அத்தியாயம் 17

 

அவளை தர தரவென இழுத்துக்கொண்டு படிகளில் இறங்கியவன் அவளை கதவை திறந்து வெளியில் தள்ளிவிட்டான். இன்னைக்கு இரவு முழுதும் இங்கே இருந்தா இனிமே என்கிட்ட உன் திமிர்த்தனத்தை காட்டமாட்ட, என்று கூறிவிட்டு கதவை தாளிட்டு சென்றுவிட்டான். இரவு நேரமாதலால் குளிர் அதிகமாக இருந்தது. அவள் அப்படியே அங்கேயே நின்று இருந்தாள். கையை இறுகப்பிடித்து அழைத்து வந்ததால் கையில் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் உடைந்து கையை கிழித்து இருந்தது. அவள் மனம் உலைக்களம் போல் கொதித்துக்கொண்டு  இருந்தது. அப்படி நான் என்ன தவறு செய்தேன்? குடிக்க வேண்டாம் என்று நல்லதை தானே சொன்னேன். அதற்கு எனக்கு இப்படிப்பட்ட தண்டனையா? என் மீது அவருக்கு ஏன்  அவ்வளவு கோபம் வருகிறது? என்னை ஏன் அவருக்கு பிடிக்கவில்லை? என்று தன்னை தானே நொந்து கொண்டு கதறி அழுதுக் கொண்டிருந்தாள். அன்று ஆதேஷும், சசிகுமாரும் வீட்டில் இல்லை.அவர்கள் இருவரும்  உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வெளியூர் சென்றிருந்தார்கள். விசாலாட்சி தனக்கு மூட்டுவலி வரவில்லை என்று சொல்லிவிட்டாள். ஆர்யாவை கேக்கவே வேண்டாம். அவன் தனக்கு  மிகவும்நெருங்கியவர்களின் விசேஷங்கள் மட்டுமே செல்வான். வர்ஷினி அழும் சத்தம் உள் வரை கேட்டது. விசாலாட்சியால் கூட அவள் இப்படி அழுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வர்ஷினி தான் அவர்கள் சொன்ன வேலைகளை எல்லாம் குறையில்லாமல்  எந்த கேள்வியும் கேட்காமல் செய்து விடுகிறாளே, அதனால் வந்த இரக்கமாக கூட இருக்கலாம். விசாலாட்சி தன் மகனிடம் சென்று, ஆர்யா அந்த பொண்ணு பாவம்டா, ரொம்ப அழறா, வீட்டுக்குள் கூப்பிடலாமா என்று கேட்க, அந்த ராட்சசன் அம்மா, நீ இதில எல்லாம் தலையிடாதே, அவளுக்கு ரொம்ப திமிர் கூடிப்போச்சு, சாப்பிடறதே தண்ட சோறு இதிலே என்னையே கேள்வி கேக்கறா, என் கையில் இருக்கிறதை வாங்கி விசிறியடிக்கிறா, இன்னைக்கு ஒரு ராத்திரி வெளியில் இருந்தா உன் மருமக செத்துடமாட்டா, போம்மா, அவளுக்கு வக்காலத்து வாங்கறத விட்டு வேறு வேலை இருந்தா போய் பாரு என்று சொல்லிவிட்டு தன் அறைக்கதவை சாத்திக்கொண்டான். 

 

அன்று அந்த கடவுள் வர்ஷினியை மேலும் சோதிக்க நினைத்ததோ அல்லது அவள் நிலமையை கண்டு அந்த வானமே கண்ணீர் விட்டதோ, மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. அங்கு ஒதுங்க கூட இடம் இல்லாதலால் அவள் மழையில் நனைந்து கொண்டே நின்று கொண்டிருந்தாள். மழை நீரும் அவள் கண்ணீரும் அவள் உடலை நனைத்துக்கொண்டிருந்தது. குளிரில் நடுங்கி கொண்டே நின்றுகொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும் அவளால் குளிர் தாங்க முடியவில்லை. உடம்பு முழுவதும் வெடவெடத்தது. ரொம்ப நேரம் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தவளுக்கு ஒரு நிலைக்கு மேல் முடியாமல் மயக்கம் வந்து அங்கு இருக்கும் பூச்சட்டி மேல் விழுந்துவிட்டாள். ஆயிரம் தான் வசை பாடி வேலை வாங்கினாலும் விசாலாட்சியும் பெண் தானே, அந்த சத்தத்தை கேட்டவுடன் கதவை திறந்து வெளியே வந்தாள். அங்கே வர்ஷினி மயங்கி விழுந்திருப்பதை கண்டு திடுக்கிட்டாள். அவள் வர்ஷினியை மெதுவாக தட்டி எழுப்ப மெதுவாக கண் திறந்தாள். அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் படுக்க வைத்தாள். வர்ஷினியால் எழுந்திருக்க முடியவில்லை. அப்படியே சோபாவிலே படுத்து இருந்தாள். விசாலாட்சியே அவளின் ஈர உடையை களைந்துதன்னிடத்தில் உள்ள சேலையை  மாற்றி, அவள் தலையை துவட்டி படுக்க வைத்தாள். வர்ஷினியை பார்க்க விசாலாட்சிக்கு பாவமாக இருந்தது. நல்ல மூக்கும் முழியும்  சிவப்பா பார்க்க நல்லாத்தான் இருக்கா. வீட்டு வேலை எல்லாம் இழுத்துப்போட்டு செய்யுற, நான் எவ்வளவு தான் திட்டினாலும் எந்த பதில் பேசாம அமைதியாய் தன் வேலையை பார்த்துட்டு போறா, ஆர்யா எவ்வளவு திட்டினாலும் அடிச்சாலும் இங்கேயே தான் இருக்கா இந்த பொண்ணை போய் புடிக்கலே,வேணாம்னு சொல்லறானே, லூசு பையன். அவன் முதலிலேயே புடிக்கலேன்னு சொன்னான், நான் தான் வற்புறுத்தி கட்டி வச்சு தப்பு பண்ணிட்டேனா? இவன் நல்லா இருக்கனும்னு தானே கட்டி வச்சேன், கடைசிலே இந்த பொண்ணு வாழ்க்கையும் கெடுத்து அவனும் குடிச்சி வாழ்க்கையை நாசம் பன்னிக்கிறானே, இந்த பொண்ணுக்கு  ஏதாவது நடந்த அவளை பெத்தவங்களுக்கு என்ன பதில் சொல்றது, ஏன் ஆர்யா இப்படி நடத்துகிறான். சரியான படிச்ச முட்டாளா இருக்கானே என்று தன் மகன் மீது அவளுக்கு கோபமாய் வந்தது. அன்றைக்கு மறுநாள் மழையில் நனைந்ததால் வர்ஷினிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதே சோபாவில் தான் படுத்து இருந்தாள். ஆர்யா அலுவலகத்துக்கு போகும் முன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு போய்விட்டான். அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆதேஷும், சசிகுமாரும் ஊரில் இருந்து வந்தவுடன் விசாலாட்சி நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டார் . சசிகுமார் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். அவர்  தன் பிள்ளை எது செய்தாலும் சரி என்று கூறுபவர். பிள்ளையின் மேல் கண்மூடித்தனமான பாசம். ஆதேஷுக்கு தான் அம்மா சொல்ல சொல்ல தன் அண்ணன் மீது கோபம் வந்தது. பாவம்மா அண்ணி. நீ ஆர்யாவுக்கு இவங்களை கல்யாணம் பண்ணி தப்பு செஞ்சிட்டே. அண்ணி சத்தமா பேசி நான் பார்த்ததே  இல்லை. ஏன் அவங்க நல்லா சிரிச்சி கூட பார்த்ததில்லை. அண்ணன் அவங்களை எவ்வளவு தான் திட்டினாலும், அவங்க தன் கோபத்தை யார் மேலும் காட்டியதில்லை. என்னையும் அவங்க தம்பி மாதிரி தான் பார்க்கிறாங்க. இப்படிப்பட்டவங்களை எப்படிம்மா அண்ணனாலே தண்டிக்க முடிந்தது? இதெல்லாம் ரொம்ப தப்பும்மா. நீ அண்ணன் கிட்ட பேசு. நான் பேசுவேன், ஆனா  என்னை அவன் ஏற்கனவே மதிக்க மாட்டான், நான் ஏதாவது சொன்னா காதிலே போட்டுக்க மாட்டான். நீ தானே அவனுக்கு வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சே, நீயே அவன்கிட்ட பேசும்மா. நான் போய் மருத்துவரை கூட்டிட்டு வரேன் என்று கூறிவிட்டு சென்றான். சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து வர்ஷினியை பார்த்து காய்ச்சல் அதிகமா இருக்கு. நான் ஊசி போட்டு மாத்திரை கொடுத்திட்டு போறேன், அதை தவறாம சாப்பாடு கூட குடுத்துடுங்க. ரொம்ப வீக்கா இருக்காங்க. ஒரு மூன்று நாளைக்காவது அவங்க ரெஸ்ட் எடுக்கனும் என்று சொல்லிவிட்டு சென்றார். விசாலாட்சி தான் கஞ்சி காச்சி கொடுத்து மாத்திரை சாப்பிட வைத்து பார்த்துக்கொண்டார். அவர் பல தடவை தன் அறைக்கு வருமாறு கூப்பிட்டும் வர்ஷினி மறுத்துவிட்டாள். ஹாலிலே இருப்பதாக கூறிவிட்டாள். ஆர்யா அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்று தன் தாயிடம்  கூட விசாரிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பின் தான் வர்ஷினியால் எழுந்து உட்காரவே முடிந்தது. தலை இன்னுமே பாரமாக இருந்தது. விசாலாட்சி அவளிடம் வந்து ஏன் எழுந்திக்கிற? படும்மா! நான் போய் உனக்கு காபி கொண்டு வரேன், இப்ப வேணாம் அத்தை, நான் போய் குளிச்சிட்டு வந்து குடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு எழுந்து கொள்ள, படும்மா, இப்ப தான் உடம்பு கொஞ்சம் சரியாட்டு வருது, நாளைக்கு குளிச்சிக்கலாம்  என்று கூறியவுடன் இரண்டு நாள் படுத்துக்கொண்டே இருந்தது உடம்பு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு அத்தை என்று கூறி மேலே செல்ல அங்கே ஆர்யா இல்லை அவன் காலையிலேயே அலுவலகம் சென்றுஇருந்தான். வர்ஷினி குளித்து முடித்து ஒரு காட்டன் சுடிதாரை உடுத்திக் கொண்டு கீழே வந்தாள். நேரே சமையலறை வந்தாள். அங்கே விசாலாட்சி வேலை செய்துக்கொண்டு இருக்க அத்தை நான் ஏதாவது உங்களுக்கு உதவி புரியவா என்று கேட்டவுடன் அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடும்மா,சமையலை நான் பாத்துக்கிறேன், பிறகு அவளை கண்கலங்க பார்த்து,  உன்னை மாதிரி நல்ல பொண்ணு மனைவியா கிடைக்க அவன் கொடுத்து வச்சியிருக்கனும், ஆனா அவனுக்கு உன் அருமை தெரியலயே,  என் பையனுக்கு உன்னை கட்டி வச்சி உன் வாழ்க்கையை பாழாக்கிட்டோமேனு எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு என்னை மன்னிச்சுடும்மா, எங்கே என்னை நீ மதிக்காம போய்டுவியோனு  நானும் உங்கிட்ட ரொம்ப கடுமையாக நடந்துக்கிட்டேன், மன்னிப்பெல்லாம் வேணாம் அத்தை, நான் உங்கிட்ட எதிர்பாக்கிறது மன்னிப்பு இல்ல, அன்பும் ஆதரவும் தான். அதை நீங்களாவது கொடுப்பீங்களா என்று அவள் கூறியதும் விசாலாட்சி அவளை கட்டி பிடித்து அழுதே விட்டாள். கவலைப்படாதேம்மா. உனக்காக நான் இருக்கேன். நீ போய் உட்க்காரு, நான் உனக்கு காபி கொண்டு வரேன் என்று அவளை வெளியே அனுப்பி விட்டு  அவளுக்காக காபி போட்டு  எடுத்துக் கொண்டு போய்  கொடுத்தாள். அன்று முதல் விசாலாட்சி  வர்ஷினியிடம் அன்பாகவே நடந்துக் கொண்டாள். இருவரும் சேர்ந்தே வீட்டு வேலைகளை செய்தனர். வர்ஷினியே பெரும்பாலும் எல்லா வேலைகளையும் செய்து விடுவாள். விசாலாட்சி வேலை செய்ய வந்தாலும் அவர்களை மிகவும் இலகுவான வேலைகளை மட்டுமே செய்ய விடுவாள். 

 

அன்று ஆர்யா  வேளையில் இருந்து சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டான். இது தான் சமயம் என்று விசாலாட்சி அவன் அறைக்கு சென்றாள். அவன் அப்போதுதான் குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறி வெளியே வந்தான். விசாலாட்சியை பார்த்ததும் என்னம்மா என்ன விஷயம்? மாடி படி ஏறி என்னை பார்க்க வந்திருக்க, ஆர்யா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றதும் பேசுங்க என்று கூறி சோபாவில் அமர்ந்தான். விசாலாட்சி அவனருகே அமர்ந்து, ஆர்யா நீ  அன்னைக்கு வர்ஷினியிடம் அப்படிநடந்து கொண்டது ரொம்ப தப்புப்பா. அவ உன் மனைவி, எதிரி இல்லை. அம்மா உனக்கு வற்புறுத்தி தான் கல்யாணம் பண்ணி வச்சேன். ஒத்துக்கறேன். அதுக்காக அவ கிட்ட முகம் கொடுத்தும் பேசாம இருக்கிறது நல்லாவா இருக்கு. வர்ஷினி குடும்பத்துக்கு ஏத்த 

நல்ல பொண்ணுதான். வாழ்நாள் முழுவதும் நீ இப்படியே இருக்கிறதா முடிவு பண்ணிட்டியா? நீ ஒரு பக்கம் அவ ஒரு பக்கம் இருக்கிறதெல்லாம் வாழ்க்கை ஆயிடுமா? நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்ததானே எங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ  வரும். வர்ஷினிக்கு என்ன குறை சொல்லு. அவ அழகாத்தானே இருக்கா, சொல்லபோன்னா உன்னைவிட நிறமா இருக்கா, பண்பா, பாசமா இருக்கா, இதைவிட என்ன வேணும் சொல்லு. தயவு செய்து உன் முடிவை மாத்திக்கோ ஆர்யா. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்தாதான் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். நான் சொல்றத சொல்லிட்டேன். நல்ல முடிவா எடு என்று கூறிவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டாள்.   

 

 வர்ஷினியின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. வர்ஷினி காலையில் அவன் எழுவதற்கு முன் எழுந்து தயாராகி கீழே சென்று விடுவாள் இரவிலும் அவன் தூங்கிய பிறகே வருவாள். இதுவே வாடிக்கை ஆகிவிட்டது. இப்படியே ஆறு மாதம் ஓடிவிட்டது. இவ்வளவு அவன் ஒதுக்கியும் அவள் அங்கே இருப்பதற்கு காரணம் அவள் பெற்றோர் மட்டும் தான். தன் அம்மாவின் உடல்நிலை கருத்தில் கொண்டு தான் அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அங்கு வாழ்கிறாள். அவள் அம்மாவிடம் வாரத்திற்கு ஒரு நாள் தவறாமல் பேசிவிடுவாள். மறந்தும் இங்கு இருக்கும் நிலையை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டாள். அவர்கள் ஏற்கனவே உடம்பு சரியில்லாத போது தானும் தனது கஷ்டத்தை கூறி அவர்களை மேலும் துன்பப்படுத்த அவளுக்கு மனம் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு வேட்டு வரும் என்று அவள் நினைக்கவில்லை. 

 

அன்று ஆர்யா சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தான். வந்தவன் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அம்மா! அம்மா! சீக்கிரம் வாங்க ,என்று அழைக்க அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தவள் இவன் குரலை கேட்டதும் வெளியே வந்தாள். மேலே புத்தகம் படித்துக் கொண்டிருந்த வர்ஷினியும் ஆர்யாவின் குரல் கேட்டு கீழே இறங்கி வந்தாள். அவர்கள் வந்தவுடன் ஆர்யா வர்ஷினியை பார்த்தவாறு அவன் அம்மாவிடம், அம்மா இந்த விவாகரத்து பத்திரத்தில் அவளை கையெழுத்து போட சொல்லு. நீ அன்னைக்கு சொன்னே இல்ல, இரண்டு பேரும் சந்தோஷமா வாழணும்னு, நாங்க இரண்டு பேரும் சந்தோசமா வாழணும்னா இதுதான் ஓரே வழி. இவளை விவாகரத்து பண்ணினா  நானும் இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோசமா இருப்பேன். அவளும் அவளுக்கு ஏத்தவாறு எவனையாவது  கல்யாணம் பண்ணி சந்தோசமாக இருப்பா. சீக்கிரமா கையெழுத்து போட்டுட்டு அவளை கிளம்ப சொல்லுங்க, பணம் ஏதாவது வேணும்னுனாலும் கேட்டு வாங்கிக்க சொல்லுங்க, கொடுத்தறேன் ஆறு மாசம் ஆகட்டும் தான் நான் இவ்வளவு நாலா காத்திருந்தேன். இதுக்கு மேலும் இவ இங்கே இருக்கிறதல எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு மேலே ஏற, விசாலாட்சி என்ன செய்வது, என்ன பேசுவது என்று தெரியாமல் விக்கித்து போய் நிற்க, வர்ஷினி அவனை பின் தொடர்ந்து மேலே ஏறினாள். அவனருகே சென்று தீடீரென்று நீங்க விவாகரத்து கேட்டா எப்படி நான் கொடுக்க முடியும்? இப்போ எங்க வீட்டு  நிலைமை சரியில்லை. எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, நான் விவாகரத்து ஆய்டுச்சுன்னு போய் அவங்க முன்னாடி நின்னா அவங்க தாங்க மாட்டாங்க, எனக்கு கொஞ்ச நாள் டைம் குடுங்க , நானே போய்டுவேன் என்றதும், தாங்கமாட்டாங்கன்னுனா என்ன செத்துடுவாங்களா, சாகட்டும், எனக்கென்ன வந்தது? அது உன் பிரச்னை,  மத்தவங்கள பாத்த, நான் எப்படி வாழறது? என்று அலட்சியத்துடன் கூறியதை கேட்ட வர்ஷினிக்கு கோபம் வந்துவிட்டது. ஓடி சென்று அவன் சட்டையை பிடித்து எங்க அம்மாவை சாக சொல்ல நீ யாரு? என்று ஆவேசத்துடன் பேச அவன், என்ன திமிர் உனக்கு  என் சட்டையை பிடிக்கிறே,என்று அவளை பளார் பளார் என்று அறைய அவன் அடித்த அறையில் அவள் படிக்கட்டின் விளிம்பில் நின்று இருந்ததால் அப்படியே போய் படிக்கட்டில் உருள கடைசி படிக்கட்டின் விளிம்பில் இருந்த கம்பி வெளியில் நீட்டி இருக்க அது சரியாக அவள் வயிற்றில் குத்திக் கொண்டது. இரத்தம் வழிய அப்படியே மயங்கி விட்டாள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page