5.. மௌனத்தின் கடைசி எல்லை..
போன பகுதியில் :அதைக் கேட்ட அனைவருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயக்கமாக நாதன் சுதா இருவரும் சத்யா மீராவை பார்த்தனர் இவன் சொல்லியதை கேட்டு அவர்களுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தனர்.
இனி..
“ ஓகே மா நான் கிளம்புறேன்.” சொன்ன மித்ரன்..
அங்கு இருந்து எழுந்து செல்ல அதை பார்த்த மீரா.
“ மித்து என்ன போய் கிட்டே இருக்க.” கேட்டார் மீரா.
“ சூட் இருக்குன்னு சொன்னனே ம்மா.. போறான்னு கேட்டா என்ன அர்த்தம்..” என்றான் மித்ரன்.
“ டேய் கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட ஆகல இப்படி ஷூட்க்கு போகிறேன்னு சொல்லுற உன் மனசுல என்ன தான் நெனச்சிட்டு இருக்க.” கேட்டார் கோபமாக மீரா…
“ கல்யாணம் முடியற வரைக்கும் ஷூட்டிங் போக கூடாதுன்னு சொன்னீங்க நான் அதுக்கு ஓகே சொன்னேன் இல்ல கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமும் ஷூட் போக கூடாதுன்னா என்ன.. இன்னைக்கு இருக்கிறது முக்கியமான ஷூட் அதுக்கு எப்படி போகாம இருக்க முடியும்.. அது தான் உங்க மருமகள் கூட சொன்னா இல்ல இந்த ஷூட் முக்கியம்னு அது உங்களுக்கு புரியலையா.” என்றான் சற்று கோபமாக மித்ரன்…
இவனின் கோபமான பேச்சு நாதன் சுதா யூதி என்று அனைவரும் முகமும் மாறியது அதை பார்த்த மீரா உடனே அவனை அங்கு இருந்து அழைத்து சற்று தூரம் சென்றவர்..
“ ஓகே டா நான் சொன்னேன் தான் இல்லன்னு சொல்லல அதுக்குன்னு தாலி கட்டுன கையோட வா சம்பிரதாயம் இருக்கு இல்ல கல்யாணம் தான் இப்போதைக்கு யாருக்கும் தெரிய கூடாதுன்னு சொல்லிட்ட ஆனா சம்பிரதாயேன்னு ஒன்னு இருக்கு இல்ல..” கேட்டார் மீரா..
“ இப்போ நான் என்ன பண்ணனும் நினைக்கிறீங்க மா.” என்றான் மிகுந்த கோபத்துடன் மித்ரன்.
“ அடுத்தடுத்து நடக்க வேண்டிய சம்பிரதாயம் எல்லாம் நிறைய இருக்கு அதெல்லாம் நடக்க வேண்டும் இது மட்டும் இல்ல நீ இன்னைக்கு நைட் யூதி வீட்ல தான் ஸ்டே பண்ணனும்.” சொன்னார் மிரா..
“ ம்மா இது இம்பாசிபிள்.” சொன்னான் மித்ரன்.
“ எல்லாம் பாசிப்பில் தான் உன்னால ஷூட்டிங் ஷெட்யூல் மாற்ற முடியும்னு.. எனக்கு நல்லாவே தெரியும் அதனால நான் சொல்றத மட்டும் செய். எனக்கு தெரியும் மித்து நான் சொன்னதுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிட்டேன்னு.. அதுக்குன்னு நீ இப்படி பண்றது ரொம்ப தப்பு டா யூதி ரொம்ப நல்ல பொண்ணு அது உனக்குமே நல்லா தெரியும் அங்க பாரு அவ முகம் எப்படி வாடி போய் இருக்குன்னு அவளையும் கொஞ்சம் நினைச்சு பாருடா ” என்றார் மிரா.
“ மாம் என்னால ஷெட்யூல் மாத்தி போட முடியும் இல்லன்னு நான் சொல்லல ஆனா இதுதான் இந்த மூவியோட கடைசி ஷூட்டிங்.” சொன்னான் மித்ரன்.
“ மறுபடியும் மறுபடியும் இதே சொல்லாத.. ஒழுங்கா ஷெடியூல் கேன்சல் பண்ணு டூ த்ரீ டிஸ்க் அப்பறம் நீ ஷுட் போ அதுவரைக்கும் நீ யூதி வீட்ல தான் இருக்கணும்.” கட்டளையாக சொன்னார் மீரா..
“ மாம் ஷுட்டிங் கூட தள்ளி போட சொல்றீங்க ஓகே நான் முடிஞ்சத ட்ரை பண்றேன்.. பட் என்னால ஸ்டே பண்ண முடியாது.. உங்களுக்கு நல்லா தெரியும் என்ன ரிப்போர்ட்டஸ் எல்லாம் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க எப்போ என்ன பத்தி நியூஸ் வரும்னு அவள காத்துகிட்டு இருக்காங்க இப்போ நான் அங்க போய் இந்த விஷயம் வெளிய வந்தா எங்க கல்யாணம் சீக்ரெட்டா இருக்காது உடனே ஓபன் பண்ற மாதிரி ஆயிடும் அதனால இந்த விஷயத்துக்கு நான் ஒத்துக்குறேன் மாட்டேன்.. இங்கேயும் அதே பிராப்ளம் இருக்கிறதனால தான் நான் தனியா இருக்கேன் அப்படி இருக்கும் போது நான் எப்படி அங்கே போக முடியும் என்னால் முடியாது நீங்க எதுவும் பண்றதா இருந்தாலும் என்னோட வீட்டிலேயே பண்ணிடுங்க.. ஷூட்டிங் ஒன் ஹவர் தான் நான் அத முடிச்சிட்டு ஸ்ட்ரைட்டா அங்க வரேன்..” சொன்னான் மித்ரன்.
இவன் இவ்ளோ பிடிவாதமாக சொல்லும் பொழுது தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவருக்கு இவனின் சைடு இருக்கும் பிரச்சனையும் புரிந்தது ஒரு பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டு இதற்கு மேல் எதுவும் பண்ண முடியாது என்று நன்கு புரிந்து.
“ சரி உன்னால ஷூட்டிங்கும் தள்ளி போட முடியாது எங்களால இந்த சம்பிரதாயத்தையும் பண்ணாம இருக்க முடியாது.. நீ ஆப்டர்நூன் மேல ஷூட்டிங் போ.. கொஞ்ச நேரத்துல யூதி வீட்டுக்கு போயிட்டு அங்க சில சம்பிரதாயம் இருக்கு அத பண்ணிட்டு நீ அங்க இருந்து கிளம்பி போயிடு அதுக்கப்புறம் நான் பாத்துக்குறேன்.” சொன்னார் மிரா.
“ ஓகே.” சொன்னவன்.
உடனே தன் பிஏ வை அழைத்து..
“ கேது ஷூட்டிங் ஆப்டர்நூன் த்ரீ ஓ கிளாக் மாத்திக்க சொல்லுங்க.. நான் ஸ்ட்ரைட்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தரேன்னு சொல்லி இன்பார்ம் பண்ணிடு.” சொன்னான் மித்ரன்.
“ ஓகே சார்.” சொன்னான் கேதன்..
இதைக் கேட்ட பின்பு தான் மீராக்கு மூச்சு வந்தது..
“ சரி நீ கொஞ்ச நேரம் கழிச்சு வா நான் போய் இந்த விஷயத்தை சொல்றேன்.” சொன்ன மீரா..
சற்று தயக்கத்துடனே வந்து அமர்ந்தார் இவரின் முகம் ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்ட சத்யா..
“ என்ன மீரா என்ன சொன்னான்.” கேட்டார் சத்யா.
“ யுதி சொன்ன மாதிரி இன்னிக்கு இருக்கிறது முக்கியமான ஷூட்டிங் தானா அதை மாற்ற முடியாதா ஆனா டைமிங் மட்டும் சேஞ்ச் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கான் ஆப்டர்நூன் ஷூட்டிங் அப்புறம் அண்ணா சுதா நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்பர் உங்க வீட்டுக்கு கிளம்பலாம் அங்கு இருக்கிற சம்பிரதாயங்கள் எல்லாம் முடிச்சிட்டு மித்ரன் ஷூட்டிங் கிளம்பிடுவான்.. ஷூட்டிங் முடிச்சிட்டு அவன் இருக்கிற வீட்டுக்கு ஸ்ட்ரெயிட்டா வந்தரேன்னு சொல்லிட்டான்.” சொன்னார் மீரா தவக்கத்துடனே..
நாதன் சுதா இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஆனால் இதை கேட்டு சத்யாவுக்கு தான் கோபம் வர..
“ மீரா என்ன பேசுற எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா ரெண்டு மூணு நாள் அவன் அங்க இருந்து தான ஆகணும் அதுதானே முறை.” கோபப்பட்டார் சத்யா.
“ இல்லைங்க நைட் அவனால அங்க ஸ்டே பண்ண முடியாதா..” சொன்னார் மீரா..
“ அதான் ஏன் முடியாது.” மிகுந்த கோபத்துடன் கேட்டார் சத்யா..
“ இங்க பாருங்க எதுக்கு இவ்வளவு கோவப்படுறீங்க முழுசா பேச விடுங்க பேசிட்டே இருக்கும்போது நடுவுல கேள்வி கேட்டீங்க சார் உங்களுக்கு பதில் சொன்னா இப்படி கோவப்படுறீங்க.” இவரும் சற்று கோபமாக கேட்டார் மீரா.
“ கோவப்படாம என்ன பண்ண சொல்ற அவன் இஷ்டத்துக்கு பண்ணுவான் அதை எதுவுமே கேட்க கூடாதுன்னு சொல்றியா.” சத்யா.
“ கொஞ்ச நா சொல்றத பொறுமையா கேளுங்க.. ஆல்ரெடி சொன்னான் இப்போதைக்கு இந்த கல்யாண வெளியே தெரியக்கூடாதுன்னு அது மட்டும் இல்ல மித்ரன் எதுக்கு தனியா போனா நீங்களும் பிசினஸ்ல நல்ல பொசிஷன்ல இருக்கீங்க அவனும் அவனோட careerல நல்ல இடத்துல இருக்கா. அதுவும் இல்லாம யூதி மித்ரன் ரெண்டு பேருமே ஒரே பீல்டுல இருக்காங்க எப்படி அதனால் இவங்க ரிப்போர்ட்டர்ஸ் ஃபாலோ பண்ணிட்டு இருப்பாங்க ரெண்டு பேருமே ஒரே இடத்துல இருந்தா gossip வர நிறைய சான்ஸ் இருக்கு அதனால இவங்க ரெண்டு பேரும் தனியா இருக்கிறது தான் நல்லது என்று ஃபீல் பண்றான். அதுவுமில்லாம ரெண்டு பேருக்கும் மாத்தி மாத்தி ஷூட்டிங் இருக்கும் இங்க இருந்தா நம்ம எல்லாருமே இருப்போம் இவங்களுக்கு என்ன டைம் கிடைக்காது இல்ல தனியா இருந்தா ரெண்டு பேரும் அவங்களுக்குன்னு கொஞ்சம் டைம் ஒதுக்கி ஸ்பென்ட் பண்ணுவாங்க இல்லையா.” சத்யாவிடம் சொல்ல தொடங்கியவர் சுதாவை பார்த்து முடித்தார் மீரா..
இதைக் கேட்கும் பொழுது அனைவருக்கும் சரி என்று பட்டாலும் பெண்ணை பெற்றவர்களுக்கு கொஞ்சம் கவலையாக தான் இருந்தது இருந்தாலும் அதை எதையும் வெளி காட்டிக் கொள்ளாத சுதா புன்னகையை மிகவும் சிரமப்பட்டு கொண்டு வந்தவர்.
“ மாப்பிள்ளை சொல்றதும் சரிதானே அதனால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” சொன்னார் சுதா..
“ நீங்க எப்பவும் போல மித்ரன்னு கூப்பிடுங்க என்னை மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்..” சொல்லியபடி வந்து அமர்ந்தான் மித்ரன்..
இவனைப் பார்த்தவுடன் சத்யாவுக்கு கோபம் தான் வந்தது ஆனாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் சத்யா அமர்ந்திருக்க..
“ அப்படி இல்ல மாப்பிள இதுவரைக்கும் என் பாட்டனோட பையனா இருந்தீங்க இப்போ என் பொண்ணுக்கு வீட்டுக்காரர் அப்படி இருக்கும்போது உங்களுக்கான மரியாதையை நாங்க கொடுக்கணும் இல்லையா..” சொன்னார் நாதன்..
“ இவ்ளோ ஃபார்மினாட்டிஸ் பார்க்கணுமா.” என்றான் மித்ரன்.
“ கண்டிப்பா எங்க வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை அப்படி இருக்கும் போது உங்களுக்கான மரியாதையை நாங்க கொடுத்து தான் ஆகணும் மாப்பிள்ளை.” சொன்னார் நாதன்.
“ சொன்னா கேக்க கேட்க மாட்டீங்க..” சொன்னான் மித்ரன்.
“ இன்னொரு நாள் கூட நம்ம பொறுமையா உட்கார்ந்து பேசிக்கலாம் இப்போ ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கு நம்ம கிளம்பலாமா.” கேட்டார் மீரா.
“ ஏற்கனவே டைம் ஆயிடுச்சு கிளம்பலாம்.” சொன்னாரா நாதன்.
அதன் பின் அனைவரும் அங்கிருந்து கிளம்பி யூதிக்காவின் வீட்டிற்கு வந்தார்கள் யூதிகாவின் வீட்டிற்கு வந்ததும் இங்கு சில சம்பிரதாயங்கள் நடந்து முடிய அது மதியம் பொழுது ஆனது மதிய உணவை அனைவரும் சாப்பிட்டுவிட்டு அமர அதுவே மணி இரண்டானது..
“ ஓகே மா எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்.. ஆல் கைஸ் பாய்.” சொன்ன மித்ரன்..
அவர்களின் பதிலை கூட கேட்காமல் அங்கு இருந்து கிளம்பினான்
இவன் கிளம்புவதை பார்த்த சத்யாவுக்கு மிகவும் கோபமாக வந்தது ஆனால் தான் கோபத்தை தனக்குள்ளவே அடக்கி வைத்தவர் அவன் சென்றதும் தன் மனைவியை தனியாக அழைத்து சென்று..
“ மீரா அவன் பண்றது சரி இல்ல கல்யாணம் ஆனா அன்னைக்கு அந்த பொண்ணு இப்படி தனியா விட்டுட்டு போறேன் உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்கான் ஷூட்டிங் மட்டும் சொல்லாத அவன் நெனச்சா எப்ப வேணா ஷூட்டிங் போலாம் யார்கிட்ட அவன் கதை கொடுக்கிறான்.” மிகுந்த கோபத்துடன் சத்யா..
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
