ஆடி வரும் வண்ண மயிலே-17

அத்தியாயம்:17 

தஞ்சாவூரில் உள்ள சக்ரபாணியின் பங்களா பத்து அறைகளை கொண்டது…தன் தாயின் அறையில் மயூரி தங்கி கொள்ள… மற்றவர்களுக்கு தனி தனியாக அறை கொடுக்கபட்டது.  

அவர்கள் குளித்து விட்டு வர சாப்பாடு சூடாக இருக்க…அதை ஒரு பிடி பிடித்தார்கள் சாப்பிட்டு முடிய பெரியவர்கள் ஓய்வெடுக்க போனதும்… 

தர்ஷன், தியா கூட மயூரி, கண்மணி, யசோதா.. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆறு பெண்கள்… விளையாடி கொண்டு இருந்தார்கள்.  

அவர்களும் குழந்தைங்களாக மாறி சந்தோஷமாக தங்கள் நேரத்தை கழிக்க…தனியாக விளையாடும் தர்ஷன், தியாவுக்கு இவர்கள் கூட விளையாடுவது குஷியாக இருந்தது.  

சாயங்காலம் போல தான் சாரதா நாட்டிய பயிற்ச்சியை தொடங்கினார்…மயூரி தனியாக ஆடி கொண்டு இருக்க மற்றவர்கள்…. குழு நடன பயிற்ச்சிகளை மேற் கொண்டனர்.  

அந்த நேரம் குழந்தைகளை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு…சக்ரபாணி, வெங்கட், கல்யாணி, மீனா, புவனா போனார்கள்…அந்த பங்களாவின் தோட்டம் சியாமளா உருவாக்கியது.  

அலங்கார செடிகள் தொடக்கம் மூலிகை செடி வரை அங்கே இருந்தது…அதன் காற்றை சுவாசிக்க புத்துணர்வு தான் வந்தது…அந்த காற்றை ஆழ மூச்சு எடுத்தவள்.  

புவனா “ உண்மையில் ஆன்ட்டி இந்த தோட்டத்தில் இருந்தாலே…பாதி நோய் ஓடி போய் விடும் கண்ணுக்கு குளிர்ச்சியான மட்டுமல்ல… நம்ம இந்த காற்றை சுவாசிக்கவும் புத்துணர்வாக இருக்கிறது…” என்றாள்.  

மீனா “ உண்மை தான் கல்யாணி…இது உன் கை வண்ணம் போல தெரிகிறது செடி எல்லாம் பார்த்து பார்த்து வைத்திருக்க…? என கேட்டார்.  

கல்யாணி தோட்டத்தை சுற்றி ஒரு தடவை பார்த்து விட்டு… 

“ இல்ல மீனு இது என் சியாமளாவின் கை வண்ணம்…அவளுக்கு கலை ரசனை அதிகம் இந்த செடிகளில் சிலது… பாரினில் இருந்து பெண்ணு ஆசைபட்டு கேட்டாள் என்று …இவர் வரவழைத்து.  

அவள் ஆசைபட்ட கேட்ட செடிகள் எல்லாம்…செழித்து வளர்ந்து நிற்கிறது அதை நட்டு வைத்த என் பெண்ணு மட்டும்…என் கூட இல்லை இந்த தோட்டம் மட்டுமல்ல இந்த பங்களாவில் கூட… அவள் ஞாபகம் தான் நிறைந்து இருக்கு.  

இதை எல்லாம் மயூ முன்னாடி பேச முடியாது…என் பேத்தி வருத்தப்படுவாள் நாளைக்கு அவளுக்கு புரோகிராம் வேறு இருக்கு…நாங்க எங்க தூக்கத்தை வெளிகாட்டி கொள்ளாது இருக்கிறோம்.  

இத்தனை நாள் மயூ புரோகிராமுக்கு கூட வராது இருந்த இவர்…இப்போ கிளம்பி வர காரணும் பாப்பா தான் இவர் அவள் புரோகிராம் பார்க்க வருவது இல்லை என்று…கண் கலங்க பேசினாள்.  

தன் பேத்தி எதற்க்குமே கண் கலங்க கூடாது என்பதற்காக…தான் இத்தனை நாள் வைராக்கியத்தை விட்டு அவளுக்காக… இந்த தஞ்சை மண்ணை மிதித்தார்…” என்றார்.  

அருகில் இருந்த மீனா கல்யாணியும் கையை பற்றி ஆறுதல் அளித்தவர் … 

மீனா “ ம் ‘ புரிகிறது கல்யாணி நானும் அவரும் புவனா விஷயத்தில்…இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் நிற்கிறோம் வெளியே இருந்து பார்ப்பவர்கள்… 

ஏதோ முதல்வரும் அவர் குடும்பமும்… சந்தோஷமாக எந்த கஷ்டமும் இல்லாது இருப்பது போல நினைப்பாங்க… 

உண்மை நமக்கு மட்டும் தானே தெரியும்…எதார்த்தை ஏற்று கொண்டு வாழ தான் வேணும் நமக்காக இல்லை என்றாலும் கூட…நம்மை நம்பி இருக்கும் நம்ம பெண்ணுங்களுக்காக…” என்றார்.  

பயிற்ச்சி முடிய சாரதா, மயூரி மற்ற மாணவிகள்…கண்மணி, யதோ கூட தோட்டத்துக்கு வந்து விட்டார்கள்…அவர்கள் சாப்பிட காபி, டிபன் வந்தது அதை சாப்பிட்டு விட்டு…தர்ஷன், தியா கூட விளையாடி விட்டு உடை மாற்றி குளிக்க போனார்கள்.  

நைட் டிபன் சாப்பிட்டு விட்டு அனைவருமே சீக்கிரமாக தூங்க போய் விட்டார்கள்…மறு நாள் ஐந்து மணிக்கே எழுந்து குளித்து காபி, டிபன் சாப்பிட்டு… விட்டு மேக்கப் உடை அலங்கார வேலைகளை தொடங்கி விட்டார்கள்.  

கண்மணி தான் அனைவருக்குமே மேக்கப் போட்டு விட்டாள்….புடவை சாரதா தான் கட்டி விட்டார் காஞ்சி பட்டில் விசிறி மடிப்போடு …தைக்கபட்டு கால்களுக்கு இடையே சரிகை வேலைப்பாடு… கொண்டதாக பரத நாட்டிய உடை அமைத்து இருக்கும்.  

பெரும்பாலும் இந்த நாட்டிய உடைகள் பச்சை, சிவப்பு, நீலம், நாவல், ஆரஞ்சு, குங்கும கலரில் இருக்கு… 

மயூரியின் புடவை நிறம் மயில் கலரில் இருந்தது…அவள் பெயருக்கு ஏற்ற வண்ணம் மயில் நீலமும், பச்சையும் கலந்த காஞ்சிபுர பட்டு புடவை அது…. 

கல்யாணி அதிக விலையில் தான் காஞ்சிபுரம் போய்…பேத்திக்கு பட்டு எடுத்து வருவார் நாட்டிய உடை அணிந்து மயூரி வர…. கண்மணி அவளுக்கான ஓப்பனையை தொடங்கினாள்…எப்பவுமே நாட்டியத்துக்கு தேவை அதீத ஓப்பனை.  

அப்போது தான் மேடையில் ஆடும் நபரின் முக பாவனை அழகாக தெரியும்…தலையில் தட்டி, சந்திரசூரியன், காதுகளில் ஜிம்க்கி,கம்மல், மூக்குத்தி…  

புல்லாக்கு, வங்கி, ஓட்டியாணம், நெற்றி சூட்டி ,வளையல்கள், நெக்லஸ் எல்லாம் மயூரி அணிந்தாள்.  

அது எல்லாமே சுத்த வைரத்தால் ஆன நகைகள்…சக்ரபாணியின் கட்டளை எந்த போலி நகைகளும் மயூரி அணிய கூடாது என்பது.  

மயூரின் அலங்காரத்தை சரி பார்த்து விட்டு…கண்மணி மற்ற பெண்களுக்கு அலங்காரம் பண்ண போக… 

அவள் துணைக்கு யசோதாவும் போனாள்…மயூரியின் துணைக்கு புவனா நிற்க அவள் இப்படி அலங்காரம் பண்ணி இருப்பதை… நேரில் பார்த்திராத தர்ஷன், தியாவுக்கு மயூரி வித்தியாசமாக தெரிந்தாள்.  

தர்ஷன் மயூரி அருகில் வந்தவன்…அவளை பார்த்து கொண்டு நிற்க.  

மயூரி “ என்ன கண்ணா சித்தியை அப்படி பார்க்கிற…? என கேட்டாள்.  

தர்ஷன் “ சித்தி உனக்கு கல்யாணமா..? நீ இனி எங்களை விட்டு போய் விடுவாயா..?  தியா பாப்பா,என் கூட எல்லாம் இனி விளையாட வர மாட்டாயா..? என கேட்டான்.  

அவன் கேட்டதும் மயூரி சிரிக்க புவனா அவனை ஆச்சரியமாக பார்த்தவள்.  

“ தர்ஷா என்ன டா பெரிய மனுஷன் போல பேசுகிற..? சரி இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது…? என கேட்டாள்.  

அவளுக்கு தெரியும்…குழந்தைங்க கண்ணாடி போல பெரியவங்க எதை செய்கிறாங்களோ அதை தான்…அவர்களும் பின் பற்றுவார்கள்.   

ஒரு வேளை மயூரி கல்யாணம் பற்றி பேசியதை இவன் கேட்டு இருந்து விட்டு…இப்படி கேட்கிறான் போல என்று புவனா நினைத்தாள். 

தர்ஷன் “ அம்மா சரத் சித்தி கூட இப்படி தானே மா டிரஸ் பண்ணி இருந்தாள்…நீ தானே சொன்ன அவன் சித்திக்கி கல்யாணம் இனி…அவன் கூட எல்லாம் சித்தி விளையாட மாட்டாள் பெரிய பெண்ணாகி விட்டாள் என்று.  

அது தான் மயூ சித்தி கிட்ட கேட்டேன்…அம்மா மயூ சித்தி எங்களை விட்டு போய் விடுவாளா…போக வேணாம் என சொல்லு மா…” என்றவன் சிணுங்க ஆரம்பிக்க…மயூரி அவன் கையை பற்றி தன் அருகே இழுத்தவள்.  

அவன் கண்களை துடைத்து விட்டு…அவன் கன்னத்தை தடவியவள்.  

“ உன் சித்தி உன்னை, பாப்பாவை விட்டு எங்கும் போக மாட்டேன் டா…உங்க கூட தான் இருப்பேன் சித்திக்கு கல்யாணம் இல்ல டா…சித்தி இன்று டான்ஸ் பண்ண போகிறேன்… அது தான் இப்படி டிரஸ் பண்ணி இருக்கிறேன்.  

நீயும் பாப்பாவும் சித்தி டான்ஸ் பண்ணும் போது கை தட்ட வேணும் சரியா..? அழ கூடாது என் குட்டி கண்ணன் ஸ்டிராங் பாய் இல்லையா..? என்றவள்… அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.  

புவனா “ இவன் ப்ரண்ட் சரத் சித்திக்கு கல்யாணம் என்று பத்திரிகை வைத்திருந்தாங்க மயூ…அப்பா வரவில்ல நானும் அம்மாவும் போனோம் அங்கே பார்த்ததை வைத்து தான்… இப்படி கேட்டு இருக்கிறான் ரொம்ப புத்திசாலி டி இவன்…” என்று மகனை பற்றி பெருமையாக பேசினாள்.  

அலங்காரம் எல்லாம் முடிய அனைவருமே சாமி கும்புட்டு விட்டு… கிளம்ப ஆயத்தம் ஆக மயூரி சக்ரபாணியின் காலில் விழ அவர் பேத்தியை…  

மனதார ஆசிர்வாதம் செய்தவர் அவளை தூக்கி அணைத்து கொண்டவர்.  

“ நீ எப்பவுமே மஞ்சளும் குங்குமத்தோடு தீர்க்க சுமங்கலியாக…இருக்க வேணும் பாப்பா உன் அம்மா போல நாட்டியத்தில் நீ தாரகை போல மின்ன வேணும்…உன் தாத்தா, பாட்டியின் ஆசிர்வாதம் எப்பவுமே உன் கூட இருக்கும்…”என்றவர்.  

ஹாலில் பிரமாண்டமாக தங்க பிரேமில் நாட்டிய உடையில்… ஒரு நாட்டிய போஸில் சிரித்து கொண்டு இருந்த… தன் ஒரே மகளை கண் கலங்க பார்த்தார்  

சியாமளாவும் நான் இருக்கிறேன் பா.. என் பெண்ணு வாழ்க்கை நல்லபடியாக அமைத்து கொடுப்பேன்…என்று தந்தையின் உணர்வு புரிந்து சொன்னாள்.  

அதன் பிறகு கல்யாணி, மீனா, சாரா, புவனாவிடம் ஆசிர்வாதம் வாங்கியவள்…தாயின் போட்டோ முன்னே வந்து கண்களை மூடி… கொஞ்ச நேரம் நின்று விட்டு கிளம்பி தஞ்சை பெரிய கோவிலுக்கு போனாள்.  

இன்று தஞ்சாவூரில் போலீஸ், டிராஃபிக் போலீஸ் அதை விட ஆளும் கட்சி, எதிர்கட்சி ஆளுங்க குவிந்து இருந்தார்கள்…இன்று சி.எம் மட்டும் வரவில்ல எதிர்கட்சி தலைவரும் அவர் தம்பியும் வருவதாக தகவல்.  

அதை விட வேறு மா‌நிலங்களில் உள்ள…முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஊர் சார்பாக வருகிறார்கள்…தங்கள் ஊர் கலைஞர்களை உற்சாகப்படுத்தி தட்டி கொடுப்பதற்க்கா…அதனால் பாதுகாப்பு அதிகமாக இருந்தது.  

காரில் வரும் போது குருமூர்த்தி தஞ்சாவூரில் அதிகமாக… தன் பிளக்ஸ் பேனர் கூட மயூரின் பிளக்ஸ் பேனர் தான் வைத்திருந்தார்கள்…அதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தவர் கண்ணில் மாட்டியது.  

எதிர்கட்சி தலைவரின் பிளக்ஸ் பேனர் தான்…அவர் யோசனையாக அதை பார்த்தவர் …டிரைவர் கூட இருந்த தன் பி.ஏ  ரவியை பார்த்தவர்.  

“ ரவி கனராஜ் வருகிறானா..? அவன் பிளக்ஸ் பேனர் பார்த்தேன்…அவனுக்கும் கலைக்கும் வெகு தூரம் அதை மீறி வருகிறான் என்றால்… விஷயம் அரசியல் நோக்கமாக தான் இருக்க வேணும்…” என்றார்.  

ரவி “ கனகராஜ் மட்டுமல்ல ஐயா நம்ம ராகவன் சாரும் வருகிறார் போல பவதீப் தகவல் சொன்னான்…உங்க கிட்ட சொல்ல சொன்னேன்.  

நீங்க ஆசையாக உங்க பேத்தியின்… நடனம் பார்க்க போகும் போது உங்களை அப்செட்… செய்ய வேணாம் என்றான்.  

எனக்கும் அது சரியாகபட்டது மயூ பாப்பாவின் மிக பெரிய நிகழ்ச்சி இது…எந்த பிரச்சனையும் வர கூடாது என்று நினைத்தேன் அது மட்டுமல்ல… இது பொது இடம் யாரு வேணும் என்றாலும் வரலாம் என நினைத்தேன்.  

என்ன இருந்தாலும் கூட ராகவன் சார் உங்க பையன்…பெரியம்மா வேறு வந்திருக்கிறாங்க அதனால் அவர் பிரச்சனை ஏதும் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்…” என சொன்னான்.  

குருமூர்த்தி மெல்ல சிரித்தவர்.. 

“ நீ சொன்னது சரி தான் ஆனால் நீ சொன்னதில் பாதி உண்மை …மற்றது எல்லாம் உன் அனுமானம் அதை நீ பட்டு  தெரிந்து கொள்ளு…உன் பெரியம்மாவும் கிட்ட தட்ட பைத்தியக்காரி தான்.  

இன்னும் மகன் திருந்தி விட்டான்…நல்லபடியாக நடக்கிறான் என்று அவன் மேலே… கண் மூடத்தனமான பாசம் வைத்து இருக்கிறாள்… 

அது பொய் என்று தெரிய வரும் போது… அவளால் அதை தாங்கி கொள்ள முடியுமோ தெரியாது சரி விடு… நீ சொன்னது போல இது பொது இடம் கோவில்… 

அனைவருக்குமே சொந்தம் பார்க்கலாம் …என் பையன் இன்று என்ன வெடிகுண்டை இறக்க போகிறான் என்று…” என சொன்னார். 

மயில் ஆடி வரும்…
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஆடி வரும் வண்ண மயிலே...
615 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page