உயிராக வந்த உறவு – அத்தியாயம் 22
அடுத்த நாள் தாரணி வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் மனம் இன்னும் அமைதியாக இல்லை. தீரனை பார்த்ததும், அந்த பழைய நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.அந்த நேரத்தில் நிஷா அவளை அழைக்க,
“தாரணி… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று அவள் சற்றே தயக்கத்துடன் கேட்டாள்.
“என்ன நிஷா?” என்று தாரணி சாதாரணமாக கேட்டாள்.
நிஷா சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக“தீரன் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்…”என சொல்ல
அந்த வார்த்தை தாரணியின் இதயத்தில் மின்னல் போல விழுந்தது.
“யாரோட?” என்று அவள் திடீரென கேட்டாள்.
“அர்ச்சனாவோட…”
ஓ ஹோ..
“இந்த மாதத்திலேயே கல்யாணம் என்று பேசிக்கிட்டு இருக்காங்க.”
அந்த வார்த்தைகள் தாரணியின் மனதை முழுவதும் உடைத்துவிட்டது.
சரி அவன் யாரு வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் எனக்கு என்ன வேணும் அவள் வெளியே சொன்னாலும் உள்ளே ஒரு புயல்..
நிஷா கவலையுடன் “நீ சரியா இருக்கியா தாரு ?” என கேட்க
“எனக்கு என்ன நிஷா… அது அவன் வாழ்க்கை.”என சிரித்த படி சொல்ல,ஆனால் அந்த சிரிப்பில் வலி இருந்தது.
அவள் மெதுவாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.மனம் மட்டும் ஒரு கேள்வி கேட்டது.
“இது தான் நம்ம காதலின் முடிவா…?”என்று..
மறுபக்கம்அதே நேரத்தில் தீரன் வீட்டில் அமர்ந்து இருந்தான்.அவனிடம் அவன் அம்மா“அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்.” என சொல்ல
அவன் அமைதியாக இருந்தான்.
அவன் மனதில் ஓடியது ஒரே ஒரு முகம்.
தாரணி.அவள் நேற்று சொன்ன வார்த்தை.“எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு… ஒரு குழந்தையும் இருக்கு.”
அவன் மனதில் சந்தேகம் இன்னும் குறையவில்லை.“அது உண்மையா…?” என்று அவன் மீண்டும் யோசித்தான்.
அதே நேரத்தில் அர்ச்சனா மனதில் ஒரு பயம்.“தீரன் இன்னும் தாரணியை மறக்கல…”அதனால் அவள் மனதில் இன்னும் ஒரு பயங்கரமான முடிவு உருவாக ஆரம்பித்தது.
அப்போது அர்ச்சனா தனியாக காரில் சென்ற படி யோசித்து கொண்டிருந்தாள். அவள் மனதில் ஓடியது ஒரே ஒரு விஷயம் தாரணி. அவள் கண்ணில் அந்த காட்சி மீண்டும் மீண்டும் வந்தது,
தாரணி…அவள் அருகில் அந்த குழந்தை…அவளுக்கு குழந்தை இருந்தாலும்… தீரன் இன்னும் அவளை நினைக்கிறான்…”அந்த எண்ணம் அர்ச்சனாவின் மனத்தில் ஒரு பயத்தையும் கோபத்தையும் உருவாக்கியது.
அவள் திடீரென்று எழுந்து நின்றாள்.
“இது இப்படி நீண்டா… ஒரு நாள் தீரன் மீண்டும் அவளை தேடிப்போயிடுவான்.”
அவள் உதட்டில் மெதுவாக ஒரு கொடிய சிரிப்பு தோன்ற
“அந்த குழந்தை தான் அவளோட பலம்…”
“அந்த பலம் இல்லாம போயிட்டா…?”
அவள் மொபைலை எடுத்தாள்.
ஒரு நம்பருக்கு போன் பண்ண,“ஹலோ… கார்த்திக்.”
மறுபக்கம் இருந்து குரல்.
“சொல்லுங்க மேம்.”
“இன்னைக்கு ஒரு வேலை இருக்கிறது.”
“என்ன வேலை மேம்?”
அர்ச்சனா மெதுவாக சொன்னாள்.
“ஒரு குழந்தையை எடுத்துக்கிட்டு வரணும்.”
மறுபக்கம் சில நொடிகள் அமைதி.
“குழந்தையா…?”
“ஆமாம். பயப்பட வேண்டாம். எந்த பிரச்சனையும் வராது. நான் சொல்லுற இடத்துக்கு மட்டும் கொண்டு வா.”
“சரி மேம்.”
கால் முடிந்து போனை வைத்தவள் காரில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.அவள் கண்களில் இரக்கம் இல்லை.“தாரணி… நீ என்னை சின்னவளா நினைச்சியா…?”உன் வாழ்க்கையை நான் எப்படி சிதறடிக்கிறேன் பாரு.” என சொல்லி கொண்டாள்..
மறுநாள் காலை மார்க்கெட்டில்
அந்த கூட்டத்தில் தாரணியின் மகனும் வெளியே வந்தான்.அவன் கையில் தனது சிறிய பை. அவன் அம்மாவை கையை பிடித்துக் கொண்டு இருந்தவன் திடீரென கையை விட்டதும் எங்கே நிற்கிறேன் என்று சுற்றி பார்த்தான் அந்த சிறுவன் ரித்விக்..
அம்மா..என அழைக்க
அந்த நேரத்தில் ஒரு கார் மெதுவாக அவன் முன்பு வந்து நிற்க,அதில் இருந்து ஒருவன் இறங்கினான்.அவன் மெதுவாக அந்த பையன் அருகே வந்து
“நீ ரித்விக் தானே?” என்று கேட்க
அந்த பையன் ஆச்சரியமாக பார்த்தான்.
“ஆமாம்… நீங்க யாரு?”
அவன் சிரித்தான்.
“உன் அம்மா என்னை அனுப்பிருக்காங்க. வா… கார்ல போலாம்.”என சொல்ல
அந்த குழந்தை தயக்கத்துடன் நின்றான்.
அந்த நேரத்தில் அவன் கையில் ஒரு சாக்லேட் கொடுத்தான்.
“வா,அம்மா காத்திருக்காங்க.”
சிறிது நேரம் கழித்துஅந்த கார் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது.
அதே நேரத்தில் தாரணி கண்களில் கண்ணீருடன் வந்தாள்.
“ரித்வி…!” என்று அவள் சுற்றி பார்த்தாள்.
ஆனால்…அவன் எங்கும் இல்லை.
அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“அங்கே இருப்பவரிடம் என் பையன் எங்கே?” என்று பதட்டமாக கேட்டாள்.
அவனை யாரோ வந்து அழைத்துக்கிட்டுப் போனாங்க என்று ஒரு முதியவர் சொல்ல
“யாரு…?” என்று அவள் கண்ணீருடன் கேட்கவும்
“அவர் சொன்னார்… அம்மா அனுப்பினாங்க என்று.”அந்த வார்த்தை தாரணியின் உலகத்தை சிதறடித்தது.
“இல்ல… நான் யாரையும் அனுப்பல…”என சொல்லும் போதே அவள் குரல் நடுங்கியது.
அந்த நேரத்தில் தூரத்தில் இருந்து ஒரு கார் உள்ளே அமர்ந்து இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவள் முகத்தில் ஒரு கொடிய சிரிப்பு.
“இப்போ பாரு தாரணி… உன் வாழ்க்கை எப்படி நரகமா மாறுது.” என சொல்லி கொண்டாள்
ஆனால் அர்ச்சனாவுக்கு தெரியாத ஒன்று இருக்கிறது.இந்த சம்பவம் தெரிந்தால் தீரன் அவளை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
இப்போது அர்ச்சனா சந்தோசமாக தன் வீட்டிற்கு சென்றாள்.அர்ச்சனாவின் வீட்டில் அந்த நாள் மிகவும் பரபரப்பாக இருந்தது. பெரிய மாளிகை முழுவதும் வேலைக்காரர்கள்ஓடிக்கொண்டிருந்தார்கள். அலங்காரக்காரர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கேடரிங் மனிதர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டின் நடுவில் பெரிய ஹாலில் அமர்ந்து இருந்தார் அர்ச்சனாவின் அப்பா. பெரிய தொழில் அதிபர். அவருடைய வார்த்தை தான் அந்த வீட்டில் சட்டம்.அர்ச்சனா மெதுவாக அவருடைய அருகில் வந்து அமர்ந்தாள்.
“அப்பா… ஒரு விஷயம் பேசணும்,” என்று மெதுவாக சொன்னாள்.
அவர் சிரித்தபடி கேட்டார்.
“சொல் மா… உனக்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன்.”
அந்த வார்த்தை கேட்டதும் அர்ச்சனா உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.
“என் கல்யாணத்தை… ரொம்ப கிராண்டாக பண்ணணும் அப்பா,” என்று அவள் சொன்னாள்.
சென்னையிலே பேசப்படும் கல்யாணம் ஆகணும் என அவள் சொல்லும் போதே
அவளது கண்களில் ஒரு ஆசை மட்டும் இல்லை… ஒரு பிடிவாதமும் இருந்தது.
அவரது அப்பா சிரித்தார்.
“என் மகள் கல்யாணம் சாதாரணமா நடக்குமா? நகரமே பேசும் மாதிரி பண்ணுவோம்.”என சொல்ல
அந்த நேரத்தில் அவர் தனது மேலாளரை அழைத்தார்.“திருமண மண்டபம் நகரத்திலேயே பெரியதாக இருக்கணும். அலங்காரம், விருந்து, எல்லாம் top class.”
“VIP கள் எல்லாருக்கும் invitation போகணும்.மீடியாவும் வரணும் என்று
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த வீட்டில் இருந்தவர்களை இன்னும் பரபரப்பாக வேலை செய்ய வைத்தது.
அர்ச்சனா அந்த காட்சியை பார்த்துக்
கொண்டிருந்தாள்.
அவள் மனதில் ஒரு சிரிப்பு.
தீரன்… இந்த கல்யாணத்திலிருந்து நீ வெளியே வர முடியாது.அந்த நேரத்தில் அவள் மொபைலை எடுத்தாள்.
தீரனுக்கு போன் செய்ய,
“ஹலோ தீரன்… நாளைக்கு நம்ம நிச்சயதார்த்த தேதி முடிவு பண்ணப்போறாங்க நான் அப்பாகிட்ட எல்லாமே பேசிட்டேன்,” என்று மகிழ்ச்சியாக சொன்னாள்.
மறுபக்கம் தீரன் அமைதியாக இருந்தான்.“சரி…” என்று மட்டும் சொன்னான். அதுவும் அவன் அம்மாவிற்காக..
அவன் குரலில் எந்த மகிழ்ச்சியும் இல்லை.அந்த அமைதியை அர்ச்சனா உணர்ந்தாள்.ஆனால் அவள் அதை வெளியில் காட்டவில்லை.
“நீ டென்ஷன் ஆகாதே… எல்லாம் நன்றாக நடக்கும்,” என்று சிரித்தபடி சொல்லி போனை வைக்க
அதே நேரத்தில்தீரன் தனது அறையில் தனியாக அமர்ந்து இருந்தான்.அவன் முன் மேசையில் இருந்தது ஒரு பத்திரிக்கை டிசைன்.“தீரன் – அர்ச்சனா திருமணம்”அவன் அந்த வார்த்தைகளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஆனால் அவன் மனதில் வந்தது ஒரே ஒரு முகம்.தாரணி.
அவள் சிரிப்பு,அவள் கண்ணீர்,
அவள் சொன்ன அந்த வார்த்தை
“எனக்கு குழந்தை இருக்கு…” இவை அனைத்தையும் நினைத்தபடி அவன் கண்களை மூட,
அவனுடைய மனதில் ஒரு கேள்வி மட்டும்.“இந்த கல்யாணம் நிஜமாக நடக்குமா…?”
மறுபக்கம் தாரணி குழந்தையை தேடிக்கொண்டு நிஷா வீட்டிற்கு வர,
ஆனால் அவளுக்குத் தெரியவில்லை.
அவள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப் போகும் ஒரு நிகழ்வு ஒன்று நடக்க போகிறது என்று..
அர்ச்சனா தீரன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் இன்னும் பிரம்மாண்டமாகி கொண்டே போனது. நகரத்தில் உள்ள பெரிய மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது.அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு முக்கியமான தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் அனுப்பத் தொடங்கினர்.
அர்ச்சனாவின் அப்பா இந்த திருமணம் தனது கௌரவத்தை காட்டும் நிகழ்வாகவே பார்த்தார்.மாளிகை முழுவதும் விளக்குகள், மலர் அலங்காரங்கள், டிசைனர் ஆடைகள், நகைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து குவிந்துகொண்டிருந்தது.
அர்ச்சனா ஒவ்வொரு விஷயத்தையும் தனியாக பார்த்துக் கொண்டாள். வெளியில் அவள் மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளுக்குள் அவள் மனதில் ஒரே ஒரு பயம் மட்டும் இருந்தது.“தாரணி…”
அந்த பெயரே அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது.
“அவள் இருக்கிற வரைக்கும் தீரன் முழுவதும் எனக்காக இருக்க மாட்டான்,” என்று அவள் மனதில் நினைத்தாள்.
அந்த இரவு அவள் தனியாக தனது அறையில் அமர்ந்திருந்தாள். மேசையில் தீரன் புகைப்படம் இருக்க,அந்த படத்தை பார்த்தபடி அவள் மெதுவாக பேசினாள்.
“நான் உன்னை காதலிக்கிறேன் தீரன்… ஆனா உன்னை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள மாட்டேன்.”என சொல்லும்
அந்த நொடியில் அவள் கண்களில் ஒரு கொடிய தீர்மானம் தோன்றியது.
அவள் உடனே தனது மொபைலை எடுத்தாள். யாரோ ஒருவருக்கு போன் பண்ண
“நான் சொன்ன விஷயம் முடிச்சாச்சா?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.
மறுபக்கம் இருந்தவன்,“ஆமா மேடம்… அந்த குழந்தை இங்க தான் இருக்கு” என்றான்.
அந்த வார்த்தை கேட்டதும் அர்ச்சனா மெதுவாக சிரித்தாள்.“சரி… இன்னும் இரண்டு நாள் காத்திரு. சரியான நேரத்தில் நான் சொல்றேன்.” என்ன சொல்லி முடித்து போனை வைத்தாள்.
அவள் மனதில் ஒரு சதி முழுமையாக உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த சதியை முறியடிக்க யார் வருவார்கள் என்று பார்ப்போம்..
