அத்தியாயம் 19
சரஸ்வதியும் அம்பிகாவும் அதிர்ந்து “ஐயரே என்ன காரியம் பண்ணிட்டீங்க!” என்று கேட்க, “என்னாச்சும்மா சாமி கிட்ட வச்சு பூஜை பண்ணுன விசேஷ மாலை அதான் தம்பதி ரெண்டு பேர் கழுத்துலையும் சேர்ந்த மாதிரி போட்டேன்!” என்று கூறினார் ஐயர்.
“ஐயரே அவங்க ரெண்டு பேர யாரு தம்பதியினு சொன்னது, இதோ நிக்கிறானே இவன் தான் அந்த பொண்ணோட புருஷன்!” என்று விதுரனை கைகாட்டி சரஸ்வதி சொல்ல, “என்னம்மா சொல்றீங்க, கல்யாணத்துக்கு முன்னாடி பத்திரிக்கை வைக்க வந்த அன்னைக்கு இவங்க ரெண்டு பேர் தானே வந்தாங்க,
நீங்க கொடுத்த பத்திரிக்கைல கூட பொண்ணு மாப்பிள்ளை போட்டோன இவங்களோட போட்டோ தான இருந்துச்சு!” என்று ஐயர் சொல்ல , என்ன சொல்வது என்று தெரியாமல் இருவரும் திகைத்தனர்.
“சாமி கடைசி நேரத்துல மாப்பிள்ளை மாறி போச்சு, இந்த பொண்ணோட புருஷன் இவன் தான்” என்று விதுரனை காட்டினார் சரஸ்வதி.
பிரதிக்ஷாவும் அதிர்ச்சியில் ரஞ்சித்தை முறைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த விதுரனை பார்க்க பிரதிக்ஷாவை கொல்லும் வெறியில் முறைத்துக் கொண்டு நின்றான் விதுரன்.
“எல்லாத்துக்கும் காரணம் நான் தான், என்னைய மன்னிச்சிரு விதுரா! அந்தப் பக்கம் தான் நிக்கலாம்னு பார்த்தேன் திடீர்னு சாமி கும்பிட ரெண்டு மூணு பேர் வந்துட்டாங்க அதனால தான் இந்த பக்கம் நின்னேன், ஐயர் தெரியாம உனக்கு போட வேண்டிய மாலையை எனக்கு போட்டுட்டாரு!” என்று கூறினான்.
விதுரன் ரஞ்சித் சொன்னதை கேட்டு, “புரியுது ரஞ்சித்! இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு, இதுக்கு எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்குற?” என்று சொல்ல, சரஸ்வதியை பார்த்து குறுநகை புரிந்தான் ரஞ்சித். இது எல்லாம் ரஞ்சித்தின் திட்டம் என்பதை புரிந்து கொண்டார் சரஸ்வதி.
“சரி ஐயரே, நடந்தது நடந்து போச்சு, திரும்பவும் பூஜை பண்ணி வேற மாலை எடுத்துட்டு வந்து இவங்க ரெண்டு பேரும் கழுத்துலையும் போடுங்க!” என்று சரஸ்வதி சொல்ல,
“மன்னிச்சிடுங்க அம்மா, மாப்பிள்ளை மாறிப்போன விவகாரம் எனக்கு தெரியாது. இந்த தம்பி தான் மாப்பிள்ளைனு நெனச்சு போட்டுட்டேன்!” என்று சொல்லிவிட்டு அந்த மாலையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார் ஐயர்.
இங்கு நடந்த சம்பவத்தில் அனைவரின் முகமும் ஒரு நொடியில் மாறிவிட்டது. ஏனோ பிரதிக்ஷாவை ரஞ்சித்தின் மனைவி என்று ஐயர் சொன்னதை விதுரனால் துளி அளவு கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ரஞ்சித்திடம் வருத்தமில்லாதது போல் காட்டிக் கொண்டானே தவிர, உள்ளுக்குள் கோபத்தில் புகைந்து கொண்டு இருந்தான்.
‘எப்படி நிக்கிறா பாரு! ஐயர் தான் மாலையை ரெண்டு பேர் கழுத்துலையும் தெரியாம போட்டாருன்னா இவளுக்கு எங்க போச்சு புத்தி! என் புருஷன் இவருன்னு என்னைய பார்த்து சொல்ல வேண்டியது தானே! எனக்கென்னன்னு நிக்கிறா’ என்று என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
பிரதிக்ஷாவோ, சாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட மாலை சம்பந்தமில்லாமல் தனக்கும் ரஞ்சித்துக்கும் போடப்பட்டதை எண்ணி மனம் நொந்து போனாள். அவள் மனம் ரணமாகி அதையே யோசித்துக் கொண்டிருக்க, அவளை எரிப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன்.
சரஸ்வதி விதுரன் பிரதிக்ஷாவை பார்த்த பார்வையை பார்த்து யோசித்து விட்டு, “அம்பிகா அங்க பாரு, ரஞ்சித் வேணுமுனே பண்ணுனது ஒரு வகையில நல்லதா போச்சு!”என்று சொல்ல அம்பிகா அவ்விருவரையும் பார்த்தனர்.
“ஏண்டி அவர்தான் தெரியாம மாலையை போடுறார்னா, என் புருஷன் இவரு இல்லைன்னு சொல்ல மாட்டியா! எனக்கென்னனு நிக்கிற?” என்று அவளின் காதருகே சொல்ல, ” நானும் திடீர்னு ஐயரு மாலையை போடவும், நானும் அதிர்ச்சியாகி என்ன சொல்றதுன்னு தெரியாம தான் அமைதியா நின்னேன்,
எனக்கென்ன தெரியும் அவரு என் கழுத்துலையும் ரஞ்சித் கழுத்துலையும் சேர்த்து மாலைய போடுவார்னு நான் என்ன கனவாக கண்டேன், நானும் உங்கள மாதிரி சாமி தான் கும்பிட்டு கிட்டு இருந்தேன், ஏன் நீங்க பாத்திருக்கீங்கல்ல அது என்னோட பொண்டாட்டின்னு சொல்ல வேண்டியது தானே!” என்று பிரதிக்ஷா சொல்ல என்ன சொல்லுவது என்று தடுமாறினான் விதுரன்.
பிரதிக்ஷா விதுரனிடம் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க ஐயர் வந்து அவர்களிடம் பிரசாதத்தை நீட்டினார்.
அதனால் அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வாயை மூடிவிட்டு ஐயர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் அவரவர் நெற்றியில் வைக்கப் போக, ” விதுரா நீ உன் கையில வைத்திருக்கிற குங்குமத்தை பிரதிக்ஷாவோ நெத்தியில வச்சு விடு!” என்று சரஸ்வதி சொல்ல, இந்த முறை மறுப்பு எதுவும் சொல்லாமல் பிரதிக்ஷாவின் நெற்றியில் குங்குமத்தை அழுத்தமாக வைத்தான் விதுரன் .
அவன் குங்குமம் வைத்த நேரத்தில் கோயிலின் மணி ஒலிக்க அம்பிகாவுக்கும் சரஸ்வதிக்கும் மனதில் ஒருவித நம்பிக்கை பிறந்தது.
அங்கு சாமி கும்பிட்டு கொண்டிருந்தவர்கள் எல்லோரும், ‘சித்தர்சாமி இன்னைக்கு கோயிலுக்கு வந்து இருக்காராம்,வாங்க போய் குறி கேட்டுட்டு வருவோம்’ என்று அனைவரும் தங்களுக்குள்ளாக பேசிக் கொண்டிருக்க சரஸ்வதியும் அம்பிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“சரஸ்வதி நாமளும் விதுரன் பிரதிக்ஷாவோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு சித்தர்ட்ட அவங்க ஜாதகத்தை காட்டி அருள்வாக்கு கேட்போமா?” என்று கேட்க, ” என்னமோ தெரியல, எனக்கு என்னமோ பயமா இருக்கு!” என்று கூறினார் சரஸ்வதி.
“எதுக்கு கவலைப்படுற! இவங்க ரெண்டு பேரோட கல்யாணம் நம்மளோட திட்டப்படி நடக்கல! கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் சேரனும்னு விதி இருந்ததால தான் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சுருக்கு, இப்ப கூட பாத்தியா மாலையை மாத்தி ஐயர் போட்டுட்டாருன்னு கவலையில இருந்தோம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பிரதிக்ஷா நெத்தியில விதுரன குங்குமம் வைக்க சொன்னப்ப கோயில் மணி அடிச்சு எனக்கென்னமோ அது ரொம்ப நல்ல சகுனம்னு தோணுது! அதனால பயப்படாம வா ரெண்டு பேரும் ரெண்டு பேர் ஜாதகமோ எப்படி இருக்குன்னு கேட்டுட்டு வருவோம்!”என்று சொல்ல, சரஸ்வதியும் அம்பிகா பின்னாடி சென்றார்.
அவர்கள் சென்றதை பார்த்துவிட்டு “சூப்பர் ரஞ்சித்! நீ இப்படி பண்ணுவேன்னு நினைச்சு கூட பாக்கல எல்லார் முகத்தையும் பார்க்கணுமே, பீஸ் போன பல்பு மாதிரி ஆயிருச்சு! இவங்க எல்லாருக்கும் இது தேவைதான்” என்று சிரித்தாள் மனிஷா.
“நேத்து பிளான் பண்ணி நம்ம எல்லாரையும் அவளோட ரூமுக்கு வர வச்சு நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தால்ல, அதுக்கு தான் அவளுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்தேன்!”என்று வன்மமாக புன்னகைத்தான் ரஞ்சித்.
“சரி எனக்கு ஒரு சந்தேகம் ஐயர் எப்படி உன் கழுத்துலையும் பிரதிக்ஷா கழுத்திலையும் எப்படி மாலையை போட்டாரு!” என்று கேட்க,” எல்லாம் பணம் தான்!” என்று சிரித்தான் ரஞ்சித்.
விதுரன் பிரதிக்ஷாவை முறைத்துக் கொண்டிருக்க பிரதிக்ஷாவை விதுரனிடமிருந்து காப்பாற்ற எண்ணி, “அண்ணி வாங்க, இதுதான் எங்க குலதெய்வம் கோயில் உங்களுக்கு நான் சுத்தி காட்டுறேன்!” என்று சொல்லிவிட்டு கையோடு அழைத்துச் சென்றாள் ரேணு.
இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த இடங்களை எல்லாம் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.
விதுரன் தனித்து விடப்பட்டதை பார்த்த மனிஷாவும், ரஞ்சித்தும் விதுரனின் அருகில் வந்தனர்.
“மச்சான் இன்னைக்கு டாக்குமெண்ட்ல சைன் பண்ணிட்டேனா இன்னைக்கே கோர்ட்ல டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடலாம்!” என்று ரஞ்சித் சொல்ல,
“கோயில்ல இருந்து கிளம்புன உடனேயே ஆபீசுக்கு போய் டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிடலாம், நான் அவகிட்ட பேசிட்டேன் அவளும் மியூச்சுவலா டைவர்ஸ் பண்றதுக்கு ஒத்துக்கிட்டா!” என்று விதுரன் கூறினான்.
பிரதிக்ஷா மியூச்சுவல் டைவர்ஸ் செய்வதற்கு ஒத்துக்கொண்டாள் என்று விதுரன் சொல்ல ரஞ்சித்தின் மனம் குழம்பியது.
‘அவ்வளவு சீக்கிரத்தில் எப்படி மியூச்சுவலா பிரிகிறதுக்கு சைன் பண்றேன்னு சொன்னா, இதுல ஏதோ திட்டம் இருக்கு! முதல்ல அதை கண்டுபிடிக்கணும்’ என யோசித்துக் கொண்டிருந்தான்.
மனிஷா விதுரனின் பக்கத்தில் வந்து, “விதுரா இங்கே நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு நீ கிடைக்க மாட்டியோனு பயமா இருக்கு!” என்று கண்கள் கலங்கினாள்.
“இப்ப எதுக்கு கண் கலங்குற! அப்படிலாம் ஒன்னும் இல்ல” என்று விதுரன் சொல்ல, “நேத்து நைட்டு பிரதிக்ஷா உனக்கு முத்தம் கொடுத்ததை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு தூக்கமே இல்லை!” என்று கூறினாள் மனிஷா.
“இங்க பாரு! அது நேத்து நைட்டு எங்களுக்குள்ள நடந்தத ஒரு சின்ன விபத்து அவ தூக்க கலக்கத்துல தெரியாம அப்படி பண்ணிட்டா, திடீர்னு அவ அப்படி பண்ணுவானு நான் கூட எதிர்பார்க்கல நீங்க எப்படி எல்லாரும் அதிர்ச்சியா பாத்திங்களோ அதே மாதிரி தான் நானும் அதிர்ச்சியானேன். அவ முத்தம் கொடுத்தான் நான் மயங்கிடுவேன்னு நீ நினைக்கிறியா? என் மனசு முழுக்க நீ தான் இருக்க, நீ மட்டும் தான் இருக்க!” என்று கூறினான் விதுரன்.
சிறிது நேரத்திற்கு முன்பாக பிரதிக்ஷாவிடம் , தன்னை கணவன் என்று ஐயரிடம் சொல்லவில்லை என்று சண்டை இட்டது மறந்துவிட்டது போல! கொஞ்சம் தன் மன ஓட்டங்களை ஆராய்ந்து பார்த்திருந்தால் பின் நாட்களில் வரும் பிரச்சனைகளை தவித்திருக்கலாமோ என்னவோ?
“இன்னைக்கு விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடுவோம்!இன்னும் ஆறு மாசம் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு! லீகலா அவளுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கூறினான் விதுரன்.
இங்கு
சித்தரை பார்க்க அனைவரும் வரிசையில் நிற்க அந்த வரிசையில் அம்பிகாவும் சரஸ்வதியும் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென்று அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியில் வந்த சித்தரின் சிஷ்யன் “இங்க அம்பிகா சரஸ்வதி யாருமா?” என்று கேட்க இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அம்பிகா சரஸ்வதி சென்னையிலிருந்து வந்திருக்கிறவங்க சாமி உங்களை கூப்பிடுறாரு!”என்று சொல்ல, சரஸ்வதியின் கால்கள் நடுங்கியது.
சித்தர் பேரிட்டு அழைத்து தான் அருள்வாக்கு சொல்வார் என்று அவர்கள் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இன்று அவர்களையே கூப்பிடவும் நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“என்னன்னு தெரியல, பயமா இருக்கு!” என்று சரஸ்வதி சொல்ல, ” நீ எதுக்கும் பயப்படாதே! கண்டிப்பா சித்தர் நல்லது தான் சொல்லுவாரு” என்று அம்பிகா சொல்ல இருவரும் உள்ளே நுழைந்தனர்.
அங்கு சித்தர் கண்களை மூடி தியானத்தில் இருக்க இருவரும் அவருக்கு முன்னால் போய் அமர்ந்தனர்.
சித்தர் கண்களை திறந்து பார்க்க, “எங்க மகனுக்கு எதிர்பாராமல் திடீர்னு கல்யாணம் நடந்து போச்சு, மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேரோட ஜாதகத்தை கொண்டு வந்து இருக்கோம்.அவங்க ரெண்டு பேரும் எப்படி வாழ்வாங்கன்னு பார்த்து சொல்லுங்க சாமி!”என்று அம்பிகா கூறினார்.
விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அவரின் இஷ்ட தெய்வத்தை வணங்கி விட்டு அவர்கள் இருவரின் ஜாதகத்தை வாங்கி கணிக்க தொடங்கினார் சித்தர்.
சித்தர் ஜாதகத்தை பார்த்துக் கொண்டிருக்க, ” சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பாக்காம கல்யாணம் பண்ணி வச்சிட்டோம், அதனால அவங்களுடைய கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு பார்த்து சொல்லுங்க சாமி!” என்று அம்பிகா கேட்க, எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்த சித்தர் எழுந்து போனார்.
சித்தர் எதுவும் சொல்லாமல் எழுந்து போவதை பார்த்ததும் இருவரின் மனமும் கலக்கம் கொண்டது.
