பாகம் – 36
” வருடா வருடம் நம்ம இதே மாதிரி பிள்ளைகள் பிறந்தநாளை சேர்ந்து கொண்டாட வேண்டும் டா..நீ ஒரு வருடம் நான் ஒரு வருடம் என்று… நம்ம எத்தனை காலமானாலும் பிரியவே கூடாதுடா. ” என்று ..
எனக்கும் அது பிடித்தது.. அதனால்தான் உன்னிடம் கூடஅனுமதி கேட்காமல் சரி என ஒத்துக் கொண்டு விட்டேன். உனக்கு பரவாயில்லை தானே டி..” உன்னால் அங்க வர முடியும் தானே.. “
“ அவங்க இங்க வர முடிந்த போது என்னால் அங்க போக முடியாதாங்க. கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு பத்மாக்கா முகத்தில் எந்த கஷ்டத்தையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாக வந்து இருக்காங்க பாருங்க ..அவங்க கிட்ட நானும் நிறைய கற்றுக் கொள்ளணும் போல… எத்தனை அமைதியா அன்பா பாசமா இருக்காங்க.. நான் கூட சில சமயம் உங்ககிட்ட கோபமாய் பேசுவேன்ல சாரிங்க…”
சிரித்தவன் , ” சில சமயம் இல்லடி பல சமயங்கள் ..உன் பேச்சுல எழுத்துப்பிழை நிறைய வருதுடி..” திரும்பவும் சாரிங்க என்கிறாள்..
” பரவாயில்லடி அதான் இப்பொழுது நானும் குண அளவில் மாறி விட்டேன்.. நீயும் மாறி விட்டாயே ..இனிமேல் நம்ம குடும்பம் எப்பொழுதுமே சந்தோஷமாகத்தான் இருக்கும்.. இனிமேல் நம்முடைய எதிர்பார்ப்பு எல்லாம் என்னுடைய மகள் வெளியே வருவது எப்போது என காத்துக் கொண்டிருப்பது தான்..
ஆதி சொன்னது போலவே மாமியார் வீட்டுக்கு போய் திரும்பவும் இங்கு வருகிறான்.. ஒருநாள் இங்கிருந்து விட்டு சர்ப்ரைஸ் ஆக, அந்த இடைப்பட்ட நாட்களிலேயே அகிலாவுக்கும் மாறனுக்கும் போக்குவரத்து பயணங்களுக்கான பாஸ்போர்ட் விசா போன்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்து அரவிந்திடம் அதன் பிறகு தான் அனுமதி கேட்கிறான்..
“ டேய் தங்கச்சிக்கு ஆறு மாசமா இருக்குது.. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து நான் அழைத்துப் போனால் அவங்களுக்கு சிரமம் ஆகி விடும் .. அதனால் இப்பொழுது நாங்கள் போகும் போதே அம்மாவை அம்மாவையும் கையோடு அழைத்துப் போகவா.. வயதானவர்கள் தனியாக முதன் முதலில் புதிதாக விமானத்தில் பயணம் செய்வதும் சரி ஆகாது.. ஏதாவது தொந்தரவாகி விட்டால் என்ன செய்வது என்று எனக்கு ஒரு பயம் .. ”
“அதனால் நான் ஒரு மாத காலம் மட்டும் வைத்து திரும்பவும் அனுப்பி விடவா. நானே கையோடு திரும்ப கொண்டு வந்து விடுகிறேன்டா. ”
ஆதி கெஞ்சுவதை போல பேசுவதே அரவிந்துக்கு சங்கடமாகிறது. ” அண்ணா இதற்கு போய் இப்படி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களே.. என்னிடம் செய்தி சொன்னால் மட்டும் போதும் . உங்களுக்கு உங்கள் அப்பா அம்மாவை அழைத்து போவதற்கு உரிமை இல்லையா என்ன.. ” உடனே ஆதி அவனை கட்டிக் கொள்கிறான்..
நான் பாட்டுக்கு எல்லா ஏற்படு களையிம் செய்து விட்டு அதன் பிறகு உன்னிடம் விவரத்தை கூறினால் உனக்கு கோபம் வந்து விடுமோ என்று எனக்கு ஒரு பயம்.. அதனால் தான் பயந்ந்து பேசினேன் டா..”
அரவிந்த உடனே சிரிக்கிறான் …நீங்கள் எதை யோசித்து செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் அண்ணா.. எனக்குத்தான் இப்படி எல்லாம் யோசிக்கும் திறனே கிடையாது..உடனே கோபம் தான் வரும்.. வேறு எதற்குமே நான் லாயக்கு கிடையாது .. “என்றதும் ஆதி டேய் என்று சின்ன சதட்டல் போடுகிறார்..
உடனே அவன் சுதாரித்துக் கொண்டு, “ஆமாம் அண்ணா இப்பொழுது நீங்கள் அம்மாவையும் அப்பாவையும் அழைத்து போவது சரியான யோசனை தான் .இந்த கிழவி கிட்ட நீங்க வேற அழைச்சிட்டு போறேன்னு சொல்லிட்டீங்களா.. இனிமேல் அதுக்கு வாயே ஓயாது வெளிநாடு எப்படி இருக்குமோ..அப்படி இருக்குமோ என்று கற்பனையிலேயே கதை கட்டும் .. ”
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த வயதானவங்க நம்மோடு இருக்கப் போகிறாங்க ..அதுவரைக்கும் சந்தோஷமாக இருக்கட்டுமே.. ஆசையாய் ஊர் சுற்றி பார்த்து விட்டு அலுத்துப் போனதும் திரும்ப வரட்டும். எனக்கு குழந்தை பிறக்கும் நேரம் அம்மா இங்கே இருந்தால் கூட போதும்.. “
என்னதான் ஆர்வக் கோளாறில் கயல் ஆசையாக கிளம்பினாலும் மகனை திட்டுகிறார் .. “என்னடா அந்த தம்பி ஒரு மாசம் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லுது. நீ என்னன்னா ஒட்டு மொத்தமாக என்னை கழித்து கட்ட பாக்குறியா. குழந்தை பிறக்கும் போது வந்தால் போதும் என்கிற . இன்னும் நான்கு மாத காலம் நான் அங்கே இருந்தால் உனக்கும் மித்ராவுக்கும் பரவாயில்லை.. இங்கு நாங்கள் இல்லாமல் என் பேரன் தான் ஏங்கிப் போய் விடுவான்.. ஆதி தம்பி நீங்க சொன்ன மாதிரியே ஒரு மாதத்தில் திரும்பி வந்து விடுவோம் .. ” அதற்கு பிறகு தான் அரவிந்தும் புரிந்து கொள்கிறான் ..
திடீர் ஏற்பாடாய் இருக்கவும் வேகமாய் லக்கேஜ் அடுக்கி அன்று மாலையே மாறனும் கயலும் அவர்களோடு புறப்பட்டுப் போகிறார்கள்..
.தாத்தாவும் பாட்டியும் முதலில் போகிறார்கள். அடுத்தது அவர்களுடன் நாமும் போகப் போகிறோம் ..அதனால் அழக்கூடாது ..,என்று என்ன சொல்லி வைத்தாலும் அவர்களை ஆசையாய் வழி அனுப்பி விட்டு அதன் பிறகு வந்து அழுகிறான் அமிர்தன்..
இப்பொழுதெல்லாம் அழுதால் அரவிந்த் அவனை சுலபமாக சமாளித்து விடுகிறான் ..காரில் சின்ன ரவுண்டு, அதோடு அவனுக்கு பிடித்த பொருள்கள் கொஞ்சம் .. அதை வாங்கி கொடுத்தால் அமைதியாகி விடுகிறான்.. அதை வைத்துக் கொண்டு தானாக விளையாடுவதும், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதும், என..
சில சமயங்களில் மித்ராவுக்கு அவன் உதவிகள் செய்து கொடுக்கிறான். “அம்மா இருங்கம்மா நான் தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறேன். இருங்கம்மா நான் மாத்திரையை எடுத்து வருகிறேன் .. “என்று ஓடி ஓடி வேலை செய்து கொடுக்கிறான்..
அப்பாவும் மகனும் மித்ராவை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள். நாட்களும் வேகமாக கடந்து செல்கிறது ..ஒரு மாத காலம் போனதே தெரியாமல் நொடியில் போகிறது ..இப்பொழுது அப்பாவும் மகனுக்கும் நல்ல புரிதல் இடையில் இடைத்தரகர்கள் யாரும் இல்லாததால்..
“அப்பா அம்மாவை தனியா விட்டுட்டு நம்ம மட்டும் போகிறோமே.. அம்மா பயப்பட மாட்டாங்களா .. “அழகாக பேசுகிறான் அமிர்தன் ..
“அடேங்கப்பா இப்படி எல்லாம் கூட உனக்கு பேச தெரியுமாடா செல்லம்.. அம்மாவுக்கு தான் பாப்பா துணையாக இருக்கிறாளே.. பிறகு என்ன.. ”
“ இப்பொழுது நாம் எங்கே போகிறோம் .. ”
“ உன் தாத்தா பாட்டியை போய் அழைத்து வர வேண்டாமா..அதற்காகத்தான் விமான நிலையத்திற்கு போய்க் கொண்டிருக்கிறோம் .. ”
“அதுதான் ஆதி மாமா அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று தான் சொன்னாங்களே .. ”
“அட இப்பொழுதெல்லாம் நல்ல விவரமாக பேச ஆரம்பித்து விட்டாயேடா..” என ஆச்சரியப் படுகிறான் அரவிந்த்..
“ஆதி மாமாவும் தான் வருகிறார்கள். அவங்க வாடகை கார் தான் பிடிப்பாங்க. நம்ம கிட்ட கார் சும்மாதானே இருக்கு.. நம்ம இரண்டு பேரும் ஊர் சுற்றி வேறு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது.. அதனால தான் அப்படியே ஒரு பெரிய ரவுண்டா போகலாம்னு ஆசைப்பட்டேன்..”
“பாவம்பா அம்மா அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்து இருக்கலாம்.. அவங்க தனியா இருப்பாங்க. ” என்றதும் அரவிந்துக்கு மனம் உருகுகிறது .அவனை செல்லமாய் கட்டி அணைத்துக் கொண்டவன் , “உடனே போய் விடலாம் கவலைப் படாதே” என்று தைரியம் கொடுக்கிறான் ..
அரை மணி நேர பயணத்திலேயே இதோ ஆதியையும் அம்மா அப்பாவையும் பார்த்து விடுகிறான் ..என்னதான் கிழவி கிழவி என்று வம்படியாய் பேசினாலும் இந்த ஒரு மாத காலமாக அம்மா அப்பாவை பார்க்காததால் கண் கலங்குகிறது .. கயலை கட்டி அணைத்துக் கொள்கிறான்.. உடனே மாறன் அவன் முதுகில் அடிக்கிறார்..
” என்னடா பெரிய ஊர் உலகத்துல இல்லாத ஒரு அம்மா வந்த மாதிரி அவளை மட்டும் கட்டிக் கொள்ற .. எனக்கும் அதுல பங்கு இருக்கு.. என்னையும் சேர்த்து கட்டிக்கோ .. “என்றதும் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொள்கிறான்.. ஆதிக்கு அந்த காட்சி மனதிற்கு ஏதோ செய்கிறது..
அவனுக்கு என்ன தோன்றியதோ என்னவோ.. அரவிந்த் அவனையும் இழுத்துப் பிடித்து மூவராய் அணைத்துக் கொள்கிறான் ..அதை பார்த்ததும் அவர்கள் பின்னேயே குட்டிப் பயல் அமிர்தன் தொடை வழியாய் எல்லாரையும் பிடித்துக் கொள்கிறான். அவனுக்கு அவ்வளவு தான் உயரம் எட்டுகிறது. அவன் செய்கையை பத்துதும் எல்லோருக்கும் சிரிப்பு வந்து விடுகிறது. உடனே ஆதி அவனை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுகிறான்..
அவனும் ,”ஆதி மாமா எங்க தாத்தா தான் பாவமா பாத்துக்கிட்டு இருக்காங்க.. நான் அவங்ககிட்ட போகவா..” கேட்டதுமே மாறனிடம் கொடுக்கிறான்..
மாறன் பேரனை கொஞ்சுகிறார்..”என் செல்ல குட்டி, உன்னை அப்பா நல்லா பாத்துக்கிட்டானா அடிக்கல இல்ல.. எப்போதும் கத்திக் கொண்டே இருப்பானே. உன்னை பாடாய் படுத்தி இருப்பானே..”
“இல்ல தாத்தா நீங்க இரண்டு பேரும் இல்லை என்றதும் அப்பா என்னை இன்னும் நல்லா ஸ்பெஷலா பார்த்துக்கிட்டாங்க..” குழந்தை என்னவோ மனதில் எதுவும் இல்லாமல் கள்ளங் கபடமின்றி தான் சொல்கிறான். அதைக் கேட்ட கயலுக்கு தான் எரிச்சலாகிறது.
“அடப்பாவி என் பேரன்கிட்ட என்னடா சொல்லி தொலைச்ச ..நாங்க இல்லன்னா கூட பரவாயில்லை என்கிற அளவுக்கு சொல்லி வச்சி பிள்ளை மனதில் நஞ்சை வளர்த்து வைத்திருக்கிறாயே நாயே. ”
“ ஐயோ அம்மா அப்படி எல்லாம் இல்லை.. நீங்கள் இல்லாத கவலை தெரியாமல் இருப்பதற்காக அவனை இன்னும் ஸ்பெஷலாக பார்த்துக் கொண்டேன்..இல்லா விட்டால் அவள் பாவம். வயிற்றிலும் குழந்தையை வைத்துக் கொண்டு இவனையும் பார்த்துக் கொள்ள சிரமப்படுவாளே என்றுதான்..அதைத்தான் அவன் எப்படி சொல்கிறான்.. ”
“என்ன இருந்தாலும் உங்க இடத்தை என்னால சரி செய்ய முடியல..தினமும் இரவு தாத்தாவும் பாட்டியும் எப்போது வருவாங்க .அவங்க கிட்ட கதை கேட்டுட்டு வந்த படுத்தால் தான் எனக்கு தூக்கம் வரும்னு புலம்புவான்..”
“இனிமேல் எனக்கு பார்த்துக் கொள்ளும் வேலை இல்லை.. நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாவது .இன்னைக்கு போய் செமையா ஒடு தூக்கம் போடப் போகிறேன்.. அதுதான் கிழவி அங்க போய் இன்னும் ஒரு சுற்று பொருத்துப் போய் வந்திருக்கிறாயே .வந்ததும் உன் பேரனோடு ஓடி ஓடி விளையாடி உடம்பை இளைக்க வைக்கும் வழியைப் பாரு.. இவ்வளவு குண்டு உன் வயதுக்கு ஆகாது.. ” என்று கிண்டல் செய்கிறான்.. அதோடு வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்..
சில மணி நேரங்கள் இருந்து விட்டு அடுத்த பிளைட்டில் உடனே ஆதி புறப்பட்டு விடுகிறான்..” நம்ம மறுபடியும் என் மகள் பிறந்த நாளில் சந்தித்துக் கொள்வோம் அரவிந்த்.. ” என்று சொல்லி விட்டு அமிர்தன் கையில் ஒரு பரிசு பெட்டியை கொடுக்கிறான் ..
தொடரும்..
