என்னால எல்லாம் இவனை விட்டுட்டு எங்கேயும் வர முடியாது தம்பி. எனக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இவன் முகத்தை பார்த்து விட வேண்டும். .இல்லா விட்டால் மனசு முழுக்க ஏக்கமா போய் விடும்.. இவன் என்ன சொல்கிறான் என்று தான் உங்களை கிளப்பி விட்டேன் சாரி தம்பி..”என்கிறார் ..
உடனே அரவிந்த் கயலின் முதுகை கட்டிக் கொண்டு , “பார்த்தீங்களா அண்ணா இதுதான் கயல் கிழவி ..பாசக்கார கிழவி..”அம்மாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுக்கிறான்..
” கிழவி என்று சொல்லாதடா அறிவு கெட்டவனே..” ஆதி திட்டுகிறான்..
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது கயல் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் வைத்து கும்பிட்ட படியே கடவுளை வேண்டிக் கொள்கிறார்..
“ அம்மா என்னமோ செய்றாங்களே என்னன்னு கேளு.. ”
“அத நீங்களே அம்மாகிட்ட கேட்டுக்கோங்க அண்ணா..” அரவிந்த் சிரிக்கிறான் ..
“இது வழக்கமான வேண்டுதல் தான்..” என்கிறான் ..
“ஆமா ஆதி நான் கடவுளிடம் எப்பொழுது பார்த்தாலும் எனக்கு ஒரே ஒரு பிள்ளையை கொடுத்து இவன்கிட்ட என்னை மாட்ட வைத்து விட்டாயே என்று வேண்டிக் கொள்வேன் .. என்னுடைய வேண்டுதலை அவர் செவி சாய்த்து இதோ இன்னொரு மகனையும் அனுப்பி விட்டார் பாருங்க ..எனக்கு என்ன போக்கிடமா இல்லை .இவன் ஏதாவது சொன்னால் நான் உடனே மூட்டை மூச்சை எல்லாம் கட்டிக் கொண்டு உங்க ஊருக்கு வந்து விடுவேன் பாருங்க .. “என்கிறார் ..
” போ கிழவி போ எத்தனை நாளைக்கு நீ அங்க போய் இருக்கிறாய் என்று பார்க்கிறேன் .. “என்று அரவிந்த் மிரட்டுகிறான் ..இவர்களுடைய அன்பை கண்டு ஆதிக்கு ஆனந்தம் ஆகிறது..
கண்டிப்பாக அரவிந்தின் குடும்பத்தை அழைத்து சென்று ஊரை சுற்றி காட்டி ஆசையாய் வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான் ஆதி..
பிறந்தநாள் முடிந்து அன்று இரவு பத்மா எல்லாவற்றையும் அடுக்கி எடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்..
“எங்கடி மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக் கொண்டு தயாராக இருக்கிற.. ”
“ நாளைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னீங்க இல்ல.. மறந்துட்டீங்களா .. ”
“நாளைக்கு இல்ல நாளை மறுநாள் போவோமா.. அரவிந்த் ஆசைப்படுகிறான். ஒருநாள் நம்ம எல்லாரும் அவங்க வீட்ல இருக்கணுமாம்.. நம்ம அறையை காலி செய்ததாக இருக்கட்டும் .. நாளை இரவு ஊருக்கு கிளம்பி விடுவோம் .. ”
‘ கணவன் ஆசைப்படுகிறான்.. அதோட இல்லாமல் அமிர்தனின் பிறந்த நாளுக்காக தான் ஊருக்கே வந்தது. ஒரு நாளாவது அங்கு இல்லாமல் கிளம்பினால் எல்லாருக்கும் கொஞ்சம் வருத்தமாக ஆகும்.., என பத்மாவும் ஒத்துக் கொள்கிறாள்..
இந்த பிரச்சனையை சுலபமாக சரி செய்யவும் ஆதி கொஞ்சம் நிம்மதியாகிறான். இரவு டிரிங்ஸ் பார்ட்டி முடித்து விட்டு பிறகு மனைவியிடம் சாரி கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று.. அவர்கள் இருவரும் எதற்காக அழைத்தார்கள் என்று புரியாமல் ஆதி பார்ட்டி கொண்டாடும் மனநிலையிலே கொஞ்சம் குஷியுடன் அலைகிறான்..
வீட்டிற்கு சென்றதுமே அதே போலவே அங்கு தன் குடும்பத்தினரிடம் அரவிந்த் சொல்லி வைத்து விடுகிறான்.. அதனால் எல்லாருமே அவர்களை வரவேற்க தயார் நிலையில் இருக்கிறார்கள்.. மூன்று வேலையும் தடல் புடல் விருந்துகளோடு அன்பாய் கவனிக்கவும் எல்லாரையும் விட பூங்குழலிக்கு தான் அவர்களை ரொம்ப பிடித்து விடுகிறது ..உரிமையாய் எல்லாரிடமும் சென்று ஏறி கொள்கிறாள்..
சாயந்திரம் பொழுது ஆனதுமே பத்மாவிடம் அனுமதியாய், ” நாங்கள் கொஞ்சம் வெளியே போய் விட்டு வரட்டுமா அண்ணி .. “என்று அரவிந்த் கேட்கவும் பத்மா புரிந்து கொள்கிறாள்..
சைகையாலேயே கட்டை விரலை வாய் அருகில் கொண்டு சென்று அதற்காகவா என்று யாரும் பார்க்காத வண்ணம் கேட்கவும் ஆதியும் தன் காதுகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு சாரி என்கிறான். பரவாயில்லை என்று கையை காட்டி அனுப்பி விடுகிறாள்.. வேகமாக ஓடி சென்று கன்னத்தை கிள்ளி ஒரு முத்தத்தை கொடுத்து விட்டதும் ஓட்டமாய் ஓடி விடுகிறார்கள் மூன்று ஆண்களும் ..
அதே நிலையில் தான் அரவிந்தும் மித்ராவிடம் அனுமதி கேட்டிருந்தான் காரில் ஏறியதும் நவீன் விழுந்து விழுந்து சிரிக்கிறான் .. “நல்ல வேளைடா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. இல்லா விட்டால் நானும் இப்படித்தான் ஜாடை எல்லாம் செய்திருக்க வேண்டும்.. ”
“அடப்பாவி நான் செய்த ஜாடை பேச்சுகளை யெல்லாம் நீ பார்த்து விட்டாயா…” என்று ஆதி கேட்கிறான் ..
“ம் பார்த்தேன் அண்ணா நன்றாக பார்த்தேன் ..என்ன இருந்தாலும் இரவு அண்ணி உங்களை நன்றாக கவனித்து விடுவார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது ..
“ஆமாம் ஆமாம் அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது ..ஆனாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து விடுவாள்.. “மனைவியை புகழ்ந்து பேசுகிறான் ஆதி..
அரவிந்த், ஆகி அண்ணாவை தேவை இல்லாமல் இங்கு அழைத்து வந்து எதைப் பற்றி என்ன பேசப் போகிறேனோ என்று தெரியவில்லையே.., பலத்த யோசனையில் இருக்கவும் அமைதியாகவே வருகிறான் ..
ஆனால் ஆதி நினைவாக, “அரவிந்த் நீ பிறந்த நாளுக்கு எங்களுக்கு அழைப்பு விடும் போது என்னிடம் நிறைய பேச வேண்டும் .மனம் விட்டு பேச வேண்டும் என்று ஏதேதோ சொன்னாய் அல்லவா.. அதற்காக தானே இன்று இரவு தனியாக அறையைப் பிடித்து இருக்கிறாய்..
“ அண்ணா உங்களுடைய கணிப்பு மிகவும் சரி ..எப்படி அண்ணா என்ன இவ்வளவு கரெக்டா சொல்றீங்க .. ”
“ஆமாம் ஏதோ பேசத்தான் போகிறாய் போல ..அதனால்தான் உன் முகம் வாடி உம்மென்று இருக்கிறது .. ”
“ பெரிதாக ஒன்றும் இல்லை அண்ணா.. நான் சும்மா சாதாரணமாகத்தான் பேசலாம் என்று வந்தேன்.. உண்மையிலேயே சரக்கு போட்டு ரொம்ப நாட்கள் ஆகிறதா..அதனால் தான் இந்த ஏற்பாடு .பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை … ”
அவன் சொன்னதுமே நவீன் அவன் தொடையை நறுக்கென்று கிள்ளுகிறான்..ஆ ஆ என்ற கத்தியவன் நவீனை திட்டுகிறான் ..
“எதற்குடா இப்படி கிள்ளுகிறாய்.. ”
“பின்ன என்னடா பேச வேண்டும் என்று வந்து விட்டு இப்பொழுது ஒன்றும் இல்லை என்கிறாயே. நீ செய்வதை பார்க்கவே எனக்கு எரிச்சலாக வருகிறது…”
அவர்கள் பேசுவதை ஆதி கவனிக்கிறான். “அரவிந்த் நீ எதையோ மறைக்கிறாய் ..சொல்ல வந்து விட்டு வேண்டாம் என்று சொன்னதும் தான் நவீன் உன்னை நன்றாக கிள்ளி விட்டான்.. உன்னுடைய அண்ணன் தானே நான் ..எதுவாக இருந்தாலும் பேசு .. ”
” சரி அண்ணா நம்ம முதல்ல போய் உள்ளே ஆக வேண்டிய வேலைகளை பார்ப்போம் .அதற்கு பிறகு நான் பேசவில்லை என்று நினைத்தாலும் என்னுடைய போதையே தானாக எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து
விடும் .. “
“ சரி அதுவும் நல்லது தான் .மனதிலேயே நிறைய விஷயங்களை மறைத்து வைத்திருக்கக் கூடாதா டா ..உடம்பு சரியில்லாமல் போய் விடும் .. ”
பேசிக் கொண்டே உள்ளே செல்கிறார்கள் அதற்கு பிறகு ஜாலியாக பார்ட்டி நடக்கிறது ..யார் தொந்தரவு இல்லாமல் அறைக்கதவை தாழ் போட்டு விட்டு குஷியாக பார்ட்டியை கொண்டாடுகிறார்கள்..
ஒரு அளவிற்கு மேல் ஆதிதான் அவர்கள் இருவரையும் கண்ட்ரோல் செய்கிறான்..
” ரொம்ப அளவுக்கு மீறி போடாதீங்க. வீட்டுக்கு போனா மாட்டிக் கொள்ள வேண்டி வரும்.. எல்லை மீறி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஓவர் டோஸ் ஆனால் வாந்தி தான் வரும் .. “என்று பாட்டிலை பிடுங்கி வைத்து விடுகிறான்..
“என்னமோ பேச வேண்டும் என்றாய் அல்லவா சொல்லேன் .. ”
“ ஆமா அண்ணா அதை தான் எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை .. ”
“என்னடா பீடிகை பலமாக இருக்கிறது பெரிய விஷயமா .. ”
“எனக்கு அப்படித்தான் அண்ணா தெரிகிறது.. உங்களுக்கு அது எப்படி என்று தெரியவில்லை .. ”
“சரி என்ன நடந்தது என்று சொல். அதற்கு நான் ஒரு தீர்வு கூறுகிறேன்..” என்று அரவிந்த் கூறுவதை கேட்க ஆர்வமாகிறான் .ஆதி அதற்குப் பிறகு இடையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ..அரவிந்த் பேசுவதை முழுக்க கேட்கிறான்.. ஒரு வழியாய் தன் மனதில் இருந்த வலி வேதனை சந்தேகம் கஷ்டம் எல்லாவற்றையும் தன் அண்ணனிடம் கொட்டித் தீர்க்கிறான் அரவிந்த்..
அவர்கள் இருவரும் வீடு திரும்பும் போது நள்ளிரவாகி விடுகிறது ..நவீன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு அப்படியே வீட்டுக்கு கிளம்புகிறான்..இரவு மணி ஒன்றுக்கு , இந்த நேரம் காலிங் பெல்லை அடித்தால் யார் கதவை திறக்கப் போகிறார்களோ ..கண்டிப்பாக இந்த கயல் கிழவி மட்டும் கதவைத் திறக்க கூடாது அண்ணா .. “என்று தயங்கிய படியே மெதுவாக பெல் அடிக்கிறான் ..இவன் என்னதான் சத்தம் கேட்கக்கூடாது என்று மெதுவாக அழுத்தினாலும் அது அமைக்கப்பட்ட விதத்தில் தானே கத்தும்.. குருவி கத்துவதைப் போல கத்தி ஊரையே எழுப்பி விடுகிறது..
அப்பொழுதுதான் இருவருக்குமே அந்த யோசனையே வருகிறது.. அரவிந்த் ஆதியின் காதில் மெதுவாக, “ பேசாமல் நம்ம அங்கேயே தங்கி விடிந்ததும் வந்து தொலைந்து இருக்கலாம். இப்பொழுது எதனால் நம்ம இரண்டு பேரும் அடி வாங்க போகிறோமோ தெரியவில்லை.. ”
கதவை திறந்த நேரத்திற்கு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கோபமாய் நிற்கிறார்கள் பத்மாவும் மித்ராவும் .. அவர்கள் கோபமாய் நிற்பதை பார்த்ததுமே இரு ஆண்களும் அசடு வழிகிறார்கள்..
இரண்டு பெண்களுமே கொஞ்சம் இங்கிதம் தெரிந்தவர்களாக தான் இருக்கிறார்கள்.. அடுத்த ஆணுக்கு முன் தன் கணவனை மட்டம் தட்ட கூடாது என்று தங்களை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்..
” பரவாயில்லை வாங்க ரூமுக்கு போய் பேசிக் கொள்ளலாம். ” என்று இழுத்துச் செல்கிறார்கள்.. இரண்டு அறைகளிலும் அரை மணி நேரத்திற்கு மேல் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.. அடி விழாத சத்தம் மட்டும்தான் இன்னும் கேட்கவில்லை..
என்ன பேசினாலும் அரவிந்தும் ஆதியும் அவர்களின் மீது தவறு இருந்ததால் எதிர்த்து வாயையே திறக்கவில்லை. பேசிப் பேசி திட்டி திட்டி அலுத்து போய் பத்மா விட்டு விடுகிறாள்.. “ உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. என்றைக்காவது என்று வருடத்திற்கு வேண்டிய எல்லா தீர்த்தத்தையும் ஒரே நேரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டியது .. ”
“இதற்கு தினமும் குடிக்கும் குடிகாரனே பரவாயில்ல .உங்களிடம் பேசுவதும் அந்த சுவற்றிடம் பேசுவதும் ஒன்றுதான் .. வாயைத் திறந்து ஏதாவது பேசுகிறீர்களா.
எனக்கு தூக்கம் வருகிறது.. நான் தூங்க போகிறேன் ..காலையில் எழுந்ததுமே ஊருக்கு கிளம்ப வேண்டும். எழுப்பினதும் ஏதாவது அடம் செய்தீர்கள்.. பிறகு தான் இருக்கிறது உங்களுக்கு கச்சேரி.. ” மிரட்டி விட்டு போர்வை இழுத்து மூடியவள்தான் படுத்ததுமே தூங்கி விடுகிறாள் பத்மா..
தொடரும்..
