அத்தியாயம் 34
நல்லவன் போல ரிசார்ட் கூட்டிட்டு வந்துவிட்டு , தான் குளியலறைக்குள் சென்றதும் திருட்டுத்தனமாக வெளியே சென்று விட்டான் தன்னை உள்ளே வைத்து பூட்டி விட்டு இதெல்லாம் எந்த வகையில் நியாயம்?? எதற்காக இப்படி செய்ய வேண்டும் ??
ஒருவேளை என் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் முறை தெரியாமல் இப்படி செய்கிறானா ஒன்னும் புரியலையே கடவுளே.. நல்ல நாளிலேயே அவன் எதுவும் சொல்லிட்டு வெளியே போக மாட்டான் இந்த லட்சணத்தில் என்னை கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கான் கோபத்தில் வேறு இருக்கிறானோ என்று சந்தேகமாக இருக்கிறது..
நிச்சயம் இது பழிவாங்குற மாதிரி தான் இருக்கு எதுக்காக இப்படி எல்லாம் பண்ணனும் ??, என்று அவள் மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டும் தன்னை தானே வருத்திக் கொண்டும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்..
அறையிலிருந்த கடிகாரம்.. ஒன்பது முறை மணியடித்து ஒன்பது மணி ஆகிவிட்டது என்பதை பறை சாற்றியது..!!
என்னது 9 மணி ஆகிவிட்டதா??!!
இன்னமும் வராமல் இருக்கிறானே.. திரும்ப வந்து கூட்டிட்டு போக மாட்டானா?? ரிசப்ஷனுக்கு பேசாம கால் பண்ணி கேட்டுடலாமா?? அதுதான் சரி அவன் வரும் வரைக்கும் காத்திருப்பதெல்லாம் முட்டாள்தனம் இவன் வர மாதிரி தெரியல நாம தான் இங்கிருந்து கிளம்பனும் என்று முடிவெடுத்தவளாக அங்கிருக்கும் லேண்ட்லைன் ஃபோனை நோக்கி சென்றாள்..
அதை நெருங்கும் வேளையில் சட்டென அறை முழுக்க இருள் சூழ்ந்தது..
” கிழிஞ்சது.. கரண்ட் வேற போயிடுச்சா?? அய்யோ எனக்கு இருட்டு என்றாலே பயமாயிற்றே.. இப்போ என்ன பண்ணுவேன் இங்க கேண்டில் எங்க இருக்குன்னு கூட தெரியல.. இப்படி தனியா என்னை தவிக்க விட்டுட்டு புலம்பவும் வச்சுட்டானே இந்த படுபாவி பய”, என்று வாய் திறந்து சத்தமாகவே முணுமுணுத்தாள் அவள்.
தட்டு தடுமாறி மெதுவாக அங்கிருந்த லேண்ட்லைன் ஃபோனை நோக்கி அவள் சென்று அதைத் தொடும் முன்பாகவே..
யாரோ வாசல் கதவை திறக்கும் ஓசை கேட்டது..!!
பூட்டிய கதவை யார் திறக்கிறார்கள்?? ஒருவேளை தீரன் வந்து விட்டானா?? இல்லை வேறு யாராவது இருந்தால் என்ன பண்றது?? அதுவும் இந்த இருட்டில் யார் வராங்க அப்படின்னு தெரியலையே.. கடவுளே ப்ளீஸ் என்னை எப்படியாவது இந்த ராத்திரியிலிருந்து காப்பாற்றி விடு, என்று மனதிற்குள் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டாள் அவள்..
சாவியை போட்டு கதவை திறக்கும் ஓசை நன்றாகவே கேட்டது..
ஏதோ கதவை திறக்கத் தெரியாதவன் திறப்பது போல போட்டு நெம்பி எடுத்துக் கொண்டிருந்தான் அந்த சாவி துவாரத்தை..
இப்படி போட்டு கதவை திறக்க முயற்சி செய்கிறார்களே அப்படியென்றால் கண்டிப்பாக அது தீரனாக இருக்க வாய்ப்பில்லை..
வேறு யாரோ தான் கதவை திறக்க முடியாமல் திறக்கிறார்கள் ஒருவேளை திருடனா, கொள்ளைக்காரனா அல்லது கொலைகாரனா இல்லை பொம்பளை பொறுக்கியா?? யாரென்று தெரியவில்லையே ஆண்டவா..
ஆக மொத்தம் இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டோம்.. பிறந்தநாள் அன்றே நமக்கு இறந்த நாளும் வந்துவிடுமோ..??!!
கண்களை இறுக மூடிக்கொண்டு பதட்டத்துடன் வேர்வை ஒழுக நின்றிருந்தாள் மித்ரா..
கை விரல்கள் எல்லாம் நடுங்க தொடங்கியது.. கால்கள் ஆட்டம் கண்டது நிற்க முடியாமல்..
உடலில் உள்ள மொத்த சக்தியும் வடிந்து போனது போல உணர்ந்தாள்..
எதற்காக தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது?? வாழ்க்கையில் சந்தோஷமே கிடையாதா ??
வந்தாலும் அதை முழுதாக அனுபவிக்கும் முன்னமே இப்படி கஷ்டங்கள் துயரங்கள் சவால்கள் என்று அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு முன்னாடி வந்து நிற்கிறது.. என்ன வாழ்க்கை இது??
எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குதா இல்ல இந்த உலகத்தில் உள்ள எல்லாருக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கா??
எது எப்படியோ ஆக மொத்தம் இன்னைக்கு நான் தொலைஞ்சேன்
ஏன் இப்படி பண்ற ப்ளீஸ் தயவு செஞ்சு எப்படியாவது வந்திடு தீரன்.. கதவை திறந்துவிட்டு உள்ளே வரப்போற நபர் யார் என்று எனக்கு சத்தியமா தெரியல ஆனா அது நீயாக இருந்தால் நிச்சயம் நான் சந்தோஷப்படுவேன்.. ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன் ப்ளீஸ் வந்துடு தீரன் பிளீஸ் வந்துடுங்க.. பயத்தில் தன்னையறியாமல் வார்த்தைகள் தந்தியடித்தது அவளுக்கு..
ஒருவழியாக வெளியே நின்று கொண்டிருந்த நபர் கதவை திறந்து விட்டான் போலும்..
கிரீச் என்ற சத்தத்தோடு மெதுவாக அந்த அறை கதவு திறந்து கொண்டது..
அந்த சத்தத்தை தொடர்ந்து உள்ளே நுழையும் அந்த காலடி ஓசைக்கு சொந்தக்காரன் யார் என்று தெரியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றிருந்த மித்ராவின் இதயத்துடிப்பு அளவுகடந்து துடித்து கொண்டிருந்தது..!!
“டக்.. டக்.. டக்.. டக்..” என்ற ஷுவின் ஓசை குதிரையின் காலடி சத்தம் போல பலமாக கேட்டது அவளுக்கு..
கடவுளே.. யாராக இருக்கும் தெரியவில்லையே நான் இங்கே நிற்பது அவர்களுக்கு தெரியுமா??
இல்லை தெரியாதா??
நான் உள்ளே இருக்கும் விஷயம் தெரிஞ்சு தான் யாரோ வராங்க போல.. யாராக இருக்கும்?? என்று மனதிற்குள் அவள் பதட்டத்தோடு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே நுழைந்த அந்த உருவம் அவளை நெருங்கியது..
அந்த கும்மிருட்டிலும் அவள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்து அவளை நெருங்கிய அந்த உருவத்தை அவளால் உணர முடிந்தது ஆனால் கண்களை திறந்து பார்க்கும் தைரியம் மட்டும் அவளுக்கு வரவில்லை..!!
படபடக்கும் நெஞ்சோடு அவள் பயத்தோடு நின்றிருக்க.. அவள் தோள் மீது அழுத்தமாக படிந்தது அந்த இரும்புக் கரம்..!!
அவ்வளவுதான்..
உடலில் உள்ள உயிரை யாரோ உருவி எடுத்தது போல பயந்து அலறி நடுங்கி விட்டாள் மித்ரா..!!
சட்டென்று அந்த உருவம் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டது..
யார் இந்த செயலை செய்வது?? யார் தன் மீது கை வைத்தது, இப்பொழுது கட்டி அணைப்பது?? நிச்சயமாக வந்திருப்பவன் திருடன் அல்ல அப்படி என்றால் யார்?? என்கிற கேள்வி அழுத்தமாக மனதில் தோன்றவும் தைரியத்தை திரட்டி கொண்டு கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள் மித்ரா..
என்ன அதிசயம் ??!!
இப்பொழுது அறை முழுக்க ஏதோ அரண்மனை போன்ற வெளிச்சத்தோடு பளபளத்துக் கொண்டிருக்கிறது மின்விளக்குகளால்..!!
அப்படி என்றால் கரண்ட் வந்து விட்டதா??
ஆனால் இதற்கு முன்பு இந்த அறை பார்ப்பதற்கு இத்தனை ரம்மியமாகவும் அலங்காரத்துடனும் காட்சியளிக்கவில்லையே..??
கரண்ட் போய் வந்த அடுத்த நிமிடம் எப்படி அறை முழுக்க இப்படி மாறிருக்கு?? என்ன அதிசயம் எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுடைய இன்னொரு பக்க மூளை கேள்வி கேட்டது..
” அதெல்லாம் கிடக்கட்டும்.. முதலில் உன்னை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கும் நபர் யார் என்று பார்த்தாயா?? அதை விட்டுட்டு ரூம் அலங்காரத்தை பார்த்து வாயை பிளந்து கொண்டு இருக்கிறாயே மடச்சி”, என்று கேள்வி கேட்டு காரி துப்பவும் உடனே வெடுக்கென்று அந்த உருவத்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்..
” யார் நீ?? என்ன தைரியம் இருந்தால் என்னை தொடுவ?? உன்னை..”, என்று சொல்லிக்கொண்டு நிமிர்ந்து வந்த உருவத்தை பார்த்து அடிக்க போன அவளுடைய கை அப்படியே உறைந்து போய் நின்று விட்டது அந்திரத்தில்..!!
எதிரே சிரித்த முகத்தோடு அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் அவளுடைய தீரன்..💓💓
அவனைப் பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியே வந்தது..
எங்கே திருடன் வந்து விட்டானோ அல்லது வேறு யாராவது வந்து வம்பிழுக்க போகிறார்களோ என்றெல்லாம் யோசித்து பயந்து போய் கிடந்தாள்..
ஆனால் இப்பொழுது தன் கண் எதிரே கணவன் வந்து நிற்கவும்.. அவன் மீதிருந்த கோபம் , வெறுப்பு எல்லாம் காணாமல் போய்.. இருள் சூழ்ந்த பாலைவனத்தில் கிடைத்த வெளிச்சம் போல அவனை பார்க்கத் தொடங்கினாள்..!!
இத்தனை நேரமாக அவனைத் திட்டிக் கொண்டிருந்த வாய், இப்பொழுது அவனைப் பார்த்ததும் “தீரா…….”, என்று அழுகையோடு கூறி தத்தளித்தது..!!
அடுத்த கணம் தாங்க மாட்டாமல் அவளை அவன் இழுத்து அணைத்துக்கொள்ள முற்படும் வேளையில், அவனை முந்திக்கொண்டு அவள் அவனை அணைத்துக்கொண்டாள் ஆவேசமாக..💓💓
இறுக்கமாக அவனை கட்டி அணைத்து கொண்டு கதறி அழுதாள் அவள்..
” எங்க போனீங்க தீரன்?? நான் ரொம்பவே பயந்து போயிட்டேன் தெரியுமா?? ஏன் இப்படி பண்றீங்க ஒரு நிமிஷம் என்னோட மூச்சே நின்று விட்டது”, என்று சொல்லி கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தாள்..
நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே அவளை அணைத்தபடி சிறிது நேரம் நின்றிருந்தவன் பிறகு அவளை விலக்கி நிப்பாட்டினான்..
என்ன என்பது போல் கேள்வியாக அவனை அவள் பார்க்கவும்..
வாசல் பக்கம் திரும்பி குரல் கொடுத்தான் தீரன்..
” எல்லாத்தையும் உள்ள எடுத்துட்டு வாங்க”, என்று கம்பீரமாக அவன் கட்டளையிடவும் உள்ளே மூன்று நான்கு பேர் நுழைந்தனர்..
பெரிய டேபிள் மீது அந்த பார்சலை வைத்து உள்ளே எடுத்து வந்து வைத்தனர்..
வந்தவர்கள் கையில் டிப்ஸ் என்கிற பெயரில் சில ஆயிரங்களை எடுத்து கொடுத்தான் அவன்..
அடுத்த நிமிடம் நன்றி கூறி அவர்கள் அனைவரும் அறையை விட்டு வெளியே சென்றனர்..
என்ன பார்சல் இது?? எதுக்காக இத நாலு பேர் தூக்கிட்டு வர்றாங்க?? அவ்வளவு வெயிட்டா என்ன இருக்கு இதுக்குள்ள?? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளின் கைப்பற்றி அந்த டேபிள் அருகே அழைத்து சென்றான் அவன்..
“ அத ஓபன் பண்ணி பாரு மித்து”
“ என்ன இது??”
” அதான் சொல்றேன் இல்ல ஓபன் பண்ணி பாரு.. பார்த்தா தானே தெரியும் “, என்றான் புன்னகையோடு.
சிறு தயக்கத்துடன் அந்த டேபிளை நெருங்கியவள் அந்த பார்சலை பிரிக்க தொடங்கினாள்..
மிகப்பெரிய அந்த பார்சலை பிரிக்கவும் உள்ளே இருந்த அட்டைப்பெட்டியை திறந்து பார்க்க..
அதில் ஐந்து கிலோ எடை உள்ள அழகிய கேக் ஒன்று இருந்தது..!!
அந்த கேக்கிற்கு நடுவே அவனும் அவளும் விழிகள் மோத ஒருவரை ஒருவர் அனைத்தபடி நிற்கும் சிலை ஒன்று இருந்தது..!!
பார்க்க கிட்டத்தட்ட அது அச்சு அசலாக இவர்களைப் போலவே இருந்தது..!!
அதைக் கண்டதும் அவளுக்கு அதிர்ச்சி ஆச்சரியம்..!!
எப்படி தங்களைப் போலவே அந்த உருவம் இருக்கிறது ?? இப்படி எல்லாம் செய்ய முடியுமா ??இதெல்லாம் சாத்தியமா?? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க..
அவள் கையில் கத்தியை திணைத்து..
” நேரம் ஆகுது கேக் கட் பண்ணலாமா??”, என்று கேட்டு சிறு பிள்ளைக்கு கற்றுக் கொடுப்பது போல அவளுடைய கையை பற்றி கேக் கட் செய்ய வைத்தான் அவன்..
கண்களில் கண்ணீர் கோர்த்தது அவளுக்கு..
முதலில் பயத்தில் கண்ணீர் சொரிந்தாள்..
இப்பொழுது ஆனந்த மிகுதியால் கண்ணீர் சொரிந்தாள்..❤️❤️
தன் வாழ்க்கையில் ஒரு நாளும் இப்படி ஒரு பிறந்த நாளை அவள் கொண்டாடியதே கிடையாது..
மற்றவர்கள் கேக் வெட்டி கொண்டாடும் பொழுது கூட இதெல்லாம் ஆடம்பர செலவு இதெல்லாம் நாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆனால் சந்தோஷமாக கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு மனதார சிரித்து பேசி மகிழ்வதற்கு தன்னோடு உண்மையாக பழகும் நபர்கள் ஒருவரும் இல்லையே என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு வருடமும் நிம்மதி இழந்து அவளால் உறங்க முடியாமல் போன வேதனை மட்டும் அவளுக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது..
ஆனால் இப்பொழுது அந்த வேதனை கண்ணீர் கஷ்டம் எல்லாவற்றையும் துணி வைத்து துடைத்தார் போல எல்லாம் மாயமாகி விட..
இப்பொழுது சந்தோஷம் மட்டுமே அவள் அருகில் நின்று கொண்டிருந்தது, தீரன் உருவத்தில்..!!
என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்❤️❤️
– தொடரும்..
