14..அவளை மறக்கத்தான்
14. அவளை மறக்கத்தான்
தோட்டத்தில் உலாவி விட்டு, அங்கிருந்து போக மனமில்லாமல், அழகாக பூத்திருந்த நந்தியாவட்டையையும் ,மஞ்சள், சிவப்பு ரோஜாக்களையும், ஆசையாக தன் கைகளால் மெல்ல வருடியபடி, “இந்த இடத்தை விட்டு போகவே மனசுயில்லை தினேஷ்.”
“இன்னும் அந்தப் பக்கம் எல்லாம் போகல .அங்க பவளமல்லி இருவாட்சி போன்ற பூக்கள் பூத்து குலுங்கும்..ஒரு சின்ன குளத்தில் அல்லி மலர்களை காண கோடி கண்கள் வேண்டும். எத்தனை வகை பூக்கள் எல்லாம் நம் நாட்டில் விளையும் பூக்கள். மரம் செடி, கொடி வகைகளும் இருக்கின்றது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பராமரிக்கிறார்.”
“அதற்கு பின்னால் எங்க பாஸ் வீடு.”
‘உங்க பாஸ் ரசனை மிக்கவர் தான்.’
‘லண்டன் போகும் போது, அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு போகணும். அவர் மனைவியும்., ஒரு பையனும், நிறைகுடம் தழுவாதவர்கள்.”
‘நேரமாயிடிச்சு . போகலாம்.’
ஜெனியை அணைத்தப்படி,அவள் அறைக்கு போக லிப்டில் காத்திருந்தார்கள். .
எப்போ எனக்கு டிஸ்சார்ஜ்.
“உன் விருப்பம் தான். இப்பவே போறது என்றாலும் போகலாம். உன் ஹெல்த் நல்லா இருக்கு. உன் மன ஹெல்த் பலப்பட வேண்டும் என்பதற்காகத் தான் உன்னை அட்மிட் பண்ணினேன். “
‘நாளை ஆபீஸுக்கு போகலாமா”..?..
“தாராளமாக போகலாம்.”
‘ஆனால்,எதற்கும் கலங்கக் கூடாது. ‘
‘அப்படியெல்லாம் இருக்க மாட்டேன். என்னவோ தெரியல. ரொம்ப லோன்லியா பீல் பண்ணேன். என் பிரண்ட் அமலா கூட போனே செய்யவில்லை.”
‘திருநெல்வேலிக்கு போய் இருக்கிறார் என்று சொன்னேல்ல. வருவார். எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சியா கூட இருக்கும். அங்க என்ன சூழ்நிலையோ ஆபீஸுக்கு வந்து தானே. ஆகணும் இதற்கெல்லாம். மனசை போட்டு அலட்டிக்காதா”…
‘இதுவரை ஒரு நாள் கூட பேசாமல் இருந்தது இல்லை. குட் நைட் கண்டிப்பாக வந்துவிடும். அது தான் கவலையா இருக்கு.”
“ஜெனி”…..
“ஓகே. ஒகே”…
“வீடு வேற. அங்கு போனால் தான் தெரியும். அந்த பெங்களுர் மாப்பிள்ளை வேறு…. என்னிடம் சொல்லி இருந்தால் எப்படியாவது தடுத்து இருப்பேன். அப்புறம் தான் என் அப்பாவின் P.A. சொல்லிவிட்டார்.”
“எந்த வீட்டில் தான் காதலை ஏற்றுக் கொள்கிறார்கள்.என்னை வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு காரணம் இருக்கிறது. ஆனாலும் என்னால் உன்னை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.
சாதிக்க போராட வேண்டும். காதல் ஜெயிக்க கூடுதல் போராட்டம் தேவை.
காதல் கடலில் மூச்சடைக்க மூழ்கி முத்து எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கு.”
நிச்சயம். நாம் ஒன்றுசேருவோம்.
ஹேய்…நாம பேசிக் கொண்டே ஓர் ஓரமா நின்றதில் லிப்டில் ஏறவே மறந்து விட்டோம். வா ஜெனி என்று லைனில் நின்றுக் கொண்டார்கள்.
3வது ப்ளோர் வந்தவுடன், வெளியேறினார்கள்
“பரவாயில்லை இங்கு லிப்ட்,ஏறுவதில் கூட ஒழுங்கை கடைபிடிக் கிறார்கள் .எல்லா இடத்திலும் இருப்பதுபோல், தள்ளுமுள்ளு இல்லை”.
“ஆரம்பத்தில் எந்த நிர்வாகமும்,, இந்த ஒழுங்கை கடைபிடித்தால், மக்களும் அதையே கடைபிடிப்பார்கள்.”
“இந்த ஆஸ்பிட்டலில் எல்லாம் டிஸிப்ளினாக இருக்கும்.”
“ஃபவுண்டர் அதை யே விதைத்தார்.
அந்த ஒழுங்கு முறை இப்போது ஆலமராக வளர்ந்து இருக்கிறது.”
அந்த ப்ளோரில் நேராக போய் இடதுபக்கம் திரும்பினால், இவளோட அறை வரும். அதற்குள் எதிர்பட்டவர்கள் எல்லோரும் இவனுக்கு வணக்கம் சொல்லியபடியே போனார்கள்.
அவளுக்கு அதைப் பார்க்க பெருமிதமாக இருந்தது. எப்பேர்பட்ட புரபஷன் இது. ஆவ்சம்.
“நானும் டாக்டர் படித்து இருக்கலாம்.%
“ஏன் மேடம் படிக்கல.’
“கம்யூட்டர் சயின்ஸ் தானே எடுத்தேன்.
என்னை யாரும் டாக்டர் படி என்று சொல்லல. எனக்கும் தோணல.%
“நீ மட்டும் படித்து இருந்தால், என் கண்ணில் அப்பவே பட்டு இருப்ப .
மிஸ்ஸாகி விட்டது.” என்று தினேஷ் சொல்ல, இருவரும் சேர்ந்து சிரித்து, கதவை திறக்க அங்கே பிரசாத் முகத்தில் கோபம் ஜிவு ஜிவு என்று சிவப்பேற அமர்ந்திருந்தான்.
“வாங்க மேடம். இங்க நீ பேஷண்டா……?. இல்லை ராஜம்மா பேஷண்டா……? நான் அவளை பார்க்கத் தான் அவ்வளவு தூரம் , என் வேலையெல்லாம் போட்டு விட்டு வந்தேனா”.
“ஸ்டாப் இட் பிரசாத். முதலில் ராஜம்மாவை மரியாதையா கூப்பிட கத்துக்கோ…அவர்களை அவள் என்று சொல்ற” என்று ஆங்கிலத்தில் கேட்க,
“பேச்சை மாற்றாதே. உடம்பு சுகமில்லை என்று, இங்கு அட்மிட் ஆனாய். இப்போது எங்க போயிட்டு வர்ற பார்க்கா. பீச்சா…”
தினேஷை பார்த்து “என்ன டாக்டர். உனக்கு இவளைத் தவிர வேற பேஷண்டே இல்லையா . இவளை பார்த்துக் கொள்வதற்குத்தான் டாக்டருக்கு படிச்சியா.” என்று
இங்கிதம் இல்லாமல் கேட்க,
பிரசாத்தின் மட்டமான பேச்சுக்கு தினேஷ் ஒன்றும் சொல்லாமல் தன் கண்ணியத்தை காத்தான்.
“நன் ஆப் யுவர் பிஸினெஸ். உன்னை யார் இங்கு வரச் சொன்னா” என்று ஜெனி அவனுக்கு பதில்கொடுத்தாள்.
“என் மாண்புமிகு அத்தை தான், என் பெண்ணை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருப்பா” என்று கேட்டுக் கொண்டார்.
“வா வீட்டுக்கு போகலாம். நான் டாக்டரிடம் பேசிவிட்டேன். பில்லும் செட்டில் பண்ணிட்டேன்.”
“ஆமாம். இதென்ன இவ்வளவு சீப்பா இருக்கு இந்த ரூம். ‘நான் இன்னும் பெரிய கார்பரேட் ஆஸ்பிட்டலில்..சூட் போட சொல்லி இருப்பேன்”.
‘ஏன் அங்க உன் பிரண்டுகளை கூட்டுட்டு வந்து கும்மாளம் போடுவதற்கா”….என்று ஜெனி நக்கலாக கேட்க,
“மம்ம்..சரி. சரி கிளம்பு”.
“நான் தினேஷ்னோட வர்றேன்.
என்னை அவர் டிராப் பண்ணுவார்.”
பிரசாத் தினேஷை ஏளனமாகப் பார்த்து விட்டு, “தினேஷ் ஒரு டாக்டர். அவனோட வேலை உன்னை குணப்படுத்த மட்டும் தான். உன்னை பத்திரமா கூட்டிட்டு போறது ஒரு பேமிலி மெம்பரோட பொறுப்பு. அந்த பொறுப்பை உன் அம்மா எனக்கு கொடுத்து உள்ளார்.”
தினேஷ், அவனிடம், “நானும் ஜெனியோட பிரண்ட் தான். நான் அவளை டிராப்ப் பண்ணிவிட்டு வீட்டுக்கு போய் விடுவேன்”.
பிரசாத் மறுபடியும் ஏளனமாக,”நீ டிராப் பண்றதுக்கும் நான் பிக்கப் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு.
உன்னோட அந்த பிரேக் பிடிக்காத பைக்ல கூட்டிட்டு போவியா. இந்த பொல்லூஷனில், மறுபடியும் உடம்புக்கு வந்தால்,உன்னிடம் ட்ரீட்மெண்ட்டு வருவா .அது உனக்கு பிஸினெஸ் ஆகும்.ஆனா, அது அவளுக்கு ரிஸ்க். நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பல.”
ஜெனி கோபமாக,” பிரசாத் போதும். இங்கே வந்து உன் பிஸினால் லாஜிக்கை பேசாதே”
அப்போது ராஜம்மா இல்லாததை கவனித்தாள்
“எங்கே ராஜம்மா.”..?.
“நான் அவர்களை வீட்டுக்கு போக சொல்லிட்டேன்.”
சுதாவிடமிருந்து போன் வந்தது.
“ஹலோ ஜெனி..”
கடுப்புடன் ஜெனி… ‘ஹலோ அம்மா. நான் இங்க நிம்மதியா இருக்கிறது உனக்கு பிடிக்காதே..”
“ஒன்றும் பேசாதே. நீ பிரசாத்துடன் வீட்டிற்கு வா .”.
“ஆம்புலன்ஸ் தானே ஆஸ்பிட்டல் வந்தேன். எனக்கு வரத் தெரியும்.”
“ஆர்க்யூ பண்ணாதே. வந்து சேரு”. என்று போனை வைத்து விட்டாள்.
கடுகடுவென்று வெளியே வந்தாள்.
“பேபி… இரு. காரை எடுத்துட்டு வர்றேன்” என்று பிரசாத் ஓடினான்.
தினேஷ் அவளிடம்,”நீ டென்ஷன் ஆகாத
பீ ரிலாக்ஸ் .எதோ முக்கியமான வேலை என்று தான் அம்மா கூப்பிட்டு இருப்பார்கள்.”
“ஸாரி. தினேஷ்.இவன் உன்னை பேசினதற்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.”
“இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கணுமா.
அவனைப் பற்றி தெரிந்து விட்டது.
இது சாம்பிள் தான். இன்னும் நிறைய வரும். நான் தயாராக வேண்டாமா.
காதல் என்றால் சும்மாவா .”
“நைட் போன் பண்ணு. “
பிரசாத் கார் கொண்டு வர , அவன் எதிரிலே தினேஷ்க்கு ஒரு ஹக் கொடுத்து விட்டு, காரில் ஏறி அமர்ந்தாள்.
இதை பார்த்ததும், வெற்றி வாகை சூடிய களிப்பில் இருந்தவன் முகம் இருண்டது.
தினேஷை, முறைத்து விட்டு, காரை ஆஸ்பிட்டல் என்றும் பாராமல் விருட்டென்று கிளப்பி, சீறி பாய்ந்தான்.
அங்கே ஜெனியின் வீட்டில்
சுதாவும்,மதியும் பேசிக் கொண்டு இருக்கிறாரகள்.
“அத்தை.. அன்னிக்கு டாக்டர்.தினேஷ் என்று ஒருவன் வந்தானே.”
“ஆமாம். அவர் கம்பெனி டாக்டர்.”
“அதில் தான் டவுட் இருக்கு. அவனைப் பற்றி விசாரித்தேன் அவன் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டாம்:. இங்க எப்படி அவன் ஜெனிக்கு”……
“அதுவுமில்லாமல் கம்பெனியில் ஸ்டாப்புக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரை வீட்டுக்கா அனுப்புவார்கள். எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. “
“எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்க்காதா.”
‘இல்லை அத்தை. ஒருவேளை ஜெனியும், தினேஷ்ம் காதலர்களோ.”.?
‘ச்சீய்…என் பெண் அப்படியெல்லாம் காதலில் விழமாட்டாள்.அவனைப் பார்த்தால், பெரிய இடம் மாதிரி தெரியல. பைக்கில் வருகிறான்.”
பைக்கில் வருகிறவன் இவளுக்கு சரியான மேட்ச் கிடையாது. ‘
‘“இவளும், தன் டூ வீலரில் போறவள் தானே. “
“அது அவ தலையெழுத்து. வீட்டில் இவ்வளவு கார் இருக்கு.”
இவள் டூ வீலரில் போனதால் அவனும் தன் இனம் என்று நினைத்து விட்டான் போலும். “என்று மதி வெறுப்பை கக்க,
“விடும்மா. நாம அப்படியே அவ விருப்பத்திற்கு விட்டு விடுவோமா.”
“அத்தை சும்மா இருந்த என் அண்ணனை உசுப்பேற்றி விட்டது நீங்கள். அவனும் அதை பிடித்துக் கொண்டு,ஜெனியை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறான்.”
சுதா மனதிற்குள், ‘இதென்ன இந்தப் பெண் முழுவதும் என்பக்கமே கையை திருப்புகிறாளே.’
‘என்ன அத்தை யோசனை”
“ம்ம்ம் சொல்லுமா’…
“உங்க பிள்ளையும், மாமாவும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இன்று அவர்கள் பெங்களூரிலிருந்து வந்தவுடன் இவள் திருமணத்தைப் பற்றி பேசிவிடுங்கள்.”
“‘முரளிக்கு என் அண்ணனை பிடிக்காது “
‘அப்படி ஏன் சொல்ற.”
“என்னவோ போங்கள் .நாங்கள் உங்களைத் தான் நம்பி இருக்கிறோம
பேச வேண்டிய விதத்தில் பேசுங்கள்.”
“இவனுக்காக பெரிய, பெரிய இடத்திலிருந்து வந்த வரனை எல்லாம் விட்டு விட்டோம் என்று அம்மா கவலைப் படுகிறார்கள்”.
‘இதோபாரு மதி, திருமணம் என்பது நம் கையில்லை . அது ஆண்டவன் வகுத்தது. நாம முயற்சி எடுப்போம்.
முடிந்தால் நலம். “ என்று
சேஃபாக பதில் கூறினார்.
ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது.
அதிலிருந்து ஜெனி கோபமாக இறங்கினாள்.
உள்ளே வந்ததும், கைபையை தூக்கி எறிந்தாள்.
சுதாவும், மதியும் அதிர்ந்து, என்னாச்சோ தெரியலயே.
சுதா மெல்ல “பிரசாத் எங்கம்மா”? …….
“சே.. நீயெல்லாம் அம்மாவா. என்னை ஆஸ்பிட்டலிருந்து அழைத்து வர, உனக்கு வேற ஆளே கிடைக்கலயா
அவ்வளவு பாசம் இருந்தால் நீயே வர வேண்டியது தானே.”
சுதா பதட்டமாக,’என்ன நடந்தது சொல்லுடி” ……..
“என் அண்ணன் எங்கே”…?
“உங்கண்ணன்”……
தொடரும்.
.
