ஆடி வரும் வண்ண மயிலே-19

அத்தியாயம்:19 

புவனா தன் கோபத்தை எல்லாம் ராகவனை திட்டி தீர்த்து கொள்ள…சக்ரபாணி மெல்ல சிரித்தவர்.  

“ புவனா மா அப்பா  அம்மா போல வளர்த்த சொந்த பெரியப்பா, பெரியம்மா தங்கச்சியை தூக்கியெறிந்த…பெரிய மனிதனுக்கு  

அவரை நம்பி ஓட்டு போடும் மக்களை தூக்கியெறிய எவ்வளவு நேரம் ஆகும்…தன்னை நம்பி கை பற்றி வந்தவள் நம்பிக்கையை காப்பாற்ற துப்பு இல்லை.. இதில் முதல்வர் நாற்காலி தேவைபடுகிறது.  

அந்த நாற்காலியை அலங்கரிக்க முழு தகுதியான ஆளு…என் நண்பன் மூர்த்தி தான் அவனை போல ஒருவன் தான்…இந்த தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை என்றால் இதை கொள்ளையடித்து விற்று விடும் கூட்டம் தான் இங்கே அதிகம்…” என்றார்.  

அவர் பேசியதை கேட்ட ராகவன் முகம் மாறியது…அவன் நேரடியாக எப்பவுமே சக்ரபாணியிடம் பேச மாட்டான்…சியாமளாவை கல்யாணம் பண்ணிய நாள் முதல் இப்போ வரைக்கும் அப்படி தான்.  

இப்பவும் அவன் அமைதியாக இருக்க…அங்கே குரு மூர்த்தியின் வருகைக்காக காத்திருந்த… அவரின் தொண்டர்கள் சக்ரபாணியின் பேச்சை கேட்டு சிரித்தார்கள்.  

மாலதி “ என்னங்க இது அந்த ஆளு உங்களை…மட்டமாக பேசி கொண்டு இருக்கிறார் நீங்க அமைதியாக இருக்கிறீங்க..? நீங்க யாரு மந்திரி அவருக்கு இரண்டு காட்டு காட்ட வேணாமா..? 

உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்க…என் அண்ணன் அந்த வேலையை செய்வார்…அண்ணே நம்ம ஆளுங்களை விட்டு உன் மாப்பிள்ளையை… கேலி பேசிய அவர் வாயை உடைத்து விடு…” என்றாள்.  

வெங்கட் “ அம்மா பரதேவதை போதும் தாயே..! நீயும் உன் அண்ணனும் எங்க குடும்பத்தில் கும்மியடித்தது…சக்ராவை யாரென நினைத்த உன் வீட்டு வேலைக்காரன் என்றா..? 

உன் முண்டக் கண்ணை திறந்து பாரு எங்களை சுற்றி பாரு எத்தனை…பாடி கார்ட் என்று அது மட்டுமல்ல சக்ரா முதல்வரின் சம்பந்தி மட்டுமல்ல உயிர் நண்பனும் கூட…அவன் மேலே உன் நொண்ணன் கை வைத்து விட்டு உயிரோடு இருக்க முடியுமா..? 

சக்ரா அரசியலில் இல்லை என்றாலும் கூட…அவனுக்கு அரசியலில் செல்வாக்கு அதிகம் இருக்கு…அது மட்டுமல்ல கவர்மெண்ட்க்கு அவன் கட்டும் வரி பணம் ஒரு மாதம் எவ்வளவு தெரியுமா..? 

நீ நினைத்து கூட பார்க்க முடியாத தொகை..உன் அண்ணன் கிட்ட கேட்டு பாரு சொல்லுவான்…என்ன பாண்டி உனக்கு தெரியும் தானே சக்ரா பற்றி… கொஞ்சம் உன் தங்கச்சிக்கு எடுத்து சொல்லி புரிய வை… 

பேச வந்து விட்டாள் நீ இருக்கும் இடம் என் சியாமளா பாப்பாவின் இடம்…அது போட்ட பிச்சை தான் உனக்கு இந்த கெளரவமான வாழ்க்கை… 

நீ எல்லாம் சக்ராவை பேச வந்து விட்ட…உன் அண்ணனின் பின்புலத்தை சபையில் சொல்ல வைத்து விடாதே.  

தர்மகர்த்தா அது தான் நாங்க எல்லாம் வந்து விட்டோம் தானே…பூஜையை ஆரம்பியுங்க தெய்வத்தை ரொம்ப நேரமாக காக்க வைக்க கூடாது…சக்ரா வா போகலாம்…” என்றார்.  

அவர்கள் கோவில் உள்ள போக பாண்டி, மாலதி, சரிகா முகம் கறுத்தது…வெங்கட் சுற்றி வர ஆளுங்க இருக்கும் போது…உண்மையை போட்டு உடைத்து விட்டு போய் விட்டான் மறுத்து பேச முடியாத நிலை.  

ராஜவேலு “ என்ன ராகவன் அண்ணே..! யாரு இவங்க இப்படி உங்க குடும்பத்தை போட்டு டேமேஜ் பண்ணி விட்டு போறாங்க…தலைவருக்கு சொந்தமா..? என பாதி உண்மை தெரிந்து கொண்டே கேட்டான்.  

கனகராஜ் “ என்ன தம்பி நீ உனக்கு தெரியாதா…? அவர் யாரு தெரியுமா..? சியாமளா குரூப் ஆப் கம்பெனி சேர்மன் சக்ரபாணி…அவர் ஒரே பெண்ணு தான் நாட்டிய தாரகை சியாமளா.  

நம்ம ராகவனின் மூத்த சம்சாரம் இவங்க வாரிசு தான்…மயூரிகா அடுத்த நாட்டிய தாரகை பாரினுக்கு எல்லாம் போய்…நிகழ்ச்சி செய்து விருது பெற்று இருக்கு… 

ஏன் கலைமாமணி விருது, நிருத்ய பிரபா, தேசிய விருது எல்லாம்… அவங்க அம்மா போல இந்த சின்ன வயதில் பெற்று இருக்கு.  

பல கோடிக்கு ஒரே வாரிசு அதை விட முதல்வரின் மகன் வழி பேத்தி…அந்த பெண்ணுக்கு செல்வாக்கு அதிகம் என்ன ராகவா…?உன் பெண்ணை பார்க்க கூட சக்ரபாணி விட மாட்டார் தானே.  

அதை விட உன் பெரியப்பா அதற்க்கு உனக்கு அனுமதி கொடுக்க மாட்டார்…காரணம் ஊர் அறிந்த உண்மை அதற்காக ஆதாரம்…சரியாக இல்லை என்பதால் நீ தப்பி விட்ட.  

உன் முதல் மனைவி சியாமளாவை கொலை செய்தது நீ தான் என்று…அரசல் புரசலாக ஊருக்குள்ளே ஒரு பேச்சு அடிபடுது… 

காரணம் இந்த பாண்டி தங்கச்சியை கல்யாணம் பண்ண…அந்த சியாமளா பெண்ணு தடையாக இருக்கிறாள் என்று போட்டு தள்ளி விட்ட.  

சரி சரி விடு அரசியலில் இது எல்லாம் சகஜம்…நான் செய்யாத கொலையா..? நம்ம அரசியல் பாதையில்…யார் குறுக்கே வந்தாலும் போட்டு தள்ளி விட்டு…போய் கொண்டே இருக்க வேணும் அப்போ தான் நம்ம ஜெயிக்க முடியும்.  

என்ன புரிகிறதா நான் சொல்வது..? ராஜா வா பூஜை தொடங்க போகிறது நம்ம உள்ளே போகலாம்…” என்றவர்.. ராஜவேலுவை அழைத்து கொண்டு போனார்.  

அவர்கள் போனதும் முகம் மாற நின்றிருந்த ராகவன் அருகில் வந்தவன் பாண்டி…மெல்ல ராகவனின் காதில்  

“ மச்சான் அவன் எல்லாம் ஒரு ஆள் என்று அவன் பேச்சை கேட்டு…தடுமாறி நிற்க வேணாம் அவன் ஆரம்ப தொழிலே கசிப்பு காய்ச்சுவது தான்… 

அவன் தம்பி ராஜவேலு ஊர் அறிந்த பொறுக்கி பயல்… அழகான பெண்ணு கண்ணில் பட்டு விட கூடாதே…தன் வலையில் மாட்ட வைக்கும் வரைக்கும் ஓய மாட்டான்…இப்படிப்பட்ட உத்தம குடும்பம் அது.  

அதனால் அதுகளின் பேச்சுக்கு காது கொடுக்காது வாங்க…உள்ளே போகலாம்…” என்றான்.  

வழமை போல சக்ரபாணி ஈசனுக்கு தாம்பூல தட்டு நிறைய தங்க காசுகள் வைத்து…பேத்தியின் கையால் கொடுக்க வைத்தார் அது போல மீனாவும் தட்டு நிறைய… தங்க காசுகள் வைத்து தர்ஷன், தியா கையால் கொடுக்க வைத்தார்.  

பூஜை நன்றாக நடந்து கொண்டு இருக்க சக்ரபாணி, கல்யாணிக்கு நடுவே நின்று…கண்களை மூடி வேண்டி கொண்டு இருந்த மகளை தான்.. ராகவன் பார்த்து கொண்டு இருந்தான்.  

உண்மையில் அவனுக்கு உள்ளுக்குள்ளே மலையளவு ஆசை இருந்தது..மகளை பார்க்க தன் கூட அழைத்து வர ஆனால்… அதற்க்கு குரு மூர்த்தி, சக்ரபாணி அனுமதிக்கவே இல்லை  

அவர்களின் செல்வாக்கை வைத்து…சட்டப்படி மயூரியை வளர்க்கும் உரிமையை சக்ரபாணி வாங்கி விட்டார்…ராகவனுக்கு மாதம் ஒரு முறை பார்க்க மட்டும் தான் அனுமதி.  

அதை கூட மாலதி தடுத்து விட்டாள்…எங்கே மகளை பார்க்க போனால் மொத்தமாக ராகவன் மனதை மாற்றி…குருமூர்த்தி, சக்ரபாணி அவர்கள் பக்கமாக இழுத்து விடுவார்கள் என்று.  

ராகவனும் சிலதை மனதில் நினைத்து…மயூரியிடம் இருந்து மொத்தமாக விலகி இருந்தார் அவளை…அவர் பார்ப்பது என்றால் பத்திரிகை, டிவியில் தான்…இல்ல பிளக்ஸ் பேனர்களில் தான் ராகவனை போல… இன்னும் ஒருவனும் மயூரியை பார்த்து கொண்டு இருந்தான். 

ஆனால் அவன் பார்வை மானை புலி வேட்டையாடும் பார்வையாக இருந்தது…அவன் வேறு யாருமல்ல ராஜவேலு தான்.. பொதுவாக அவன் இருப்பது பாண்டிச்சேரில் தான்.  

அங்கே தான் அவனின் கோட்டை இருந்தது…சும்மாவே அங்கே சரக்கு  கடல் நீர் போல பரந்து விரிந்து இருக்கும்…அதில் இவனும் தினமும் நீச்சலடித்து கொண்டே இருப்பான்…கூடவே பெண்ணுங்க.  

அதனால் சென்னையில் உள்ள மயூரி பற்றி அவனுக்கு சரியாக தெரியாது…இன்று தான் முதல் முதலாக பார்க்கிறான் முதலில் அவள் சாதாரண நாட்டியகாரி என்று நினைத்தான்… 

வழமை போல பணத்தை நீட்டலாம்… இல்ல முரண்டு பிடித்தால் தூக்கி வரலாம் என நினைத்தான்.  

ஆனால் அவன் நினைத்து பார்க்காத விஷயம்…அவளின் பின்புலம் முதல்வரின் பேத்தி மேலே கை வைத்தால்…அடுத்த செக்கன் அவன் மரண படுகுழியில் குரு மூர்த்தி தள்ளி விடுவார்.  

அது மட்டுமா அவரின் பர்ஷனல் பாடி கார்ட் பவதீப்…எக்ஸ் மிலிட்டரி மேன் பதவி உயர்வை கூட துச்சமாக மதித்து…அரச ஆணையை ஏற்று பாடி கார்ட் வேலை பார்ப்பவன்.  

அவன் தான் அவரின் வலது கை என்று சொல்வார்கள்…அவன் கிட்ட மாட்டினால் மெஷினில் மாட்டிய கரும்பை போல சாறு பிழிந்து எடுத்து விடுவான்…. 

அதனால் ஜாக்கிரதையாக தான் மயூரி விஷயத்தில்… இறங்க வேணும் என்று நினைத்தான்.  

பூஜை முடிந்த பிறகு கலைஞர்கள் எல்லாம்…திரும்ப மேக்கப் தங்க உடைகளை சரி பார்க்க என்று…அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்து போக…மற்றவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு போனார்கள். 

 வலது பக்க முதல் வரிசையை தான் முதல்வர் குடும்பத்து என்று ஒதுக்கி இருந்தது…இடது பக்க வரிசையில் எதிர்கட்சி தலைவர் ,ராகவன் குடும்பம் இருந்தது… நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்க குரு மூர்த்தி வந்தார்.  

அவரின் பாதுகாப்பை எல்லாம் சரி பார்த்து கொண்டே பவதீப் வந்தான்…அவன் காதில் வயர்லெஸ் ப்ளூடூத் யில் வாக்கிங் டாக்கி…அது போல ராகுல் கையிலும் இருந்தது.  

குரு மூர்த்தியை தர்மகர்த்தா, கோவில் கமிட்டி மாலை மரியாதை செய்து வரவேற்றனர்…அவர் வர அனைவருமே எழுந்து நிற்க வந்தவர் ராகவனை பார்த்ததும்…அவன் தலையை குனிய.  

குரு மூர்த்தி “ பவன் ராகவனை மீனா அருகில் உட்கார வை…அவனை மட்டும் அழைத்து போ இவனை பார்க்க வேணும் என்று…ரொம்ப காலமாக அவள் காத்திருக்கிறாள்.  

ராகவா உனக்கு அவள் மேலே பாசம் இருந்தால்…நான் சொன்னதை செய் புரிந்ததா..? இன்னும் நீ என் பையன் தான் என் குடும்பம் இருக்கும்…இடத்தில் தான் நீ இருக்க வேணும் புரிகிறதா..? என அழுத்தமாக சொன்னார்.  

அவர் சொல்லி விட்டு தன் குடும்பம் இருக்கும் இடத்துக்கு போக…பவதீப்  

“ ராகவன் சார் பீளிஸ் வாங்க…” என்றான்…ராகவனுக்கு குரு மூர்த்தி மேலே பயம் கலந்த மரியாதை இருக்கு…கூடவே அவனுக்கு மீனா அருகில் உட்கார வேணும் என்ற…ஆசையும் இருந்தது.  

சொந்த பெரியப்பாவை விட மீனா மேலே தான் அவனுக்கு பாசம் அதிகம்…மீனா எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காது தானே அவன் மேலே அன்பு வைத்தவர் ஆயிற்றே … 

மீனாவை வைத்து தான் ராகவன்.. சியாமளாவை பெண்ணு கேட்க சொல்லி குரு மூர்த்தியிடம் சொன்னான்.  

மீனா நச்சரிப்பு தாங்காது குரு மூர்த்தி சக்ரபாணியிடம் பெண்ணு கேட்டது…ராகவன் கிளம்ப போக என்னங்க என மாலதி.. அவன் கையை பற்றியவள்.  

“ என்னங்க நீங்க அங்கே போக கூடாது…இது தான் உங்க குடும்பம் நானும் நம்ம பெண்ணும் இங்கே தானே இருக்கிறோம்… 

உங்களை வர சொல்ல அவர் யாரு.? உங்க பெரியப்பாவாக இருந்தால் என்ன நீங்க அவர் அடிமையா..? முடியாது என சொல்லுங்க… 

ஏய்..! நீ அவர் பாடி கார்ட் தானே போய் சொல்லு… ராகவன் சாருக்கு அங்கே வர விருப்பம் இல்லை என்று…” சொன்னாள்.  

பவதீப் மாலதியை ஒரு பார்வை பார்த்து விட்டு பாண்டியிடம்… 

“ பாண்டி உங்க தங்கச்சிக்கு என்னை பற்றி சரியாக இன்னும் தெரியவில்லை…உங்களுக்கு என்னை பற்றி தெரியும் தானே..? எனக்கு பாஸ் முதல்வர் தான் உங்க தங்கச்சி இல்ல… 

இன்னும் ஒன் செக்கன் தான் டைம்…ராகவன் சார் கையை உங்க தங்கச்சி விடவில்லை என்றால்…அதற்க்கு பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பு இல்லை…” என்று அழுத்தமாக சொன்னான். 

மயில் ஆடி வரும்….
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page