ஆடி வரும் வண்ண மயிலே-16
அத்தியாயம்:16
பவதீப் ராகவனுக்கும் அழைப்பு வைத்திருப்பதாக சொன்னான்.
குருமூர்த்தி “ ம் ‘ வைத்திருப்பாங்க அவனும் அரசியலில் இருப்பவன்…அவன் தயவும் வேணும் அதை விட என் பையன் என்று எனக்காக அழைப்பு வைத்திருப்பாங்க…
இன்னும் ஒன்று அவன் மகள் நாட்டியத்தின் பொக்கிஷம் ஆயிற்றே..சென்னை சார்பாக கலந்து போவது அவள் தானே…
ஆனா அவங்களுக்கு தெரியாத ஒன்று அவனுக்கு மகள் ஒருத்தி இருப்பதே ஞாபகம் இல்லை…இதை வெளியே சொன்னால் என் குடும்பத்தை பார்த்து ஊரே கை கொட்டி சிரிக்கும்.
அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் அமைதியாக இருப்பதே…அவன் அங்கே எல்லாம் வர மாட்டான் பவன்… நீ மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பாரு…அதில் எந்த தப்பும் நடக்க கூடாது.
வெளி மாநிலங்களில் இருந்து நம்மை நம்பி…இதில் கலந்து கொள்ள வராங்க அந்த நம்பிக்கையை நம்ம தானே காப்பாற்ற வேணும்…கனகராஜ் மேலே எதற்க்கும் ஒரு கண் வைத்திரு…
அவனுக்கும் அழைப்பு போய் இருக்கும்…கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை இவனுக்கும் கலைக்கு கூட வெகு தூரம் தான்…என்ன செய்வது இன்விடேஷன் கொடுக்க தான் வேணும்.
இல்லை என்றால் ஒரு கலக்கத்தை கிளம்பி…அரசாங்கத்துக்கு ஒரு தலைவலியை கொண்டு வந்து விடுவான்…பாண்டி கூட வேறு சேர்ந்து இருக்கான் பிறகு கேட்கவா வேணும்…?
மீனா, புவனா நீங்க மயூ கூட கிளம்புங்க…ஜாக்கிரதையாக இருக்க குழந்தைங்களை பார்த்து கொள்ளுங்க தனியாக எங்கும் போக வேணாம்…நான் நாளை மறு நாள் காலை நிகழ்ச்சி தொடங்க முன்னே வந்து விடுவேன்.
மயூ பாப்பா கிட்ட சொல்லுங்க சரி சக்ரா என்ன வருகிறானா..? இல்ல வழமை போல சியாமளா நினைவில் தஞ்சை போகாது இருக்கிறானா..? என கேட்டார்.
மீனா “ அண்ணன் வர மாட்டார் என்று தான் நினைக்கிறேன்…அவர் சியாமளா மேலே வைத்திருக்கும் அன்பு பற்றி தெரியும் தானே..? அதுவும் தஞ்சாவூர் என்றால் கேட்கவா வேணும்…
பெரிய கோவில் பூராகவும் சியாமளாவின் சலங்கை ஒலி… இன்னும் ஒலித்து கொண்டு தானே இருக்கும்…” என்றார்.
குரு “ நீ சொல்வது சரி தான் மீனா பரவாயில்ல…அவனை கஷ்டப்படுத்த வேணாம் நீங்க மயூ கூட கிளம்புங்க…புள்ள உங்களை ரொம்ப எதிர்பார்த்து காத்திருப்பாள்…” என்றார்.
ராகவன் பங்களாவில் அவர் சில பைல்களை சரி பார்த்து கொண்டு இருக்க…சார் என அழைத்து கொண்டே நாதன் வந்தான்.
ராகவன் “ வா நாதா என்ன விஷயம்…வெளியே போன கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்து விட்ட…? என கேட்டார்.
நாதன் “ அது வந்து சார் உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த மறந்து விட்டேன்…வெளியே போன போது பிளக்ஸ் பேனர் பார்த்ததும் தான் ஓடி வந்தேன்.
தஞ்சாவூரில் பெரிய நடன நிகழ்ச்சி நடக்க போகிறது…சி.எம் தொடக்கம் மற்ற மினஸ்டர்கள், எதிர்கட்சி தலைவர்களுக்கு கூட…அழைப்பு வைத்து இருந்தாங்க எலக்சன் வேறு வருகிறது இல்லையா.?
மக்களை ஈர்க்கும் ஒரு வழியாக தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது…நீங்க நாளை தஞ்சை கிளம்ப வேணும் சி.எம் கூட வருவதாக தகவல்.
இன்னொரு விஷயம் சார் வந்து மயூ பாப்பா…சென்னை சார்பாக டான்ஸ் ஆடுகிறது அது பெயர் கூட இன்விடேஷனில் இருக்கு…” என்றான்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த ராகவன்…பிறகு
“ இல்ல நாதா நான் போகவில்லை…அங்கே என்னால் போக முடியாது அது ஏன் என்று… இத்தனை வருடத்தில் என் கூட இருக்கும் உனக்கு தெரியாதா..?
அது மட்டுமல்ல பெரியப்பா என் மேலே கடும் கோபத்தில் இருக்கிறார்…வீணாக பிரச்சினை எதற்க்கு எலக்சன் வேறு வருகிறது…” என்றான்.
“ அட! என்ன மாப்பிள்ளை நீங்க இது எல்லாம் அரசியலில் சகஜம்…உங்களுக்கு தெரியாதா..? என கேட்டு கொண்டே பாண்டி கூடவே அவன் வலது கை பிளஸ் அடியாள் கபாலி வந்தார்கள்.
ராகவனுக்கு எதிரே உள்ள சோபாவில்…அவன் கால் மேலே கால் போட்டு கொண்டு அமர…அவன் பின்னால் கபாலி நின்றான்.
பாண்டி “ என்ன மாப்பிள்ளை இதை கூடவா நான் உங்களுக்கு சொல்லி தர வேணும்..? இதை எல்லாம் நீங்க எப்போவோ தெரிந்து வைத்திருக்க…இன்று நீங்க தான் தமிழ் நாட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து இருப்பீங்க.
பாருங்க இந்த வயதில் கூட எந்த துணையும் இல்லாது…உங்க பெரியப்பா முதல்வர் நாற்காலியை விடாது பிடித்து கொண்டு இருக்கிறார்…காரணம் அவருக்கு அரசியலின் உள்ள சூட்சுமம் தெரியும்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை…நம்ம வெளியே அடித்து கொள்வது போல இந்த சனங்க கிட்ட காட்டுவோம்…உள்ளே ஒன்றாக கை கோர்த்து விருந்து சாப்பிடுவோம் இது தானே அரசியல்.
என்ன ஒன்று இதில் உங்க பெரியப்பா மட்டும் விதிவிலக்கு…நேர்மையை கட்டி கொண்டு இன்னும் இருக்கிறார் நீங்க இப்போ தான்…. வெளியே நாலு இடத்துக்கு போக வேணும்.
உங்க மூஞ்சியை மக்கள் மறக்காது இருக்க இது தான் வழி…இல்லை என்றால் ஓட்டு கேட்க போகும் போது இந்த முட்டாள் பயல்கள்…நீங்க யாரு என்று கேட்டு தொலைக்குங்க.
காசுக்காக, ஒரு பாட்டில் சாராயத்துக்கு விலை போனால்…எப்படி அரசியல்வாதியை ஞாபகம் வைத்திருக்க முடியும்…இது தான் காலம் காலமாக நடப்பது.
இன்னொரு விஷயம் அந்த நடன நிகழ்ச்சியில் உங்க மூத்தாரத்து பெண்ணு…ஆ! என்ன பெயர் மயூரி அந்த புள்ள நடனம் ஆடுகிறது போல.
அந்த புள்ள அதன் ஆத்தாள் போல நல்லா நடனம் ஆடுவதாக கேள்வி…சென்னை சார்பாக அது தான் வெளிநாட்டு நிகழ்சியில் கலந்து கொள்ள எல்லாம் போகிறது…அப்போ அதற்க்கு செல்வாக்கு அதிகம்.
அதை வைத்து நம்ம பொம்பளைங்க ஓட்டை கேட்டால்…அள்ளி போடுவாங்க இல்ல என்றால் அந்த புள்ள உங்க பெரியப்பாவுக்கு சார்பாக…ஓட்டு கேட்க இறங்கி விடும்.
அதற்க்கு தனிப்பட்ட முறையில் சென்னையில்… செல்வாக்கு அதிகம் என்று கேள்வி அடுத்து நம்ம எதிர்கட்சி தலைவருக்கு வேறு அழைப்பு இருக்கு…அவரும் வருவார் அப்போ அவர் கூட நட்பை வளர்ந்த கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.
நம்ம கட்சிக்குள்ளே நமக்கு எதிரிங்க அதிகம்…அது தான் எதிர்கட்சியாக இருக்கும் அவர் கூட நம்ம நட்பு பாராட்டி கொண்டால்…நீங்க தேர்தலில் நிற்கும் போது உங்களுக்கு அதிக குடைச்சல் கொடுக்க மாட்டார்.
இதை எல்லாம் யோசித்து தான் உங்களை தஞ்சாவூர் நிகழ்ச்சிக்கு போக சொல்கிறேன்…இப்படி நாலு இடத்துக்கு போனால் தான் உங்களை பலருக்கு தெரிய வரும்…” என்றான்.
ராகவன் “ நீ சொல்வது எல்லாம் சரி தான் பாண்டி…ஆனால் உனக்கே தெரியும் என் பெரியப்பாவுக்கும் எனக்கும் நடக்கும் பிரச்சனை பற்றி…
அடுத்து சக்ரபாணி மாமா சியாமளாவை நான் தான் திட்டம் போட்டு.. கொலை செய்து விட்டு அதை மறைத்து விட்டதாக நினைக்கிறார்.
ஆனால் உண்மை கடவுளுக்கும் மட்டும் தெரியும்…சியாமளா கால் தடுக்கி படியில் இருந்து விழுந்தாள்…எனக்கும் சில நேரம் ஆச்சரியமாக இருக்கும் முறையாக… பரத நாட்டியம் கற்று மேடை நிகழ்ச்சி எல்லாம் செய்யும் ஒருத்தி.
எப்படி மாடி படியில் இருந்து கால் தடுக்கி உருண்டு விழ முடியும் என்று…அவளுக்கு என்ன பாலன்ஸ் பண்ண தெரியாதா..? இப்போ கூட எனக்கு புரியாத புதிராக தான் இது உள்ளது.
கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட சியாமி என் காதல் மனைவி…அவளை நான் போய் எப்படி கொலை செய்ய முடியும் இதை சொன்னால்…மாமா மட்டுமல்ல பெரியப்பாவும் நம்பவில்லை.
அதனால் தான் அவர் போகும் இடங்களுக்கு நான் பெரிதாக போவது இல்லை…எனக்கு அரசியல் தான் முதலில் அதற்க்கு பிறகு தான் எல்லாமே.
ஆனால் அதற்காக நான் மிருகமாக மாறவில்லை…நிச்சயமாக மயூ பாப்பா நிகழ்ச்சிக்கு அவர் வருவார்…அந்த சங்கடத்தை தவிர்க்க தான் நான் அந்த நிகழ்ச்சிக்கு போவதை தவிர்த்தேன்…” என்றான்.
சியாமளா விபத்து பற்றி ராகவன் பேசியதும்…பாண்டி முகம் மாறியது அவன் சட்டென தன்… முகத்தை மாற்றி கொண்டவன்.
“ அது எல்லாம் முடிந்து போன கதை மாப்பிள்ளை பழசை நினைத்தால் மட்டும்…நடந்தது ஏதுவுமே மாற போவது இல்லை சியாமளா தங்கச்சி விதி…
போய் சேர்ந்து விட்டது இப்போ உங்க கவனம்.. எல்லாம் அரசியலில் தான் இருக்க வேணும்.
அதற்கான வாய்ப்பு உங்க கதவை தட்டி இருக்கிறது…அதை நன்றாக நீங்க பயன்படுத்தி கொள்ள வேணும்… சியாமளா தங்கச்சி திரும்ப வர போவது இல்லை.
அதை நினைத்து உங்க லட்சிய கனவான அரசியலை கோட்டை விட்டு விட வேணாம்…நான் கேள்விப்பட்ட வரைக்கும் சக்ரபாணி ஐயா… மயூ பாப்பாவின் எந்த நிகழ்ச்சிக்கும் போவது இல்லை.
கல்யாணி அம்மாவும் அவங்க துணைக்கு வெங்கட்டும் தான் மயூ பாப்பா கூட…துணைக்கு நிகழ்ச்சிக்கு எல்லாம் போவாங்க… அதனால் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடையாது….
அடுத்து குரு மூர்த்தி ஐயா ஆயிரம் தான் இருந்தாலும் கூட அவர் உங்க பெரியப்பா…அவருக்கு ஆண் வாரிசு நீங்க தானே அடித்தாலும் திட்டினாலும் கூட…
பொது வெளியில் அதை எல்லாம் அவர் காட்டி கொள்ள மாட்டார்…எலக்சன் வேறு வருகிறது அதனால் அடக்கி வாசிப்பார் …
அதனால் நீங்க அதை பற்றி எல்லாம் யோசிக்க வேணாம்…நம்ம நாளை தஞ்சைக்கு கிளம்பலாம்…” என்றான்.
இவன் பேச ராகவன் யோசிக்க ஆரம்பித்தான்…நாதன் மனதில் நாளை தரமான ஒரு சம்பவம் இருக்கு…இந்த பாண்டியால் ராகவன் சார் என்ன எல்லாம் அனுபவிக்க போகிறாரோ தெரியாது…
நான் மறைமுகமாக சொன்னாலும்… ராகவன் சாருக்கு அது புத்தியில் ஏறுவது இல்லை…விதி விளையாடும் போது இந்த சொல் பேச்சு கேட்காத குணம்… வருகிறது போல என்று நினைத்தான்.
உண்மையில் நாதன் நினைத்தது போல ராகவனுக்கு மட்டுமல்ல…மயூரியின் வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது.
அதற்க்கு முதல்படியாக தஞ்சையில் வைத்து…தன் ஆட்டத்தை ஆரம்பித்தது கூடவே… பவதீப்பையும் மயூரி கூட ஜோடி சேர்க்க ஆரம்பித்தது.
மறுநாள் சக்ரபாணி குடும்பம் குருமூர்த்தியின் குடும்பம் ஒன்றாக கிளம்பியது…சக்ரபாணி மயூரியின் நிகழ்ச்சிக்கு வருவது ஆச்சரியமாகவும் சந்தோஷமாக இருந்தது மீனா, புவனாவுக்கு.
மீனா, புவனா, குழந்தைங்க வருவதால்…சக்ரபாணி பிளைட்டில் போகலாம் என்று முடிவு பண்ணி…அனைவருக்குமே தன் செல்வாக்கை வைத்து நேற்று நைட்டு டிக்கெட் புக் பண்ணி விட்டார்…
அசோக்கிடம் கம்பெனி பொறுப்பை பார்த்து கொள்ள சொல்லி விட்டு…சக்ரபாணி கிளம்பி விட்டார் அவர் வருகைக்காக… ஏர்போர்ட்டில் மூன்று கார்கள் தயாராக நின்றிருந்தது.
அவருக்கு தஞ்சை மண்ணை மிதிக்க நெஞ்சை அடைத்தது…எத்தனை தடவை தன் கைகளை கோர்த்து கொண்டு சந்தோஷமாக வரும் மகளின் ஞாபகம்…அழையா விருந்தாளியாக அவருக்கு வந்தது.
அவர் நெஞ்சு கணக்க ஏர்போர்ட்டை சுற்றி பார்க்க…தாத்தா வா போகலாம் என்று மயூரி அவர் கையை பற்ற தான் அவர் சகஜ நிலைக்கு வந்தார்…கணவனின் உணர்வு புரிந்த கல்யாணி மனதிலும் பாரம் ஏறியது.
ஆனால் விதியை யாரால் மாற்ற முடியும்…அவர்கள் வாழ தான் வேணும் சியாமளா அவர்களை நம்பி விட்டு போன மயூரிக்காவுக்காக… அவர்கள் வாழ தான் வேணும்.
சக்ரபாணியின் கார் இரண்டு, மினி வேன் ஒன்று இவர்களின் வருகைக்காக காத்திருக்க…அதில் அனைவருமே ஏறி சக்ரபாணி பங்களாவுக்கு போனார்கள்.
மயில் ஆடி வரும்…
