பாகம் -37
“குட்டி பயலே இதை நான் போன பிறகு தான் திறந்து பார்க்கணும் என்ன சரியா..” என்றதும் அவன் இப்பொழுதே ஆர்வம் ஆகிறான்..
“அண்ணா நீங்கள் சும்மா இருக்க மாட்டீங்க.. ஏதாவது செஞ்சு வச்சு இருப்பீங்க ..இங்க கொண்டாங்க நான் உங்க முன்னேயே திறந்து பார்க்கிறேன்..”திறந்து பார்த்தவன் வியந்து போகிறான்..
“ ஏன் அண்ணா எதற்காக இப்படி எல்லாம் வேலை செய்கிறீர்கள். இது மாதிரி எனக்கு எதுவுமே செய்ய தெரியவில்லை. நீங்கள் செய்வதை தான் திருப்பி காப்பி அடிக்கிறேன். எனக்கு ஒரே சங்கடமாக இருக்கிறது .. ”
ஏன்டா இப்படி பிரிச்சு பாக்குற.. இதுல என்ன வந்தது.. இருவருமே நம்முடைய பிள்ளைகள் தான்.. யாருக்கு யார் செய்தால் என்ன .. “இந்த வார்த்தைகளை சொன்னதும் அப்படியே அமைதியாகி விட்ட அரவிந்த் அதற்குப் பிறகு இப்படி சொல்கிறான் ..
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அண்ணா..நீங்கள் ஆண் பிள்ளைக்கு போய் கணக்குப் புத்தகம் அவன் பெயரில் ஆரம்பித்து நிறைய பணமும் முதல் பணமாய் போட்டு வைத்து அதை அவன் கையிலே பரிசாகவும் கொடுத்து விட்டீர்கள்.. இதற்கு மேல் நான் மாத மாதம் அவனுக்கு அதில் சேமிப்பேன் .. அது எனக்கு தெரியும் ..ஆனால் நான் பாப்பாவுக்கு என்று எதுவுமே செய்யவில்லை பாருங்களேன் . ”
“ஆதி சிரித்து விட்டு இதற்குத்தான் இப்படி புலம்புகிறாயா டா டேய்.. ”
“நான் திருப்பி பாப்பா பெயருக்கு இது போன்றே செய்யப் போகிறேன்..இதை விட ஸ்பெஷலாக ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறேன் ..எதுவும் தோன்றவில்லை.. அதனால் வேறு வழியில்லை ..இதை காப்பி தான் செய்ய வேண்டும் .. ”
“நீ ஏதாவது செய்து கொள் .ஆனால் நீ சரியான காப்பிடா போடா .. “என்று கிண்டல் செய்த படியே ஊருக்கு புறப்பட்டு விடுகிறான்.. அப்படியே பூங்குழலிக்கு திருப்பிச் செய்யப் போகும் அந்த நாளுக்காகவே அரவிந்தும் காத்துக் கொண்டிருப்பதை போல தான் தெரிகிறது..
மித்ரா அவனுக்கு அருமையான யோசனையை கூறுகிறாள்.. அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வருடத்துக்கு சில மாதங்களே குறைந்து இருந்ததால் இந்த திட்டம் சரி என ஒத்துக் கொள்கிறான் ..அதற்கு இப்பொழுதில் இருந்து வேலைகளை செய்ய தொடங்குகிறான் .. அவனது உற்சாகத்தை கண்டு மித்ராவும் கிண்டல் செய்கிறாள்..
“ என்னங்க அடுத்த வீட்டு பெண்ணுக்கு விழுந்து விழுந்து சேர்க்கிறீர்களே ..அதே போலவே உங்கள் மகளுக்கும் செய்வீர்கள் தானே .. ”
“ என்ன பேச்சு பேசுறடி.. அவங்க எந்த பிரதிபலனும் பார்க்காமல் ஒரு நல்ல திட்டத்தை செய்து உன் மகன் கையில் கொடுத்தாங்க தானே..அவங்க இதைப் பற்றி பத்மா அண்ணியிடம் கூட கலந்து பேசி இருப்பாங்களோ என்னமோ தெரியவில்லை .. ”
“அதற்கு பதிலாக நான் அதையே செய்யப் போகிறேன் என்று சொன்னேன்.. நீதானடி இந்த யோசனையை கூறினாய் ..பிறகு நீயே இப்படி பேசுகிறாய்..இதற்குப் பெயர் தான் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளுவது என்பதா..”சொன்னதும் இருவரும் சிரிக்கிறார்கள்..
“எனக்கு என்னமோ இரண்டு பிள்ளைகளும் நம்ம பிள்ளைகள் தான் என்று தோன்றுகிறது.. அதே உணர்வு தான் ஆதி அண்ணாவுக்கும் இருக்கும் போல ..அதனால் தான் பாகுபாடு இல்லாமல் செய்கிறார்.. அதற்கு நாம் திருப்பி அதே போல செய்தால் நன்றாகவா இருக்கும் ..அதற்கு மேல் செய்து அசத்த வேண்டாமா.. ”
“நான் சும்மா கிண்டலுக்கு செய்தேன். நீங்கள் இந்தப் பெண்ணுக்கு செய்யும் போது உங்கள் மகளுக்கு இன்னும் நிறைய செய்ய மாட்டீர்களா என்ன ..அதோடு அண்ணாவும் என்ன பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறார்கள்.. எனக்கு என்னவோ இது புலி வாலை பிடித்த கதையாக இருக்கப் போகிறது என்றுதான் தோன்றுகிறது.. ”
அவனுக்கு எதுவும் புரியவில்லை .. “என்னடி சொல்கிறாய்..ஏதோ திடீரென்று புலிவால் எலி வால் என்கிற ..
“ஆமாங்க ஒருத்தன் விளையாட்டுக்காக புலி வாலை பிடித்தானாம்..அதை விட்டால் அவனை கடிக்க வந்ததாம். வேறு வழியில்லாமல் அந்த வாலை பிடித்தபடி சுற்றிக் கொண்டு இருந்தானாம்.. அது மாதிரிதான் நீங்கள் இரண்டு பேருமே புலி வாலை பிடித்து விட்டீர்கள்.. இப்பொழுது இரண்டு பேருமே விட முடியாது.. மாற்றி மாற்றி ஏதாவது செய்து கொண்டே இருங்கள்.. பரவாயில்லை பொருள் சேரும் நல்ல திட்டம் தானே. ”
மித்ரா சொன்னதை கேட்கவும் ஆச்சரியமாகிறது ..அட அப்படித்தான் போல என்று..அப்படின்னா இது நல்ல புலி வாலா இருக்கும்னு தான் சொல்ற.. நம்ம சாதாரணமா சேமிக்கும் திட்டம் என்றால் அத்தனை சுலபமாக தொடங்க மாட்டோம் .. இப்படி கட்டாயம் என்றால் செய்வோம் தானே. வருங்காலத்தில் இரண்டு குழந்தைகளும் சிரமப்படாமல் இருக்குங்க. இரண்டு குழந்தைகள் என்ன நம்ம நான்கு குழந்தைகளுமே கஷ்டப்படக்கூடாது.. “
ஊருக்கு சென்றதுமே தான் செய்த காரியத்தை பத்மாவிடம் கூறுகிறான்..மித்ரா சொன்னதை போலவே தான் அவளும் சொல்கிறாள்.. “ஆமாம் அவனும் கேட்க தான் மாட்டான் ஆனால் எனக்கு ஆசையாக இருந்தது.. அதனால் செய்தேன் ..அவன் திருப்பி செய்வான் என்றெல்லாம் நான் செய்யவில்லைடி..”
“எனக்கு புரிகிறதுங்க.அது என்னமோ இரண்டு பேரும் ஒரே நாளில் பிறந்ததாலோ என்னவோ ..இரண்டுமே நம்ம பிள்ளைகள் தான் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது..யாருக்கு யார் செய்தால் என்ன.. ”
” இதே தான்டி நானும் அவனிடம் சொல்லி விட்டு வந்தேன். அதே வார்த்தையை நீயும் சொல்கிறாயே . “என்று மகிழ்ச்சி அடைகிறான் ஆதி..
“நீ ஏதாவது சொல்வாயோ என்று கொஞ்சம் பயந்தேன் .. ”
“இதில் நான் என்ன சொல்ல போகிறேங்க.. ஆனால் பாருங்களேன். பாப்பா பிறந்த நாளுக்கு இங்கு வரும்போது நம்ம எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை பெரிதாக செய்யப் போகிறார்கள் என்று என் மனதிற்கு படுகிறது.. ”
“என்னடி இது அப்படி என்றால் இந்த விஷயத்தை நான் செய்திருக்க கூடாதோ.”சங்கடப்படுகிறான் அவன்..
“ஏங்க நல்ல காரியத்தை தொடங்கி இருக்கீங்க.. மாற்றி மாற்றி அது நல்ல விதமாக நடந்து கொண்டே இருக்கட்டுமே.. பின்னே பிள்ளைகள் சிரமப்படாமல் இருப்பாங்க .இந்த சேமிப்பை இப்பொழுது அவங்க ஆரம்பித்து இருக்க மாட்டாங்க.. ஆனால் நீங்கள் தொடங்கி கொடுத்து விட்டீர்கள். இனி தொடர்ச்சியாய் மாதா மாதம் அவன் பெயரில் சிறிதளவாவது பணத்தை போட்டு வைப்பார்கள்..”
“ ஆனால் திருப்பி அதையே பாப்பாவுக்கும் செய்தால் பரவாயில்லை.அதை விட இன்னும் பெரிதாக ஏதாவது செய்தார்கள் என்றால் நாமும் திருப்பி அவர்கள் பிள்ளைக்கு செய்ய வேண்டும்.. ”
“ அடுத்தது அவனுக்கு பெண் குழந்தை பிறந்தால் பாப்பாவுக்கு என்ன செய்தானோ. அதையே நான் செய்து விடுவேன்..”
” சரி சரி இது நிச்சயம் புலி வால் இப்படித்த கதை தான் என்கிறாள் இவளும்..
அதே கதையை அவளும் கூறுகிறாள்.. நல்ல புலிவால் தான் என்கிறான் இவனும்..
அடுத்த பிறந்த நாளில் சந்தித்துக் கொள்ளலாம் என்று கூறி ம போனவன் சில மாதங்களிலேயே குடும்பத்தோடு வருகிறான்.. அரவிந்த் பதட்டத்துடன் ஹாஸ்பிடல் வாசலில் நின்று கொண்டிருந்தான்..
அவனுக்கு ஆதியைப் பார்த்ததும் தான் நிம்மதியாய் மூச்சியை விடுகிறான்..
“அண்ணா எனக்கு பயமாக இருக்கிறது ..அவளை பார்க்க கூட என்னை விட மாட்டேன் என்கிறாங்க..இந்த ஹாஸ்பிடல் வந்ததே பெரிய தவறாகி விட்டது .. முதலில் இருந்த ஹாஸ்பிடல் எனக்கு எந்த பயமும் இல்லை. அவளுக்கு முதல் பிரசவமும் எந்த சிரமமும் இல்லாமல் நடந்துச்சு.. ”
” இப்ப நேற்றில் இருந்தே ரொம்ப கஷ்டப்படுகிறா .. நான் தான் அவளுக்கு தேவை இல்லாத கஷ்டங்களை கொடுத்து கொண்டு இருக்கேன் ..போதும் இவள் படற கஷ்டமே போதும் ..அடுத்ததாய் எனக்கு மகள் வேண்டாம் .அவளும் இதே சிரமம் தான் படுவாள்.. பிறக்கப் போவது என்னை மாதிரி பையனாக இருக்கட்டும் … “ஆதி சிரிக்கவும் பத்மா யாருக்கும் தெரியாமல் கிள்ளி வைத்து அவனை கண்களாலேயே அடக்குகிறாள்..
“ இதை தான்டா பிரசவ வைராக்கியம் என்று சொல்வாங்க ..கொஞ்ச நேரத்துல பாப்பா வந்துடுவா கவலைப்படாதே..”
நானும் டாக்டரிடம் போய் சண்டை போட்டுட்டேன் ..அவங்க கோபத்துல என்னை விரட்டி விட்டுட்டாங்க..”
“அப்படி என்னதான்டா சொன்ன.. ”
உங்களுக்கு மனசாட்சி இருக்கா .அவ எப்படி கத்திகிட்டு இருக்கா..பாத்துட்டு அமைதியா இருக்கீங்களே..”ன்னு சொன்னேன்..
” என் மனைவி கஷ்டப்படுறா..ஆப்ரேஷன் செய்தாவது குழந்தையை எடுத்துருங்க.. என் மனைவி என்னால் கஷ்டப்படுறத கண்ணால பார்க்க முடியல.. “இதை தான் சொன்னேன் .எல்லா கணவர்களும் இப்படித்தான சொல்வாங்க ..அதற்குப் போய் இவரை முதல்ல வெளியே அனுப்புங்க.. நல்லா பிறக்கப் போகிற பிள்ளையையும் ஏதாவது செஞ்சு குழந்தை பிறக்க வைக்காமல் செய்து விடுவார் போல..எனக்கு டென்ஷனாக இருக்கு.. “சொன்னதுமே இரண்டு நர்ஸ்கள் இங்கே கொண்டு வந்து நிற்க வைத்து விட்டார்கள்.. ”
சின்னப் பிள்ளையை போல தன்னிடம் எதையும் ஒளித்து வைக்காமல் அப்படியே பேசும் அரவிந்தை பார்க்க ஆதிக்கு ஆசையாகிறது.. அவனை தோளில் தட்டி கட்டித் தழுவி ஆறுதல் சொல்கிறான்..
” எதுவும் ஆகாதுடா கவலைப்படாதே.. இன்னும் கொஞ்ச நேரம் தான் .. ” சொல்லிக் கொண்டிருக்கும் போதே மித்ரா அலறும் சத்தம் கேட்கவும் ஆதியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறான்..அடுத்த நொடி குழந்தை அழுகுரல் சத்தம் கேட்கிறது ..அவனுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது..
” ஏன்டா உனக்கு இது இரண்டாவது குழந்தை தானே .என்னமோ முதல் பிள்ளைக்கு சீன் போடுற மாதிரி
போடுற.. ” என்று கூறுகிறான் ஆதி..
” நான் எத்தனை பிள்ளை பெற்றாலும் இதே மாதிரி தான் செய்வேன் ..அது என்னமோ நான் அப்படித்தான்..” என்கிறான் அரவிந்த்..
அதற்குள் என்ன குழந்தை என்று கேட்பதற்குள்ளேயே குழந்தை வெளியே வந்து விடுகிறது ..தேவதையைப் போல அழகான பெண் குழந்தை வெளியே வருகிறாள் ..பதட்டத்தில் அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. கயலும், மித்ராவின் அம்மாவுமே வயதானவர்கள்.. அதனால் அவசரமாய், “அண்ணி நீங்க குழந்தையை வாங்கிக் கொள்ளுங்கள் ..அம்மா அந்த பட்டு துணியை அவங்க கிட்ட கொடு” என்றதும் கயலும் வேகமாக வந்து பத்மாவிடம் கொடுக்கிறார்..
பெரியவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று தயங்கியதை பார்த்ததும் கயல் உடனே பத்மாவிடம் மெதுவாக பேசுகிறார்.
“பத்மா நான் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டேன்மா.. எனக்கே கொஞ்சம் பதட்டமாக தான் இருக்கிறது.. குழந்தையை கீழே போட்டு விட்டால் வம்பு.. குழந்தைக்கு எதுவும் ஆகிறதோ இல்லையோ …இவனிடம் மாட்டிக் கொண்டு என்னால் உயிரோடு இருக்க முடியாது .. அதுவும் முதல் பிள்ளையிலிருந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான்.. மகள்தான் வேண்டும் என்று.. அவன் இனி மகளை தரையில் இறக்கி விட மாட்டான் பாரேன்..”காதில் கிசுகிசுத்து விட்டு நகர்ந்து நிற்கிறார்..
ஹாஹா
தொடரும்
