12. அவளை மறக்கத்தான்

பாகம் 12  அவளை மறக்கத் தான்.

 

சுத்தமல்லி கிராமம். திருநெல்வேலி

 

அமலாவும்,அவள் அம்மா உமாராணியும்   அத்தை விசாலம் வீட்டில்   கைதிகள் போல்

அடைக்கப் படுகிறார்கள்.

அமலாவுக்கும், பெரிய மாமன் முத்து விற்கும் திருமண ஏற்பாடுகள்  நடக்கின்றது..

அமலாவிற்கு சந்தேகம்.  அத்தை எப்படி தன்னை மருமகளாக ஏற்றுக் கொண்டார்.

அதுவும், தான் விரும்பிய   கதிருக்கு திருமணம் செய்ய மாட்டாராம். பெரியவன் முத்து மாமாவிற்கு கட்டி வைப்பரராம்.

 

அது ஏன் என்று மனமும், மண்டையும் குழம்பியது. 

 

முத்து மாமா வந்ததை பார்த்ததும் புரிந்து போயிற்று.

 

வீல் சேரில் இரண்டும் கால்களும் , இடுப்புக்கு கீழ் செயலற்ற நிலையில்  வேலைக் காரர் ஒருவர்  வீல் சேரை தள்ளியபடி வந்தார். 

ஹாலில் நடுநாயமாக  வீல்சேரை   கொண்டு  நிறுத்தினார்கள்.

 

அவரைப் அப்படி பார்த்ததும், அத்தை செய்த கொடுமைகள்  மறந்து, “ஐய்யோ மாமா உங்களுக்கு என்ன ஆச்சு”…என்று  அமலாவும், “தம்பி  முத்து”……. என்று  கண்களில் நீர் சுரக்க உமாவும் ஓடோடிச்   சென்றனர்.

பெற்றது விசாலமாக இருந்தாலும், உமாவின் கைகளில் , தோளில், மார்பில் தவழ்ந்தவன். உமாவிற்கு திருமணம் ஆன புதிதில்   முத்து பிறந்தான்.

 

விசாலம் இயல்பாகவே சோம்பேறி அடுத்தவர்களை ஏவி வேலை வாங்கி பழக்கப்பட்டவர்.

 

ஏழைப்பெண் உமாவை, சத்யன் அமலாவின் ‘ தந்தையை கை பிடிக்க வேண்டியதா போச்சி. 

 

ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது, அது உமாவின் திருமணம் . மாப்பிள்ளை பையன் வேறொரு பெண்ணுடன் ஓடி போன  நிலையில் இவள்  ஊராரின் பேச்சுக்கும்,ஏச்சுக்கும் ஆளானாள்.

 

உமாவின் தந்தை தன் மகள் திருமணம் நின்று போனதை க் கண்டு துடித்தார்.

யார யாரிடமோ தன் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள கெஞ்சினார்.

ஒருவரும் முன் வரவில்லை.

 

பணம் இருந்தால் செய்துக் கொண்டு இருப்பார்கள்.

 

ஏழையின் சொல் நடு மண்டபத்தில்  விற்பனை ஆகாமல் இருந்தது.

 

மாப்பிள்ளை பையன் சத்யனுக்கு வேண்டப்பட்டவன். ஏழை வீட்டு திருமணம் என்பதால், சத்யன் வீட்டிலிருந்து ஒருவரும் வரவில்லை.இவர் மட்டுமே அத்திருமணத்தில் கலந்துக் கொண்டார்.

 

தாலி கட்டும் நேரத்தில், மாப்பிள்ளை பையன் பெண் வீட்டார் போட்ட நகையோடு ஓடிப் போனான்.

 

மண்டபமே அல்லோகல்லப்பட்டது.

 

பெண் வீட்டாரில் தாயும்,தந்தையும் கதறினார்கள்.

 

இந்த திருமணத்தை தன் சக்திக்கு மீறி செலவு செய்து இருந்தார்.

 

திருமண சந்தையில். திருமணம் நின்று போன மணமகளுக்கு வரன் தேடுவது என்றால்,  சாமானிய மக்களால் அவ்வளவு விலை கொடுத்து மாப்பிள்ளையை வாங்க முடியாது. அவமானம் ஒருபுறம். கதறினார்கள் ஊராரின்   ஏச்சுபேச்சுக்கு ஆளாக வேண்டிய நிலை.”

. அதனால் தன் உறவுகளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்.

ஓடிப்போன மணமகனும் சொந்தம்  தான். இதை எதிர் பார்க்க வில்லை.

சத்யனுக்கு அவர்கள் கதறியது மனதை எதோ செய்தது.. பெண் ஏழையென்றாலும், அடக்கத்திலும்,பண்பிலும் உயர்ந்தவளாக இருந்தாள். 

 

தன் வீட்டை கேட்காமல், அவனே ஒரு முடிவை எடுத்தான்.

 

உமாராணியை திருமணம் செய்ய முன் வந்தான்.

 

அவர்களிடம் “ உங்கள் மகளுக்கு  என்னை திருமணம் செய்யவிருப்பம் என்றால், நான் இத் திருமணததிற்கு ஒப்புக் கொள்கிறேன் “ என்றான்.

 

இவர்கள் வசதியான குடும்பம். ஒன்று போனால்  அதை விட நல்லதாக வரும் என்பார்களே, அது  தன் மகள்  விஷயத்தில் நடக்கிறதே என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

 

ஆனாலும் உள்ளுர உதறல். பெரிய இடம். அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா…….?

 அங்கு இருந்தவர்கள்  “ஒன்றும் யோசிக்க வேண்டாம். தம்பி தானா திருமணம் செய்ய முன் வந்திருக்கு.

ஒப்புக் கொள்.” என்று சொல்ல,

மணமேடையில் தயாராக அமர்ந்து இருக்கும் தன் பெண்ணின் நிலமையை 

யோசித்தார் .இதை விட்டால் நமக்கு வேறொரு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று ஒப்புக் கொண்டார்.

 

இப்படித் தன் அமலாவின் தாய், தந்தைக்கு திருமணமானது.

 

வீட்டிற்கு அவளை அழைத்து போனான்.

பார்த்ததும் கொந்தளித்தார்கள்.

 

உணர்ச்சி வேகத்தில் என்னென்னவோ

முடிவுகள் எடுத்துக்கிட்டு இருக்கான்” என்று   விசாலம் கத்தினார்.

 

உமாராணியும் இவர்கள் சமூகத்தை சேர்ந்தவள் என்பதால்  சேர்த்துக் கொண்டார்கள்  வீட்டு வேலைக்காரியாக.

 

இவளும் உழைக்க  தயங்குவதே இல்லை.

 

சத்யனுக்கும், உமாவுக்கும் அறிமுகம்  இல்லையென்றாலும், பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, காதலுடன் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

 

அவர்கள்  ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல், பாசம் இவற்றைப பார்த்து விசாலத்திற்கு வயிறு எரிந்தது.

 

இவர்கள் கொஞ்சம் பலத்து சிரித்தாலோ, பேசினாலோ  விசாலத்திற்கு கோபம் பொத்துக் கிட்டு வரும். 

சீர்  ஒன்றும் கொண்டு வராதவளை இந்த தம்பி இப்படி பார்த்துக் கொள்கிறானே.

உமாவை வேலை வாங்கி தன்  ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டாள்.

.

விசாலத்திற்கு முத்து பிறந்தான். உமாவே தன் குழந்தை போல சீராட்டி வளர்த்தாள்.

அடுத்து பிறந்த கதிரையும் அப்படியே வளர்த்தாள்.

உமாவிற்கு வேலை பளுவினால் இருமுறை கரு கலைந்தது.

 

கதிர் பிறந்து நான்கு வருடங்கள் கழித்து  அமலா பிறந்தாள்.

கரு உண்டான போதே உமாவை அவள் தாய் வீட்டில்  பிரசவம் வரை கவனமாக பார்த்துக்க சொல்லி விட்டான்.

 

விசாலம்  இதை பெரிய விஷயமாக ஊதி பெருசாக்கினாள்.

 

சத்யன் தன் வீட்டை விட்டு மனைவி, மகளுடன் தனியே சென்று விட்டான்.

 

வருமானம் போதவில்லையென்றாலும், நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

அப்பவே உறவு போன மாதிரி தான்.

அம்மாவை பார்த்துக்க ஆள் இல்லாததால், சத்யன் இறந்த பிறகும் அவர்களுடன் அனுப்பி வைத்தாள்.

 

இப்போது, அமலாவிற்கு திருமணம் முத்துவுடன்  என்பதை   ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

. தன் ஒரே மகள். கணவனிடம் இறக்கும் தருவாயில் சத்தியம் செய்து இருக்கிறாள்.

 

அமலாவை  நன்றாக வாழ வைப்பேன். அதன்படியே படிக்க வைத்தாள். வேலைக்கும் செல்கிறாள். அடுத்து  திருமணம் என்று இருக்கும் போது , அவளுக்கு நல்ல இடத்தில் கட்டி கொடுப்பேன். 

முத்து இந்த மாதிரி இருக்கும் நிலையில் திருமணம்  .,. அவனை எப்படி செய்ய முடியும்….? முடியாது – அமலாவின்  வாழ்க்கை சீரழிந்து போய்விடும்.

 

“அண்ணி, எனக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தீர்கள்  . என் இரண்டு கரு கலைப்பும்  தானாக ஆகவில்லை உங்களால் ஆனது என்று தெரியும்.”

 

இதைக் கேட்டு  ஆச்சியே “அடிப்பாவி” என்று தன் மகளை வைதார்..

“இதை உங்கள் தம்பிக்கும் சொல்லவில்லை .இதை விட ஒரு பெண்ணுக்கு என்ன கொடுமை செய்ய முடியும் என்று நினைத்தேன் “

ஆனால், அதை விட நீங்கள் இப்பொழுது செய்வது  மகா கேவலமா இருக்கு.”

“எனக்கு செய்தீர்கள். ஏற்றுக் கொண்டேன். என் மகளுக்கு செய்வதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏற்று கொள்ளவும் முடியாது. .”

 

“யார் செய்த பாவமோ, முத்துவிற்கு இப்படியாகி விட்டது. அவன்  திருமணத்திற்கு லாயகற்றவன்.

இதுவரை   நீங்கள் செய்த பாவத்திற்கு இவன் அனுபவிக்கிறான். மேலும்  பாவக் கணக்கை ஏற்றிக் கொள்ளாதீர்கள்.”

ஆச்சியும்  கண்கலங்கி தன் மகளிடம், “வேண்டாம்டி. அவளும் என் பேத்தி தான்.”

 

அடியாட்களுக்கு கண்  ஜாடை செய்தாள்.

 

ஆச்சியை இழுத்துக் கொண்டு போய் அடைத்தார்கள்.

 

“இதோ பார். அந்த நிலத்தை உன் பெயருக்கே மாற்றி தருகிறேன்.50 லட்சம் மேலே போகும். உன் வாழ்நாளில் பார்க்காத பணம்.”

“ச்சீய் நிறுத்து..நீ ஒரு கோடி கொடுத்தால், அது என் பெண் வாழ்க்கைக்கு ஈடாகுமா…

 

“கதிரும், இவளும் காதலித்து இருக்கிறார்கள். அவனுக்கு திருமணம். செய் .முத்துவை தன் வாழ்நாள் முழுக்க ஒரு அம்மாவைப் போல்., தாதியாக பார்த்துக் கொள்வாள்.”

 

அமலா, தன் அம்மாவிடம், “முத்து மாமாவிற்கு உடலில் ஊனம். கதிருக்கோ மனதில் ஊனம்.  எனக்கு அவன் தேவையில்லை.”

“எங்களை போக விடுங்கள்.”

 

………………………………

 

பிரசாத்  ஜெனிக்கு பொக்கே கொடுத்து விட்டு, மாலை  வந்து உன்னை பார்க்கிறேன். உன்னுடன் இருந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன் “ என்று  சொல்லிவிட்டு சென்றான்.

 

திருந்தாத ஜென்மம்  என்று   கடுகடுத்தாள்.

சே… இதென்ன தொல்லை ஈவினிங் வேற வருவானாக்கும்.

இந்த அம்மா வேறு, அவன் உன்னை பார்த்துக் கொள்ளாமல் வேறு யார் உன்னை பார்த்துக் கொள்ள முடியும் என்று சப்போர்ட் வேற

 

தினேஷிடமிருந்து   போன் வரவே, ராஜம்மாவிடம் கொடு என்றான்.

“இப்போ, டெம்பரேச்சர் பாருங்கள். மூன்று மணிக்கு பார்த்தீர்கள் அல்லவா. ‘

 

‘ஆமாம். தம்பி. இப்போது பார்த்தால் சரியாக இருக்கும்.’

 

பார்த்தால்  டெம்பரேச்சர்  உயர்ந்து இருந்தது. மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.

 

ஜெனியிடம், “ஆம்புலன்ஸ் அனுப்புகிறேன். அட்மிஷன் போட்டுக்கலாம். இங்கு நிம்மதியா இருக்கலாம்  “என்றதும்,

ஒப்புக் கொண்டாள்.

 

முரளியிடம்,தினேஷ் விபரத்தை கூறி. அவளை அட்மிட் செய்ய சொன்னான்.

அவனும்  அப்பா மகேந்திரனும் பெங்களூர் ஸைட்டை பார்க்க போயிருந்தார்கள்.

 

மகேந்திரன், சுதாவிடம் போன் செய்து  “நீ  அவளுடன் ஆஸ்பிட்டல் போ” என்று சொல்ல,  “எனக்கு முக்கியமான  வேலை இருக்கிறது. இப்போது சொன்னால் எப்படி :”

 

‘உடம்புக்கு  வருவது எல்லாம் எதிர்பாராதது தான். நீ அவள் அம்மா தானே.”

“‘சரி. நீங்கள்  இந்த பிரச்சனைய விடுங்கள்.நான் என்ன செய்வது என்று யோசிக்கிறேன். உங்க டிரிப்பை நல்லபடியா முடித்து விட்டு வாருங்கள்.”

ராஜம்மாவை..அழைத்தார்.

“நீ  ஜெனியுடன் ஆம்புலன்ஸில் போ. அவனை பத்திரமா பார்த்துக் கொள். “

 

“சரிங்கம்மா”..

 

அந்த ஆஸ்பிட்டலுக்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது. கார்ப்ரேட்ஆஸ்பிடல் மாதிரி பளபளப்பாக இல்லாமல்,   வேப்பமரமும், புங்கை மரமும்  ஓங்கி வளர்ந்து  இயற்கை சூழலோடு, கூடவே பூக்களின் நறுமணத்தோடு  காணப்பட்டது.

 

வாசலிலே தினேஷ் நின்று ஜெனியை வரவேற்றான்

மிகவும் சோர்வாக  காணப்பட்டாள். 

அட்டெண்டர் ஒருவர், அவளை பார்த்ததும் வீல் சேர் கொண்டு வர, அதனை நன்றி  சொல்லி மறுத்து விட்டு,  அவன்  தன்தோளில் சாய்த்து அவளின் கைகளை இறுக பற்றிக் கொண்டு, ஸ்பெஷல் அறைக்கு  அழைத்துச் சென்றான்.

கைகளிலே சூடு தெரிந்தது.

 

ஜெரைல் பிசிஷியன்   பார்த்து விட்டு சென்றார்.

மனதை  ரிலாக்ஸாக வைத்து இருங்கள்.  சரியாகி விடும். டேக் கேர் “ என்று சொல்லிவிட்டு சென்றார்.

 

தினேஷ் அவளை தூங்க சொல்லிவிட்டு மதியத்திலிருந்து லீவு சொல்லிவிட்டான். 

அம்மாவிடம் சொல்லி  சாப்பாடு கொடுத்து விடச் சொன்னான்.

 

ராஜம்மா இவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு, தானும் சாப்பிட்டார்.

 

சாம்பார் மிகவும் வித்யாசமாக இருந்தது.

“ராஜம்மா உலகத்தில உங்கள் சாம்பார் தான் பெஸ்ட் ன்று நினைத்திருந்தேன்.” 

“இந்த சாம்பார் ரொம்ப டேஸ்ட் டா இருக்குல்ல.”

தினேஷ், “ஆமாம். என் அம்மா  திருவையாறு. ஒவ்வொர்  ஊரிலும் ஒரு மாதிரி வைப்பார்கள்.அவர்கள் வைக்கும் சாம்பார் ரொம்ப டேஸ்டாக இருக்கும்.”

 

“அதனால், உனக்கு இதை செய்யச் சொன்னேன்”.

 

“நானும்,மேடமிடம்  கற்றுக் கொள்கிறேன் என்று ராஜம் சொல்ல,

இங்கு வருவார். ‘அப்போது கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

“சரி. ஜெனி. நீ ரூமிலே இருக்க வேண்டாம். இந்த வளாகம் பெரியது. நிறைய நிழல் தரும் மரங்கள் இருக்கிறது.”

“வா” என்றான்.

 

டெம்பரேச்சர் குறைந்து இருந்தது.

சாப்பிட்ட தெம்புடன் அவனுடன் சென்றாள்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

  ‘

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page