அத்தியாயம்- 32

பாகம் – 32

“ரொம்ப நன்றி அண்ணா..”ஏதோ எண்ணியவன் சிறிது தயங்கி விட்ட பிறகு பேசுகிறான்..

“அண்ணா உங்ககிட்ட மனம் விட்டு நான் நிறைய பேசணும் ..நீங்க தான் எனக்கு நிறைய வழி காட்டணும்.. உங்களைத் தான் என்னால் நம்ப முடியும் ..எனக்கு உங்களை விட வேற யாருமே அண்ணன் என்று கிடையாது.. இதுவரை என் ரகசியங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொண்டதே கிடையாது .என் நவீன் நண்பனை தவிர ..ஆனால் இப்பொழுது என்னமோ உங்ககிட்ட எல்லாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.. ”

“நீ ஏன்டா இவ்வளவு தயங்கி பேசுகிற .. நான் உன்னுடைய அண்ணன் தானே.. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லு.. உனக்கு கிடைக்காத தீர்வு என்னிடம் இருந்தால் நான் வழி சொல்வேன் தானே .. ”

“கண்டிப்பா அண்ணா ரொம்ப நன்றி அண்ணா..” சொல்லி விட்டு போனை வைக்கிறான்..

அவன் பேசுவது எல்லாம் பின்னே நின்று கேட்டுக் கொண்டிருந்த மித்ரா, 

“என்னங்க பிள்ளை பிறந்த நாளுக்கு அதற்குள்ளே அழைப்பு விட்டுக் கொண்டு இருக்கிங்க.. யாருக்கு இந்த ஸ்பெஷல் அழைப்பு .. ”

“வேற யாருக்குடி நான் சொல்லப் போகிறேன் .. என்னுடைய அண்ணன் ஆதிக்கு தான் ..” 

“ அது தானே பார்த்தேன். எங்க அப்பா அம்மா வீட்டில் தான் சொல்றீங்களோ என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்..”

“ அவங்களுக்கு ஏன்டி ஆறு மாசத்துக்கு முன்னயே சொல்லணும் .. ஆதி அண்ணா வெளிநாட்டுல இருக்காங்க ..அவங்க டிக்கெட் எல்லாம் புக் பண்ண வேண்டாமா.. அதற்கு தான் முன் கூட்டியே சொன்னேன் .. ”

“இல்லங்க நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் .இப்பொழுது எல்லாம் ஏங்க நீங்க உங்க அண்ணன்கிட்ட அதிகமா போன் பேசுறது இல்ல.. ”

” நானாடி பேச மாட்டேன்னு சொல்கிறேன்.. அவர்தான் டைம் ஷெட்யூல் சரியா அமைய மாட்டேங்குதுன்னு போனே பேச மாட்டேங்கறாங்க..” ஆனா  இதுவும் நல்லா தான இருக்கு.. இல்லா விட்டால் அவங்க கிட்ட பேசி உன்னை கவனிக்காமல் விட்டு இருப்பேன். இல்லன்னா நீ இவ்வளவு பெரிய தொப்பையை வைத்துக் கொண்டுடு இருப்பியா .. “அவள் வயிற்றை செல்லமாய் தடவி முத்தம் ஒன்றை கொடுக்கிறான்..

“ரொம்ப கொழுப்பு தான் உங்களுக்கு.. அட ஆமாம் இல்ல நானும் இப்பதான் நீங்க சொன்னதும் கவனிக்கிறேன் ..அந்த சாயந்திரப் பொழுது பூரா அந்த அண்ணன் கிட்ட போன் பேசுறதுலயே நேரம் ஓடிப் போகும்.. அதற்கு மாற்றா என்னை பயன்படுத்திட்டீங்களா ..நான் கூட என் மேல இருக்கிற பிரியத்தால  என்று நினைத்துக் கொண்டேன் போங்க..”கொஞ்சம் கோபமாகத்தான் பேசுகிறாள்..

” உண்மையிலேயே உன் மேல இருக்கிற பிரியத்தால தான்டி இதெல்லாம் நடந்தது. நீ தப்பா நினைச்சுக்காதடி..அதையும் தாண்டி நம்ம சின்ன கரடி இடைஞ்சல் கொடுக்காமல் இருந்ததால் தான் இதெல்லாம் சாத்தியமானது.. “ என்று மகளையும் மனைவியையும் ஒரு கொஞ்சுகிறான் .. ”

” சரி சரி போங்க ..எனக்கு கொஞ்ச நேரம் படுத்தா நல்லா இருக்கும்னு தோணுது.. இடுப்பு ரொம்ப வலிக்குது.. அதனால உங்க பையனை கொஞ்சம் ஹோம் ஒர்க் எழுத வைத்து விடுகிறீர்களா…”என்றதும் எரிச்சலாய் கொஞ்சம் முகம் மாறியவன் அவளிடம் காட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்க்கவும் கொஞ்சம் பாவமும் படுகிறான்..

” சரிடி  நீ போய் ஓய்வு எடு .நான் எழுத வைத்து விடுகிறேன் .. “என்று அனுப்பி விடுகிறான் ..அவனாகவே இதை நினைத்துக் கொள்கிறான் .. ‘இப்படியே இருந்தால் நானும் கொஞ்சம் மாறி விடுவேனோ என்னமோ .. எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும் என்று சொல்வார்களே அது இதுதானோ.. எனக்குமே ஆரம்பத்தில் இந்த கோபம் இப்பொழுது குறைந்து தான் இருக்கிறது ..ஆனால் அது என்றைக்கு விஸ்வரூபம் எடுக்க போகிறதோ தெரியவில்லையே ..,என்று தனக்குள் புலம்பித் தீர்க்கிறான்..

அதற்குள் அமிர்த னே நோட்டையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு, “அப்பா அம்மா உங்ககிட்ட எழுத சொன்னாங்க.. சொல்லித் தரீங்களா.. என்று உரிமையுடை அவன் மடியில் உட்கார்ந்து கொள்கிறான் ..

“ஏன்டா உன் தாத்தா பாட்டி கிட்ட போய் படிச்சுக்கிட்டா என்ன ..ஆறு வயசு ஆகப் போகுது ..இன்னும் மடியில வந்து உட்கார்ந்து கொள்கிறே..” என்று கண்டிக்கிறான்..

“போப்பா தாத்தா பாட்டிக்கிட்ட படிச்சா ஹோம் ஒர்க் எழுதினா எங்க மிஸ் என்னை அடிக்கிறாங்க ..ரெண்டு பேருமே கண்ணு தெரியாம தப்பு தப்பா சொல்லி தராங்கப்பா .அதனாலதான் அம்மாகிட்ட போய் எழுதுவேன். அம்மாவுக்கு உடம்பு முடியல இல்ல பாவம் தானே ..”இதை சொன்னதுமே அரவிந்துக்கு மனம் இளகுகிறது …

“உன் அம்மாவை நீ பத்திரமா பார்த்துக் கொள்ளடா .பரவாயில்லையேஉனக்கு இந்த வயதிலேயே பாவம் எல்லாம் படத் தெரிகிறதே..” ஆச்சர்யப் பட்டவன் அடுத்து பாடம் சொல்லிக் கொடுத்து எழுதவும் வைக்கிறான் …

இப்பொழுது எல்லாம் அமிர்தன் ஓரளவு நன்றாக படிக்க தொடங்கி விட்டான்.. அதனால் ரொம்ப சிரமம் படாமல் எழுத வைத்து விட்டு அடுத்து அரவிந்த் அவனுடைய அலுவலக வேலைகளை கவனிக்கிறான். நாட்கள் மிக விரைவாக ஓடுகின்றது. ஆறாவது பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது ..

நவீனிடம் பேசும் பொழுது கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறான்..பிள்ளையின் பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடணும் ..எனக்கு ஏனோ பயமா இருக்குடா நவீன்.. அவளுக்கு உடம்பு முடியாமல் போய் விடுமோ என்று அபத்தமாய் நினைக்கத் தோன்றுகிறது.. “

“நீ ஓவரா இப்படி டென்ஷனா ஆகாத .. இப்படியே இருந்தா பிறந்த நாளும் அதுவுமா கண்டிப்பா தங்கச்சிக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.. நீ வேற எது வேண்டுமானாலும் நினைத்துக் கொள்.. தங்கச்சியினுடைய உடம்பை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்..இல்லா விட்டால் காலம் பூரா கஷ்டப்பட போவது நீதான்..எந்தப் பிரச்சனையை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் பிரசவம் கழித்து வைத்துக் கொள் ..முதலில் நல்ல படியா பிள்ளை பிறக்கட்டும் ..”என்று நவீன் அவனை மிரட்டுகிறான்.. அவனுக்கு ஒரு கடிவாளமாய் தான் இருக்கிறான் நவீன்..

சரி என அவனும் அரை மனதாய் ஒத்துக் கொள்கிறான்.. இன்னும் நான்கு நாட்கள், மூன்று நாட்கள் ,இரண்டு நாட்கள் என்று ஒரே பதட்டமாய் நாட்கள் ஓடுகிறது. அவனுடைய பதட்டம் தெரியாமல் காலம் அது பாட்டுக்கு அது வேலையை செவ்வனே செய்கிறது.. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆதி அண்ணாவின் குடும்பம் வந்து விடப் போகிறது .. , எண்ணவே அவனுக்கு சந்தோஷமாக இருக்கிறது .அதே சமயம் ஏதோ ஒரு பயம் வேறு. ஒருவேளை அவரை நீண்ட காலங்களாக பார்க்காததன் விளைவோ என்னவோ …

ஆதித்யா பிறந்த நாளுக்கு முதல் நாள் வருவதாக சொன்னவர் டிக்கெட் முன்கூட்டியே கிடைக்கவும் அதற்கு முதல் நாளே வந்து விடுகிறார் ..அவருடைய பிளான் பிறந்தநாள் முடித்ததுமே தன்  மாமியார் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் இருந்து விட்டு பிறகு ஊருக்கு கிளம்புவதாகத்தான் ப்ளான்..

அதற்கும் காரணம் உண்டு .. ஆதித்யாவிற்கு அப்பா அம்மா அண்ணன், அக்கா, தங்கை , என்று யாருமே .. சிறுவயதிலேயே பெற்றவர்கள் ஒருவர் பின் வருவாய் இறந்து போகவும் சொந்தக்காரர்கள் பார்த்துக் கொள்ள முடியாமல் கிறிஸ்தவ மடத்தில் சேர்த்து விட்டு தங்கள் பொறுப்பும் முடிந்ததாய் கிளம்பி விடுகிறார்கள்.  அங்கேயே அவர்களின் பிள்ளையாய் தங்கி  பொறுப்பாய் படித்ததன் காரணமாய் நல்ல வேலை கிடைக்கிறது.. 

அவரோடு பணி புரிந்த பத்மாவைக் காதலிக்கவும் பத்மா பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களே  திருமணம் செய்து வைக்கிறார்கள்.. முதலில் மகள் பிறக்கவும் தன் மகளை எட்டிப்பார்காத பத்மாவின் பெற்றோர் அடுத்து பேரன் பிறக்கவும்,அதற்கேற்ப காலமும் கனியவும் உறவாடத் தொடங்கினர்.. ஆனாலும் மகளையும் மருமகன் பேரக்குழந்தைகளையும் நேரில் பார்க்க முடியாத ஏக்கம் வேறு.. மனைவியில் விருப்பத்திற்காக தான் மாமியார் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருக்க சம்மதிக்கிறார் ஆதித்யா..

அவருக்கு தான் அநாதை என்பதாலேயே அரவிந்தனின் நட்பு பிரிக்க முடியாத நட்பாகி விடுகிறது ..நட்பு என்பதை விட ரத்த சம்பந்தம் உடைய உறவாக தனது தம்பி என்றே ஏற்றுக் கொள்கிறார்..

பிறந்த நாளுக்கும் முதல் நாள் வருவதாக சொன்னதும் தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன் இரண்டு நாட்கள் என்றதும் யோசிக்கிறான்..’ நம் வீடு சௌகரியப்படாது.. அம்மா அப்பா மித்ரா பசங்க என்று அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பார்கள் என்று உயர்தர ஹோட்டலில் இரண்டு அறைகளாக ஏற்பாடு  செய்து விடுகிறான்..

இரண்டு அறைகள் என்பதுமே நவீனின் ஐடியாதான்.. அவன் எது சொன்னாலும் கேட்பவன் இதையும் தட்டாமல் செய்து முடிக்கிறான்.. அவனது டியூப் லைட் மூளைக்குமே ஏன் இரண்டு அறைகள் என யோசிக்கத் தெரியவில்லை.. காரணம் கேட்டதற்கு நவீன்  பாட்டிலை அடியில் தட்டி கட கடவென குடிப்பதைப் போல சைகையால் செய்ததைக் கண்டு புரிந்து கொண்டதுமே அவனை செல்லமாய் கடிந்து கொள்கிறான்..

“டேய்  வேணாம்டா பிறந்தநாளும் அதுவுமா ஏடாகூடமாய் ஏதாவது செய்தால் என் பொண்டாட்டி கண்டு பிடித்து விடுவாள்..  பிறகு என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவாள்.. ”

“டேய் இரண்டாவது குழந்தையும் பிறக்கப் போகிறது .. இன்னமும் பெண்டாட்டிக்கு பயப்படுகிறாயே. சரக்கு அடிப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.. நீ நான் உன்னுடைய ஆதித்யா மூன்று பேரும் தனியாய் ஒரு அறையில் ” என்று கண் அடிக்கிறான்..

“எனக்கும் நீ சொல்வதைக் கேட்கவே ஆசையாக தான் இருக்கிறது.. சரி அப்படி என்றால் பிறந்தநாள் முடிந்ததும் மறுநாள் வைத்துக் கொள்வோமா.. ஆனா அவங்க மாமியார் வீட்டுக்கு போகிறார்களே..”

” ஒரு நாள் மாமியார் வீட்டை தள்ளி போட்டால் ஒன்றும் குறைந்து போகாது.. நீ தான் சொந்த தம்பியாயிற்றே.. நீ சொன்னால் உன் அண்ணன் கேட்க மாட்டாரா என்ன.. உன் ஃபோனைக் கொடு ..நானே சொல்லிக் கொள்கிறேன்..”அரவிந்த் ஏனோ தயங்குகிறான்..

” ஏன்டா உன் அண்ணனை எனக்கு அறிமுகம் செய்ய மாட்டாயா . எத்தனை வருடங்கள் ஆகிறது ஒரு வார்த்தை ஒரு போனாவது பேச விட்டிருக்கிறாயா. மோசமானவன் டா நீ .. ” திட்டவும் சரி நீயே பேசிக் கொள் என்று நவீனை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் நவீனிடம் ஃபோனை கொடுக்கிறான்.. ஆதியிடம் நவீன்ன் நன்றாகத்தான் பேசுகிறான்.. விஷயத்தை சொல்லவும் அவரும் சிரிக்கிறார் ..

“பிறந்த நாளுக்கு இந்த ட்ரீட் கூட இல்லாமலா.. ஒரு நாள் தள்ளி போட்டுக் கொள்ளலாம்.. அப்படி என்றால் என் குடும்பத்தை உங்கள் வீட்டில் விட்டு விட்டு தான் நாம் இங்கே அறையில் இருக்கலாம் ..என் மனைவியும் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுவாள்.. “சொல்லி முடித்ததும் மூவரும் சிரிக்கிறார்கள்..

ரணகளத்திலும் ஒரு குதூகலமா ..

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page