அத்தியாயம் 33

அத்தியாயம் 33

மாலை நேரம் நெருங்கும் வேளையில் மீண்டும் தன் மனைவி நினைவு வரவும் உடனே காரை எடுத்துக் கொண்டு அவள் வேலை பார்க்கும் அலுவலகம் நோக்கி சென்றான் தீரன்..!!

முதல் முதலாக அவன் மனதிற்குள் காதல் புகுந்து பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் அவனுடைய முகம் பிரகாசித்தது ஆயிரம் வாட்ஸ் பல்பு போல..!!

ஆனால் தான் காதலில் விழுந்து விட்டோம், அவளை மனதார நேசிக்க தொடங்கி விட்டோம் என்பதை கூட முழுதாக உணராமல் சுற்றி திரிந்து கொண்டிருந்தான் அந்த மடையன்..!!

துள்ளலோடு ஏதோ முதல் வருடம் பயிலும் கல்லூரி மாணவன் போல அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குள் மிக வேகமாக படியேறி சென்றான் அவன் அவளை பார்க்கும் ஆவலில்..❤️❤️

வழக்கம்போல் மிதமான பரபரப்போடு இயங்கி கொண்டிருந்தது   அலுவலகம்..

அவள் இருக்கும் கேபின் நோக்கி வேகமாக சென்றவன் கதவை திறந்து கொண்டு புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான்..

தான் எடுத்துக் கொடுத்திருக்கும் புடவையை அணிந்து கொண்டு அவள் அமர்ந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டு புன்னகை ததும்பும் முகத்தோடு வந்தவன்..

அங்கு அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மித்ராவை பார்த்ததும் அப்படியே புன்னகை வடிந்து கோபம் அடைந்தான்..🔥🔥

அவன் எடுத்து கொடுத்த புடவை அணிந்து கொள்ளாமல் கைக்கு கிடைத்த ஏதோ ஒரு புடவையை எடுத்து சுற்றிக் கொண்டு வந்து அவசரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மித்ராவின் நிலைமை அறியாமல் , அவன் என்னவோ தன்னை பிடிக்காமல் போய் அவமான படுத்த வேண்டும் என்று அவள் இப்படி எல்லாம் வேண்டுமென்றே செய்கிறாள் என நினைத்துக் கொண்டான்..

என்னதான் பிடிக்காதவனாக இருந்தாலும் பிறந்தநாள் அன்று அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன் இருந்தும் என் மீது எதற்காக இத்தனை துவேஷத்தை அவள் காட்ட வேண்டும்..??

அப்படி என்ன பெரும் பாவியாகி போய்விட்டேன் நான் ??

என் மனைவி எனக்கு மட்டுமே சொந்தம்.. அவளுடைய பார்வை முதல் பாசம் வரை அனைத்தும் எனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அது ஒரு குற்றமா?? 

அதற்காக கொஞ்சம் கரடு முரடாக பேசி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டேன் தான்.. இல்லை என்று கூறவில்லை அதற்காக ஏன் அவள்  இப்படி வெறுக்க வேண்டும் என்னை??

எந்த பெண்ணிடமும் மயங்கி வழியாத நான்..

 இன்று , முதல் முறையாக அவளிடம் கெஞ்சாத குறையாக அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு திரிகிறேன் இதை கூட புரிந்து கொள்ள முடியவில்லை அவளால்..

அது சரி.. என்னுடைய நிலை என்னவென்று எனக்கே புரியவில்லை அவளுக்கு எங்கே புரிய போகிறது என்று மனதிற்குள் நினைத்து மாய்ந்து போனவன் அவளின் அருகில் வந்து நின்றான்.

அழுத்தமான காலடி ஓசைகளோடு யாரோ தன்னை நெருங்கி வந்து நிற்கிறார்களே என்ற உணர்வு ஏற்படவும் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.

அந்த நேரத்தில் அலுவலகத்தில் அவனை அவள் எதிர்பார்க்காத காரணத்தினால் சற்றே பிரமிப்போடு அவனை பார்த்தாள்.

“ நீங்க… இங்க என்ன பண்றீங்க??”

“ அதேதான் நானும் உன்னை கேட்கிறேன்.. நீங்க இங்க என்ன பண்ற??”

” வேலை பார்க்கிறேன்.. ஆல்ரெடி உங்களுக்கு தெரியும் தானே??”,  புருவத்தை உயர்த்தி மிடுக்காக அவள் கேட்கவும் மனதிற்குள் அவளை கடிந்து கொண்டான் அவன்.

” பாக்குறத பாரு.. பெரிய லேடி டான் மாதிரி.. இந்தப் பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. சொன்னத மட்டும் செய்ய மாட்டா.. சரியான அழுத்தக்காரி , திமிர் பிடிச்சவ.. “, என்று வாய்க்குள் முணுமுணுத்து கொண்டான் தீரன்.

“ என்ன ?? என்ன சொன்னீங்க??”

“ ஒன்னும் இல்ல கொஞ்சம் எழுந்து வரியா??”

“ எங்க வரணும்??”

கேள்வி மேல் கேள்வியாக அவள் கேட்கவும் அவனுடைய பொறுமை காற்றில் பறந்தது..!!

உடனே டேபிளில் கைகளை ஊன்றி பெருமூச்சொன்றை வெளியிட்டவன்..

“ இங்க பாரு.. என்னுடைய பொறுமையை தயவு செஞ்சு நீ சோதிக்காத.. நான் சொல்லும் போதே கிளம்பி வந்துடு.. எங்க ??, எதுக்கு??,  எப்போ?? இப்படி எல்லாமே சொன்னாதான் கிளம்புவியா??.. எப்பவுமே நான் சொல்றதை கேட்கக் கூடாது அப்படின்னு ஒரு முடிவுல இருக்கியா??”

அமைதியாக அதே சமயம் அழுத்தமாக வெளிப்பட்டது அவனுடைய வார்த்தைகள்..

இதற்கு மேல் தாமதித்தாலோ அல்லது கேள்விகள் கேட்டாலோ அவன் எப்படி நடந்து கொள்வான் என்று அவளுக்கே தெரியும் அதனால் அமைதியாக பேக்கை எடுத்துக் கொண்டு அவனுடன் எழுந்து சென்றாள்..

வெண்ணெயில் வழுக்கி செல்லும் கூழாங்கல் போல ரோட்டினில் வழுக்கி சென்றது அவர்களுடைய கார், அந்த ரிசார்ட்டை நோக்கி..!!

கண்டிப்பாக அவன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மாட்டான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் இப்பொழுது எங்கே போகிறோம் என்கிற கேள்வி அவள் மனதில் தேங்கியிருந்தது..

ரிசார்ட்டை அடையும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை..

பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு அவளை கீழே இறங்குமாறு சொல்லியவன் அவனும் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கினான்.

அவள் அருகில் வந்தவன் இயல்பாக அவளின் கரங்களை பற்றி அழைத்து சென்றான்.

எதுக்காக இப்படி ரிசார்ட் கூட்டிட்டு வந்திருக்கான்?? என்ன பிளான் பண்றான் இவன்?? என்று யோசித்தாள் பயத்தோடு.

வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிட்டதா ?? 

ஏதோ கொஞ்ச நாள் நிம்மதியாக இருந்தேன்.. அவனும் அமைதியாக இருப்பது போல் தென்பட்டான்.. கொஞ்சம் நல்ல மாதிரியாக நடந்து கொண்டானே மறுபடியும் என்ன இப்படி பண்ணுகிறான்?? அது சரி சிறுத்தை தன் புள்ளியை மாற்றிக் கொள்வதில்லை..

இவனை நல்லவன் என்று நம்பாதே என்று காலையில் தானே மனசாட்சி எச்சரித்தது நம்மை அதற்குள்ளாகவே இவன் இப்படி செய்கிறானே என்று நொந்து கொண்டாள் அவள்.

ரிசப்ஷன் சென்று அவன் புக் செய்திருக்கும் விவரத்தை கூறி ரூம் சாவி கேட்டான் தீரன்.

” வெல்கம் டு அவர் ரிசார்ட் சார்..”, என்று ஆங்கிலத்தில் மொழிந்தவன் அங்கிருந்த சாவியை எடுத்து அவன் கையில் திணித்தான்.

சிறு புன்னகையோடு அவனுக்கு நன்றி கூறி தன் மனைவியை அழைத்துச் சென்றான் அவன்.

அவன் புக் செய்திருந்த அறை முதல் மாடியில் இருந்தது..

அறைக்குள் வந்ததும் கதவை தாழிட்டு விட்டு அவள் பக்கமாக திரும்பினான்..

என்ன செய்யப் போறானோ என்கிற பயத்தோடு மருண்ட மான் விழிகள் அங்கும் இங்கும் உருண்டது அவனைப் பார்த்து..!!

“ எதுக்காக இப்போ என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?? என்ன ஆச்சு?? ஏதாவது முக்கியமான விஷயம் பேசறதா இருந்தா நாம வீட்டுக்கு போய் பேசிருக்கலாமே இல்ல ஏதாவது காபி ஷாப் போயிருக்கலாம் அதை விட்டுட்டு எதுக்காக என்னை ரிசார்ட் கூட்டிட்டு வரணும்??”

“ஷ்ஷ்.. சத்தம் போடக்கூடாது.. கொஞ்ச நேரம் அமைதியா இரு.. நான் ஒன்னும் உன் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு இங்க கூட்டிட்டு வரலையே முடிவெடுத்த பிறகு தானே இங்க கூட்டிட்டு வந்தேன்”

இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. இதெல்லாம் எதிர்பார்த்ததுதானே இதில் பெருமை வேறு இவனுக்கு..என்று திட்டி கொண்டாள் மனதிற்குள்.

“ அதெல்லாம் எனக்கே தெரியும் ஆனால் எதுக்காக கூட்டிட்டு வந்தீங்க அதை முதல்ல சொல்லுங்க”

” சொல்றேன் சொல்றேன்.. அதுக்குள்ள என்ன அவசரம் ??கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகணும்.. நீ போய் முதலில் பிரஷ் அப் ஆகிட்டு வா மற்றதை அப்புறம் பேசிக்கலாம்”, என்றுவிட்டு அவன் ஜன்னல் பக்கமாக போய் நின்று அங்கே வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

அவளும் குளியலறை நோக்கி சென்றவள் முகம் கை கால்களை கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்..

கட்டிலில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தவள் சுற்றிலும் பார்த்தாள்..

அறை நன்றாகவே இருந்தது.. சொல்ல போனால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல ஆடம்பரமாகவே இருந்தது..

வெளியே பால்கனி வழி தெரியும் வெளிப்புற காட்சிகள் அனைத்தும் பசுமையாக காணப்பட்டது..

தன்னை மறந்து சில நிமிடங்கள் அந்த காட்சியில் லயித்திருந்தாள் அவள்..

அப்பொழுதுதான் அவள் மண்டைக்கு உரைத்தது… அந்த அறைக்குள் எங்குமே தன் கணவன் இல்லை என்று..!!

ஆமா இவன் எங்க போனான் என்னை கூட்டிட்டு வந்து இங்க விட்டுட்டு?? ரூம் முழுக்க பார்த்தாச்சு எங்கேயும் இல்ல பால்கனியிலும் இல்லை பாத்ரூமில் இருக்க வாய்ப்பில்லை நான் இப்பதான் வெளியே வந்தேன் அங்கிருந்து.. அப்புறம் எங்க போய் தொலைஞ்சான் ?? ஒருவேளை வெளியே எங்கேயாவது போயிட்டானா?? மனதிற்குள் குட்டி விவாதமே நடத்தி முடித்திருந்தாள் மித்ரா.

ஆனால் தீரன் தான் அங்கு இல்லை..!!

அவர்கள் ரெசார்ட்டை நோக்கி வந்த பொழுது கிட்டத்தட்ட மணி ஆறரை தாண்டி இருந்தது..

இப்பொழுது மேலும் நேரம் கடக்க.. ஏழு மணியை நெருங்கியிருந்தது இப்போது கடிகாரம்..!!

சுற்றிலும் இருள் சூழ்ந்த வானில் வெண்ணிலா மட்டும் கண் சிமிட்டி கொண்டிருந்தது..

ராத்திரி வேளையில் இப்படி எங்கேயோ கொண்டு வந்து என்னை விட்டு விட்டானே நான் என்ன செய்வேன்?? ரூம் கதவு வேற வெளியே லாக் பண்ணிருக்கு வெளியே போறதுக்கு வழி இல்ல.. நிச்சயமா என்னை உள்ளே வைத்து பூட்டிவிட்டு தான் அவன் எங்கையோ சென்று விட்டான் ஒருவேளை பழிவாங்குவதற்காக இப்படி செய்து விட்டானோ ?? காலையில் அவன் தந்த பரிசை பார்த்து நெகிழ்ந்து போய் நான் ஒரு நொடி ஏமாந்து விட்டேனா??

என் மீதிருந்த கோபத்தை இப்பொழுது நேரம் பார்த்து வெளிப்படுத்துகிறானோ ?? அல்லது அவனுடைய இச்சைகளை நான் தீர்த்து வைக்கவில்லை என்கிற வெறியில் வந்த வெளிப்பாடா??

கோபம் இருந்தால் அடித்திருக்கலாம் சண்டை போட்டிருக்கலாம் திட்டி தீர்த்திருக்கலாம் ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு நல்லவன் போல் நடித்து என்னை கொண்டு வந்து இந்த ரிசார்ட்டில் தள்ளி கதவை சாற்றி விட்டு எங்கோ வெளியே சென்று விட்டானே..!!

என்ன கொடுமை இது ?? 

இங்கிருந்து வெளியே போவது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய பிரமாதம் எல்லாம் இல்லை.. இங்கிருக்கும் ஃபோனை எடுத்து அழைத்தால் ரிசப்ஷனிலிருந்து வந்து கதவை திறந்து விட்டு விடுவார்கள் தான்.. ஆனால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்??

ஒரு பெண்ணை இழுத்து வந்து அறைக்குள் அடைத்து கதவை சாற்றி பூட்டிவிட்டு எங்கோ சென்று விட்டான் இவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க மாட்டார்களா? கணவன் மனைவியாக இருந்தாலுமே நிஜமான கணவன் மனைவி தானா ??அல்லது மனைவி மீதுள்ள கோபத்தில் இப்படி செய்து விட்டானா ?? அவர்களுக்குள் எதுவும் பிரச்சனையோ?? என்று ஏகப்பட்ட யூகங்கள் அடுத்தவர் மனதில் உருவாகுவதற்கு அவன் வழி விட்டு விட்டானே..

இப்படி இதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நான் அமைதியாக அறைக்குள் இருக்க வேண்டும் ,அவன் வரும் வரை..!!

குளிர் காற்று வீச.. இருள் சூழ்ந்த வானம் அவளை வரவேற்றது பால்கனி  வழியே…

பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினாள், அவன் வந்து விட மாட்டானா என்று வாசலை பார்த்து…….!!

இரவு 9 மணியை நெருங்கியது……

அப்போது…..!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page