“காரணம் இல்லாத அன்பினால் விளையும் இந்த உணர்வுக்கு காதல் என்ற பெயர் தான் பொருந்திப் போகிறது “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -13
மழையில் நனைந்தவளுக்கு கண்டிப்பாக சளி பிடித்திருக்கும் காய்ச்சலும் வந்திருக்கும் இன்று தாமதமாகவோ, இல்லை விடுப்பு எடுத்திருப்பால் என்று நினைத்துக் கொண்டே அலுவலகம் வந்தவன் நேற்று சேம்பேள் டெஸ்ட்க்கு கொடுத்து வந்த ரிப்போர்ட் வாங்கி வர விஜயிடம் சொல்லி இருந்தான். அவனோ இப்பொழுது போக முடியாத சூழலில் ஆரண்யா வாங்கி வருவதாக சொல்லி தான் சென்றாள் என்று சொல்லவும் இவனும் எப்படி அந்த ரிப்போர்ட் வாங்குவது, இவள் வருவாளா, இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தவன், விஜய் ரிப்போர்ட் கொடுக்கவும், ‘எப்படி’ என்றவனின் யோசனை நேற்றைய மழை இரவை நினைவு படுத்தியது.
அவள் காரினை விட்டு இறங்கும் நேரம் எதிரே வந்த வாகனத்தை கவனிக்கவில்லை, வர்மா அதைப் பார்த்து விட்டுத் தான் அவளை கீழே இறங்க விடாமல் தடுக்க நினைத்து இழுக்க அவன் மேலே மோதி இருந்தாள்.
எதிர்பாரா நிகழ்வு தான் விலகிச் சென்றிட ஏனோ இருவருக்கும் மனமில்லை,
ஆணின் வாசம் பெண்ணுக்கும் பெண்ணின் வாசம் ஆணுக்கும் இயற்கையிலேயே ஒரு வித ஈர்ப்பிணைக் கொடுத்திருக்க, அந்த ஈர்ப்பு தான் இருவரையும் விலக விடாமல் பிடித்து வைத்திருக்கிறது.
அவனுக்கு ஏற்கனவே அவளுடன் இதழ் கலந்த முத்தம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு அது பற்றிய எந்த நினைவும் இல்லை. அவன் மேல் மயக்கத்தில் தான் இருக்கிறாள் அது வெளிப்படையாக தெரிகிறது. அவள் மறைக்கத் தான் முயலுகிறாள். பாவம் பேதைப் பெண்ணால் கட்டுக்குள் வைத்திட முடியவில்லை.
வர்மா அப்படி இல்லையே, அது மருத்துவ முத்தம் தான் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் அது அவள் மீதான மெல்லிய உணர்வின் ஆர்ப்பரிப்பின் விளைவு தானே.
தண்ணீர் தெளித்து விட்டு சிறிது நேரம் காத்திருக்கலாம், அவள் மீது அக்கறை இருந்திருந்தால் மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றிருக்கலாம், ஏன் செய்யவில்லை. அவளை அவனால் மட்டுமே எழுப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் அப்போது இருந்தது.
அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இதை செய்திருப்பானா என்ற கேள்வியை வைத்திட்டால், இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
இதோ இந்த அணைப்பில் அமைதியாய் இருக்கிறான். அவனின் உணர்வுகள் தூண்டப்பட்டு இருக்கிறது தான் அதற்காக அதை அப்படியே நிறைவேற்றிக் கொள்ள அவன் எப்போதும் நினைத்ததில்லை.
அவன் மனதிலும் வலிகள் இருக்கின்றது. அவனை ஒவ்வொரு நிமிடமும் குத்திக் கிழித்துக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது இவளும் சேர்ந்து கொண்டாள்.
“இப்போ ஆரண்யா எங்க இருக்கா ” ஏன் என்னை பார்க்காமல் சென்றாள் என்ற கோவம் வந்தது வர்மாவுக்கு
விஜயோ “பேக்டரில இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன்க்கு வராங்க டா, மறந்துட்டியா “
பேக்டரி இருக்கும் நிலை, தொழிலாலர்கள் எந்த சூழ்நிலையில் வேலை செய்கின்றனர், சிமெண்டின் மூலப் பொருட்களின் தரம், சிமெண்ட் தயாரிக்கும் கலன்கள், அரைக்கப் பயன்படுத்தும் மெஷின் என அனைத்தையும் பரிசோதனை செய்த பின்பே இந்த வருடத்திற்கானஉற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
“ம்ம் சரி சரி இங்க வேலையை முடிச்சிட்டு நீயும் கிளம்பி போ ” என்றான் வர்மா
“நீ போகலையா வர்மா ”
“இல்லை நீயும் ஆரண்யாவும் பார்த்துக்கோங்க ” தலையை பிடித்த படி சொல்ல,
“வர்மா என்ன ஆச்சு, ஒரு மாதிரி இருக்க” அவன் அருகில் சென்று பார்க்க, கண்கள் சொருக, மயங்கிப் போனான்.வர்மாவின் கன்னம் தொட்டு எழுப்ப, வர்மாவின் உடல் கொதித்தது.
“இப்படி கொதிக்குது, ஏன் டா ரெஸ்ட் எடுக்காம ஆபீஸ் வந்துருக்க ”
விஜய் சொன்னது எதுவும் வர்மா செவியில் விழவில்லை, அதிக காய்ச்சல் வந்ததில் மயங்கி இருந்தான். வர்மாவை தூக்கிக் கொண்டவன் காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் மருத்துவரையும் அழைக்க, வர்மாவை பரிசோதித்து விட்டு,
மழையில் நெடு நேரம் இருந்ததால் தான் காய்ச்சல் வந்திருக்கிறது பயப்படும்படி எதுவும் இல்லை, கனவிழித்ததும் கஞ்சி போன்ற திரவ உணவைக் கொடுங்கள் இரண்டு நாளைக்கு எளிதில் ஜீரணம் ஆகும் உணவைக் கொடுங்கள் சரி ஆகி விடும் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
வர்மாவின் அம்மா அழுது விட்டார். தன் பிள்ளையை சரியாக பார்த்துக் கொள்ள வில்லையோ என்று புலம்ப, விஜய் சமாதானம் செய்தான். பேக்டரியில் இருந்து போன் வர, அவரிடம் சொல்லி விட்டு பேக்டரிக்கு விரைந்தான்.
ஆரண்யாவிடம் வர்மா பற்றி சொல்ல, பதறிப் போனாள். ‘தன்னால் தான் எல்லாம் என்ற குற்ற உணர்வு தோன்ற, வர்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தவள்,
இன்ஸ்பெக்ஷன் வந்திருப்பவர்களுக்கு வேண்டிய தகவலைச் சொல்லிக் கொண்டிருந்தவள் கவனம் முழுவதும் வர்மா மட்டுமே,
பேக்டரியை சுற்றிப் பார்த்தவர்கள் சின்ன சின்ன ஆலோசனைகள் சொல்லி சரி செய்து கொள்ள அறிவுறுத்த கவனமாகக் கேட்டுக் கொண்டாள். சாம்பிள் களை எடுத்துக் கொண்டு நாளை வருவதாகச் சொல்லி சென்றனர்.
அவர்கள் சொல்லிச் சென்றதை உடனடியாக செய்ய வேலை பார்ப்பவர்களிடம் சொல்லி சரி செய்தாள். விஜயும் கூடவே இருந்தான். வர்மாவை தொல்லை செய்யாமல் வந்திருந்த அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி பிரச்சனை வராமல் பார்த்துக் கொண்டாள்.
பல வருடங்கள் வேலை செய்த கை தேர்ந்தவள் போல் பதில் சொன்ன விதம் விஜய்க்கு இன்னும் அவள் மேல் மரியாதை கூடியது.
நாளை அவர்கள் வருவதற்குள் பேக்டரிக்கு வரும் போது வேறு எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள்.
வேலைகள் முடித்து விட்டு வெளியே வரும் பொழுது தான் நினைவுக்கு வந்தது இந்த மாத கணக்கு விவரங்களில் வர்மாவின் கையெழுத்து இல்லை, “ச்சே ” எனக் கொட்டிக் கொண்டவளிடம்,
“என்ன சிஸ்டர் எதுக்கு இப்போ உங்களையே கொட்டிக்குறீங்க, நான் கொட்டுறேன், என்று சிரிப்புடன் உதவி செய்ய வந்தவனிடம்,
“சார் இதுல வர்மா சார் கையெழுத்து இல்லை, இதை நாளைக்கு காட்டணுமே என்ன பண்ணலாம் சார் எனி ஐடியா சொல்லுங்க “
அவளும் பார்க்கவே சோர்வாக தெரிந்தாள். “என்ன ஆச்சு உனக்கு டல்லா இருக்க “
“கோல்டு னா”
“கோல்டா, மழைல நனைஞ்சியா நீ “
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவளின் அமைதியே அவனுக்கு புரிய வைத்தது இருவரும் ஒன்றாகத் தான் நனைந் திருக்கிறார்கள். இருவருக்குள்ளும் என்ன இருக்கிறது அவர்களாக வெளிப்படுத்தினால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். அதுவும் வர்மா அவன் என்ன நினைக்கிறான், என்ன செய்வான் என்று கண்டுபிடிக்கவே முடியாது. பெருமூச்சு விட்டவன் இவனை என்ன சொல்றதுன்னு தெரியல, ஆரண்யாவ விரும்புறான் ஆனால் ஏன் அந்த நிதிஷாவ எதுக்கு கல்யாணம் பண்ண சம்மதிக்கணும் அதான் புரியல,
மனதில் எதையோ யோசித்தவன் “ஆரண்யா நீ வர்மா வீட்டுக்கு போய்ட்டு சைன் வாங்கிட்டு வந்துடறீயா, இது ரொம்ப முக்கியமானது உனக்கே தெரியும்ல” இருவரையும் சந்திக்க வைத்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
யோசித்தவள் வர்மாவைப் பார்த்து விடும் ஆவலில் சம்மதித்தவளை வர்மா வீட்டிற்கு அனுப்பு வைத்தான்.
வீடு வரை வந்து விட்டவளுக்கு உள்ளே செல்ல துணிவு வரவில்லை. நாவல் பழ நிறத்தில் காட்டன் புடவை அணிந்திருந்தாள். புடவையின் பார்டர் ரோஜாப்பூ நிறம், தலையிலும் ரோஜாப்பூ வைத்திருந்தாள். பார்க்கவே தோட்டத்தில் புதியதாய் பூத்த பூவினை போல் இருந்தாள்.
விஜய், வர்மாவின் அம்மாவிடம் போனில் ஆரண்யா வருவதை சொல்லி இருந்ததால் வாட்ச் மேன் வீட்டின் உள்ளே போக சொல்ல, கையில் பைலுடன் சென்றாள்.
வீட்டில் ஆண்கள், பெண்கள் என நிறைய பேர் இருக்கவே தயக்கத்துடன் நின்றிருந்தவளை பார்த்த வர்மாவின் அம்மா
“வாமா விஜய் நீ வருவேன்னு சொன்னான். வர்மா அவன் ரூம்ல தான் இருக்கான்” அவரின் சிரித்த முகமும் அழைப்பும் அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் வீட்டிற்குள் செல்ல தயக்கம் இருந்தது. அவளின் முகத்தைப் பார்த்து தயக்கத்தைப் புரிந்து கொண்டவர்
பின் வாசல் வழியாக அழைத்துச் சென்றார். வர்மாவுக்கு பார்த்துக்குற பொண்ணு வீட்ல இருந்து வந்திருக்காங்க, கோவிலுக்கு போகணுமா கல்யாணத்துக்கு முன்னாடி இது அவங்க வீட்டு முறையாம். வர்மாக்கு உடம்பு சரி இல்லாததால நாங்க போய்ட்டு வரலாம்னு இருக்கோம் ” இவள் கேட்காமலே அனைத்தையும் சொல்லி விட,
இதைக் கேட்ட பிறகு வர்மாவை எப்படி பார்ப்பது பேசாம இவங்க கிட்டயே பைல்ல சைன் வாங்கிட்டு வர சொல்லிடலாம். அவரை பார்க்கவே வேணாம். மனதில் நினைத்தாள் ஆனால் சொல்லவில்லை. அதற்குள் வர்மாவின் ரூம் வந்து விட கதவினைத் திறந்தவர்
“உள்ள போ மா, வர்மா எழுந்துட்டான். போய் பாரு ” கீழே இருந்து அவரை அழைக்கவும் அவர் சென்று விட,
வர்மா முகத்தை பார்க்க கூடாது. சைன் மட்டும் வாங்கி விட்டு சென்று விட வேண்டும் முடிவெடுத்தவள் கதவினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவனுடைய அறையில் இருந்த ஷோபாவில் அமர்ந்திருந்தான். சோர்வாக இருந்தாலும் அமர்ந்திருந்த தோரணை அரசனுக்கு நிகராகவே இருந்தது.
கருப்பு நிற ஆர்ம் கட் பனியன் அணிந்திருந்தான். அவனின் முறுக்கேறிய தேகம் ஆழ்ந்த பார்வை, அலட்சியமாக வளையும் தடித்த இதழ்கள், வலிமையான விரல்களினால் இரு புறமும் அகண்டு இருந்த அவன் கைகள், கால் மேல் கால் போட்டு இருந்தவன் மெல்ல திரும்பினான் அவள் புறம்.
சோர்ந்திருந்த அவன் முகம் அவள் முகம் கண்டதும் உற்சாகத்தை ஒரு குவளையில் ஊற்றிக் கொடுத்தது போல் தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த பார்வை ரசனைக்கு மாறி இருந்தது. அவளின் செவியின் ஓரம் பதுங்கி இருந்த ஒற்றை ரோஜா அவனின் பொறாமைக்கு தீனி போட்டது. தன் விரல்கள் தீண்டிட ஏக்கம் கொண்டான்.
இரவு மழை இருவரையும் கொஞ்சமாய் மாற்றி விட்டிருந்தது. சோர்வாக இருப்பான் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் பளிச்சென்ற பால் முகம் தன்னை நினைத்து அவள் வருத்தம் கொள்ளவில்லையோ என்ற எண்ணத்தில் கோவம் கொண்டான் அந்த பூ மனசுக் காரியிடம்.
“குட் ஈவ்னிங் சார் ”
அவளின் வார்த்தைகளில் எதிர் வினை ஆற்றாமல் அவளையே பார்த்திருந்தவன் அமைதியாகவே இருந்தான்.
“சார் இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு ” இருவருக்குமான இடைவெளியைப் பார்த்தவன் பக்கத்தில் அமர கண் ஜாடை செய்தான்.
அவள் பைலை அவன் முன் இருந்த டேபிளில் வைத்தவள் மீண்டும் தயக்கம் கொள்ள,
அவன் கைகள் நீண்டு அவள் இடையை வளைத்து தன் மடியில் அமர்த்திக் கொள்ள அவளின் தளிர் விரல்களோ அவனின் வெற்றுத் தோளில் சரண் புகுந்தது அதிர்ச்சியில்…
அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்…
