குண்டடிபட்ட காயத்திலிருந்து இரத்தம் வெளியேறாமல் இருக்க, தன் சட்டையைக் கழற்றி அவளது வலது தோளில் இறுக்கிக் கட்டினான். “நதிமா வேக்கப்… கண்ணை முழிச்சு என்னைப் பாரு” என அவளைத் தூக்கிக் கொண்டவன், படிகளில் வேகமாக இறங்கினான்.
மூச்சை இழுத்து விட்டவள், மெல்ல விழித்து அவன் முகத்தை பார்த்தாள். “மிதுனா..” என்று அவள் முணுமுணுக்க, ரத்தம் படிந்த முகத்தோடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “நதிமா… லவ் யூ டா!” என்றான்.
“மிதுனா… வலிக்குது…” வலியில் அவளது முகம் சுருங்கிட, “கொஞ்சம் பொறுத்துக்கோ டா. சீக்கிரமா ஹாஸ்பிட்டலுக்குப் போயிடலாம்” என்றவனுக்கோ உயிர்வரை வலித்தது.
“மிது..னா நா..ன் உங்க..கிட்ட ஒண்..ணு சொல்..ல..ணும்” பேச முடியாமல் தடுமாறினாள். அவள் முகம் பார்த்தவன், “என்னடா?” என்க, “நீங்..க அப்பா..வாக போறீ..ங்க” மூச்சை இழுத்து அவள் சொல்லி முடித்ததும் அவனது கண்களில் கண்ணீர்.
அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அவன் கண்கள் கண்ணீரை மறந்திருக்க, இன்று அவளுக்காக அழுகிறான். “மிது..னா.. பிளீ..ஸ் நம்ம..குழந்..தை.. என்..னை காப்பா..த்துங்க” அவளது கண்கள் செருக, “நதிமா… என்னைப் பாரு… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நான் அப்பாவாகப் போறேன். நீ அம்மாவாகப் போறதானே?” அவன் பதறியபடி அவளை மெல்லக் குலுக்கினான்.
“ஆஆ.. ரொம்..ப வலி..க்குது” உதட்டைக் கடித்துக் கொண்டவள், “மிது..னா நா..ன் உங்க..கிட்ட இன்..னொரு விஷ..யம் சொல்ல..ணும்” அவள் மூச்சுத் திணறியபடி முணுமுணுத்தாள்.
“நதிமா.. அமைதியா இரு. நாம ஹாஸ்பிட்டல்ல போய் எதுனாலும் பேசிக்கலாம்”
“மிதுனா… உங்க..கிட்ட.. இப்..போ சொல்ல..லைனா சொல்..ல முடி..யாம போயிடு..மோன்னு பய..மா இருக்..கு”
“அப்படிலாம் பேசாத. என்னடா சொல்லணும்? சொல்லு…”
“ஐ லவ்.. யூ டா.. மிது..னா…” என்றவள் மூர்ச்சையாகித் தளர்ந்து விழ,
“நதிமா… வேணாண்டா. பிளீஸ் என்னை விட்டுப் போயிடாத. எனக்கு நீ வேணும்…” அவன் கதறியது அவள் காதுகளுக்கு எட்டவில்லை.
கீழே இறங்கியவன், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து முதன்மைச் சாலைக்கு வந்த பிறகுதான், ஓரிரு ஆட்கள் நடமாட்டமும் வாகனங்களும் தென்பட்டன. ஒரு காரை நிறுத்தியவன், அங்கிருந்தவர்களின் உதவியோடு அவளை மருத்துவனையில் அனுமதித்தான்.
அவசரச் சிகிச்சைப் பிரிவில் அவளுக்குச் சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, செவிலியர்கள் வற்புறுத்தி அவனது தலையில் நான்கு தையல்களைப் போட்டு, கைக் காயங்களுக்கு மருந்து போட்டு கட்டினர். ஆனால் அவன் சிந்தனையெல்லாம் உள்ளே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன்னவளைப் பற்றித்தான் இருந்தது.
அங்கிருக்கும் தொலைபேசியிலிருந்து தேவ்விற்கு அழைத்தவன், வேறெதுவும் சொல்லாமல் மருத்துவமனையின் பெயரை மட்டும் கூறி வரச் சொல்லியிருந்தான்.
**********************************************
மிதுனை அந்த மலை போன்ற ஆசாமி தூக்கிச் சென்றபின் அங்கே காத்திருந்தவர்கள், சிறிது நேரம் கழித்து கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவனது கைப்பேசியும், கொண்டு சென்ற ஆயுதங்களும் மட்டும் கிடைக்க அதிர்ச்சியில் இருந்தவர்கள், அவர்களைக் கண்டுபிடிக்க வழி தெரியாமல் திண்டாடினர்.
மிதுனுடைய தொழிலில் எதிரிகளுக்குப் பஞ்சமில்லை. ஒருவன் நேர்மையாகத் தொழில் செய்து முன்னேறினால், இங்கு யாருக்கும் பிடிப்பதில்லை. அவனைக்
கண்காணிக்கவும், அவனுக்கு பிரச்சனைகள் தரவும் பல எதிரிகள் காத்திருந்தனர். யாரைச் சந்தேகப்படுவது? யாரிடம் போய் விசாரிப்பது? என அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.
இங்கே மிதுனைத் தேடி அலைபவர்களுக்கு காவல்துறைப் பாதுகாப்பும், அங்கே வீட்டில் இருப்பவர்களுக்குக் கூடுதல் மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் துணையாகச் சூர்யா அங்கிருந்தான்.
**********************************************
தேவ்வும் மற்றவர்களும் மருத்துவமனைக்குச் சென்றதும் மிதுனைப் பார்த்து அணைத்துக்கொண்டனர். “நதியா எங்கடா?” அவர்கள் திகைப்புடன் கேட்க, “ஷோல்டர்ல கன் ஷாட், ஆபரேஷன் பண்ணிட்டு இருக்காங்க” திடமாய்ச் சொன்னவன் மனமோ உள்ளுக்குள் நொறுங்கிப்போயிருந்தது.
அவனைக் கண்டதும் மிதுனிற்கு ஒன்றுமில்லை என்று அவர்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி, நதியாவின் நிலையைக் கேட்டதும் மொத்தமாய் வடிந்துபோனது. “தேவ்… நீ போய் வீட்ல இரு. இப்போதைக்கு யாருக்கும் எதுவும் சொல்லாத. நாங்க ஷேஃப்(safe) அப்படின்னு மட்டும் சொல்லு” என்றவன் கோகுலிடம் நடந்த அத்தனையும் விவரித்து, கேஸை வழக்கம்போல் முடிக்கச் சொன்னான்.
தேவ் அங்கிருந்து சென்றதும், மிதுன் ஆதரவாய் நண்பனின் தோளில் சாய்ந்தபடி, “எனக்குப் பயமா இருக்குடா. என்னோட நதிமா எனக்கு வேணும்” என்க, “கமான் டா… நதியாவுக்கு ஒண்ணும் ஆகாது. ஷி வில் பீ ஆல்ரைட்” ஆறுதலாய்ப் பேசினான் அரவிந்த்.
நதியாவைப் பார்த்த முதல் நாளிலிருந்து அவள் செய்யும் குறும்புகளையும், கண்ணீரை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு அவளது சிரிப்புப் பேச்சுக்களையும் விஷ்ணு மட்டுமே அறிவான். இருவருக்குள்ளும் ஏதோவொரு பிணைப்பு, ஒரு நல்ல நண்பனாக, சகோதரனாக அவனிடம் பழகினாள். அவளை நினைத்து விஷ்ணு கலங்கிப் போயிருந்தான்.
பெங்களூருக்குச் சென்றிருந்த போது, “இவ்வளவு கஷ்டத்துல எப்படி நீ சிரிச்சுகிட்டே இருக்க?” நதியாவிடம் நீண்ட நாள் மனதில் இருப்பதை கேட்டிருந்தான் விஷ்ணு. “அது வந்து என்னோட அப்பா சொல்வாரு… கடவுள் நமக்கு கஷ்டம் தரும்போது, நாம சிரிச்சுக்கிட்டே இருந்தா அவரே கன்பியூஸ் ஆகிப் போயிடுவாராம்” சுட்டித்தனமாகப் பேசியவளைப் பார்த்து அன்று அவன் சிரித்திருந்தான்.
இன்று அதை நினைக்கையில் அவனுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கைகளை மார்புக்குக் கட்டி சுவரில் சாய்ந்திருந்தவன் கண்ணீரோடு இருக்க, மிதுனோடு நண்பர்களும் சேர்ந்து அவனைப் பார்த்ததும் அங்கிருந்து வெளியே நகர்ந்து சென்றான்.
நதியாவுடன் அவனுக்கு இருக்கும் நட்பு ஏனோ அவர்களிடத்தில் இல்லை. சம்பளம் தரும் முதலாளி அல்லவா?! அவனும் தன்னுடைய எல்லைகளைத் தாண்டி அவர்களிடம் பழகியதில்லை.
விஷ்ணுவே இவ்வளவு உடைந்து போயிருக்க, மிதுனின் மனநிலை எப்படி இருக்கும்?! ‘உனக்காக நான் இருக்கிறேன் என்று என்னால் சொல்லத்தான் முடியும். ஆனால் என்னுடைய நதிமா எனக்கு துன்பம் நேரும்போதெல்லாம் வந்து என்னைத் தாங்குகிறாள். எத்தனை வார்த்தைகளைச் சொன்னாலும் அவள் காதலின் செயலுக்கு ஈடாகுமா? என் காதலை அன்பைக் காட்ட எத்தனைச் சொத்துகளை எழுதி வைத்தாலும், அவளுடைய காதலுக்காக உயிரையும் தரத் துணிவாளா?’ வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டான்.
‘அழக்கூடாது… அவள் என்னிடம் வந்துவிடுவாள். நான் இனி வாழும் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் அவளுக்கானது. வாழும் வரை அவள் காதலிலேயே வாழ்ந்துவிட வேண்டும்’ தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தவன், ஆபரேஷன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்ததும், வேகமாக எழுந்து அவருக்கு அருகில் சென்றான்.
“அவங்க உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்ல. புல்லட்டை ரிமூவ் பண்ணிட்டோம். நிறைய பிளட் லாஸ் ஆகியிருக்கு. காயமும் ஆழமா இருக்கு. கையை அசைக்காமப் பார்த்துக்கோங்க. ஃபுல் ரெஸ்ட்லதான் இருக்கணும். இன்னும் ஹார்ட் ரேட் ஸ்டேபிள் ஆகல. ஈவ்னிங் வர அப்சர்வேஷன்ல இருக்கட்டும். கொஞ்ச நேரத்துல ஐசியூ க்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்க” என்றுவிட்டு அவர் செல்ல, “டாக்டர்… குழந்தை…” மிதுன் நினைவு வந்தவனாய்க் கேட்டதும்,
“குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. போத் ஆர் சேஃப். நீங்க பயப்படாதீங்க மிதுன், சரியாகிடுவாங்க. கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கோங்க” சிரிப்போடு அவர் சொல்லிச் சென்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இருக்கையில் அமர்ந்தான்.
“மித்து… என்னடா குழந்தை?” நண்பர்கள் கேட்டதும், “எஸ்… வீ ஆர் பிரெக்னன்ட். அவ அதைப் பத்திக் கூட யோசிக்காம ஷி சேவ்டு மீ அட் எனிடைம், அட் எனி காஸ்ட்” அவனது கண்ணீர் கரை தாண்டியது. “ஐ லவ் ஹெர்… பட் ஷி மீன் இட்” கைகளால் முகத்தை மூடியவன், அதற்கு மேலும் தாங்க முடியாமல் உடைந்து அழுதான்.
அவன் நண்பர்களோ அவனைத் தேற்றும் வழி தெரியாமல் பார்த்திருந்தனர். நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பிறகு நதியா கண் விழித்தவள், “மிதுனா… குழந்தை…” சோர்வாய் முனகினாள். அவள் கையைப் பற்றிக்கொண்டவன், “நதிமா… உனக்கும், குழந்தைக்கும் ஒண்ணும் இல்ல. லவ் யூ டா” என்றிட, மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
“உனக்கு ஓகேன்னா நம்ம குழந்தையைத் தேவ்வுக்குத் தரலாம். உனக்குப் பிடிக்கலைனா வேணாம்” மிதுன் அனுமதியாய்க் கேட்டதும்,
“குழந்தையும் நம்ம வீட்லதானே இருப்பான். நாமளும் பார்த்துக்கலாம். உங்களுக்காக நான் எது வேணும்னாலும் பண்ணுவேன்” என்று அவள் சொல்ல, அவளது காதலில் மெய்சிலிர்த்துப் போனான்.
“உனக்குப் பையன்தான் வேணுமா?”
அவள், “ஆமா… என் மிதுனா மாதிரியே அழகான பையன் வேணும்” என்றதும் இதழ் விரித்தான்.
“நான் உங்களுக்காக விரதம்லாம் இருந்து கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டதுனால தான் எந்த ஆபத்தும் இல்லாம உங்களைக் காப்பாத்த முடிஞ்சது. நீங்க எனக்காக விரதமிருந்து வேண்டிக்கிட்டிருந்தா எனக்கும் இப்படி ஆகாம இருந்திருக்கும்ல” அவள் விளையாட்டாகப் பேசியதும் சத்தமாகச் சிரித்தான்.
“விஷ்ணுவும் மிதுன் நண்பர்களும் அங்கு வந்திட, உன்னோட பாசமலர் ரொம்ப அழுதுட்டார்” என்று மிதுன் கிண்டலாகச் சிரித்தான். “யாரு நானா… ‘ஒன் ஊட்டுக்காரர் தான் எனக்கு நதிமா வேணும்’னு” சின்னக்குழந்தை மாதிரி அழுதுட்டு இருந்தார்” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பாகச் சொன்னான்.
“விச்சு… அங்க என்ன?” மிதுன் அவனை முறைக்க, “ஒண்ணுமில்லையே” வழக்கம்போல் பல்லைக் காட்டினான்.
மிதுன் வீட்டில் இருந்து எல்லோரும் வந்திருந்தனர். வைஷாலி நதியாவின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தாள். மிதுனைவிடக் கொஞ்சம் அதிகமாகவே அழுதிருந்தாள்.
“வைஷு குட்டி… நீ அத்தை ஆகிட்ட தெரியுமா?” அவள் மனதை மாற்ற மிதுன் சொன்னதும், “நிஜமா அண்ணி… சூப்பர்! அப்போ என்கூட விளையாட ஒரு ஆள் வரப்போகுது” குழந்தையாய்ச் சிரித்தாள் வைஷு. விஷயத்தைக் கேள்விப்பட்ட பெரியவர்களுக்கும் பெரும் மனநிறைவு. நதியாவைத் தன்னைவிட அவள் கணவனும், அவன் வீட்டாரும் அன்பாகப் பார்த்துக்கொள்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அங்கே வருத்தப்பட்ட ஒரே ஆள் ரூபிணிதான்.
மிதுன் எல்லோரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பியவன், நதியாவோடு அவன் மட்டுமே இருந்து அவளுக்குத் தேவையானதெல்லாம் செய்து அவளைக் கவனித்துக்கொண்டான்.
வலியில் அவள் முனகும் போதெல்லாம் அவனும் துடிதுடித்தான். இருந்தாலும், அவள் முன்பு அதை வெளிக்காட்டாமல் அவளைத் தேற்றினான்.
மிதுனின் அன்பிலும், காதலிலும் திளைத்திருந்தவள் சீக்கிரமாகவே குணமடைந்தாள். சில நாட்கள் கழித்து… இரவு… மருத்துவமனை அறையில்…
அவளை மார்பில் சாய்த்து மென்மையாக அணைத்தவாறு படுத்திருந்தவன், அவள் தலையை வருடினான்.
“நதிமா… தேங்க்ஸ்!”
“எதுக்கு தேங்க்ஸ்? உங்களைக் காப்பாத்தினதுக்காகவா? இல்ல உங்களை அப்பா ஆக்கினதுக்காகவா?”
“என்னோட வாழ்க்கையில நீ வந்ததுக்காக தேங்க்ஸ்… தேங்க் யூ சோ மச்!”
“நீங்க என் பக்கத்துல இல்லாதப்போ தான், உங்க காதல் இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு புரிஞ்சுகிட்டேன். இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க. சாரி… நான் உங்களைக் கஷ்டப்படுத்திட்டேனா” அவள் கண்கலங்கியதும்,
“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன்கூடத்தான் இருப்பேன். எனக்கு என்னோட நதிமாவும், அவளோட காதலும் என் வாழ்க்கை முழுக்க வேணும்.
“என்னைக் கட்டியிழுத்திடும் வித்தை… எனக்காக அவளை எல்லாம் செய்ய வைத்திடும் விந்தை!! என் நதியோட காதல்!!! லவ் யூ டா நதிமா!” என அவன் பேசிய காதல்மொழியில் மெய்சிலிர்த்தாள்.
“லவ் யூ டா மிதுனா!” நதியா தெற்றுப்பல்லைக் காட்டிச் சிரித்ததும், அவள் கீழுதட்டைப் பிடித்து இழுத்தவன், “இந்த லிப்ஸ்ல ஏதோ சம்திங் இருக்கு. இட்ஸ் அமேஸிங். எவ்வளவு டிரை பண்ணாலும் அதைக் கண்டுபிடிக்கவே முடியல” என்றவன் அந்த இதழை ஆக்கிரமித்துத் தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடங்கினான்.
அவர்களின் மகிழ்ச்சியில் காலம் உறைந்துபோயிருந்ததைப் போல, அவள் இதழோடு அவன் இதழ் ஒன்றிப்போயிருந்தது.
❤️🔥❤️🔥❤️🔥 மோகம் தீர்த்தவள் மிதுனின் காதல் நதியாகிப் போனாள் ❤️🔥❤️🔥❤️🔥
