அத்தியாயம் 35
இப்பொழுது சந்தோஷம் மட்டுமே மித்ரா அருகில் நின்று கொண்டிருந்தது, தீரன் உருவத்தில்..!!
என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்❤️❤️
அவளுடைய பார்வையை கண்டு கொள்ளாதவன் போல வெட்டிய கேக்கிலிருந்து ஒரு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான் அவன்..
கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை கூட உணராமல் அவன் ஊட்டிய கேக்கை சாப்பிட்டவள் இமைக்க மறந்து போனாள்..
நிஜமாகவே தான் காண்பது உண்மையா அல்லது கற்பனையா என்று இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை..
கற்பனை அல்ல நிஜம் தான் என்பதை பறைசாற்றும் விதமாக அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவள் கையில் பட்டு சிதறியது..!!
” இப்படியே பார்த்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம் எனக்கு இப்போ கேக் ஊட்டி விட மாட்டியா??”, என்று புன்னகையோடு கேட்டான் தீரன்..
முடியாது என்று மறுக்காமல் தன்னிச்சையாக அவளுடைய கைகள் அவனுக்கு ஊட்டி விட செய்தது..!!
ஆசையோடு அதை வாங்கி சாப்பிட்டவனின் கண்கள் அவளுடைய உதட்டின் ஓரமாக ஒட்டிக் கொண்டிருந்த கிரீமை பார்த்து பொறாமை பட்டது..
” இந்த கிரீம்க்கு கூட கொடுத்து வச்சிருக்கு ஆனா எனக்கு தான் கொடுத்து வைக்கல”, என்றான் அவன் ஏக்க பெருமூச்சொன்றை வெளியிட்டு.
அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்து வைத்தாள் அவள்.
உடனே அவளின் உதட்டோரம் ஒட்டி கொண்டிருந்த க்ரீமை தன் விரல்களால் வழித்தெடுத்தவன் அதை ருசி பார்த்தான் நொடியும் தாமதிக்காமல்..
இப்பொழுது தான் அவன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரியவும் உடனே அவளின் கன்னங்கள் செவ்வானமாய் சிவந்து போனது..
“ அதெல்லாம் சரி எப்படி இந்த ரூமை இப்படி அலங்காரம் பண்ணீங்க முதலில் இப்படி இருக்கவில்லையே??”
“ அதெல்லாம் அப்படித்தான் சில விஷயங்கள் தெரியாமல் இருக்கிற வரைக்கும் தான் அது அழகு அதனால் அதனுடைய ரகசியத்தை நீ தெரிஞ்சுக்கவே வேண்டாம்..பார்க்க அழகா இருக்கா அவ்வளவுதான் அதை நீ ரசிச்சு சந்தோஷமா இரு”
அவன் கூறிய பதிலில் அவளுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ ஆனால் அதிலிருக்கும் உண்மையை உணர்ந்து கொண்டாள்..
நிஜம்தான்..
சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அந்த சூழ்நிலைக்கு அழகு..!!
அவனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை அந்த அறையின் அழகை ரசித்துக் கொண்டே பால்கனிக்கு சென்றாள்..
அவள் பின்னாடியே நிழல் போல தொடர்ந்து சென்றவன் அவளுடன் நின்று கொண்டான் கம்பியை பிடித்துக் கொண்டு..
வானத்தில் கண்சமிட்டி கொண்டிருந்த வெண்ணிலவை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தனர் இருவரும் சிறு புன்னகையுடன்..
வானத்தில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் பூமிக்கு தரை இறங்கி விட்டதோ என்கிற சந்தேகம் எழுந்தது சுற்றி எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கு வெளிச்சத்தால்..
” பார்க்கவே ரொம்ப அழகா இருக்குல்ல”, என்று தன்னை மறந்து அந்த சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்த மித்ரா சட்டென்று திரும்பி பார்க்க.. முக்குரசும் தூரத்தில் நின்று கொண்டிருந்த தீரனை அத்தனை அருகில் பார்த்ததும் மூச்சடைத்து போனது அவளுக்கு..!!
மின்விளக்கு வெளிச்சத்திலும் அந்த வெண்ணிலவின் தயவாலும் அவனுடைய முகம் ஒளி வீசிக் கொண்டிருந்தது..
கத்திசண்டை மட்டுமே போட்டு பழகிய அவனுடைய கூர் விழிகள் இன்று அவளுடைய இதயத்தை கூறு போட்டுக் கொண்டிருந்தது..
உனக்கு நான் நிகர் இல்லையா?? என்பது போல் போட்டி போட்டுக் கொண்டு அவனுடைய கூர் நாசி அவளின் மூக்கை முட்டி மோதி நின்றது..
அழுத்தக்காரன் தான்.. ஆனால் அழுந்த மூடிய இதழுக்குள் ஓராயிரம் ஆசைகளை உள்ளடக்கியவன் நான் என்றது அவனுடைய தடித்த உதடுகள்..!!
வெண்ணிலா வெளிச்சத்தில் வெண்மகளை மட்டும் தான் வர்ணிக்க வேண்டுமா என்ன?? இந்த வணங்காமுடி தீரனையும் வர்ணிக்க முடியும் என்றது அவளுடைய மனம் !!
முதல்முறையாக தன்னையே விழுங்குவது போல தன் மனைவி பார்க்கவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அதேசமயம் அவள் தன்னையே ரசித்துக் கொண்டிருப்பதை கண்ணிமைக்காமல் பார்த்து அவனும் ரசித்தான்..
சூழ்நிலையும் நேரமும் அவர்களுக்கு சாதகமாக இருக்க அவனுடைய கைகள் தானாக அவளை அணைத்து கொள்ள முற்பட்டது குளிருக்கு இதமாக..
வேண்டாம் என்று அவளும் தடுக்கவில்லை சொல்லப்போனால் மேலும் அவனோடு நெருங்கி நின்று அணைத்து கொண்டாள் அந்த பேதை..
தேனுண்ட வண்டு போல இருவரின் நிலையும் இப்பொழுது தடுமாற்றமாக இருந்தது..
ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக தன் மனதை அவனிடம் இழக்க தொடங்கியிருந்த மித்ரா இந்த வெண்ணிலவின் வசியத்தால் அவனுடைய வசீகரத்தை ரசிக்கத் தொடங்கியவள் இப்பொழுது அவனுக்கு வசியமாக தொடங்கினாள்..
அவனுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்து இதழ் முத்தம் பதித்தாள்..
அவளுடைய விருப்பமின்றி அவளை நெருங்கவும் கூடாது அவளுடைய அனுமதியின்றி அவளை தொடவும் கூடாது என்று ஏற்கனவே அவன் திட்டவட்டமாக கூறியிருந்தான்..
அந்த பொல்லாத சபதம் இந்த நேரம் பார்த்து அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது..!!
அனுமதி கொடுக்க வேண்டியவளே அணைக்க தொடங்கிய பிறகு ஆணவனின் அதரங்கள் சும்மா இருக்குமா??
கோலம் போடத் தொடங்கியது அவளின் மேனியெங்கும்..
பால்கனியில் நின்று கொண்டு ரொமான்ஸ் செய்யலாம் தவறில்லை தான்.. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா ??அதனால் இதற்கு மேல் அறைக்குள் சென்று அந்தரங்க காதல் கதை பேசுவோம் என்று தீர்மானித்தவன் அவளை கையோடு கை குழந்தையாய் அள்ளிச் சென்றான் உள்ளே..
கட்டிலில் அவளை கிடத்தியவன் அவள் மீது மென்மையாக படர்ந்தான்..
வழக்கமாக அவளிடம் நடந்து கொள்ளும் அந்த முரட்டுத்தனமான தீரனை இப்பொழுது அவளால் உணர முடியவில்லை..
இப்போது இருக்கும் தீரன் அவளிடம் காதல் பாடம் பயின்று கொண்டிருந்தான் அதே சமயம் பாடத்தையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான்..
வல்லினம் மெல்லினம் இடையினம் போன்ற அனைத்து விஷயங்களும் அவர்களிடம் படாத பாடுபட்டது..
கழுத்து, கனகம்,நாசி என்று ஒரு இடம் விடாமல் அவளை கூச்சமடைய செய்தது அவனுடைய அதரங்கள்❤️❤️
முல்லைக்கொடி படர்ந்தது போல அவனுடைய தோள்களை சுற்றி வளைத்திருந்தது அவளுடைய மென்கரங்கள்..
தன்னை மறந்து அவளும் அவனுடன் காதல் பாடம் படிக்க தொடங்கினாள்..
“தீரா…”, என்று முனகியது அவளின் இதழ்கள் நொடிக்கு நொடி..
காதருகில் தேன் பாய்ந்தது போன்று அவளுடைய குரல் கேட்டுக் கொண்டே இருக்க மேலும் மேலும் அவனுடைய வேகம் அதிகரித்தது..
இடுப்பின் எலும்பை நொறுக்குவது போல அழுத்தமாக பற்றி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..
” மித்து ஐ லவ் யூ.. லவ் யூ டி..”, என்று தன்னை மீறி அவன் வாயிலிருந்து முதல் முறையாக அவள் மீது அவன் கொண்ட காதலை பற்றி வெளிப்படுத்தவும் சிலிர்த்து போனது அவளின் தேகம்..❤️❤️
காற்று கூட புக முடியாத அளவிற்கு இறுக்கமாக அணைத்து கொண்டனர்..
தீரா, மித்து என்று இருவரும் மாறி மாறி தங்கள் பெயரை அர்ச்சனை செய்து கொண்டே இருளில் பொக்கிஷத்தை தேடிக் கொண்டிருந்தனர்..❤️❤️
“அஞ்சு கிலோ கேக் வாங்கி கொடுத்து உனக்கு சர்ப்ரைஸ் பண்ணா உடனே அவன்கிட்ட உருகிடுவியா?? கொஞ்சம் கூட உனக்கு வெக்கமே இல்லையா மித்ரா?? கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவன் என்ன வார்த்தை சொன்னான் உன்னை பார்த்து?? எல்லாம் மறந்து போச்சா?? நீ குழந்தை பெறுவதற்கு தகுதி இல்லாதவள் என்று தெரிந்து தானே திருமணம் செய்து கொண்டான்.. இருந்தும் அன்று அவனுடைய ஆசை நிறைவேறவில்லை என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக உன்னிடம் இருக்கும் குறையை குத்தி காட்டி அவன் பேசவில்லையா?? குழந்தை பெற தகுதி இல்லாதவளிடம் எதற்காக இப்பொழுது அவன் காதல் மொழி பயில்கிறான்?? இப்போது அவனுக்கு தெரியவில்லையா உனக்கு குழந்தை பிறக்கும் தகுதி மிகவும் குறைவு என்று..?? அவன் பேசிய பேச்சை எல்லாம் மறந்து போனாயோ ,அவன் கொடுத்த பரிசுகளிலும் சாப்பிட்ட ஒரு வாய் இனிப்பிலும்?? அந்த அளவிற்கு முட்டாளாகி விட்டாயா மித்ரா?? உன்னுடைய கோபம் வெறும் பனிக்கட்டி அளவில் தான் இருந்ததா?? இப்படி சட்டென்று உருகி விட்டாயே??”, அவளுடைய மனசாட்சி அவளை பார்த்து கேள்வி கேட்கவும் திடுக்கிட்டு போய் கண் விழித்தாள் மித்து..
அவளுடைய காது மடல்களில் முத்தமிட்டு கொண்டிருந்த தீரனின் தோள்களில் கை வைத்து அவனை விலக்கி விட்டாள்..
பசியில் புசித்துக்கொண்டிருந்த கைக்குழந்தையை தாயிடமிருந்து பிரித்தது போல ஏமாற்றத்துடன் அவளின் முகத்தை ஏறிட்டு பார்த்தான் அவன்..
“மித்து…….??”
” இப்ப கூட தான் நான் குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளவள்.. இப்ப தெரியலையா உங்களுக்கு நான் தகுதியற்றவள் என்று..?? இப்ப சொல்லத் தெரிந்த ஐ லவ் யூ என்கிற மூன்று வார்த்தையை அன்று ஏன் நீங்கள் என்னிடம் சொல்லவில்லை??”, ஆழமாக அவனுடைய கண்களை ஊடுருவிக் கொண்டே கேள்வி கேட்டாள் அவள்.
இந்த நேரம் பார்த்தா இந்த பேச்சை அவள் எடுக்க வேண்டும்?? என்று தோய்ந்து போனது அவன் மனம்..
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!
“மித்து.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. அன்னைக்கு நான் வந்து.. அது.. சத்தியமா எந்த வித…”, என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனை கையமற்தினாள் அவள்.
“போதும் தீரன்.. போதும்.. நீங்க பணக்காரங்க.. நேரத்துக்கு ஒரு காரணம் சொல்லி தப்பிக்க முடியும்.. ஆனா நான்.. நேரத்துக்கு ஒரு பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள்.. உங்க கற்பனை விளக்கத்தை என்னால இப்போ கேட்க முடியாது.. ப்ளீஸ் விடுங்க”, என்று கண்ணீர் மல்க கூறியவள் அவனிடமிருந்து விலகி சென்று படுத்து கொண்டாள்.
கைக்கெட்டிய அவளின் காதல் இப்போது காற்றில் கரையும் கற்பூரமானது அவனுக்கு..💔💔
அவளை நோக்கி நீண்ட அவனது கைகள் காற்றில் அலைந்தது அவளின் ஸ்பரிசம் தேடி இருளில்..!!
கட்டிலின் மறு ஓரத்தில் படுத்திருந்தவளை ஏக்க பார்வை பார்த்து கொண்டே கண் கலங்கி நின்றான் அந்த ஆறடி ஆண்மகன்..💔💔
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்கள்தான்
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பறித்து சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்களும் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம்தானே தானே
உனது பேரெழுதி பக்கத்துல
எனது பேரை நானும் எழுதி வச்சேன்
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..💔💔💔💔💔💔💔
– தொடரும்..
