ஆடி வரும் வண்ண மயிலே-12
அத்தியாயம்:12
புவனா மயூரிடம் நீ எப்படி பவதீப்பை… உன்னை காதலிக்க வைக்க போகிற..? என கேட்டாள்.
மயூரி “ நீங்க சொன்னது எல்லாம் சரி தான் அக்கா…ஆனா எனக்கு அவரை தான் பிடித்து இருக்கு நான் இரண்டு தாத்தா கிட்டேயும் அவரை பற்றி எடுத்து சொல்லி…கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி விடுவேன்.
அவருக்கு என்னை ஞாபகம் இல்லை என்றால் என்ன..? எனக்கு அவரை தெரியும் தானே எப்படியும் அவர் கிட்ட என் காதலை சொல்லி விடுவேன்…அதற்க்கு நீங்களும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணும்.
அது மட்டுமல்ல அக்கா குரு தாத்தா, சக்ர தாத்தாவுக்கு…இவர் என்னை காப்பாற்றியது சரியாக தெரியாது…இவரும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை.
இவர் தான் என்னை காப்பாற்றியவர்…என அவங்களுக்கு தெரிந்தால் நிச்சயமாக… என் காதலுக்கு தடை சொல்ல மாட்டாங்க …” என்றாள்.
புவனா “ சோ என்னையும் உன் காதல் விஷயத்தில்…கோர்த்து விட பார்க்கிற சரி விட எல்லாம் யாருக்காக என் அண்ணன் பெண்ணுக்காக தானே…நீயும் தியாவும் எனக்கு வேறு வேறு அல்ல..
பவதீப் பற்றி நன்றாக தெரிந்ததால் தான்…நீ அவனை லவ் பண்ணுகிறேன் என சொன்னதும் அமைதியாக இருந்தேன்…
அண்ணன் போல ஒருவனாக அவன் இருந்து இருக்க…நிச்சயமாக உனக்கு சப்போர்ட்டாக இருந்து இருக்க மாட்டேன்.
சியாமளா அண்ணி போல உன் வாழ்க்கை மாறி விட கூடாது…என்ன தான் அண்ணன் பாண்டி கூட சேர்ந்ததால் மாறியதாக…சொன்னாலும் கூட அண்ணி விஷயத்தில் அவரை மன்னிக்க மாட்டேன்.
அவங்க இவரை எவ்வளவு லவ் பண்ணினாங்க என்று எனக்கு தான் தெரியும்.. அவங்க காதலுக்கு, நம்பிக்கைக்கு இவர் செய்தது துரோகம் …
அதற்க்கு என் கிட்ட மன்னிப்பே கிடையாது…அது போல உன் வாழ்க்கை ஆகிவிட கூடாது என்பதில்…. நான் உறுதியாக இருக்கிறேன்.
பவதீப் குடும்பம் பற்றி சரியாக தெரியாது தான்…ஆனால் அவன் நடக்கும் முறையை பார்த்தால் அவன் ஒழுக்கமான குடும்பத்து… பையனாக தான் தெரிகிறான் சரி விடு அவனை பற்றி என் ஆளுங்களை வைத்து தெரிந்து கொள்கிறேன்.
ஆனா மயூரி நீ கொஞ்சம் பொறுமையாக இருக்க வேணும்…முதலில் நான் பவனிடம் சிலதை கேட்டு பார்த்த பிறகு மற்ற விஷயங்களை பேசலாம்…” என்றாள்.
மயூரி தேங்கியூ அக்கா என அவளை கட்டி அணைத்து கொண்டாள்…அதை பார்த்த தர்ஷன் ஓடி வந்து மயூரியை அணைத்து கொண்டான்…தியா தன் அரிசி பற்கள் தெரிய சிரித்தாள்.
மயூரி தர்ஷன் பார்க்காது அவள் பவனுக்கு…லண்டனில் இருந்து வாங்கி வந்த கை கடிகாரத்தை புவனாவிடம் கொடுத்தாள்…
பவனிடம் இதை எப்படியாவது கொடுத்து விட வேணும் என்று…மதியம் சாப்பிட்டு விட்டு கல்யாணி, மயூரி வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
மீனா கல்யாணிடம் வற்புறுத்தி…சக்ரபாணி, அசோக் ,அன்புக்கும் மதிய விருந்தை கேரியரில் போட்டு கொடுத்து விட்டார்…நானும், புவனாவும் சமைத்த சாப்பாடு அண்ணனை இதை சாப்பிட சொல்லு என்று…
கல்யாணியும் மறுக்க முடியாது அதை வாங்கி கொண்டார்…மயூரி, கல்யாணி போகும் வரைக்கும் பவதீப் அவர்களின்… கண்ணில் தென்படவே இல்லை.
மயூரிக்கு அது மனசுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட… புவனா அவனை பற்றி சொல்லி இருந்ததால்…அமைதியாக கிளம்பி விட்டாள் சாயங்காலம் போல தான் பவதீப்… குரு மூர்த்தியை பார்க்க வீட்டுக்குள்ளே வந்தான்.
அவனை முதலில் பார்த்தது மீனா தான்…ஓய்வாக டிவியில் தேண் கிண்ணம் பார்த்து கொண்டு இருந்தவர்…இவனை கண்டதும் முகம் மலர வா பவன் என்று அழைத்தார்.
பவன் “ குட் ஈவ்னிங் மேடம் சார் இல்லையா..? நாளை அவரின் புரோகிராம் பற்றி கேட்க வேணும்…அவர் சொன்னால் தான் ரவி சார் எனக்கு புரோகிராம் லிஸ்ட் தருவார்…அதை வைத்து தான் நான் பாதுகாப்பை பலப்படுத்த வேணும்…” என்றான்.
ரவி குரூமூர்த்தியின் பி.ஏ மட்டுமல்ல அவரின் விசுவாசமான வலது கை…கிட்ட தட்ட பவன் போல தான்… குரு மூர்த்தியின் கட்டளை தான் அவனுக்கு வேதம்…பாண்டி பல தடவை இவனை பணத்தால் வாங்க நினைத்து முடியாமல் ரவியிடம்…அடி வாங்கி போனான்.
அதனால் பாண்டிக்கு இவன் மேலே வன்மம் உண்டு…புவனாவை விட நான்கு வயது பெரியவன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்…உள்ளது
மூத்தது பெண்ணு அவள் டென்த் படிக்கிறாள்…அடுத்து ஆண் அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்… மனைவி சுமதி ஹவுஸ் வொய்ஃப் குருமூர்த்தி தன் அவுட் ஹவுஸ்ஸில் தான் இவர்களை தங்க சொல்லி விட்டார்.
மீனா “ ரொம்ப அவசரமா பவன் இப்போ தான் மதியம் மூன்று மணி போல தூங்க போனார்…பேத்தி வந்த சந்தோஷம் இன்று தான் அவருக்கு நிம்மதியான தூக்கம்.
இப்போ எழுந்து விடுவார் நீ முதலில் காபி, டிபன் சாப்பிடு…உன் சார் எழுந்ததும் நீ பேசலாம்…” என்றார்.
பவன் “ தேங்க்ஸ் மேடம் நான் இப்போ தான்… என் டீம் கூட சேர்ந்து சாப்பிட்டு விட்டு வருகிறேன்…” என்றான்… மீனா சிரித்து விட்டு.
“ உன்னை பேச்சில் அடித்து கொள்ளவே முடியாது பவன்…பரவாயில்ல வயசு பையன் நீ கல்லை தின்றால் கூட… சீக்கிரமாக ஜீரணமாகி விடும் வயது உனக்கு…அதனால் என் கையால் காபி மட்டும் சாப்பிடு…” என்றவர்… எழ போக பவா என அழைத்து கொண்டு புவனா வந்தாள்.
மீனா “ நீயும் எழுந்து விட்டாயா மா…? உனக்கு காபி, டிபன் எடுத்து வருகிறேன்…தர்ஷன், தியா பாப்பா எங்கே காணோம்..? இன்னும் தூங்கி கொண்டா இருக்கிறாங்க…” என கேட்டார்.
“ ஆமாம் மா மயூ வந்தாலே இவங்களை கையில் பிடிக்க முடியாது…அவளும் இவங்க கூட சேர்ந்து சின்ன புள்ளையாகி மாறி விளையாட ஆரம்பித்து விடுவாள்…அது தான் களைப்பில் இன்னும் தூங்கி கொண்டு இருக்கிறாங்க.
எனக்கு காபி மட்டும் போதும் மா மதிய சாப்பாடே இன்னும்…தொண்டை வரையில் நிற்கிறது பவா என்ன டா அப்பாவை பார்க்க வந்தாயா.? அவர் இப்போ எழும் நேரம் தான் நீ உட்காரு…” என்றாள் புவனா.
மீனா பவன், புவனாவுக்கு காபி, டிபன் கொடுத்து விட்டு…நைட் டின்னருக்கு வேலையாட்களிடம் மெனு கொடுக்க போய் விட்டார்…காபியை ஒரு வாய் அருந்தி கொண்டே பவனை பார்த்த புவனா சட்டென்று…
“ பவா உனக்கு மயூவை தெரியுமா..? என கேட்டாள் சாப்பிட்டு கொண்டு இருந்த காபி புரையேற…பவன் தன் தலையில் தட்டி வந்த இருமலை சரி செய்தவன்.
“ ஸாரி மேடம் காபி கொஞ்சம் ஸ்டிராங்காக இருந்ததா…அது தான் புரையேறி விட்டது நீங்க என்ன கேட்டீங்க மேடம்…” என்று கேட்டான்…புவனா அவனை ஒரு தடவை கூர்ந்து பார்த்தவள்.
“ புரையேறுவது சகஜம் தான் பவா பட் இந்த புரையேறியது நான் கேட்ட கேள்வியால் தான்…என்று தெரிகிறது சரி நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.
என் மருமகள் மயூரிகாவை இதற்க்கு முன் நீ பார்த்து இருக்கிறாயா..? நீ பொய் சொல்ல மாட்ட என தெரியும் சொல்லு… அவளை உனக்கு தெரியும் தானே…? என கேட்டாள்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் பவதீப்…பிறகு
“ தெரியும் மேடம் நான்கு வருஷத்துக்கு முன்…ஒரு ஆபத்தான சூழ்நிலையில் அவங்களை சந்தித்தேன்…
அதில் இருந்து அவங்கள் காப்பாற்றினேன்… அது ஒரு ராணுவ வீரனின் கடமை…அவ்வளவு தான் அவங்களுக்கு என்னை ஞாபகம் இருக்காது…” என்றான்.
புவனா “ ஞாபகம் இல்லை என்று யாரு உனக்கு சொன்னது…உன்னை தனக்கு தெரியும் என்று சொன்னதே மயூ தான்…நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன் அக்கா.
அவருக்கு பதில் நன்றியை செலுத்த விரும்புகிறேன்…ஆனால் அவருக்கு என்னை ஞாபகம் இல்லை போல தெரிகிறது…அவரிடம் பேச தயங்கமாக இருக்கிறது என சொன்னாள்.
நானும் நினைத்தேன் நீ தினமும் இது போல பலரை…கப்பாற்றி கொண்டு இருப்பவன் இவளை மறந்து இருப்பது சகஜம் என்று…பட் நான் கேட்ட போ நீ நடந்து கொண்ட முறையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
உனக்கு மயூவை நன்றாக ஞாபகம் இருக்கு என்று…ஏன் பவா அவளை தெரியாதது போல காட்டி கொண்ட…என்ன காரணம் என நான் தெரிந்து கொள்ளலாமா…? என கேட்டாள்.
பவதீப் “ பெரிதாக எந்த காரணமும் இல்லை மேம்…கடமை செய்த பிறகு பலனை எதிர்பார்ப்பது எனக்கு பிடிக்காது…அது என் கொள்கைக்கு எதிரான ஒன்று என் கடமை நாட்டில் உள்ள மக்களை காப்பது தான்…
அதை தான் செய்தேன், செய்து கொண்டு இருக்கிறேன்…இனியும் செய்வேன் என்னை பொருத்த வரைக்கும் மனுஷரிடையே எந்த ஏற்ற தாழ்வும் இல்லை.
உங்க மருமகளை காப்பாற்றும் போது…அவங்க சி.எம் பேத்தி என தெரியாது என் கண்ணுக்கு முன்னாடி தெரிந்தது எல்லாம்…அவங்க கலை மட்டும் தான் நம்ம நாட்டின் ஒரு சிறந்த கலைஞரை காப்பாற்ற வேணும்.
ஒரு ராணுவ வீரனாக மட்டுமல்ல…இந்த நாட்டின் குடிமகனாகவும் எனக்கு இருக்கும் கடமை அது…” என்றான்.
புவனா “ நீ சொன்னது பாதி உண்மை பாதி பொய் பவா…இந்த நான்கு வருடங்களில் உன்னை பற்றி தெரிந்து கொண்டதால் சொல்கிறேன்…நீ மயூரியை தெரிந்தது போல காட்டி கொள்ளாத காரணம்.
ஒன்று அவள் கோடீஸ்வர வீட்டு பெண்ணு…அடுத்து என் அண்ணன் அவரை உனக்கு எப்பவுமே பிடிக்காது…தியா கூட கோடீஸ்வர வீட்டு குழந்தை சி.எம் பேத்தி தான்…ஆனால் அவள் கூட நீ சகஜமாக தானே பழகுகிற.
இதை சொன்னால் உன் பதில் இதுவாக தான் இருக்கும்…தியா மூன்று வயது குழந்தை உங்க மருமகள் வளர்ந்த குமரி…
என் எல்லை எனக்கு எது என எனக்கு தெரியும்…அது தான் விலகி நிற்கிறேன் என்று சொல்வ…என்ன நான் சொன்னது சரி தானே…?
ஆனா மயூரி பற்றி உனக்கு சரியாக தெரியாது பவா…அவளும் கிட்ட தட்ட தியா பாப்பா போல தான் வளர்ந்த குழந்தை ஈரமான மனசு…
அவள் ராகவன் அண்ணன் பெண்ணு தான்… ஆனால் சியாமளா அண்ணி போல தங்கமான மனசு.
அவள் செய்து கொண்டு இருக்கும் சேவை உனக்கு தெரியாது…வலது கை கொடுப்பதை இடது கைக்கு கூட தெரிய கூடாது என நினைக்கும் குணம் அவளுக்கு…
தன் உயிரை, மானத்தை காத்த உனக்கு… பிரதியுபகாரம் செய்ய வேணும் என சொன்னாள்.
அதற்காக தான் இதை என் கிட்ட சொன்னாள்…ஆனால் எங்கே நீ தான் அவளை தெரிந்தது போல காட்டி கொள்ளவே இல்லை…
ஏன் பவா இந்த விலகல் நீ நேர் பாதையில் நடப்பவன் …அப்படி இருக்கும் போது எதற்காக இந்த விலகல், தயக்கம் எல்லாம்…? என கேட்டாள்.
மயில் ஆடி வரும்…
