இதழ் – 27

காரில் இருந்து இறங்கிய ராகவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றுவிட்டாள் அருவி.

அவள் அருகில் வந்தவன் கூலிங் கிளாஸை கழட்டிவிட்டு மெதுவாகச் சிரித்தான்.  

“அருவி, உன் கையில் இருக்கும் பூங்கொத்தை சார் கிட்டக் குடுடி” என்றாள் சங்கீதா அவள் காதில் மெதுவாக.

அப்பொழுதும் அவள் சுயநினைவு இல்லாமல் இருக்க, “அருவி…” என அவள் கையைப் பிடித்து இழுத்தான். அப்பொழுதுதான் நினைவுக்கு வந்த அருவி தன்னைச் சுற்றிப் பார்த்தாள். 

அனைவரும் நின்றிருப்பதை உணர்ந்து,  

“வெல்கம் சார்” என்று ராகவன் கையில் பூங்கொத்தைக் கொடுத்தாள்.

“தேங்க்யூ” என்றவன் சிரித்த முகமாக வாங்கிக் கொண்டான். உள்ளே சென்றதும் அனைவரையும் ராகவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் விக்னேஷ்.

ஒவ்வொருவராகத் தங்கள் பெயரைக் கூற, அருவி அமைதியாக நின்றாள்.

“உன்னத் தாண்டி உன் பேர் சொல்லு” என்றாள் சங்கீதா.

“அருவி” என்றாள் மெதுவாக.

“இவங்களதான் ராகவ் உனக்கு PA-வா அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்” என்றான் விக்னேஷ்.

“ஓகே” என்றவன் தன் கேபினுக்குச் சென்றான்.

தன் இருக்கையில் அமர்ந்த அருவிக்கு வேர்த்துக் கொட்டியது. அவள் கண்ணைத் தானே நம்ப முடியவில்லை.  

“இவர் எப்படி இங்க வந்தார்? இவர்தான் புது MD-யா? இனிமே இங்க ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது” என்று நினைத்தவள் வேகமாக லெட்டர் எழுதத் தொடங்கினாள்.

“நம்ம புது MD இவ்ளோ அழகா இருப்பாருன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. இவர் விக்னேஷ விட ரொம்ப அழகா இருக்காரு” என்றாள் ஷீலா.

“நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இவரை கண்டிப்பா வளச்சுப் போட்டு நாள் லைஃப்ல செட்டில் ஆகிடும்” என்றாள் ரூபா.

“கண்டிப்பா என் அழகுல இவர் மயங்கிடுவார்” என்று ரூபா மனதில் நினைத்தாள்.

“என்னோட பேச்சுத் திறமைக்கு எப்படியாவது இவரை வளைச்சுப் போட்டுருவேன்” என்று ஷீலா மனதிற்குள் நினைத்தாள்.

“ஏய்! அருவி, உன்னத் தாண்டி MD கூப்பிடுறார். உனக்கு என்ன ஆச்சு? காலைல நல்லாதான் இருந்த. இப்ப ஏன் என்னவோ போல இருக்க?”  

“அது வந்து…” என அருவி தடுமாறினாள்.

மீண்டும் அவளை அழைத்தான் ராகவன்.

அவன் கேபினுக்குள் சென்றவள் வேகமாகத் தன் கையில் இருந்த கடிதத்தை அவன் முன்னால் வைத்தாள்.

“என்ன இது?”

“என்னோட ராஜினாமா கடிதம்.”

“நான் நெனச்சேன்… இதுதான் நீ செய்வேனு” என்பது போல் அவன் அவளைப் பார்த்தான்.

அவனைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி.

அவன் எழுந்து நின்றது தான் தாமதம். 

அவனைப் பார்த்து நடுங்கியவள்,  

“இங்க பாருங்க… நீங்கதான் என் புது MD-யா வருவீங்கன்னு எனக்குத் தெரியாது. உங்க கண்ணுல படக்கூடாதுனுதான் நான் ரொம்ப தூரமா வந்தேன். நான் சொல்றதை தயவுசெய்து கேளுங்க. என்னை மன்னிச்சிடுங்க. நடந்த விஷயத்துல என் தப்பு எதுவுமே இல்லை. என்னை எதுவும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ்” என்றாள் நடுங்கும் குரலில்.

அவள் பேசியதைக் கேட்டவனுக்கு உள்ளுக்குள் அப்படி வலித்தது.

“அருவி, நான் என்ன சொல்றேன்னா…”

“நான்தான் நீங்க சொன்ன மாதிரி உங்களை விட்டு வந்துட்டேன்ல. அப்புறம் ஏன் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்துருக்கீங்க? ப்ளீஸ்… நீங்க பேசுன பேச்சுலேயே நான் பாதி செத்துட்டேன். தயவுசெய்து என்னை விட்டுடுங்க” எனக் கதறினாள் அருவி.

“Shut up” என்றான். அவள் வாயை மூடிக்கொண்டாள்.

“இப்ப நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன். Sorry” என்றான்.

அவளுக்கு புரியவில்லை. இந்த ராகவன் அவளுக்கு புதிதாகத் தெரிந்தான்.

“நீங்க என்கிட்ட சாரி?”

“ஆமா! நான் உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துகிட்டேன். அதனால என்னை…”

“பேசுறது நீங்கதானா?!” எனத் திக்கித் திக்கிக் கேட்டாள்.

அவள் கையைப் பிடித்தவன், “நான் ஏன் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்னு சொல்றேன்” எனக் கூறி முடிக்கும் முன், அவன் கன்னத்தில் “பளார்” என அறைந்தாள் அருவி.

இதை அவன் எதிர்பார்த்தது தான். அதனால் அமைதியாக நின்றிருந்தான். அவனை அடித்தவள் வேகமாகச் செல்லப் போக, அவள் கையை மீண்டும் பிடித்தான்.

“எங்க போற அருவி?”

“நான் என் ராஜினாமா லெட்டரை உங்ககிட்டக் கொடுத்துட்டேன். இந்த வேலையை விட்டு போறேன்.”

“ஏன்?”

“எனக்கு இந்த வேலை வேணாம்.”

“அப்படி எல்லாம் நீ சாதாரணமா போயிட முடியாது.”

“நீங்க என்ன சொல்றீங்க?” என அவன் கையை உதறியபடி கேட்டாள்.

“ஆமா டியர். நீ ஏற்கனவே மூணு வருஷம் அக்ரிமெண்ட்ல சைன் பண்ணியிருக்க. அதனால நீ கண்டிப்பா இந்த ஆபீஸ்லதான் வேலை பார்த்தாகணும். ஐ மீன்… எனக்கு PA-வா. உன்னால என்னை விட்டு எங்கேயும் போக முடியாது” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.

“நீங்க முடிவு பண்ணா போதுமா? என்னால இங்க ஒரு நிமிஷம் கூட வேலை பார்க்க முடியாது” என்றாள் கோபத்துடன்.

“அப்டினா உன்னால வேற எங்கயும் வேலை பார்க்க முடியாது.”

“நீங்க இருக்கும் இடத்துல நான் இருக்க மாட்டேன்” என்றவள் கதவருகே சென்றாள்.

“அப்போ ஆபீஸை இழுத்து மூடிட வேண்டியதுதான்” என்றான்.

அவன் பேச்சில் அப்படியே நின்றவள் திரும்பிப் பார்த்து, “இப்ப என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

“நீ இங்க வேலை பார்க்கலைன்னா இந்த ஆபீஸை நான் இப்பவே க்ளோஸ் பண்ணிடுவேன். அப்புறம் இங்க வேலை பார்க்கிற அத்தனை பேரோட வேலையும் காலியாகிடும்.”

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவள் பேச்சற்று நின்றாள்.

“மேடம், நல்லா யோசிச்சு முடிவு எடு” என்றான்.

“நீங்கள்லாம் ஒரு மனுஷனா… இப்படி பிளாக்மெயில் பண்றீங்க?”

“அப்போ நீ இங்க வேலை பார்க்குறேன்னு சொல்லு. இல்லன்னா நான் இப்பவே சைன் பண்ணிடுவேன்” என்றவன் பைலை எடுக்கப் போனான்.

“இல்ல… வேண்டாம்” என்றாள்.

“அப்போ இங்க…”

“வேலை பார்க்கிறேன்” என்றவள் வேகமாக வெளியே வந்து தன் இருக்கையில் கோவத்துடன் அமர்ந்தாள்.

“என்னாச்சு டி? கோவமா இருக்க?” என அவளிடம் கேட்டாள் சங்கீதா.

“இவ முகத்தைப் பார்க்கப் பிடிக்காம பாஸ் திட்டிருப்பார்” எனச் சிரித்தாள் ரூபா. அதைக் கேட்டு ஷீலாவும் சிரித்தாள்.

வேகமாக அவர்களிடம் வந்த அருவி இரண்டு பேரின் கன்னத்திலும் “பளார்… பளார்” என அறைந்தாள்.

அவளின் இந்த அடியை எதிர்பார்க்காத இருவரும் வாயை மூடிக்கொண்டனர்.

சற்று நேரத்தில் சங்கீதாவை அழைத்தான் விக்னேஷ்.

“சொல்லுங்க.”

“அருவிக்கு என்னாச்சு? ஏன்… என்னவோ போல இருக்காங்க?”

“தெரியல சார். எனக்கும் ஒண்ணும் புரியல. நான் அவகிட்டக் கேக்குறேன்” என்றாள்.

மறுநாள், “ராகவ் நம்ம கிட்ட பிசினஸ் வச்சிருக்கவங்க உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க.”

“ஓகே, அரேஞ்ச் பண்ணிடு. அப்புறம் நீ?”

“நான் மலேசியா வரை போக வேண்டியிருக்கு.”

“ஓகே டா. வேலை முடிஞ்சதும் போன் பண்ணு.”

“ஓகே மச்சான்” என்ற விக்னேஷ் சங்கீதாவுக்கு போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு மலேசியா சென்றான்.

ஆபீஸ் வந்த அருவி, “இன்னக்கி அவர் என்ன சொன்னாலும் நம்ம கேட்கவே கூடாது” என முடிவெடுத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் ஒருவன் வர, அவன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் ராகவன்.

“உங்க கூட பிசினஸ் வச்சிக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றான் அவன்.

“ம்.”

“அப்புறம் உங்க ஆபீஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” என்றான் ராகவன் அருகில் நின்றிருந்த அருவியை ஒரு மாதிரியாகப் பார்த்து.

“பொறுக்கி… எப்படி பாக்குறான் பாரு” என அவனை அவள் வாய்க்குள் திட்டினாள்.

“மிஸ்டர் ரகு, உங்க கூட பிசினஸ் வச்சிக்க எனக்கு விருப்பம் இல்ல” என்றான் ராகவன்.

“வாட்! பாதி வேலை முடிஞ்சிடுச்சு. இப்ப இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?” எனக் கேட்டான் ரகு.

“எனக்குப் புடிக்கலைன்னு அர்த்தம். நீங்க போகலாம்.”

“நீங்க இதனால பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.”

“பார்த்துக்கலாம் போடா” என்றான் ராகவன்.

அவனை முறைத்தபடி வெளியே சென்றான் ரகு.

அமைதியாக வெளியே வந்தவளின் சேலையைப் பிடித்து இழுத்தான் ராகவன்.

“பளார்” என அறைந்தவள், “உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? ஏன் இப்படிப் பண்றீங்க?”

“நான் சொல்றதை கேளு அருவி.”

“நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்றவள் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருக்க, சட்டென அவளை இழுத்தணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ராகவன்.

அவனிடமிருந்து விலக முடியாமல் அவன் மார்பில் தன் கைகளால் அடித்தவள், அவனை விலக்கிவிட்டு வெளியே வந்தாள்.

“கடவுளே! யாரைப் பார்க்கக் கூடாதுனு நினைச்சேனோ… அவர் முன்னாடி வந்து நிக்கிறார். இப்ப என்ன பண்றது? என்னை அவ்வளவு கொடுமை பண்ணிட்டு இப்ப வந்து சாரின்னு கேட்டா என்னால எப்படி மன்னிக்க முடியும்? அருவி… அவர் என்ன சொன்னாலும் நீ அவர் பேச்சுல மயங்கிடாதே… அவரை மன்னிக்கவே கூடாது” எனத் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டிருக்க, அவளை இன்டர்காமில் அழைத்தான்.

“ஹலோ!”

“என்ன பண்றீங்க மேடம்?”

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்? சொல்லுங்க.”

“மேடம்… ரொம்ப சூடா இருக்கீங்க போல.”

“அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்.”

“சரி… நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“அதனால…”

“எனக்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு.”

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?”

“நானே ஆர்டர் போட்டுட்டேன். வந்ததும் நீயே கொண்டு வா” எனக் கூறி போனை வைத்தான்.

பத்து நிமிடத்தில் ஐஸ்கிரீம் வந்தது. அதை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்றாள். அவளைப் பார்த்து அழகாகச் சிரித்தான் ராகவன்.

வேகமாக ஐஸ்கிரீமை டேபிளில் வைத்தாள்.

“அருவி… என் மேல உனக்கு கோவமா?”

“ரொம்ப.”

“இது என்னது?”

“ஐஸ்கிரீம்.”

“என் மேல இருக்க கோவத்துல நீ எதுல ஏதாவது கலந்திருப்பேன்னு எனக்குத் தோணுது” என்றான் சாதாரணமாக.

“என்னது? விஷமா?” எனக் கேட்டாள்.

“ஆமா! எனக்கு அப்படித்தான் தோணுது.”

“நான் இதை எப்பவோ செஞ்சிருக்கணும்… உங்களை விட்டு வச்சது என் தப்புதான்” என நினைத்தாள்.

“இப்போ நீ உன் மனசுக்குள்ள என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும். சொல்லட்டுமா?”

“சொல்லுங்க… பார்ப்போம்.”

“இவர் நம்மளை எப்போ கட்டிப்புடிப்பார்… முத்தம் கொடுப்பார்… அப்படித்தான் நெனைக்கிற”  

“இல்லை” என வேகமாகத் தலையசைத்தாள் அருவி.

❤️ அடுத்து என்னாகும்? தெரிஞ்சுக்க அடுத்த எபிஸோடை மிஸ் பண்ணாம படிங்க ♥️

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,337 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page