கண்கள் பேசுதே அத்தியாயம் 18

 

அத்தியாயம் -18

ரேவதி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சரி என்றதால் வேற வழியின்றி தற்போது தமிழரசி மற்றும் பிரபஞ்சன் ரவிவர்மன் திருமணத்திற்கு ஒப்புதல் தந்தனர். அதன் படி திருமணம் நல்ல முறையில் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்தாள் ரோஜா. 

“மதி ரோஜாவை இங்கேயே விட்டு போ பா”என்றார் பிரபஞ்சன்.

“ஐயோ மாமா ரோஜா இல்லைனா எனக்கு நாளே ஓடாது “என்றார் மதியழகன்.

இருவரும் ஆதர்ஷ் தம்பதியாய் இருப்பதை பார்த்து தமிழரசி மற்றும் நம் பிரபஞ்சன் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியில் இருக்கும் போது தான் சட்டென்று ரோஜா மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தாள். ஐயோ ரோஜா என்ன ஆச்சு என்று அனைவரும் பதறினார். உடனே மதியழகன் அவளை தூக்கிக்கொண்டு படுக்கையில் அமர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்பினான். மேலும் இப்படியே விடவேண்டாம் எதற்கும் டாக்டரை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்துக்கொண்டு அவனே செல்ல அது ராஜா பணி புரியும் மருத்துவமனை. 

மெதுவாக அவள் கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் . அன்று என்னவோ அந்த மருத்துவமனையில் பெண் மருத்துவர் வரவே இல்லை அதனால் ராஜா அமர்ந்திருக்கும் கன்சல்டிங் ரூம் சென்றனர். அது ராஜா என்பதை உணர்ந்து முதலில் தயங்கினாள் ரோஜா.

“ரோஜா ரிலாக்ஸ் இப்ப நம்ம ராஜாவை பார்க்க வரலை டாக்டரை பார்க்க வந்துருக்கோம் “என்றான் மதி.

“டாக்டர் இவ மயக்கம் போட்டு திடிர்னு வீட்ல விழுந்தா அதான் அழைச்சிட்டு வந்தேன் என்னன்னு பார்த்து சொல்லுங்க “

“பீபி கூட நார்மல் தான். ம்ம் காலைல சரியா சாப்பிடலையா ? “என்றான் அதற்கு அவள் “இல்லை இட்லி சாப்பிடீடேன் “என்றாள்.

“ஓ ஓகே….ம்ம் சிஸ்டர் இவங்களை அழைச்சிட்டு போய் ப்ரெக்னன்ஸி கிட் ல செக் பண்ணிட்டு வாங்க “என்றான் ராஜா. அந்த வார்த்தையை ராஜா சொல்ல இவளுக்கோ ஆர்வம் தொற்றிக் கொண்டது. அதுவாக தான் இருக்குமோ என்று மனதிற்குள் ஆர்வம். மதியழகன் வெளியே வெயிட் பண்றேன் என்று சொல்லிவிட்டு வெளியே அமர்ந்தான். அதற்குள் நர்ஸ் வந்து “சார் பாஸிட்டிவ் தான்”என்க. அதை வாங்கி ராஜா பார்த்துவிட்டு 

பாஸிட்டிவ் தான் பட் வெயிட் பண்ணி இன்னும் ஒன் வீக் கழிச்சு லேடி டாக்டரை வந்து பாருங்க என்றான். 

இவளும் சரி என்றாள் அவ்வளவு தான் அதற்கு மேல் அவள் அங்கிருக்கவில்லை எழுந்து வெளியே வர எத்தனிக்கும் போது “ரோஜா கங்ராஜ்லேஷன் “என்றான் இவள் திரும்பி நன்றி என்றாள். அவள் சென்றதும் அவனுக்குள் ஏனோ கவலை கடந்த மகிழ்ச்சி. இதை தானே அவள் ஆசைப்பட்டாள் ஒருவேளை அவள் ஆசை பட்ட மாதிரி நான் நடந்திருந்தால் இந்நேரம் அவள் என்னுடைய மனைவியாக வீட்டில் இருந்திருப்பார். வேலை முடிந்து வீடு திரும்பும் போது இப்போது ஹலோ வாங்க என்றழைக்க கூட ஆள் இல்லை என்று வருந்தினான். 

ரோஜா ஒருவாரம் கழித்து வந்து மீண்டும் டாக்டரை சந்திக்க அவரோ ஸ்கேன் ரூமில் அவளுக்கு டெஸ்ட் எடுத்துவிட்டு ஆம் கர்ப்பமே இரண்டு மாதம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்ல…

“தேங்க்ஸ் டாக்டர்”என்று வெளியே வந்தாள் மீண்டும் ராஜாவை சந்திக்க நேர்ந்தது.

“ரோஜா டாக்டரை பாத்தியா”

“ம்ம்”

“ஹேப்பி தானே?” 

ம்ம் ஹேப்பி தான். என்றதும் மெடிசின் எல்லாம் கரெக்டா எடுத்துக்க என்று கூறி நகர்ந்தான். ஒருவேளை உன் மனைவியாக வாழ்ந்திருந்த போது இது நடந்திருக்க கூடாதா என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தாள். வீட்டில் அனைவரும் இவளை கொண்டாடினார்கள்.

“சரி நாம காரைக்குடி போலாம் ரோஜா. எவ்ளோ நாள் இங்க இருக்க முடியும். அப்பறம் சீமந்தம் முடியும் போது பிரசவத்திற்கு இங்க வா ஓகேவா”

“சரி “ என்று இருவரும் கிளம்பி ஊருக்கு செல்ல அங்கு அவளை கோப்பெருந்தேவி நன்றாக பார்த்துக் கொண்டாள். மதியும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான். அவ்வப்போது அவளுடைய உடல்நலத்தை ராஜா விசாரித்து கொண்டிருந்தான். 

“ரோஜா ஆர் யூ ஓகே நவ்”என்று அவன் கேட்கவும் மதி வரவும் மதியிற்கு பொஸஸிவ் ஆனது.

“ராஜா எதுக்கு எப்ப பாரு கால் பண்றாரு “என்றான்.

“ம்ம் ஒரு டாக்டராக விசாரிக்கிறாரு அவ்ளோ தான் வேற எந்த கான்வர்ஸேஷனும் பண்ணலை”என்றாள் ரோஜா. நாட்கள் மெல்ல நகர்ந்தது. 

அன்று அருந்ததி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் போது திடிரென ராஜா உள்ளே வர “சார் சொல்லுங்க “என்றாள்.

“சாரி அருந்ததி நீ ஃப்ரியா இருக்கியோன்னு நினைச்சேன்”

“ஓகே இதோ வரேன் ஒரு டென் மினிட்ஸ் “என்றாள். இவனும் அவளுக்காக காத்திருக்க சற்று நேரத்தில் அருந்ததி நுழைந்தாள்.

“அருந்ததி….ஆக்சுவலி நான் தனியா க்ளினிக் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் கூட நீயும் பிஸியோ அங்கேயே ஜாயின் பண்ணிக்கலாம் என்ன சொல்ற?”என்க அதற்கு அவள் சார் திடிர்னு இங்க வேலை விட்டுட்டு எப்படி சார் வர முடியும்? என்றாள் 

“இங்க பாரு கட்டாயம் எல்லாம் இல்லை நீ இல்லை னா வேற ஒருத்தர் பார்த்துக்குவேன்”என்றான் ராஜா. அவன் வேறு ஒருவரை பார்த்து கொள்கிறேன் என்று கூறியது வருத்தமாக இருந்தது அவளுக்கு.

“சார் ஓகே நான் வரேன் “என்றாள்.

“க்ளினிக் ஸ்டார்ட் ஆனதும் இங்க வர மாட்டேன். ஸோ”

“ம்ம் நானும் அங்க வர ஆரம்பிச்சிட்டா இங்க வர முடியாது சார்”

“சம்பளம் இங்க விட அங்க அதிகம் தருவேன். “என்றான் ராஜா.

“ஓகே” நாட்கள் கழிய மெதுவாக க்ளினிக் துவங்கியபோது அருந்ததி அங்கு வந்துவிட்டாள். அவனிடம் வரும் நோயாளிகள் இவளிடம் பிஸியோதெரபி ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டு செல்ல அவளுக்கும் சரி அவனுக்கும் சரி பிஸியாக இருந்தது. இருவரும் ஒரே இடத்தில் மற்றவர் ஆளுமை இல்லாத நிம்மதியாக வேலை பார்க்கும் அமைதியை உணர துவங்கினர்.

“சார் வர்றீங்களா காபி சாப்பிட்டு வரலாம்”என்றாள்.

“ஹாஹா நான் வீட்ல இருந்து ப்ளாஸ்க் ல போட்டு வந்துட்டேன்”என்றான்.

“ம்ம் அதுக்கு ஆளு இருக்கா வீட்ல “

“ஹே அதான் அம்மா இருக்காங்க தானே அவங்க போட்டு தந்தாங்க”

“ஹோ சரி”

“உனக்கும் சேர்த்து தான் இருக்கு இந்தா குடி “

இருவரும் ஒன்றாக அமர்ந்து அவன் எடுத்து வந்த காபியை சுவைக்க துவங்கினர். அம்மா கை பக்குவம் சூப்பர் போட்ட காபிலயே தெரியுது என்றாள் அதற்கு அவன் புன்னகையை மட்டும் பரிசாக தந்துவிட்டு அமைதியாக அவன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் பக்கத்தில் ஜன்னல் வழியே மழைக்காட்சி தெரிய எழுந்து நின்று மழையை ரசித்தாள். மாமரத்தில் இழுத்து நீர் சொட்டும் அழகை ரசித்தாள். 

அவள் மெய் மறந்து ரசிக்கும் காட்சியை அவனும் பார்த்தான். அப்போது க்ளினிக்கிற்கு பேஷண்ட் யாரும் வராததால் அவ்வளவு அமைதியாக இருந்தது. அந்த அமைதி இருவருக்கும் ஒருவித நெருக்கம் தந்தது. அவளருகே வந்து நிற்க… 

“சார் என்று பதறி திரும்பினாள்” அவள் மேல் இருந்த துப்பட்டா நழுவி கீழே விழுந்தது. அதை குனிந்து அவனே எடுத்து அவளிடம் தந்தான். 

“தேங்க்ஸ்”

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்”

அவள் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தான். “அழகா இருக்கு அருந்ததி உன் கண்ணு “

“ஹாஹா தேங்க்ஸ்”

“தேங்க்ஸ் தவிர எதாவது பேசு”

“சார் இதெல்லாம்…..”

“என்ன?”

“எனக்கு இந்த வர்ணனை எல்லாம் ரொம்ப அதிகம் அவ்ளோ அழகு எல்லாம் இல்லையே நான் “

“அப்படியா ஆனால் என் கண்ணுக்கு அழகா தான் தெரியுது”என்று சிரித்தான். பேச்சு எங்கெங்கோ போவதற்குள் அவனும் நிறுத்தினான். அதற்குள் மழையும் விட்டது பிறகு இருவரும் கிளம்பி விட்டனர். வீட்டுக்கு வந்ததும் அவளையே பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தான். எனக்கு ஏன் இவளை பிடிச்சிருக்கு ரோஜா மேல கூட அவ்ளோ ஈஸியாக வராத ஃபீல் எனக்கு இவ மேல டக்குன்னு வந்துடுச்சு. என்று நினைத்து சிரித்தான். 

வீட்டில் அவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய துவங்கினர். அப்போது இப்போதைக்கு எதுவும் வேணாம் என கூறினான். அதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு தனக்கு அருந்ததியை பிடித்திருக்கிறது ஆனால் கால அவகாசம் தாருங்கள் என்றான். அருந்ததி அவனுடைய வாழ்க்கையில் வந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது ரோஜா அவன் வாழ்க்கையில இருக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட மன பலவீனம் இப்போது இல்லை. ரோஜா மீது வராத ஈர்ப்பு அவள் மீது வரத் துவங்கியது ஆனால் கொஞ்ச நாட்களே ஆனதால் உடனே அவளிடம் காதலை சொல்ல இயலாது. அதனால் நேரம் வரும் போது கூறலாம் என நினைத்தான் . 

இங்கு நம் கதாநாயகி ரோஜா மதியுடன் வெளியே சென்றாள் . பிறக்க போகும் குழந்தைக்காக நிறைய பொருட்கள் வாங்கி குவித்தாள் அப்போது சட்டென்று பிரசவல்லி ஏற்பட்டது அது பொய் வலியாக இருக்குமோ என்று முதலில் நினைத்தால் பிறகு அது பிரசவ வலி தான் இன்று முடிவுக்கு வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மதியம் கூறினாள். அவனும் அதன்படி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் அண்ட் போன பின்பு தான் பனைக்குடன் உடைந்தது சிறிது நேரத்தில் நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்தார் அது ஆண் குழந்தை. 

குழந்தை பார்ப்பதற்கு அப்படியே ரோஜா போல் இருந்தது. அம்மா மாதிரியே இருக்கான் என்று அனைவரும் கூறினர். அவளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை ராஜா கேள்விப்பட்டவுடன் உடனே காரைக்குடிக்கு இருந்தான் வலையும் குழந்தையும் பார்க்க விட்டு வர வேண்டுமெ ன்று மனம் துடித்தது அதனால் என்ற மருத்துவமனையில் அவள் அருகில் இருந்த குழந்தையை தூக்கி கையில் ஏந்தி கொண்டு பார்த்தான் அது எந்த ஊர் தெரியவில்லை அவனுடைய கண்கள் கலங்கிவிட்டது. 

கல்யாணம் குழந்தையை இதோட முக்கியத்துவம் என்ன என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது விரைவில் காணும் ஒரு குழந்தைக்குத் தகப்பனாக வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் துளிர் விட்டது. 

குழந்தையை பார்த்துவிட்டு ரோஜாவுக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு விடை பெற்றான். மதி ரோஜாவை நன்கு கவனித்துக் கொண்டான். மது மாதிரி ஒரு புருஷன் யாருக்கும் கிடைக்காது என்று அனைவரும் கூறும் அளவுக்கு நன்றாக பார்த்துக் கொண்டான்

 

தொடரும் 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page