ஆடி வரும் வண்ண மயிலே-11

அத்தியாயம்:11 

குருமூர்த்தி மயூரிகா விஷயத்தில் ராகவன் உதவி தேவையில்லை…என்று கோபமாக சொன்னார்.  

மீனா “ மன்னித்து விடுங்க நான் ஏதோ ஒரு ஆசையில் பேசி விட்டேன்…தியாவுக்கு தான் அப்பா உயிரோடு இல்லை மயூவுக்காவது… அப்பா பாதுகாப்பு, அன்பு கிடைக்க வேணும் என்று தான் இப்படி பேசினோன்.  

நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான்…இருந்தாலும் ராகவன் நான் வளர்த்த பையன் அவன் அப்பா, அம்மா போன பிறகு… நான் தானே அவனை வளர்த்தேன்.  

பெரியம்மா, பெரியம்மா என்று ரொம்ப பாசமாக இருப்பான்…புவனாவை கூட அவன் சொந்த தங்கச்சியாக தான் பார்த்து கொண்டான்… 

ஆனால் போதாத காலம் அரசியல் ஆசை… அவனை பிடித்து கொண்டதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்  

சியாமளா தங்கமான பெண்ணு அவளை ஒரு குறை கூட சொல்ல முடியாது…காதலித்து தான் அவளை கல்யாணம் பண்ணினான்… 

இடையில் ஏன் இப்படி மாறினான்… என்று தான் எனக்கு சரியாக புரியவே இல்லை.  

நீங்க கொஞ்சம் அவன் கிட்ட இன்னும் கண்டிப்பு காட்டி இருக்க..அவன் பாண்டி கூட சேர்ந்து இருக்க மாட்டான் விட்டு பிடிக்க நினைத்தீங்க…கடைசியில் மொத்தமாக விட்டு கொடுக்க வேண்டிய நிலை நமக்கு வந்து விட்டது.  

இதில் அநியாயமாக பறி போனது சியாமளாவின் உயிர் தான்…அது தான் விலகி இருக்கும் அவனை மயூவின் கல்யாண விஷயத்தை… வைத்து சேர்த்து கொள்ள நினைத்தேன்.  

நீங்க ஆம்பள உங்களுக்கு அவன் மேலே உள்ள கோபம் இன்னும் குறையவில்லை…நான் அப்படி இருக்க முடியுமா..?  

அம்மா நான் அதை விட ஒரு பெண்ணு.. என்ன தான் இருந்தாலும் கூட அவனை தண்ணீ தெளித்து தலை முழ்க முடியுமா..? 

அவனுக்கு ஊர் கொடுக்கும் சாபம் உங்களுக்கும் தெரியும்…அதில் இருந்து மீட்க தான் நான் வழி தேடி கொண்டு இருக்கிறேன்…அது மட்டுமல்ல மயூவுக்கு அப்பா உறவு வேணுங்க.  

கடைசி வரை புகுந்த வீட்டு உறவாக நம்ம அவளை பார்த்து கொள்வோம் தான்…ஏன் நீங்களும் சக்ரா அண்ணாவும் அவளுக்கு வாரி கொட்டி சீர் செய்வீங்க தான்.  

என்ன இருந்தாலும் கூட அப்பா உறவு வேணும் இல்லையா..? அது போல நமக்கு கொள்ளி வைக்க அவன் வேணாமா..? புவனாவுக்கு அண்ணன் உறவும் வேணுங்க… 

தர்ஷன், தியாவுக்கு அவன் தானே தாய் மாமன்… அது தான் இப்படி பேசினேன்…” என்றார்.  

குரு மூர்த்தி “ தேவையில்லை மீனா எனக்கும் அவன் புள்ள தான்…ஆனால் தர்மத்தின் எல்லையை அவன் கடந்து விட்டான்…ஊர் உலகம் இவனுக்கு சாபம் கொடுக்காது என்ன செய்யும்.  

இவனுக்கு தெரிந்து இல்ல தெரியாமல் தான்… பாண்டி இந்த வேலைகளை செய்கிறானோ தெரியாது..?  

பல இல்லீகல் வேலைகள் இவன் பெயர் வைத்து நடப்பதாக…எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கு.  

என் பையன் என்பதால் தான் என் நேரடி பார்வைக்கு இதை கொண்டு வந்தாங்க…இல்ல நேரடியாக நடவடிக்கை  எடுத்து இருப்பாங்க…அது தான் பவனை இது பற்றி விசாரிக்க சொல்லி இருக்கிறேன்.  

இது எல்லாம் நல்ல குடும்பத்து பையன் செய்யும் வேலையா சொல்லு…? மயூவுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னால் இவன் பார்க்க மாட்டான்…அந்த பாண்டியை தான் பார்க்க சொல்வான்.  

அவன் கொண்டு வரும் மாப்பிள்ளை எப்படி இருப்பான்…கஞ்சா, மால் அடிப்பவன், இல்ல பொறுக்கி, புறம்போக்கு….இப்படிப்பட்ட உத்தமமானாக தான் அவன் பார்க்கும் மாப்பிள்ளை இருக்கும்.  

இப்படிப்பட்ட ஒருவனா நம்ம பேத்திக்கு மாப்பிள்ளையாக வர வேணும் என்று…நீ விரும்புகிறாயா மீனா..? இல்ல தானே அதனால் உன் மகன் பாசத்தை… மூட்டை கட்டி பரண் மேலே ஏற்றி விட்டு…மற்ற வேலைகளை பாரு.  

அவனை எப்படி திருந்த வேணும் என்று எனக்கு தெரியும்….அடியாத மாடு படியாது அவனை நான் பார்த்து கொள்கிறேன்…நம்ம பேத்தி வந்திருக்கிறாள் முதலில் அவளை கவனி…” என்றார். 

அங்கே இருந்த அனைவருக்குமே அவர் சொல்வது நியாயமாக இருந்தது…அதனால் இது பற்றி மேலே யாருமே பேச விரும்பவில்லை…மயூரி வந்து இருப்பதால் தர்ஷன், தியா அவளை விட்டு நகரவே இல்லை.  

அவளும் சிறு குழந்தையாக மாறி அவர்கள் கூட விளையாடி கொண்டு இருந்தாள்…குரு மூர்த்தி கட்சி விஷயமாக ஏதோ ஒரு கால் வர…தன் மொபைலை எடுத்து கொண்டு ஆபிஸ் ரூம்க்கு பேச போய் விட்டார்.  

மீனாவும், கல்யாணியும் சமையலறைக்கு போய் விட்டார்கள்…ஹாலில் புவனா, மயூரி குழந்தைகள் தான் இருந்தார்கள்…மயூரி புவா அக்கா என அழைத்தாள் புவனா அவளை நிமிர்ந்து பார்த்தவள்.  

“ இங்கே பேச வேணாம் வா மொட்டை மாடிக்கு போகலாம்…அப்பா வந்தால் பிரச்சினையாகி விடும் இப்போ தான்… அண்ணுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்… 

இதில் திரும்ப நீயும் நானும் மாட்ட வேணுமா..? என கேட்டவள் தியாவை தூக்கி கொள்ள…மயூரி தர்ஷன் கையை பற்றி கொண்டு லிப்ட் வழியாக மாடிக்கு போனார்கள்.  

மயூரி வீட்டின் மொட்டை மாடி போல தான் இங்கும் இருந்தது…என்ன ஒன்று அங்கே தெய்வீகம் கொட்டி கிடந்தது…இங்கே அலங்காரம் தான் காணபட்டது.  

தர்ஷன் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து புவனா கொடுக்க…அதை அவன் மயூரி வாங்கி வந்த காரை உருட்டி விளையாடி கொண்டே சாப்பிட்டான்… 

மயூரி தன் மடியில் இருந்த தியாவுக்கு.. சின்னதாக ஒரு துண்டு சாக்லேட்டை ஊட்டி விட… அவள் அதை சப்பு கொட்டி சாப்பிட ஆரம்பித்தாள்.  

புவனா “ சரி இப்போ சொல்லு எதற்காக என்னை அழைத்த…என்ன பவனுக்கு கிப்ட் கொண்டு வந்திருக்கிறாயா..? அதை நான் அவன் கிட்ட கொடுக்க வேணுமா..? 

அதற்காக தான் என்னை அழைத்தாயா…? நல்ல காலம் விஷயத்தை நான் சட்டென புரிந்து கொண்டேன்…அது தான் ஹாலில் ஏதும் பேசாது உன்னை தள்ளி கொண்டு மாடிக்கு வந்தேன்.  

இப்போ தான் அப்பா அண்ணனுக்கு பாராட்டு பத்திரம் படித்தார்…நீ மாட்டி இருக்க உனக்கும் பாராட்டு பத்திரம் படித்து இருப்பார்…என்ன ஒன்று அப்பா கூட சேர்த்து சக்ரா அங்கிளும் படித்து இருப்பார்…” என்றார்.  

மயூரி “ அக்கா அவர் ஒன்றும் உங்க அண்ணன் போல இல்லையே…யாரையும் நம்ப வைத்து கழுத்தை அறுக்கவில்லை…யார் காலையும் இது வரைக்கும் அவர் பிடித்தது கூட இல்லை.  

அப்படி இருக்கும் போது நான் அவரை லவ் பண்ணுவதில் என்ன தப்பு அக்கா இருக்கு…” என்றவள்… 

புவனா கண்ணுக்கு தியா போல தான் தெரிந்தாள்…என்ன பெரிய தியாவாக தெரிந்தாள்.  

தியா மயூரின் துப்பட்டாவை எடுத்து…அதில் உள்ள மணிகள் கூட விளையாடி கொண்டு இருக்க…மகளை ஆசையாக வருடியவள் பார்வை மயூரின் மேலே திரும்பியது.  

புவனா மகள்,மயூரி கன்னத்தை ஓன்றாக வருடியவள்… 

“ மயூ மா நீ எதார்த்தை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை…அது போல பவன் உன் தாத்தா இருவரின் குணமும் இன்னும் உனக்கு புரியாமல் இருப்பது தான்…எனக்கு ஆச்சரியமாக இருக்கு.  

முதலில் சக்ரா அங்கிளை எடுத்து கொள்வோம்…தன் மகள் சாவுக்கு முதல் காரணமாக இருந்தது எது..? காதல்.  

அதுவும் சியாமளா தேர்ந்தெடுத்த நபர் தவறாகி போனதை…அவரால் இன்னும் ஏற்று கொள்ள முடியவில்லை.  

இத்தனைக்கும் ராகவன் அண்ணன் படித்தவர், பார்க்க அழகாக இருப்பார்… அதை விட நல்ல குடும்பத்து பையன் சி.எம்யின் தம்பி மகன்…அவருக்கு பிறகு அண்ணனுக்கு தான் எல்லாம் வரும்.  

அப்படிப்பட்ட ஒருவரை சக்ரா அங்கிள் சட்டென ஏற்று கொள்ளவில்லை…அவர் அரசியலை வெறுத்தார் தன் ஒற்றை ஆசை மகள் நிம்மதியாக வாழ வேணும்…என்று நினைத்தார் அது சாதாரணமாக ஒரு தந்தையின் எண்ணம்.  

ஏன் என் அப்பா கூட அரசியல் துறையில் இருப்பவர்களின் குடும்பங்களில்…உள்ளவர்களை எனக்கு வரனாக… பார்க்க விரும்பவில்லை அவருக்கு தெரியும் அரசியல் பற்றி… 

சரி விஷயத்துக்கு வருகிறேன் நான் பவனை குறைத்து சொல்லவில்லை…உண்மையில் அவனை என் சொந்த தம்பியாக தான் பார்க்கிறேன்…இது இந்த உறவுக்கு சரியாக இருக்கும்.  

ஆனால் சக்ரா அங்கிள் நிச்சயமாக இதை ஏற்று கொள்ள மாட்டார்…காரணம் நீ காதலிப்பவன் ராணுவ வீரன் மட்டுமல்ல அப்பாவின் பர்ஷனல் பாடி கார்ட்… 

அப்பாவுக்கு ஆபத்து வரும் போது…அவரை காத்து நிற்க வேண்டியது தான் அவன் கடமை…அப்பாவுக்கு மட்டுமல்ல அவன் உயிருக்கும் அபாயம் இருக்கு… 

அப்படிப்பட்ட ஒருவனுக்கு சக்ரா அங்கிள் …தன் மகளின் நினைவாக இருக்கும் தன் ஒற்றை பேத்தியை… எப்படி கல்யாணம் பண்ணி கொடுப்பார்.  

அதை விட பொருளாதார ஏற்ற தாழ்வு நீ யாரு பேத்தி சக்ரபாணி பேத்தி…முதல்வர் குரூமூர்த்தியின் மகன் வழி பேத்தி அது போல மினிஸ்டர் ராகவனின் பெண்ணு….சியாமளா குரூப் ஆப் கம்பெனியின் எதிர்கால வாரிசு.  

உன்னை எப்படி சாதாரண பாடி கார்ட் ஒருவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பாங்க…காதலுக்கு இந்த ஜாதி, மதம், அந்தஸ்து, படிப்பு தேவையில்லை தான்.  

ஆனால் கல்யாணம் என்று வரும் போது நான் சொன்ன…அத்தனையும் தடுப்பு சுவராக எழுந்து நிற்கும் உன் காதலுக்கு எதிராக…ஏன் அப்பா கூட சக்ரா அங்கிளுக்கு எதிராக நிற்க முடியாமல் தடுமாறி நிற்பார்.  

இத்தனைக்கும் பவனை அவர் தன் புள்ள போல நினைக்கிறார்…நிச்சயமாக நீ பெரிதாக போராட தான் வேணும்…உன் காதல் உண்மை என்றால் அது ஜெயிக்கும் இது நம்ம பக்க நிலை.  

இனி பவனை பார்க்கலாம் அவனுக்கு… உன்னை சரியாக அடையாளம் தெரியவில்லை என்பதை இன்று அவன் உன் கிட்ட விலகி… நடந்து கொண்ட முறையில் இருந்து தெரிந்து கொண்டேன்.  

அது மட்டுமல்ல அவனுக்கும் பணக்கார ஆளுங்களை கண்டால் பிடிக்காது…அவன் யாரிடமும் மனசு விட்டு பேசியதை நான் பார்த்தே இல்லை…எங்க குடும்பத்துக்கு கேட்காது உதவி செய்பவன்.  

ஒரு தடவை கூட அவனுக்கு என்று உதவி கேட்டு நின்றது இல்லை…மற்றவங்களுக்காக தான் கேட்பான் அவனுக்கு சொந்தம்… என்று சொல்லி கொள்ள யாருமே இல்லை.  

அவன் அப்பா கூட வாத்தியாராக இருந்தவர்…ஐந்து வருஷத்துக்கு முன்னே இறந்து விட்டதாக ஒரு தடவை அப்பா…அவனை பற்றி கேட்ட போது சொல்லி இருக்கிறான்.  

கூட பிறந்தவங்க யாருமே இல்லை…அம்மா பற்றி கேட்ட போது…அவன் சரியான பதில் சொல்லவில்லை.  

சம் டைம் அவங்க பவன் அப்பாவை விட்டு பிரிந்து போய் இருக்கலாம்…அது தான் அவன் அம்மா பற்றிய பேச்சை விரும்பவில்லை என்று அப்பா சொன்னார்…அதற்க்கு மேலே அவனை அவர் காயபடுத்த விரும்பவில்லை.  

இப்படி அவன் வாழ்க்கை இருக்கும் போது உன்னை எப்படி ஏற்று கொள்வான்…அவன் கிட்ட தட்ட ரோபோ போல இது வரைக்கும் ஒரு பெண்ணு கூட அதிகமாக பேசியது இல்லை… 

எப்போ பாரு விரைப்பாக தான் இருப்பான் என்று… அப்பா சொல்லி இருக்கிறார்.  

இப்படிப்பட்ட ஒருவனை நீ எப்படி மயூ லவ் பண்ண வைப்ப…அதை விட நம்ம குடும்பம் அவனை மேரேஜ் பண்ண…அவ்வளவு சீக்கிரமாக சம்மதம் கொடுக்காது மா…” என்றாள். 

மயில் ஆடி வரும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
645 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page