ஆடி வரும் வண்ண மயிலே-14
அத்தியாயம்:14
மயூரிகா தஞ்சாவூருக்கு தன் கூட சக்ரபாணி வரவில்லை என்றால்…இனி அவர் கூட பேச மாட்டேன் என சொல்லி விட்டு தன் ரூம்க்கு போனாள்.
கல்யாணி “பாப்பா, பாப்பா கொஞ்சம் நில்லு மா…” என அழைத்தும் அவள் காதில் விழாதது போல…லிப்ட் ரூம்க்குள்ளே போனாள்.
வெங்கட் “ கல்யாணி விடு அவள் சின்ன பெண்ணு தானே…சக்ரா மேலே உயிரே வைத்திருக்கிறாள் அது தான் இந்த கோபம்.
சக்ரா நான் ஒன்று சொல்வேன் தப்பாக எடுத்து கொள்ளாதே…இன்னும் எத்தனை நாளைக்கு தான் பழசை எல்லாம் நினைத்து கொண்டு இருக்க போகிற…கிட்ட தட்ட இருபது வருடங்கள் சியாமளா நம்மை விட்டு போய்.
அவள் உடல் தான் நம்ம கூட இல்லை..ஆனால் அவளை ஆன்மா நம்ம கூடவே தான் சுற்றி திரிகிறது…ஒரு தகப்பனாக உன் வலி எங்களுக்கு புரியாமல் இல்லை…
அதுவும் பெத்தவங்க குத்து கல்லு போல இருக்கும் போது…புள்ளைங்களை பறி கொடுப்பது மரண வலிக்கு நிகரானது.
சியாமளா உன்னை விட்டு எங்குமே போகவில்லை..அவள் தன் பெண்ணு வடிவில் உன் கூடவே இருக்கிறாள்…மயூரி உருவத்தில் மட்டுமல்ல செயல்களிலும் சியாமளா தான்.
உனக்கு ஞாபகம் இருக்கா சியாமளா போன பிறகு நீ நடனத்தை வெறுத்த…ஆனால் மயூரி தன் ஆறு வயதில் சியாமளாவின் சலங்கையை…தன் காலில் கட்டி கொண்டு உன் கிட்ட ஓடி வந்து சுற்றி சுற்றி ஆடி விட்டு.
“ தாத்தா, தாத்தா நான் அம்மா போல டான்ஸ் பண்ண போகிறேன்…” என ஆசையாக கேட்டாள்…உன் பேத்தியின் ஆசைக்காக நடனத்தை வெறுத்த நீ அவளை… சாரதா கிட்ட டான்ஸ் கற்று கொள்ள ஏற்பாடு பண்ணினேன்.
எல்லாம் யாருக்காக மயூரியின் ஆசைக்காக தானே…சியாமளா கேட்டு எதையுமே மறுத்தது இல்லை நீ… அது தான் மயூரி எதை கேட்டாலும் நீ முடியாது என சொல்வதில்லை…
அவள் இது வரைக்கும் உன் கிட்ட கேட்டது எல்லாம் நியாயமான ஆசை தான்…இப்பவும் அதை கேட்கிறாள் குழந்தை… பிறகு அதை நிறைவேற்றுவதில் உனக்கு என்ன கஷ்டம் சக்ரா..?
உன் மகளின் நடனத்தை திரும்ப நீ பார்க்க ஆசை இல்லையா உனக்கு..? நீ பார்த்தது இல்லை மயூ நடனம் ஆடும் போது… எனக்கும் கல்யாணிக்கும் மேடையில் ஆடுவது மயூரியாக தெரியாது.
சியாமளா தான் தெரிவாள் ஏன் நீயும் வீடியோவில் அதை பார்த்து இருப்ப தான்…ஒரு தடவை நேரில் பாரு சக்ரா உன் பெண்ணு மறு பிறப்பு எடுத்து இருப்பது…உனக்கு புரியும்.
எத்தனை நாளைக்கு தான் கோபம், வெறுப்பு என்ற… திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்ள போகிற.
உனக்கு இருப்பது கோபம், பயம் இல்ல பயம்…எங்கே திரும்ப உன் பெண்ணு உருவில் இருக்கும் பேத்தியை நீ இழந்து விடுவாயோ என்ற பயம்…உன் கிட்ட என்ன இல்லை சக்ரா எல்லாமே இருக்கு.
அதை வைத்து உன் பேத்தியை பாதுகாக்க உனக்கு தெரியாதா..? அவள் நாட்டியத்துக்கு இந்த ஊர், உலகம் அடிமை… ஆனால் அவளின் சொந்த தாத்தா அவள் மேடையில் ஆடிவதை பார்க்க மறுக்கிறார்.
நான் சொல்வதை சொல்லி விட்டேன்…நீ முடிவெடுக்க வேண்டியது நீ தான்…சரி நான் கிளம்பும் ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கா..? என்று அசோக்கிடம் கேட்டு விட்டு வருகிறேன்…” என சொல்லி விட்டு எழுந்து போனார்.
தன் ரூம்க்கு வந்த மயூரிக்கு உண்மையில் மனவருத்தமாக இருந்தது…அவள் இது வரைக்கும் சக்ரபாணியிடம் இப்படி பேசியது இல்லை…
இன்று என்ன காரணமோ தெரியாது.. பேச சொல்லி வாய்க்கு இதயம் கட்டளை போட்டு விட்டது… அது தான் பேசி விட்டாள்.
மயூரி பால்கனியில் சோபா போல உள்ள ஊஞ்சல்…அமர்ந்தவள் அதன் சங்கிலியில் தலை சார்ந்து கண்களை மூடி கொண்டு இருக்க…காற்று சுகமாக அவளை தழுவி அவள் மன காயத்தை ஆற்றி கொண்டு இருந்தது.
அப்போது அவளின் மொபைல் போன் ரிங்காக எடுத்து பார்த்தவள் முகம் மலர்ந்தது…அவளின் உயிர் தோழி காஞ்சனா தான் அழைத்து இருந்தாள்…
தன் வேலை சம்பந்தமாக சிங்கபூருக்கு ஒரு மாதம் போய் இருந்தவள்…இன்று தான் கால் பண்ணுகிறாள் அதுவும் இந்தியா நம்பரில் இருந்து.
காஞ்சனா ஒரு ஜர்னலிஸ்ட் ஸ்கூல் தொடக்கம் காலேஜ் வரை தொடர்ந்து நட்பு…பிறகு மயூரி கலை பிரிவை தேர்ந்தெடுக்க…
அவள் இளங்கலை துறையை தேர்ந்தெடுத்தாள்…எங்கே இருந்தாலும் கூட அவர்களின் நட்பு தொடர்ந்து.
அவள் தந்தை குரு மூர்த்தியின் கட்சி ஆபிஸில் தான்…கணக்காளராக வேலை பார்க்கிறார் தாய் இல்லத்தரசி ஒரு தம்பி கவின் …அவன் என்ஜினியரிங் படிக்கிறான்.
மயூரி மொபைலை அட்டன் பண்ண மயூ பேபி என்று…அவள் காது செவிப்பறை கிழியும் அளவுக்கு வழமை போல சத்தம் போட்டாள்.
மயூரி “ ஹேய்’ காஞ்சு கொஞ்சம் மெதுவாக பேசு டி…சரி எப்போ இந்தியாவுக்கு வந்த நீ வருவதாக எனக்கு ஒரு மெசேஜ் கூட போடவில்லையே…
ஏதோ ட்ரைனிங் என சொன்ன எல்லாம் நல்லபடியாக முடிந்ததா..? என கேட்டாள்.
காஞ்சனா “ நேற்று நைட் வந்தேன் டி…வந்தவுடனே சோஷல் மீடியா பூராகவும் உன் முகம் தான்…தஞ்சை பெரிய கோவிலில் நீ டான்ஸ் பண்ண போவதாக தகவல்…இருந்தது.
அதுவும் எல்லா ஊரில் இருந்தும் ஆளுங்க வராங்க போல…வந்தவுடனே எனக்கு எடிட்டர் வேலை வைத்து விட்டார்…கவர் ஸ்டோரி எழுத என்னை தஞ்சைக்கு கிளம்ப சொல்லி விட்டார்.
உன் நாட்டியம் தானே சென்னையில் மட்டுமல்ல பாரினில் கூட பேமஸ்…கூடவே நீ யாரு சி.எம் குருமூர்த்தி, சக்ரபாணியின் பேத்தி…
அப்போ உன்னை பற்றி எழுதினால் எங்க பத்திரிகை கல்லா களை கட்டும்…எடிட்டர் சாருக்கு வேறு நான் உன் பெஸ்ட் ப்ரண்ட் என தெரியும்.
கூடுதலாக உன்னை பற்றி அங்கே நடக்கும் புரோகிராம் பற்றி…நான் நன்கு தகவல் சேகரிப்பேன் என நினைத்து நான் தான்… போக வேணும் என சொல்லி விட்டார்.
காலையில் தூங்க கூட விடாது ஏழு மணிக்கே கால் பண்ணி விட்டார்…
சரி நீ எப்படி இருக்க உன் பாரின் புரோகிராம் ரொம்ப சக்சஸ் போல…சோஷல் மீடியா பூராகவும் என் புகழை தான் பாடி கொண்டு இருந்தது…எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது டி…” என்றாள்.
மயூரி “ ரொம்ப தேங்க்ஸ் டி நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்…ஏய்! காஞ்சு நாளை நாங்களும் தஞ்சை கிளம்புகிறோம் டி…நீயும் எங்க கூட வா தனியாக எதற்காக நீ வர வேணும்.
நம்ம பங்களா அங்கே இருக்கு நான், பாட்டி, ஆன்ட்டி ,வெங்கட் தாத்தா…என் டான்ஸ் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் தான் வராங்க ஏசி மினி பஸ் தான் டி…நீயும் வந்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும்.
ஏய்! புவா அக்கா தர்ஷன், பாப்பா, மீனா ஆன்ட்டி கூட என் புரோகிராம் பார்க்க வராங்க…அவங்களையும் கால் பண்ணி நம்ம கூட வர சொல்கிறேன்…” என்றாள்.
காஞ்சனா “ எனக்கும் ஆசையாக தான் இருக்கு டி…ஆனால் எங்க எடிட்டர் அதற்க்கு சம் டைம் அலோ பண்ண மாட்டார்…நட்பு வேறு, தொழில் வேறு என்று லெக்சர் பண்ண ஆரம்பித்து விடுவார்.
அது மட்டுமல்ல என் கூட என் டீம் வரும்…கேமராமேன், லைட் மேன், மேக்கப் மேன் கூடவே ஹெல்பர் பெண்ணு என்று…அவங்களை விட்டு போட்டு உன் கூட வருவதாக சரியாக இருக்காது செல்லம்.
அது மட்டுமல்ல சி.எம் வொய்ஃப், பெண்ணு, பேரபசங்க வரும் போது…
மீடியா, பிரஸ் ஆளுங்களை கூட வருவதை அனுமதிக்க மாட்டாங்க…நீ உறவு நான் அப்படியல்ல கூடவே பத்திரிகைக்காரி …அதற்காக தான் சொல்கிறேன்.
நாங்க எங்க வேனில் தான் வருகிறோம்…தங்கவும் கவர்மெண்ட் ரூம் அலர்ட் பண்ணி இருக்கு…சில நடைமுறை சிக்கல் இருக்கு நம்ம தனியாக டூர் போகும் போது…
இது எல்லாம் பிரச்சினையாக இருக்காது…கோபிக்காத டி நான் நீ புரோகிராம் முடிந்து சென்னைக்கு திரும்பியதும்…
உன்னை வந்து பார்க்கிறேன் சிங்கப்பூரில் இருந்து… உங்க எல்லோருக்குமே கிப்ட் வாங்கி வந்திருக்கிறேன்.
சரி நீ லண்டனுக்கு புரோகிராம் போய் திரும்பி இருக்க…என் அம்மா, அப்பா, கவினுக்கு எல்லாம் கிப்ட் கொடுத்து இருக்க…என் கிப்ட் எங்கே டி உன் ப்ரண்ட் நானா..?இல்ல அவங்களா..? என செல்லமாக குறைபட்டாள்.
மயூரி “ அலையாத டி உனக்கு இல்லாத கிப்ட்டா..? வாங்கி வந்திருக்கிறேன்…நீ இந்தியா ரிட்டன் ஆனதும் கொடுக்கலாம் என வைத்திருக்கிறேன்…
வீட்டுக்கு வா தருகிறேன் சரி நீ ஜாக்கிரதையாக…தஞ்சை வந்து சேரு வந்ததும் எனக்கு ஒரு கால் பண்ணு…” என சொல்லி கால் கட் பண்ணவும் பாப்பா என்று…அழைத்து கொண்டு கல்யாணி வரவும் சரியாக இருந்தது.
கல்யாணி “ பாப்பா மணி எட்டாகி விட்டது தங்கம் சாப்பிட வா…சீக்கிரமாக சாப்பிட்டால் தானே தூங்க போக முடியும் காலையில் சீக்கிரமாக கிளம்ப வேணும் என அசோக் சொன்னான்…
அப்போ தான் டிராஃபிக்கில் இருந்து மாட்டாது போக முடியும் என்றான் “ …என்று கல்யாணி சொன்னார்
மயூரி “ எனக்கு பசிக்கவில்லை பாட்டி…நீ சாப்பிட்டு விட்டு தூங்க போ நான் பிறகு தூங்க போகிறேன்…” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொன்னாள்.
கல்யாணிக்கு எதற்காக இந்த கோபம் என புரிந்தது…அவர் அவள் அருகில் வந்து அமர்ந்தவர் அவள் தலையை தடவி விட… மயூரி கல்யாணியின் மடியில் தலை வைத்து படுத்தாள்.
கல்யாணி “ எனக்கும் ஆசையாக தான் இருக்கு கண்ணு…உன் தாத்தா உன் டான்ஸை பார்க்க வர வேணும் என்று…ஆனால் வாய் விட்டு கேட்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் நான் நிற்கிறேன்.
காரணம் உன் தாத்தா உன் அம்மா மேலே வைத்திருந்த பாசம் தெரிந்தவள் நான்…அவருக்கு உன் மேலே கோபம் இல்லை உன் மேலே அளவுக்கதிகமாக… அன்பு வைத்திருப்பதால் தான் இந்த விலகல்.
எங்களுக்கு இருக்கும் ஒரே உறவு நீ தானே மா…அவர் இந்த வயதில் கூட ஏன் ஓய்வு என்பதே இல்லாது கம்பெனியை கட்டி கொண்டு இருக்கிறார்…எல்லாம் உன் ஒருத்திக்காக தான் நீ காலம் பூராகவும்… மகாராணி போல வாழ வேணும் என்பதற்காக தானே…
அப்படி ஒரு அன்பு உன் மேலே அவர் என்ன வர முடியாத தூரமா தஞ்சை..? உன் அம்மாவை அழைத்து கொண்டு வருவதே அவர் தானே…தஞ்சை கோவிலில் அவரை தெரியாதவர் யாருமே இல்லை.
அப்படி இருக்கும் போது நீ கேட்காது எல்லாம் வாங்கி கொடுப்பவர்…நீ கேட்டும் மறுக்க காரணம் அவர் உன் அம்மா மேலே வைத்திருக்கும் பாசம்…கொஞ்சம் புரிந்து கொள்ளு பாப்பா.
காலம் நிச்சயமாக உன் தாத்தாவின் முடிவை மாற்றும்…இப்போ சாப்பிட வா தங்கம் சரியாக சாப்பிட்டால் தானே…
உன்னால் டான்ஸ் நன்றாக ஆட முடியும்… உன் ரசிகர்களை ஏமாற்ற நீ விரும்ப மாட்ட தானே…? என கேட்டார்.
மயூரி ஏதுவுமே பேசாமல் இருக்க…
“ என் பேத்திக்கு மற்றவர்களை ஏமாற்றி பழக்கம் இல்லை கல்யாணி…அவள் அடுத்தவரை வாழ வைத்து தான் பழக்கம்…” என சொல்லி கொண்டே…கையில் ஒரு தட்டோடு சக்ரபாணி வந்தார்..
மயில் ஆடி வரும்…
