“எழுந்து கொண்டேன் உன் நினைவில் இன்று முழுவதும் தாளாது தவித்து போகும் என் மனதுக்கு எப்படி புரிய வைப்பேன் “
….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….
பாகம் -15
குல தெய்வ பூஜை பச்சையம்மன் கோவிலில் பூஜை முடித்தவர்கள் பூஜைக்கு படைத்த சக்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாறி சாப்பிட்டுக் கொண்டிருக்க,
நிதிஷா தனது வருங்கால மாமியாரின் பக்கத்தில் தான் இருந்தாள். “ஆன்ட்டி வர்மா சாப்டாரா ” அக்கறையாய் விசாரித்து தன் மனதில் இருக்கும் சந்தேகத்தினை கேட்டு விட நினைத்தாள்.
சிரித்துக் கொண்டே “சாப்பிட்டான் மா மாத்திரைலாம் கொடுத்துட்டு தான் வந்தேன். சரி ஆகிடும் மா நீ கவலை படாத ” வர்மா மீது எவ்வளவு அக்கறை என்று அவர் நினைக்க வேண்டும் என்பது தானே அவள் திட்டம்.
“எங்க ஆன்ட்டி அவர் தூங்குறது, அதான் ஆபீஸ்ல இருந்து தொந்தரவு பண்ணிட்டே இருந்தாங்களே ” வர்மாவை பார்க்க வந்த ஆரண்யா பற்றி அவராகவே சொல்ல வேண்டுமே அதற்க்கு தான் எதுவும் தெரியாதது போல் பேச்சினை ஆரம்பித்தாள்.
“ஆமா டா ஆபீஸ்ல இருந்து ஆரண்யா வந்தா, ரொம்ப நல்ல பொண்ணு “
வர்மா சொல்லி இருப்பானோ, அப்பவே எனக்கு சந்தேகம் தான் அன்னைக்கு பார்ட்டில கூட வர்மா தானே வருண் கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போனாரு. இப்போ அவங்க அம்மா கிட்டயும் நல்ல பொண்ணுன்னு சொல்லி வச்சிருக்காரு. முதல்ல இவளை ஒழிக்கணும். மனதில் அவளை ஆபீஸில் இருந்து விரட்ட வேண்டும். இவரிடம் அவளை கெட்டவளாக காட்டி விட்டால் போதும் நினைத்தது தானாக நடக்கும் என்று திட்டம் போட்டவள்
“ஆன்ட்டி வர்மா சொன்னாரா “
“இல்லை மா விஜய் சொன்னான். வீட்டுக்கு ஆரண்யாவ அனுப்பி இருக்கேன் முக்கியமான சைன் வாங்கணும் சொன்னான். வந்தவ தயங்கி நின்னுட்டு இருந்தா, நான் தான் பின் பக்கமா அனுப்பி வச்சேன் ” இவளின் உள் நோக்கம் புரியாமல் அவர்கள் நடந்ததை அப்படியே சொல்ல
‘எல்லாத்துக்கும் காரணம் இவன் தானா, உன்னையும் சேர்த்தே விரட்றேன் டா ‘ வருண் தான் நம் திட்டத்துக்கு சரியான ஆள், ஆரண்யாவை அவனிடம் கோர்த்து விட்டுடலாம், இந்த விஜய்க்கு என்ன திட்டம் போடுவது, அவள் யோசித்துக் கொண்டிருக்க,
விஜய் அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும் ‘வர்மாவுக்கு அங்க அவளை அனுப்பிட்டு, இங்க எதுவும் தெரியாத மாதிரி வந்து நிக்குறியா, இவனை வாட்ச் பண்ணுவோம், ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா போதும் அதை வச்சே மாட்டி விட்டுடலாம்.
வருண் கிட்ட பேசணுமே, அவ வேற அங்க வர்மா கூட இருக்காளே, வர்மாவின் அம்மாவிடம் போன் பேசி விட்டு வருவதாக சொல்லி விட்டு நகர்ந்து வந்தவள் கோவிலின் பின் பக்கம் சென்றாள்.
“வருண் நான் நிதிஷா “
“ஹே நிதிஷா, எப்படி இருக்க “
“எங்க நல்லா இருக்குறது, என் லைப் ஸ்பாயில் பண்ணவே இங்க ரெண்டு பேரு இருக்காங்க” கடுப்புடன் சொல்ல,
“ஹே பேப் என்ன இவ்ளோ வெறுப்பா பேசுற, என்ன ஆச்சு சொல்லு, நான் ஹெல்ப் பண்றேன் ” அவளின் பேச்சை உண்மை என்றே நினைத்தவன் அவளுக்கு உதவ நினைத்தான், அப்போது தானே ஆரண்யாவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
அன்று பார்ட்டியில் பார்த்த அன்றே முடிவு செய்து விட்டான் நிதிஷா மூலம் ஆரண்யாவை அடைந்து விட, அவள் விலகி இருந்ததும் பட்டும் படாமல் பேசி நழுவிச் சென்றதும், மற்ற பெண்களிடம் இருந்து அவளை தனித்துக் காட்டியது.
அவனிடம் தானாகவே வந்து பேசும் பெண்களைப் பார்த்து சலித்துப் போனவன் தான் சென்று பேசியும் அவள் பேசாமல் உதாசினப் படுத்தியது அவனுக்கு அவள் மேல் ஈரப்பை கொண்டு வந்தது.
அவளின் ஆளை அசத்தும் அழகு, நேர்த்தியான உடை, மென்மையான பேச்சு, வேலையில் அவளின் நுணுக்கம் என ஆரண்யா பற்றி அவன் அறிந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் நல்லதாகவே இருக்க அவளை அடைந்தே தீருவேன் என்று முடிவு செய்து விட்டான். நிதிஷாவுக்கு வர்மா விஷயத்தில் வருணின் உதவி தேவைப்படும் என்று அவன் யோசித்து வைத்திருந்தான்.
புதிதாக வேலைக்கு சேர்ந்த ஆரண்யா பற்றியே தகவல்கள் தெரிந்து வைத்துக் கொண்டவனுக்கு, நிதிஷா பற்றி தெரிந்து கொள்வது பெரிய செயல் இல்லையே,
அவள் விரித்த வலையில் வருண் வீழ்வான் என்று நிதிஷா திட்டம் தீட்டி இருக்க, அவனோ என் திட்டப்படி தான் எல்லாம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.
வருணின் உண்மை குணம் தெரியாமல் நிதிஷா”வருண், ஆரண்யா இப்போ எங்க இருக்கா தெரியுமா ” அழுதிடும் குரலில் சொல்ல,
“எங்க இருக்கா என் பேபி, அவள் தான் உனக்கு பிரச்சனை கொடுக்குறாளா “
“அவளை மட்டும் சொல்லிட முடியாது, வர்மா கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த விஜய் அவன் தான் எல்லாத்துக்கும் காரணம் ” ஆரண்யாவை தவறாக சொன்னால் இவன் எப்படி உதவி செய்வான், அதற்க்கு தான் மொத்த பழியையும் விஜய் மேல் போட்டு விட்டாள்.
“என்ன நடந்தது புல்லா சொல்லு அப்போ தானா என்ன செய்றதுன்னு யோசிக்க முடியும் “
அவள் திட்டத்தை சொல்லும் முன் யாரேனும் வருகிறார்களா என்று பாத்தவள் யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு ” இந்த விஜய் தான் ஆரண்யாவை தூண்டி விட்டு வர்மாவிடம் கையெழுத்து வாங்க அனுப்பி இருக்கான். இங்க ரெண்டு குடும்பமும் கோவிலுக்கு வந்திருக்கோம்
அங்க வீட்ல வர்மா, ஆரண்யா தான் இருக்காங்க, அவளை அங்க அனுப்பிட்டு எதுவும் தெரியாத மாதிரி இங்க கோவிலுக்கு வந்திருக்கான். நீயே சொல்லு, கல்யாணம் நிச்சயம் ஆனவ நான் இங்க இருக்கேன், என்னோட வருங்கால ஹஸ்பண்ட் அவரோட செக்ரட்ரி கூட தனியா வீட்ல இருக்காரு “
“இப்போ என்ன பண்ணலாம் சொல்லு, எனக்கே இதை கேட்க எரிச்சலா தான் இருக்கு,” நிதிஷா சொன்னதை கேட்டவனுக்கும் உண்மையில் அவர்களின் சந்திப்பு எரிச்சல் தான்.
“இதுக்கு காரணமானவன் இந்த விஜய் தான். அவனை வர்மா கிட்ட இருந்து பிரிச்சிடணும். அதுக்கு அப்புறம் ஆரண்யாவ ஈஸியா அங்க இருந்து துரத்திடலாம் “
வருணும் யோசித்தான் அவள் சொல்வது சரி என்றே நினைத்தவன் “விஜய்க்கு என்ன கெட்ட பழக்கம் இருக்கு இல்லை ஏதாவது வீக்னஸ் இருக்கா சொல்லு அதை வச்சு ஐடியா பண்றேன் ” பிசினஸ் வேலை சரியான யோசனை சொல்ல,
“வருண் நீ மட்டும் இப்போ பக்கத்துல இருந்தேன்னு வச்சிக்க இவங்களை சீக்கிரம் பிரிச்சிடலாம். எப்படி பா நான் யோசிக்குற மாதிரியே யோசிக்கிற “
அவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும், வருண் சிரிக்கவில்லை நிதிஷா ஒரு காமெடி பீஸ் என்று புரிந்து கொண்டான். “இப்போ விஜய் உங்க கூட தானே இருக்கான் அவனை பாருங்க, யார் கிட்ட பேசுறான் பாருங்க, அதுல இருந்து ஒரு முடிவு பண்ணிக்கலாம் “
“ஓகே வருண் அவனை பார்த்துட்டு எதனா க்ளூ கிடைச்சா சொல்றேன்” அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் யாரேனும் பார்க்கிறார்களா என்று ஒரு முறை பார்வையை சுழல விட்டு நடந்து வர,
அவள் சென்றதும் மறைந்து நின்றிருந்த விஜய் ‘எனக்கே ஆப்படிக்குற வேலை பண்ண பார்க்குறியா, உனக்கு இருக்கு டி, அன்னைக்கு ஆரண்யாவை இதுக்குத்தான் வருண் கிட்ட மாட்டி விட்டு வேடிக்கை பார்த்தியா,
ஆனா நீ செஞ்ச இந்த விஷயம் தான் என் நண்பனுக்கு ஆரண்யா மேல விருப்பம் வந்திருக்கு, கெட்டதுலயும் நல்லது தான் நடந்துருக்கு, இதை வர்மா கிட்ட சொல்லிட்டா போதும் அவனே பார்த்துப்பான். இவளை மட்டும் என் நண்பன் கல்யாணமே பண்ணிக்கக் கூடாது அது போதும் மீதிய, என் தங்கச்சி ஆரண்யா பார்த்துக்குவா ‘
நிதிஷா, விஜய்க்கு எதிராக திட்டம் போட, விஜயோ வர்மாவுக்கு தெரியப்படுத்தினால் போதும் அவன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்தான்.
விஜயும் எந்த உணர்வையும் காட்டாமல் கோவிலுக்கு செல்வதும், வெளியே வருவதும் சிரிப்பதும் வேண்டுமென்றே முகம் தெரியாத புதியவர்களிடம் பேசுவது, வம்பு வளர்ப்பது என்று நிதிஷாவுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தாலும்,
நிலாவைப் பார்த்ததும் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு அவனை ஆட்டிப் படைத்தது அவன் பார்க்க வேண்டாம் என்று தள்ளி இருந்தாலும் அவளாக வந்து பேச, அவனிடம் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அவளின் கண்ணக் குழி அழகில் தொலைந்து நின்று அவனுக்கு போக்கு காட்டி கொண்டிருந்தது.
கோவிலில் பூஜைக்கு கொடுத்த பூமாலையை சிறிய சிறிய தூண்டுகளாக கத்தரிக்கோல் கொண்டு கட் பண்ணிக் கொண்டிருந்த நிலா, தவறி கையில் கீறிக் கொள்ள, விஜய் தான் துடித்துப் போனான்.
சிறிய காயம் தான் காதல் கொண்ட மனது அதை பெரியதாக நினைத்து பதற, அது நிதிஷா கண்ணில் பட்டு விட்டது. இதழ் வளைத்து சிரித்தவள் மாட்டிகிட்டியா என்பது போல் மகிழ்ச்சியில் திரிந்தாள்.
வருணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்க, அவனும் தான் பார்த்துக் கொள்வதாக கூற, நிதிஷா மனது உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
கோவிலில் இருந்து அனைவரையும் காரில் ஏற்றியவன் சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிலா காரில் ஏறினாளா என்ற சந்தேகத்தில் விசாரிக்க எந்த காரிலும் அவள் இல்லை. அவளுக்கு போனில் அழைக்க போன் அவள் அம்மாவிடம் இருந்தது.
அவரிடம் பேசியவன் கோவிலில் இருப்பாள் அழைத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு, கிளம்பி மீண்டும் கோவிலுக்கே சென்றான். அங்கு கோவிலைச் சுற்றி தேடியவன் நிலா, நிலா என்று கத்தி அழைத்தும் அவள் இல்லாததால் என்ன செய்வது என்று புலம்பியபடி அம்மன் முன் நின்றவனின் தோளை யாரோ தொடுவது போல் இருக்க அதிர்ந்து பார்த்தான்.
ஆரண்யா போனில் புதிய அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்த வர்மா கோவத்தில் போனை தூக்கி அடிக்க, அவன் கைவளைவில் நின்றிருந்த ஆரண்யா மிரண்டு போனால், சிவந்த விழிகளுடன் அவளைப் பார்த்தவன்.
அவள் மிரளும் பார்வையில் இன்னமும் கோவம் அதிகரிக்க, “என்னை ஏமாத்த தான் இங்கு வந்தியா, என்னைப் பார்த்தா எப்படி தெரியுது ” மேலும் அவன் பேசிய வார்த்தைகளில் வாழ்வே வெறுத்து போனது, கண்ணீருடன் வர்மாவின் வீட்டில் இருந்து வெளியே சென்றாள்.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்….
