“அதிகாலை 3 .30 மணி இருக்கும்…
அப்போ தான் அபி லேசா கண் அசந்தா”…
கௌசல்யா : “அபி..அபி”..
அபி : “என்ன மா”..
கௌசல்யா : “டைம் ஆச்சு மா.. எழுந்து குளிச்சுட்டு வா.. அப்போ தான் மேக்கப் பண்ண சரியா இருக்கும்”.
அபி : “போ.. மா தூக்கமா வருது.. இப்போ தான் மா தூக்கம் வருது.. இவ்வளவு நேரம் தூங்கவே இல்ல”.
கௌசல்யா : “என் செல்லம் தானே..எழுந்திரு மா…லேட் ஆகிடும்”..
அபி : “அம்மா..ப்ளீஸ் இன்னும் 5 நிமிடம் ன்னு கௌசல்யா மடியில படுக்குறா”…
கௌசல்யா : “இன்னும் சின்ன பொண்ணாவே இருந்த எப்படி மா”..
அபி : “நான் சின்ன பொண்ணு தானே மா”..
கௌசல்யா : “சின்ன பொண்ணு தா..ஆனா இப்போ அப்படி இல்ல..உனக்கு கல்யாணம் ஆக போது.. அப்பறம் உனக்குன்னு குழந்தை வரும்”…
அபி :” ( எங்க.. அதுதான் சொல்றதுக்குற்ள உன் மாப்பிள்ளை லூசு மாதிரி என்னை பேசவே விடலையே ன்னு நினைச்சுக்குறா )”.
கௌசல்யா : “எழுந்துரு மா..ன்னு அவளை பாத்ரூம் க்கு அனுப்பிட்டு வெளியே வந்து ஒவ்வொருத்தரையும் எழுப்பி விடுறாங்க”..
“அபி குளிச்சுட்டு வந்ததும் அவளுக்கு மேக்கப் போட்டு விடுறாங்க”.
“ஆர்த்தி வந்து அர்ஜூனை எழுப்பி விடுறா”..
“எல்லாரும் ரெடி ஆகுறாங்க”..
“மேளம் , நாதஸ்வரம் வாசிக்குறாங்க”..
“ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்குறாரு”..
“முதல்ல அர்ஜூன் மேடைக்கு வரான்”.
“அவனோட தாய் மாமா வந்து அவனுக்கு மாலை போட்டு விடுறாரு”.
“முதல்ல அவன் மட்டும் தனியா கொஞ்ச நேரம் மந்திரம் சொல்றான்”.
“அப்பறம் அபியைக் கூட்டிட்டு வராங்க”…
“அர்ஜூன் அவனையும் மறந்து அபி வரதையே பாத்துட்டு இருக்கான்”..
“அபி குனிஞ்ச தலை நிமிரமா வந்து அர்ஜூன் பக்கத்துல உட்காருறா”..
“அர்ஜூன் பாத்துட்டே இருக்கான்”.
“அப்போ தான் அர்ஜூன் ப்ரண்டு க்ரிஷ் வரான்”..
க்ரிஷ் : “டேய்.. போதும் டா பாத்தது.. எல்லாரும் இருக்காங்க”.
அர்ஜூன் : “டேய்..இப்ப தான் வர டைம்மா..உன்ன எப்போ வரச் சொன்னேன்..இப்ப வந்து இருக்க”..
க்ரிஷ் :” கத்ததா டா..ஆப்பிஸ் ல லீவ் இல்ல டா..நீ பாட்டுக்கு வந்துட்டா.. எல்லா வேலையும் நான் முடிச்சுட்டு தானே வர முடியும்”.
அர்ஜூன் :” இரு உன்ன வந்து பேசிக்குறேன்”.
“அபி பாக்குறா”..
அர்ஜூன் :” அபி..இது என் க்ளோஸ் பிரென்ட்.. க்ரிஷ்”.
க்ரிஷ் :” ஹாய் மா”..
அபி : “ஹாய் அண்ணா”..
க்ரிஷ் : “அண்ணா வா ?? ரொம்ப சந்தோஷமா இருக்கு மா”..
அபி : ம்ம்..
ஐயர் : “மாப்பிள்ளை கையைக் நீட்டுங்க”..
“அவன் கையில காப்பு காட்டி விடுறாரு..அதே மாதிரி அபிக்கும் காட்டி விடுறாரு”..
“மறுபடியும் மந்திரம் சொல்றாரு”..
“அர்ஜூன் அபி காதுக்கிட்ட போய்.. ரொம்ப அழகா இருக்க”.
“அபி ஜஸ்ட் அப்படியே பேசமா ஒரு லூக் மட்டும் விடுறா”..
அர்ஜூன் : “என்ன டி ஒரு வார்த்தை கூட பேச மாட்டிக்குற “??
அபி :” கொஞ்சம் பயமா இருக்கு”.
அர்ஜூன் : “பயமா ?? எதுக்கு” ??
அபி : “இல்ல இப்போ தான் முதல் தடவை யா இப்படி மேடையில உட்காருறேன்..அதா.. கல்யாணம் ஆனா அப்பறம் நான் இப்போ இருக்க மாதிரியே இருக்க முடியாது இல்ல”..
அர்ஜூன் : 🙄🙄
அபி : “ஏன் இப்படி பாக்குறீங்க”..
அர்ஜூன் : “இல்ல எல்லாரும் 7 , 8 தடவை ட்ரயல் பாத்துட்டு வர மாதிரி பேசுற..நீ எப்பவும் நீயாவே இருக்கலாம்.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்”.
அபி : “தேங்க்ஸ்..
ஐயர் : “இந்தாங்க..இதை கொடுங்கன்னு அர்ச்சதையை தாராரு”..
“அசோக் எல்லாருக்கும் தரா”..
“ஆர்த்தி மாங்கல்யம் எடுத்துக் கிட்டு போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வரா”..
“தட்டை மறுபடியும் ஐயர் கிட்ட தரா..ஐயர் மந்திரம் சொல்லிக்கிட்டே தாலியை எடுத்துக் கும்பிடுறாரு”..
“இங்க அர்ஜூனுக்கும் அபிக்கும் ஹார்ட் பீட் அதிகம் ஆகுது”.
“அபி அப்பா அம்மா கண்ணுல சந்தோஷம் ஒரு பக்கம்..நம்ம பொண்ணு இனி அடுத்த வீட்டுக்கு சொந்தம்ன்னு நினைக்கும் போது ஒரு மாதிரி கஷ்டம் ரெண்டுமே அவங்க முகத்துல தெரியுது.”.
“அர்ஜூன் தாலியை அவன் கையில வாங்கிட்டு அபியை பாக்குறான்”..
நளினி : கட்டு டா..
அர்ஜூன் அபி முகத்தை பாக்குறான்.
அபி யும் பாக்குறா..
அர்ஜூன் : கட்டட்டா..ன்னு அவளுக்கு மட்டும் கேட்குற மாதிரி கேட்குறான்.
அபி : ம்ம்..
அர்ஜூன் : அதுக்கு முன்னாடி ஏதாவது..
அர்ஜூன் பாட்டி : என்ன பா பண்ற..
அபி : ப்ளீஸ் கட்டு டா..
அர்ஜூன் : ம்ம் ன்னு கட்ட போறான்..
அபி : ஐ லவ் யூ….
அர்ஜூன் : ஐ லவ் யூ ட்டூ..ன்னு சிரிச்சுக்கிட்டே தாலியை கட்டுறான்.
மூன்றாவது முடிச்சு போடும் போது ஆர்த்தி போடா கையைப் பிடிக்க..
அர்ஜூன் : நானே போடுறேன்..
நளினி : ஆர்த்தி தான் டா போடணும்..நீ ரெண்டு போட்டுட்ட இல்ல..
அர்ஜூன் : ம்ம்..
அபி கண்ணுல கலங்கி இருக்கு..
அர்ஜூன் : அழறீயா..
அபி : இல்லன்னு அவ அப்பா அம்மா முகத்தை பாக்குறா..
அவங்க கண்ணுலா கலங்கி சிவந்து இருந்தது..
உடனே இவ தன்னை கன்ட்ரோல் பண்ணிட்டு அவங்களை பாத்து சிரிக்குறா..
அவங்களும் சிரிக்குறாங்க..
சம்மந்தி ரெண்டு பேரும் ஒருத்தாருக்கு ஒருத்தர் கை கொடுத்துக்குறாங்க.
லஷ்மி : ஹே..மை பெஸ்ட் விஸ் டி..
அபி : தேங்க்ஸ்..
லஷ்மி : ஒரு செல்ஃபி டி..
அபி : ம்ம்..
அபி அர்ஜூன் லஷ்மி சேர்ந்து ஒரு செல்ஃபி..
அப்பறம் இவங்களை மட்டுமே தனியா நிறைய போட்டோஸ் எடுக்குறா..
அப்பறம் இவங்க குடும்பத்தோட, சொந்தக்காரங்க கூட போட்டோஸ் எடுக்குறாங்க..
“அப்பறம் சாப்பிட போறாங்க”..
“அப்போ அர்ஜூன் அபி பக்கத்து பக்கத்துல உட்காருறாங்க”..
“இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விடுறாங்க”..
“அதை ஃபோட்டோ எடுக்குறாங்க”..
“அப்பறம் அங்க இருந்து அர்ஜூன் வீட்டுக்கு எல்லாரும் போறாங்க..அங்க அபி சாமி முன்னாடி விளக்கு ஏத்துறா…
சாமி கும்பிட்டுட்டு பாலும் பழமும் தராங்க”..
ஆர்த்தி : “இந்தா டா..இத சாப்பிட்டு அபிக்கு கூடு”.
அர்ஜூன் : “இதே தான் தரணுமா..அதா நிறைய பழம் இருக்குல..ஆளுக்கு ஒன்னு ஒன்னு முழுசாவே தரலாம் இல்ல”..
எல்லாரும் : 😲😲
ரவி : “டேய்..இது சடங்கு டா”..
அர்ஜூன் : “சாரி மாமா”..
அபி : 🤨🤨🤨
அர்ஜூன் : ( போச்சு…ட்யூப் லைட் ன்னு திட்டப் போறா )
“அர்ஜூன் பாதி சாப்பிட்டுட்டு அபிக்கு தரான்”..
“அவளும் வாங்கி சாப்பிடுறா.. அப்போ ஏன்னு தெரியல அர்ஜூனுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு”..
“அப்பறம் பால் குடிக்குறாங்க”..
பாட்டி : “சரி.. இப்போ நீங்க கூட்டிட்டு போங்க மா.. நாங்க அப்பறம் யாராவது வந்து கூட்டிட்டு வரோம்”..
கௌசல்யா : “சரிங்க மா..ன்னு அபி அர்ஜூன் அசோக், க்ரிஷ்,ரவி ஆர்த்தியை கூட்டிட்டு போறாங்க”..
“அங்க எல்லாரும் அபி வீட்டை சுத்தி பாத்துட்டு இருக்காங்க”.
கௌசல்யா : “அபி …போ போய் நீயும் மாப்பிள்ளையும் குளிங்க.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அவங்களா வந்துடுவாங்க”..
அபி : “இன்னும் எங்க மா”..
கௌசல்யா : ‘மாப்பிள்ளை வீட்டுக்கு டி”..
அபி : “இப்போ தானே மா அங்க இருந்து வந்தோம்.. டயர்டா இருக்கு மா..கழுத்து கால்லா வலிக்குது மா..ன்னு பேட்டுல விழுறா”..
கௌசல்யா : “அப்படிதான் மா இருக்கும்..மாலை வைட்டா இருக்கும்ல..அதோட நின்னுட்டு இருந்தாதல அப்படிதான் இருக்கும்”.
அபி :” கொஞ்ச நேரம் மட்டும் தூங்கறேன் மான்னு படுக்குறா”…
கௌசல்யா : “சரி ஒரு 1/2 மணி நேரம் தூங்குன்னு.. வெளியே போறா”..
“அர்ஜூனை மட்டும் தனியா கூப்பிடுறா”..
அர்ஜூன் : “சொல்லுங்க அத்தை”.
கௌசல்யா : “அது மாப்பிள்ளை.. அபிக்கு கொஞ்சம் தினமும் அவ மாத்திரை சாப்பிடணும்.. கொஞ்சம் பாத்துக்குங்க”..
அர்ஜூன் : “சரிங்க அத்தை”.
கௌசல்யா : “அப்பறம் அவ கொஞ்சம் வாய் தா..ஆனா ரொம்ப நல்லவ. மனசுல எதுவும் வைச்சுக்க மாட்டா..அவ. ஏதாவது தப்பு பண்ணா சொல்லி புரிய வைங்க..அவ கொஞ்சம் கோவக்காரி.. நீங்க கொஞ்சம்”..
அர்ஜூன் : ‘நீங்க கவலைப்படாதீங்க .. நான் பாத்துக்குறேன்”.
கௌசல்யா : ‘அப்பறம் அவ படிக்க வேண்டா பா..அவ உங்க கூடவே இருக்கட்டும்”..
அர்ஜூன் : “ஏன் அத்தை..இது அவ ஏத்துக்குவாளா” ??
கௌசல்யா : “அது.. நான் அவகிட்ட சொல்லிடுறேன் பா.. நீங்க அவகூட சந்தோஷமா இருந்தாலே போதும்”.
அர்ஜூன் : “சரி அத்தை’..
கௌசல்யா : “அப்போ நான் வேலையை பாக்குறேன் பா..அவ தூங்கறா.. நீங்க குளிச்சுட்டு அவளையும் எழுப்பி விடுங்க”..
அர்ஜூன் : சரிங்க அத்தைன்னு போறான்.
தொடரும்..
