங்க ஆத்துக்காரர் கொண்டு வந்து விட்டாரா சரி சரி..”, என்றார் சிறு புன்னகையுடன்.

அவரிடம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளும் புன்னகையை பதிலுக்கு உதிர்த்து விட்டு மாடிக்கு சென்று விட்டாள்.

வந்ததும் ஒரு குளியலை போட்டுவிட்டு கட்டிலில் சரிந்தவள் மொபைல் எடுத்து பார்க்க தொடங்கினாள்..

அப்பொழுது தான் அன்றைய தேதி அவளுக்கு கண்ணில் பட்டது..

நாள் முழுக்க வேலை பார்க்கும் பொழுது தேதி நேரமெல்லாம் கண்ணில் படத்தான் செய்தது.. 

ஆனால் எதுவும் புத்திக்கு உரைக்கவில்லை..

 காரணம் , வேலைப்பளு அதிகமாக இருந்தது.. இப்பொழுது வீட்டிற்கு வந்ததும் ஆயாசமாக கட்டிலில் படுத்துக் கொண்டு மொபைல் போனை வேடிக்கை பார்க்கும் பொழுது தான் அந்த தேதி அவளுக்கு நினைவுக்கு வந்தது..

நாளை 28 ஆம் தேதி.. அப்படி என்றால், என்னுடைய பிறந்தநாள் அல்லவா..??

இதைக்கூட மறந்து போயிட்டேனே அது சரி பிறந்த நாளை ஞாபகம் வச்சு கொண்டாடுகிற அளவுக்கு நாம் என்ன பெரிய புண்ணியாத்மாவா?? 

ஞாபகம் வச்சு கொண்டாடுகிற அளவுக்கு என் மீது அன்பு கொண்ட உறவுகள் தான் என்னை சுற்றி இருக்கா என்ன ??

அது தான் யாரும் இல்லையே.. அப்பாவும் என் மீது அத்தனை அன்பு கிடையாது , அம்மா இல்லை.. அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று கூட பிறந்தவர்கள் யாரும் கிடையாது.. சரி திருமணமாகிவிட்டது கணவனாவது நம்மீது அன்பாக இருக்கிறானா என்று பார்த்தால் அந்த கொடுப்பினையும் நமக்கு கிடையாது..அப்புறம் எங்க?? என வருந்தினாள் மனதிற்குள் 

கணவன் தன்னை திருமணம் செய்து கொண்டது ஒரு டீலர்ஷிப் வைத்து தானே??

அதில் காமம் தானே இருந்தது, காதல் எங்கே இருந்தது??

இந்த லட்சணத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு தேவையா என்று நினைத்த வண்ணம் நொந்து கொண்டாள் அவள்..

இதழ் வளைத்து ஏளனமாக சிரித்துக் கொண்டாள் தன் நிலையை எண்ணி..

அவளுடைய பிறந்தநாளை இதுவரை அவள் கொண்டாடியதே கிடையாது வருஷத்திற்கு ஒரு முறை வந்து போகும் அந்த நாளில் கோயிலுக்கு சென்று அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வருவாள், அதுவும் கடவுளின் பெயரில்..!!

கோயிலுக்கு சென்று பத்து நிமிடம் அமர்ந்து விட்டு வரும் பொழுது கிடைக்கும் அந்த நிம்மதி தான் அவளுக்கு கிடைக்கும் பிறந்தநாள் பரிசாக இருந்தது இத்தனை காலமாக..

அவளுடைய பிறந்த நாளை ஞாபகம் வைத்து வாழ்த்து சொல்லும் அளவிற்கு யாரும் அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் கிடையாது அருண் கூட அவ்வப்பொழுது மறந்து விடுவான்.. அவளுடைய தோழிகளுக்கு கூட இவளுடைய பிறந்தநாள் நினைவில் இருப்பதில்லை..

அன்பு கொண்ட ஒரு சில உள்ளங்களுக்கு கூட தன்னுடைய பிறந்தநாள் ஞாபகத்தில் இல்லாத போது..

சிறிது நாட்களே கடந்திருந்த நிலையில் தீரனுக்கு மட்டும் தன்னுடைய பிறந்த நாள் ஞாபகத்தில் இருக்கும் என்று என்ன நிச்சயம்??  என நினைத்துக் கொண்டாள்..

அதுவும் உண்மைதான்..

 அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது ??அவளின் பிறந்தநாள் எப்போது?? அவளுடைய அத்தியாவசிய தேவைகள் என்ன?? அவள் மனதில் என்ன ஆசைகள் இருக்கிறது ?? என்பதை எல்லாம் கேட்டு பொறுமையாக தெரிந்து கொண்டு காதல் புரிந்தானா தீரன்??

இல்லையே…..…

சந்தையில் மாட்டை விலைக்கு வாங்கி வந்து அதை எப்படி கூறு போடலாம் ??எந்த பக்கம் கூறு போட்டால் சுவையாக இருக்கும்?? என்பது போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவளை சுவைப்பதில் தானே அவனுடைய ஆர்வம் இருந்தது..

 இந்த லட்சணத்தில் அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது?? என்று கேட்டால் அவனுக்கு என்ன தெரியும் பாவம்..

நிச்சயமாக தன்னுடைய பிறந்தநாள் அவனுக்கு தெரியாது தெரிவதற்கும் வாய்ப்பு கிடையாது.. வழக்கம்போலவே இந்த வருஷமும் கோயிலுக்கு சென்று விட்டு வர வேண்டியது தான் நாளை என்று எண்ணிக் கொண்டு கட்டிலில் சரிந்தவள் அப்படியே உறங்க தொடங்கினாள்..

சில மணி நேரம் கழித்து…

சட்டென்று கண்விழித்து பார்த்த பொழுது சுவர் கடிகாரத்தில் மணி 10 என்று காட்டியது..

என்ன இது 10 மணி வரை தூங்கி விட்டோமா?? சாப்பிட கூட இல்லையே?? அத்தை வந்து எழுப்பி இருப்பாங்களே இந்நேரம் ஆனால் அத்தையும் வரவில்லையே என்ன ஆச்சு ??, என்று யோசித்தவள் படி இறங்கி மெதுவாக சென்று அடுப்படியில் எட்டிப் பார்க்க..

 அங்கே யாரும் இல்லை… இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அவளுடைய மாமியார் உறங்க சென்று விட்டார். 

டைனிங் டேபிள் மீது அவளுக்கு தேவையான உணவுகள் அனைத்தும் ஹாட் பாக்சில் போட்டு அடைக்கப்பட்டிருந்தது..

அதிலிருந்து கொஞ்சமாக எடுத்து போட்டு தன் பசியாற்றிக் கொண்டவள் மீண்டும் மாடி ஏறி தங்கள் அறைக்கு சென்றாள்.

கண்டிப்பாக இவன் இன்றும் வீட்டுக்கு வர வாய்ப்பில்லை நடு இரவில் தான் வரப்போகிறான் அப்புறம் எதற்காக கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க வேண்டும்?? என்று எண்ணிக்கொண்டு  படுத்துறங்க தொடங்கினாள் மித்ரா..!!

– தொடரும்..

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page