பாகம். 13.
விமானத்தில் தன் கடந்த காலத்தை , தன் நெஞ்சில் பசுமை மாறாமல்
இருந்த நினைவுகளை நினைத்துக் கொண்டு கண்மூடி லயித்துக் கொண்டியிருந்தான்.
அப்போது பைலட்டிடம் இருந்து அனொன்ஸ்மெண்ட் வந்தது.
விமான கொந்தளிப்பு (Turbulence)
ஏற்பட்டு இருக்கு. அனைவரும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளுங்கள் என்று
சொன்னார்.
விமான பணிப்பெண் ஒவ்வொரும் சீட் பெல்ட் போட்டு இருக்கிறார்களா என்று
செக் செய்து விட்டு தானும் தன் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டாள்.
இவன் அருகிலிருந்த அம்மாள் பய படத் தொடங்கினார். முதல் விமான பயணமாம்.
அவரிடம், “ பயபடத்தேவை இல்லை. இது சாதாரண நிகழ்வு தான்.Turbulence என்பது வளி மண்டலத்தில் ஏற்படும் காற்று
மாற்றங்களால், விமானம் தீடீரென குலுங்கும்,அல்லது கீழே விழுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
சீல்பெல்ட் அணிந்திருந்தால் போதும். இது முற்றிலும் பாதுகாப்பானது.”
என்றாலும்,
அவர் பதட்டமாகவே இருந்தார்.
“மூச்சு பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…உங்கள் பதற்றத்தை குறைக்கும்” என்று சொல்லி அவரை சமன் நிலைக்கு கொண்டுவந்தான்.
சிறிது நேரத்திலே Turbulence சரியாகி விட்டது.
இந்த கொந்தளிப்பு சரியாகிவிட்டது.
ஆனால்,அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்க வில்லையே…
ஹேர்ஹோஸ்டஸ் .அனைவருக்கும் தண்ணீர் வழங்கினாள்.
இவன் குடித்ததும், புரை ஏறியது.
‘
அவள் ஏன் என்னை நினைக்கப் போகிறாள். அவள் வாழ்வில் தான் நான் இல்லையே…
இப்படி நினைக்க அவனுக்கு ஆயாசம் ஏற்பட்டது.
ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.
மேகத்திற்குள் நுழைந்து விமானம் வெளியே வந்தது.
அங்கு என் ஜெனி இருக்கிறாள்.
பார்த்து பார்த்து என்று கதற தோனியது.
மேகத்திற்குள் இந்த விமானம் என்னை இறக்கி விடாதா…..
தொடும் தூரத்தில் மேகத்தினுடே அவள் இருந்தாலும், தொட முடியாத நிலை எண்ணி வருந்தினான்.
“நான் அவளை அந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தையை உபயோக படுத்தி இருக்கக் கூடாதோ..அவள் செய்தது சரிதான் என்று என்னால ஏன் ஏற்று கொள்ள முடியாமல் போய் விட்டது.
நான் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். இதயத்தை பற்றி தெரிந்த அளவுக்கு, உள்ளுணர்வை, அதன் வலியை தெரிந்துக் கொள்ளவில்லையே… அவள் மீதான பிரியம், காதல் எங்கோ போயிற்று.
எல்லோரையும் போல், காதலியை தன்னுடையவளா ஆக்கிக் கொள்ள மட்டும் தானா அந்த காதல் …….
உன்னிடம் என் மீது காதலே இல்லை என்று அபாண்டமாக பழியை தூக்கி போட்டாளே…
நான்அவளை நல்லவிதமா பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேனே… புரிந்து கொள்ளாமலே போய் விட்டாளே என்று மனம் மறுபடியும் முருகைமரம் ஏறியது.
லேசாக தன் தலையிலே அடித்துக் கொண்டான்.
அவ் வழியே விமான பணிப்பெண் “உங்களுக்கு ஏதாவது உதவி தேவை படுகிறதா..”என்று அக்கறையாக கேட்டாள்.
நானும் எ ன்னை அறியாமல்,.
ஆமாம். மேகத்தில் என் ஜெனி ஒளிந்து கொண்டு இருக்கிறாள்.
அவளிடம் போக வேண்டும். என்னை இறக்கி விடுங்கள்.”என்று சொல்ல,
அவள் அதிர்ந்து, சூடா காப்பி போட்டு எடுத்து வந்தாள்.
அவனிடம் “ ப்ளீஸ் ஹேவ் எ கப் ஆப் காபி “என்றதும் ,எடுத்துக்கொண்டான்.
.விமானத்தில் கொடுக்கப்பட்ட தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான்.
கே.ஜே. யேசுதாஸ் பாட்டை கேட்க வேண்டும் போலிருந்தது.
“உன் பெயர் உச்சரிக்கும்
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது
வேனிற்காலம் தான்.
என் மனம் உன் வசமே
கண்ணில் என்றும் உன் சொப்பனம்
உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல
ஏது வாசகம்……..
காதில் ஹெட்போன் போட்டுக் கொண்டு பாட்டு கேட்க, யேசுதாஸ் குரல் அப்படியே உள்ளத்தை கிறங்கடித்தது.
அப்படியே கண்ணயர்ந்தான்.
இவன் வேலை செய்த ஆஸ்பிட்டல் வந்தது.
ஜெனி.. உடம்பு சரியில்லாமல் அட்மிட் ஆகியிருந்த நிலையில், அவளை ரூமிலே அடைந்து இருக்க வேண்டாம் என்று 3வது மாடியில் இருந்த அந்த ஏசி அறையின் கதவை திறந்து, தினேஷ் மெல்ல அவளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.
உடல் சோர்வாக இருந்தாலும் தினேஷின் அருகாமை ஜெனிக்கு ஒரு புது தெம்பை தந்தது .
இருவரும் ஒரு மரத்தடியில் இருந்த கல்லு இருக்கையில் அமர்ந்தார்கள் .
அந்த மாலை வேலையில் சென்னையின் புழுக்கத்தை தணிக்கும் விதமாக கடலில் இருந்து ஒரு மெல்லிய காற்று தோட்டத்திற்குள் நுழைந்து இவர்களை வருடி கொண்டிருந்தது .
நந்தியாவட்டை பூக்களின் மனம் காற்றில் தவழ்ந்து வந்தது.
தினேஷ் அவள் கையை மெதுவாக பற்றிக் கொண்டான் .
“இந்த இடம் ரொம்ப அமைதியா அழகா இருக்கு.”
“ஆமாம். எனக்கு பிரேக் கிடைத்தால் இங்கு தான் வருவேன். ரொம்ப ரிலாக்ஸா இருக்கும்”.
“பொதுமக்கள் வர முடியாது போல இருக்கே. “‘
“ஆமாம். மருத்துவமனைக்கு வருபவர்கள் இங்கே வர அனுமதியில்லை.”
iஇந்த ஆஸ்பிட்டல் தாளாளர் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.”
“ம்ம்ம்… பிரியாணி பாய்,ஆஸ்பிட்டல் ஓனர் இப்படி பெரிய இடம் சகவாசம் இருக்கு போல இருக்கு. சமூகம் பெரிய இடம் தான் போல இருக்கு.”
“இவர்கள் மட்டுமில்லை. தெரு ஓரத்தில் அயர்ன் கடை வைத்திருக்கும் முருகன்– இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு”..
“உன்னை ஏன் விட்ட . நீயும் பெரிய இடம் தானே”.
“நானா”…
“ஆமாம்”.
“நான் ஒரு ஐ.டி. ஊழியர் அவ்வளவு தான்.”
“இருக்கட்டும். தன்னடக்கம் வேண்டும் தான். இது ரொம்ப ஓவர்”.
ஜெனி சிரித்ததை பார்த்துக் கொண்டே இருந்தான்.
“நீ இப்படி சிரித்ததை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு”.
ஹோட்டலில் பார்க்கும் போது அவ்வளவு டென்ஷனா இருந்த,
“சொல்லுடா. உனக்கு ஏன் இவ்வளவு ஸ்டெரஸ். டாக்டர் சொன்னார். அவங்க எதோ மன அழுத்தத்தில் இருக்காங்க. யாராவது அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். “ என்றார்.
ஜெனியின் பார்வை எங்கோ இருந்தது.
“ஜெனிம்மா”…….எ ன்று கூப்பிட
“ம்ம்ம்…. சொல்லு”.
“உனக்கு என்ன யாரால் பிரச்சனை எதோ மனதில் போட்டு குழம்பி இருக்க”
“பிரசாத் உனக்கு தெரியாது இல்ல. அவன் என் அண்ணியின் அண்ணன்.ரொம்ப தொல்லை கொடுக்கிறான். என் அம்மாவின் சப்போர்ட் வேறு.”
அன்று IT.C. யில் நடந்ததை சொன்னாள்.
அந்த நடிகனை பற்றியும் சொன்னாள்.
“ என்னை வரச் சொன்னியே.. அன்றா”…? என்று கேட்க,
ஆமாம் என்று தலையாட்டினாள்.
“நீ அப்பவே சொல்லி இருந்தால், நான் அவர்களை சும்மா விட்டு இருக்க மாட்டேன்.
“ஹோட்டலில் பிரச்சனை வேண்டாம். “
“அவர்களுக்கு மேலிடத்தில் இன்புளுயன்ஸ் இருக்கு. “
iபிரச்சனையை சரி பண்ண பார்க்கணும். மேலும், மேலும் வளர்த்துக்க கூடாது.”
“அதனால் தான் நானே அவர்களை ஒன்றும் செய்யாமல் வந்து விட்டேன்.”
iஎன் அண்ணன் முரளி, என்முகத்தை பார்த்து நடந்ததை தெரிந்துக் கொண்டார்.”
மறுநாள் அந்த நடிகனுக்கு நடந்த விபரீதத்தை பற்றிச் சொன்னாள்.
“அதை செய்தது என் அண்ணனாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த பிரசாத் வேறு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். அண்ணிக்கு உறவாக போயிட்டான்.
என்னால் எதிர்த்து போக முடியல . அட்வான்டேஜாக எடுத்துக் கொள்கிறான்.
அளவுக்கு மீறுகிறான். நான் எதாவது சொல்லப் போக, அது அண்ணன் வாழ்க்கையை பாதிக்கும்.”
“பிரசாத்திற்குகு எங்கள் சொத்தின் மீது ஒரு கண். அதுவுமில்லாமல் எனக்கு கம்பெனி ஷேர்ஸ், என் அண்ணனுக்கு ஈக்குவலா இருக்கு.
பேசாமல் அண்ணி பெயருக்கு மாற்றி கொடுக்கலாம் என்று பார்க்கிறேன்”.
பேசாமல் கேட்டுக் கொண்டான். பணம் விடியம்பேசும் போது, எந்த கருத்தையும் நாம் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்திருந்தான்..
பிரசாத் இவனிடம் காலையில் போட்ட சண்டையை சொன்னான்.
“அடபாவி……அவனுக்கு சரியா பாடம் கற்று கொடுக்க வேண்டும்”.
“கொஞ்ச தூரம் காலர நடக்கலாம்.”
ஓ…….தாராளமா நடக்கலாமே.”.
“ஜெனி”…
“ம்ம்ம்”…
“எங்க பாஸ் என்னை லண்டனுக்கு போகச் சொல்கிறார். அவரே எல்லாசெலவையும்,
ஏற்றுக் கொள்கிறாராம்.”
“நல்ல விஷயம் தானே. ஒப்புக் கொள்..
“உன்னை விட்டு நான் எப்படி”..?
“என்னை விட்டு ஏன் போக வேண்டும்”.
“பின்ன”……?.
“நாம திருமணம் செய்துக் கொள்ளலாம்”.
“உன் வீட்டில என்னை ஒப்புக் கொள்வார்களா”..?.
“நெவர்”
“பின்ன எப்படி.….?.
“ஒருவருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.”
“அப்படித்தான் நடக்க வேண்டும்….
நாம்காதலிப்பதை சொல்வோம். ஒப்புக் கொண்டால் சரி. “என்ற தினேஷை பாவமாக பார்த்தாள்.
“எனக்கு என்ன ஸ்டெர்ஸ் என்று கேட்டாயே. “
“சொல்றேன். பிரசாத் கெட்டவன் தான். ஆனால் முட்டாள். சமாளித்து விடலாம்.”
“வேறு எதாவது பிரச்சனையா”..
“ஆமாம். அண்ணனும். அப்பாவும் பெங்களூர் போய் இருப்பது ஸைட் பார்க்க இல்லை… காலி மனையை பார்த்து என்ன பண்ண போகிறார்கள்.’
“தி கிரேட் இன்டஸ்ரியலிஸ்ட் விக்ரமின் ஒரே மகன் கல்யாண்னை திருமணம் பேச போய்க்
இருக்கிறார்கள்.”
“இந்த பிரச்சாத்தால் வந்த வினை..
இதுவரை என் இஷ்டப்படி தான் வாழ்ந்தேன். எப்போது, பிரசாத் நுழைந்தானோ,இவர்கள் எனக்கு வரனை தேட ஆரம்பித்தார்கள்.”
“இது அம்மாவிற்கும், அண்ணிக்கும் தெரியாது”.
“அண்ணனுக்கு பிரசாத்தை பிடிக்காது.”
“ஏன். அவரின் மச்சினன் தானே”.
“அது அவரின் கல்யாணத்தின் போது, வந்த வினை. அப்போதிலிருந்தே இருவருக்கும்
புகைச்சல்.”
“ரிசப்ஷனில் அண்ணன் தோழிகள் வந்துஇருந்தார்கள். பிரசாத்தும், அவன் நண்பர்களும் அவர்களை கிண்டல் செய்ய போக அதில் பிரீத்தி என்ற பெண் இவனோட நண்பன் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
இதை பிரசாத் ஊதி பெருசாக்கி என் அண்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரகளை செய்தான்”.
“பிரீத்தியை பிஸிக்கல் டச் செய்து விட்டான் போலும். அதனால் தான் அடிவாங்கினான்.
முரளி அண்ணனும், அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று ரூமிற்குள் அழைத்து போய் வெளுத்து வாங்கினார்.”
“அந்த கோவத்தில் காசி யாத்திரைக்கு நலங்கு இட மாட்டேன் என்று என் அண்ணனை அவமான படுத்தினான். எப்படியாவது தன் மகளுக்கு திருமணம் ஆனால், போதும் என்று
அண்ணியின் அப்பா அம்மா, வேறு ஒரு உறவு மச்சினை வைத்து அந்த சடங்கை செய்து முடித்தார்கள்.”
“அன்றிலிருந்து இருவருக்கும் புகைச்சல் தான்.”
சரி. விடு. அவனை பார்த்துக்கலாம்.”
அங்கிருக்கும் ஒரு ரோஜாவை பறித்து, அவளிடம் கொடுத்தான்.
வாங்கிக் கொண்டாள்.
கடற்கரை காற்று பலமாக வீசி, இருவரையும் தழுவியது.
அவளை அணைத்துக் கொண்டே நடந்தான்.
“நம் திருமணம் பெரும் போராட்டமாகத்தான் நடக்கப போகிறது.”
“பார்த்துக்கலாம் ஜெனி. நாம உறுதியா இருந்தால் போதும்.
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நாம் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என்று ஜெனி காதலுடன் சொல்ல,
தினேஷ்க்கு இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“சரி. நேரமாகிவிட்டது. போகலாம்.”
அவள் அறையில், பிரசாத் காத்திருந்தான்.
தொடரும்.
.
.
.
