இதழ் – 29

அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், அவள் இடையை அப்படியே பிடித்து தன்னருகே இழுத்தான் ராகவன்.

அவன் இழுத்த இழுப்பில் அவனருகில் சென்றவள், சுதாரிக்கும் முன் இடையில் “நச்சு நச்சு” என முத்தமிட்டான்.

அவன் தந்த முத்தத்தில் தன்னை மொத்தமாக தொலைத்த பெண்ணவள், செய்வதறியாது அவன் தலையைப் பின்னால் இருந்து முடியை இறுகிப் பிடித்தாள்.

அதில் மேலும் பித்தனானவன் அவள் இடுப்பில் நாவால் வருட, அதில் அவள் உடல் சிலிர்க்க, அதை உணர்ந்தவன் தன்னை அறியாமல் அவளது இடுப்பில் கடித்தான்.

அந்த வலியில் அப்பொழுதுதான் சுய உணர்வு வந்தவள், வேகமாக அவனைத் தள்ளிவிட்டு அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியே வந்தாள். எதிரில் சங்கீதாவும் விக்னேஷும் வர, வேகமாக ஓடி வந்தவள் சங்கீதாவைக் கட்டிக்கொண்டு அழுதாள் அருவி.

“என்னாச்சு டி? ஏன் அழற?”  

“நான் இப்பவே வீட்டுக்கு போகணும்…”  

“என்ன ஆச்சு அருவி? சொல்லு.”  

“ப்ளீஸ்… போகலாம்,” என்றாள் அருவி.

சங்கீதா விக்னேஷைப் பார்க்க, “நீ அவங்களை கூட்டிட்டுப் போ.”

“சரி,” என அருவியை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

“மச்சான், என்னாச்சுடா? அருவி அழுதுட்டு போறாங்க. நீ என்ன பண்ண?” 

 

“நான் ஒண்ணும் பண்ணல.”  

“டேய், அவங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க.”  

“அதுக்கு?”  

“நீ அவங்கள ஏதோ பண்ணியிருக்க, அதனாலதான் அழுதுட்டு போறாங்க. அவங்க எனக்கு சிஸ்டர் மாதிரி. சொல்லுடா, என்னடா நடந்துச்சு?”

“அவங்க ஹஸ்பண்ட் எங்க இருக்காரு?” என்றான் ராகவன்.

“அவங்க ஹஸ்பண்ட் ஃபாரின்ல இருக்காரு. இந்த டைம்ல நீ இப்படி அவங்ககிட்ட தப்பா நடந்துட்டா என்ன அர்த்தம்?” என்று விக்னேஷ் கோவமாகக் கேட்டான்.

“நான் தான் அவ புருஷன்னு அர்த்தம்.”

“என்னடா? சொல்ற?” என அதிர்ந்து கேட்டான் விக்னேஷ்.

“ஆமாடா! நான் தான் அவளைத் தொட்டு தாலி கட்டின புருஷன். நம்பலையா?!” என்றவன் தன் போனில் இருந்த அவர்களின் திருமணப் புகைப்படத்தைக் காட்டினான்.

“மச்சான், என்கிட்ட நீ இந்த விஷயத்தை சொல்லவே இல்லையே.”  

“அவ தாண்டா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா.”  

“ஏன்டா? எதனால?”  

அவனிடம் அனைத்தையும் கூறினான். அதைக் கேட்ட விக்னேஷ் அவன் சட்டையைப் பிடித்தான்.  

“டேய், அந்த மாதவன் பத்தி தெரிஞ்சதுனால தான் நானே ஒதுங்கிட்டேன். நீ எப்படிடா அவன் சொன்ன கதையை நம்பி இப்படி உன் வாழ்க்கையை கெடுத்து வெச்சிருக்க?”

“என்னடா பண்றது? நான் தெரியாம செஞ்ச தப்பு. அதை எப்படித் திருத்துறதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கேன் டா” என அவனைக் கட்டிக்கொண்டான் ராகவன்.

“சரிடா மச்சான், விடு. எல்லாம் சரியாயிடும். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்ல. நீ அருவி கிட்ட பேசு.”

“அவ கிட்ட பேசத்தானே ட்ரை பண்றேன். ஆனா நான் சொல்றத அவ காது கொடுத்து கேட்க மாட்றா” என்றான் ராகவன்.

இங்கு அறைக்கு வந்த அருவி அழுதுகொண்டே இருந்தாள்.  

“என்ன ஆச்சு டி உனக்கு? எதுக்கு அழுற? ராகவன் சார் ஏதாவது சொன்னாரா?”  

“இல்ல…”  

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. சொல்லுடி.”  

“ராகவன் சார் தான் என்னோட ஹஸ்பண்ட்.”

“என்னடி? சொல்ற?” என அதிர்ந்து கேட்டாள் சங்கீதா.

“ஆமா.”

“அப்புறம் ஏன் ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்க?”

நடந்ததை கூறி கதறி அழுதாள் அருவி.

“சரி விடு. நீ ரொம்ப கஷ்டப்பட்டிருக்க. எனக்குப் புரியுது. ஆனா இப்ப அவர்தான் திரும்பி வந்து மன்னிப்பு கேட்கறார் ல?”  

“அவர் செஞ்சது மன்னிக்கக் கூடிய விஷயமா? ஒரு பொண்ணு எதை வேணும்னாலும் தாங்கிப்பா. ஆனா அவர் என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தினார் தெரியுமா? என்னை ஏமாத்துக்காரின்னு சொன்னார். அதை எப்படி என்னால மறக்க முடியும்? நான் அப்படிப்பட்ட பொண்ணா சொல்லுடி?” என அழுதாள் அருவி.

சங்கீதா அவளை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு வெளியே வர, விக்கி அவளுக்கு ஃபோன் செய்தாள்.

“விக்கி… சொல்லுங்க…”

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”  

“தெரியும். அருவியும் ராகவனும் ஹஸ்பண்ட் & வைஃப். அவங்க ரெண்டு பேரையும் நம்ம தான் சேர்த்து வைக்கணும்.”  

“அதுக்கு என்ன பண்ணனும்?” எனக் கேட்டான் விக்னேஷ்.

“இன்னிக்கு சாயந்திரம் நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணி, அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைப்போம்.”

“ஓகே, இன்னைக்கு சாயந்திரம் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு நீ அருவியைக் கூட்டிட்டு வந்துரு. நான் ராகவனைக் கூட்டிட்டு வரேன். நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணுவோம். அவங்க லவ் தன்னால கன்டின்யூ ஆகும்.”

“சரி,” என்றவள் மாலையானதும், “அருவி, நான் ஐஸ்கிரீம் சாப்பிடப் போறேன். நீயும் வா…” என்றாள்.

“என்ன? திடீர்னு ஐஸ்கிரீம் நெனப்பு?”  

“அது வந்து… நான் விக்கியைப் பாக்கப் போறேன். எனக்குத் துணைக்கு வரியா?”  

“நான் வரல.”  

“எனக்காக வா, ப்ளீஸ்.” 

“அவரும் வருவார்ல?”  

“எவர்?”  

“நம்ம சார்.”  

“இல்ல, ராகவன் அண்ணா வரல.”  

“அண்ணனா?” என அருவி புரியாமல் கேட்டாள்.  

“உன் ஹஸ்பண்ட் என் அண்ணன். என் ஆளு உன் அண்ணன்.”  

“இதுவும் நல்லாதான் இருக்கு. ஆனாலும் நான் வரல” என்றவளை ஒருவாறு சமாளித்து அழைத்துச் சென்றாள்.

குஷியாக காரை ஓட்டினான் ராகவன்.

“லவ் வந்தா ஒரு மனுஷன் எப்படி எல்லாம் மாறிடறான்” என்றான் விக்னேஷ்.

“என்னடா சொல்ற?”  

“ஒண்ணும் இல்ல” என்றான் விக்கி. அதற்குள் அவர்கள் வர வேண்டிய இடம் வந்துவிட, இறங்கினார்கள்.

அவர்களைப் பார்த்த சங்கீதா, “ஒரு நிமிஷம் இரு, நான் இதோ வரேன்.”

“எங்க டி போற?” என அருவி கேட்டாள்.

“போன் பேச” எனக் கூறிவிட்டு விக்கியிடம் வந்தாள்.

“அருவி எங்க?” எனக் கேட்டான் ராகவன்.

“அவ அங்க தனியா இருக்கா. இந்த சான்ஸ மிஸ் பண்ணாம அவ கிட்டப் பேசி சமாதானப்படுத்துங்க.”

“ஓகே, தேங்க்ஸ்” என்றவன் அவளருகில் சென்றான்.

“வா செல்லம், நம்ம லவ் பண்ணுவோம்,” என அவளை வேறொரு டேபிளுக்கு அழைத்துச் சென்றான் விக்கி.

“என்ன பத்திதான நெனச்சிட்டு இருக்க?” எனக் கேட்டபடி, வேகமாக அவளை இடித்தபடி வந்து வேறொரு நாற்காலியில் அமர்ந்தான் ராகவன்.

“நீங்களா! நான் ஒண்ணும் உங்களை நினைக்கல.”

“இல்லையே! உன் கண்ணு உண்மைன்னு சொல்லுதே.”

“தேவையில்லாம பேசாதீங்க.”

“சரி, நான் பேசல. நீ பேசு.”

அவனை முறைத்தவள், “அவ்வளவு இடம் இருக்கும்போது இப்படி இடிச்சுக்கிட்டு வந்து உட்கார்ந்தா என்ன அர்த்தம்?” எனக் கேட்டாள்.

“என்ன அர்த்தம்னா… நான் உன் கூட ஒக்காந்து ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்படுறேன்னு அர்த்தம்” என்று சொல்லி அவளை இழுத்தான்.

“போதும், இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க.”

“அருவி…”

“என்ன?”

“அருவி… ஐ லவ் யூ டி” என்றான்.

“இது பொது இடம்னு பாக்குறேன் இல்ல, என்ன பண்ணுவேன்னு தெரியாது.”

“இல்லனா என்ன பண்ணுவ? சொல்லுடி” என்றான் சிரித்தபடி.

“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.”

“நீ உன் விருப்பம் போல என்னைத் திருத்து” என்றான் அவள் உதட்டைப் பார்த்தபடி.

அவனை வாய்க்குள் திட்டியபடி அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க, சங்கீதாவும் விக்கியும் அவர்களிடம் வந்தனர்.

“இன்னும் நீங்க சண்டை போட்டுட்டுதான் இருக்கீங்களா?”

“இந்த சண்டை எப்பவுமே முடியாது” என்றபடி அருவி எழுந்து சென்றாள்.

அன்றிரவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் விக்கி.

“மச்சான்! மச்சான்!” என அவன் காதில் கத்தினான் ராகவன்.

“எதுக்கு டா இந்நேரம் எழுப்புற?”

“எனக்கு இப்பவே அருவியைப் பாக்கணும் போல இருக்கு.”

“பாக்கணும் போல இருந்தா போடா.”

“நான் மட்டும் எப்படிடா போறது?”

“அதுக்கு?”

“நீயும் வாடா.”

“விளையாடுறியா? மணி எத்தனை பாத்தியா? நைட் 11 மணி.”

“எத்தனை மணி ஆனாலும் என்னடா? எனக்கு இப்பவே அவளைப் பாக்கணும் போல இருக்கு.”

“காலைல பாத்துக்கலாம் டா.”

“நாளைக்கு ஒரு முக்கியமான நாள். அதான் அவளைப் பார்க்கணும் நெனைக்கிறேன். வாடா…” என அவனையும் இழுத்துக்கொண்டு வந்தான்.

இங்கு நன்றாக உறங்கிக்கொண்டிருந்த சங்கீதாவின் போன் அடித்தது.

“ஹலோ, என்னடி பண்ற?” எனக் கேட்டான் விக்னேஷ்.

“குளிச்சிட்டு இருக்கேன்,” என்றாள் உறக்கத்தில்.

“தனியா குளிக்கிற… நானும் வரவா?” எனக் கேட்டான்.

“உங்களை… இந்நேரம் போன் பண்ணுனா என்ன அர்த்தம்?”

“நான் இப்பவே உன்னைப் பார்க்கணும்.”

“எப்படி பார்க்க முடியும்?”

“வெளியில் வந்து கதவைத் திறடி, என் பொண்டாட்டி,” என்றான்.

அவள் வந்து கதவைத் திறக்க, வாசலில் சிரித்தபடி நின்றான் விக்கி.

“நீங்க இங்க?”

“அடி செல்லம், வா… நம்ம பேசலாம்,” என அவளைத் தனியாக அழைத்துச் சென்றான்.

“அருவி…”

“ராகவன் பாத்துக்குவான்,” என அவளது இதழைச் சிறை செய்தான் விக்கி.

அறைக்குள் வந்த ராகவன் மெதுவாக அருவியின் அருகில் படுத்துக்கொள்ள, எதார்த்தமாகத் தன் அருகில் இருந்த சங்கீதாவின் மேல் கையைப் போட்ட அருவி, தாடி இருப்பதைப் பார்த்து பதறி எழுந்தாள்.

அவளைப் பார்த்து, “ஹாய்! செல்லம்,” என்றான்.

“நீங்க இங்க என்ன பண்றீங்க?”

“என் பொண்டாட்டியைப் பார்க்க வந்தேன்.”

“இந்நேரத்துலயா?”

“ஆமா! நாளைக்கு எனக்கு பர்த்டே.”

அதைக் கேட்டவள் மனதில் சந்தோஷத்துடன், அவன் மேல் கோவம் இருந்தாலும், “ஹாப்பி…” எனக் கூறிக்கொண்டிருக்கையில், அவளுக்கு குமட்டல் வர, அப்படியே அவன் சட்டையில் வாந்தி எடுத்தாள்.

தன்னைத் திட்டுவான் என பயந்தவள்,  

“சாரி” என்றாள்.

வாஷ்ரூம் சென்றவன், அவள் வாந்தி எடுத்ததைச் சுத்தம் செய்துவிட்டு, அமர்ந்திருந்த அவளை மெதுவாகக் கையைப் பிடித்து அழைத்து வந்தான். 

அவளது முகத்தைக் கழுவி, துடைத்து, பெட்டில் அமர வைத்தவன், “என்னாச்சு?” எனக் கேட்டுக் கொண்டிருக்கையில் மயங்கி சரிந்தாள் அருவி.

உடனே மருத்துவருக்கு போன் செய்து வரவழைத்தான். வந்த மருத்துவர் அவளைப் பரிசோதிக்க, அவன் அறையின் வெளியே நின்றான்.

“என்ன ஆச்சு?” எனக் கேட்டான் விக்னேஷ்.

“டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க.”

அருவியைப் பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்து, “கவனமா பார்த்துக்கோங்க” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

அறைக்குள் வந்த ராகவன் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் கண் விழித்த அருவி, தன் எதிரில் அமர்ந்திருந்த ராகவனிடம்,  

“சாரிங்க… எனக்கு திடீர்னு வாமிட் வந்துருச்சு. அதனாலதான் உங்க மேல வாமிட் பண்ணிட்டேன்.”

“பரவாயில்ல. எனக்கு என்னாச்சு?”

“எந்த புருஷனும் பொண்டாட்டி கிட்ட சொல்லாத ஒரு விஷயத்தை சொல்றேன்” என்று அவன் கூறினான்.

அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு கண் கலங்கினாள் அருவி.

♥️ அவன் அப்படி என்ன சொல்லிருப்பான் 🤔  

தெரிஞ்சுக்க அடுத்த எபிசோட் மிஸ் பண்ணாம படிங்க ❤️

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,318 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page