“என்னது ரித்விக்கை நீ கடத்தலையா?” என தாரணி திரும்பவும் கேட்க
“இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு தீரன் கூட நிச்சயதார்த்தம், நான் எதுக்கு உன்னோட பையன கடத்த போறேன்?” என சொல்லிவிட்டு போனை வேகமாக கட் பண்ணினால் அர்ச்சனா..
அர்ச்சனாவுடன் பேசிவிட்டு போன் துண்டித்த போதும் தாரணியின் மனம் அமைதியாகவில்லை.“ரித்விக் என்கிட்ட இல்ல…” என்று அர்ச்சனா சொன்னாலும் அந்த வார்த்தையை அவள் நம்ப முடியவில்லை.
அந்த பெண்ணின் கண்களில் இருந்த பொறாமையும் கோபமும் தாரணிக்கு நன்றாக தெரியும்.“இது அவள் வேலைதான்…” என்று அவள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றியது.
நிஷா அருகில் நின்றபடி“என்ன சொன்னாள் அவள்…?”என கேட்க
தாரணி கண்ணீருடன் “தன்னிடம் குழந்தை இல்லன்னு சொல்றா… ஆனா எனக்கு நம்பிக்கை வரல நிஷா…”என் சொல்ல
அவள் சில நொடிகள் யோசித்து பிறகு திடீரென்று ஒரு முடிவு எடுத்தாள்.
“நான் தீரனுக்கு போன் பண்ணணும்…”என சொல்லவும்
நிஷா அதிர்ச்சியாக “தீரனுக்கா…?”
“ஆமா… ரித்விக் எங்க இருக்கானு அவனுக்கும் தெரியும்.அவன் நினைச்ச எனக்கு உதவி செய்யலாம்…”என சொல்லியபடி தாரணி கை நடுங்கிக்கொண்டே தீரனின் எண்ணை அழைத்தாள்.
அந்த நேரத்தில் தீரன் தனது அலுவலக அறையில் தனியாக இருந்தான்.
அவன் மனமும் அமைதியாக இல்லை. அவன் இந்த நிச்சயதார்த்தத்தை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளவில்லை ஆனாலும் ஏற்றுக் கொண்டான். அதைப்பற்றி ஏதோ சிந்தித்துக் கொண்டே இருந்தான்..அந்த நேரத்தில் அவன் மொபைல் ஒலித்தது.திரையில் தோன்றிய பெயர்…தாரணி.
அவன் சில நொடிகள் திரையை பார்த்துக்கொண்டே இருந்தான்.
பிறகு மெதுவாக அழைப்பை எடுத்து
“ஹலோ…” என சொல்ல
அந்த குரல் கேட்டவுடன் தாரணி உடைந்து போனாள்.“தீரன்…”
அவள் குரல் முழுக்க கண்ணீர்.
“என் ரித்விக்… அவன் காணாம போயிட்டான்…”அந்த வார்த்தை கேட்டதும் தீரன் அதிர்ந்தான்.
“என்ன சொல்றே தாரணி…?”
தாரணி அழுதபடி “யாரோ அவனை கடத்திட்டாங்க… எனக்கு பயமாக இருக்குது…”என சொல்லவும்
தீரன் குரல் கடினமாக“நீ போலீஸ்க்கு சொல்லியாச்சா…?”என கேட்டான்..
“இல்ல… யாரோ மிரட்டினாங்க… சொல்லக்கூடாதாம்…”
அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“நீ கவலைப்படாதே,நான் பார்த்துக்கறேன்…” என்று உறுதியுடன் சொன்னான்.
அந்த வார்த்தை தாரணிக்கு சிறிது நம்பிக்கை கொடுத்தது.அழைப்பு முடிந்தது.ஆனால்…
அந்த அழைப்பை யாரோ ஒருவர் ஏற்கனவே அறிந்திருந்தாள்.அர்ச்சனா.
தாரணியின் அழைப்புக்குப் பிறகு சில நிமிடங்களில் தீரன் மொபைல் மீண்டும் ஒலித்தது.இந்த முறை அழைப்பது அர்ச்சனா.“ஹலோ தீரன்…” என்று அவள் மெதுவாக பேசினாள்.
“இப்போ தாரணி உன்னிடம் பேசினாளா…?”என கேட்க தீரன் சற்றே அதிர்ந்தான்.
“ஆமா… அவள் குழந்தை காணாம போயிருக்கு என்று சொன்னா…”என சொல்ல
அர்ச்சனா ஒரு நொடி அமைதியாக இருந்தாள்.பிறகு மெதுவாக சொன்னாள்.அது அவள் பிரச்சனை தீரன்…அவளோட வாழ்க்கை எப்போதுமே பிரச்சனைகளால தான் நிரம்பி இருக்கும்…” என சொல்ல
அதுக்காக இதை அப்படியே விட முடியுமா என தீரன் கேட்கவும்
ஆனா இந்த விஷயத்தை நீ ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டாம் தீரன்… என சொல்ல
தீரன் சற்று கோபமாக “என்ன அர்த்தம்…? ஒரு குழந்தை காணாம போயிருக்கே…” என அவன் சொல்லவும்
அர்ச்சனா மெதுவாக சிரித்தபடி,”நான் சொல்ல வர்றது வேற…இந்த சம்பவம் இப்போ உன் வாழ்க்கையையும் பாதிக்க ஆரம்பிச்சிருக்கு…யார் குழந்தையோ காணும்னா உனக்கு எதுக்கு இவ்வளவு பதறுது” என அவள் சொன்னாள்
அவன் அமைதியாக இருக்க,அர்ச்சனா மெதுவாக வார்த்தைகளை வீச
“நீ இன்னும் தாரணியை பற்றி யோசிக்கிறதால தான் இப்படி எல்லாம் நடக்குது…அவளும் அவளோட பிரச்சனைகளும் உன் வாழ்க்கையில் இருந்தா… நமக்கு அமைதி கிடைக்காது தீரன்…” என்றுஅவள் இப்போது நேராக சொன்னாள்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு நீ ஒரு முடிவு எடுக்கணும்,
“உன் வாழ்க்கையில் யாரு முக்கியம்…”
“நானா… இல்ல தாரணியா…” என்று கேட்க
அந்த வார்த்தை தீரனை அமைதியாக்கியது.ஆனால் அர்ச்சனா மனதில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இந்த குழந்தை கடத்தல் சம்பவம் அவள் வேலை இல்லை.ஆனால்…
அதை அவள் தன் பயனுக்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.
இந்த பிரச்சனை முடியும் முன்னாடியே,தீரன் என்னை கல்யாணம் பண்ணணும்… என்று அவள் மனதில் முடிவு செய்தாள்.அவள் கண்களில் ஒரு சதி மின்னியது.
அதே நேரத்தில் ஒரு இருண்ட அறையில்
சிறிய நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் ரித்விக்.அவன் அருகில் நின்று கொண்டிருந்த பெண் மெதுவாக அவனை பார்த்தாள்.
“இப்போ தான் விளையாட்டு ஆரம்பம்…” என்று அவள் மெதுவாக சிரித்தாள்.
அவள்…
அந்த இரவு நகரம் முழுவதும் அமைதியாக இருந்தாலும் ஒரு சிறிய குழந்தையின் மனம் மட்டும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.ஒரு பழைய வீட்டு உள்ளே இருந்த சிறிய அறை. ஜன்னல் சற்றே மூடப்பட்டிருந்தது. மங்கலான விளக்கு ஒளி மட்டும் அந்த அறையில் விழுந்து கொண்டிருந்தது.
அங்கே ஒரு சிறிய படுக்கையின் மூலையில் சுருண்டு உட்கார்ந்து இருந்தான் ரித்விக்.அவனுடைய கண்கள் கண்ணீரால் சிவந்திருந்தது. சிறிய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.
“அம்மா… அம்மா…” என்று அவன் மெதுவாக அழைத்தான்.
ஆனால் அந்த குரலை கேட்க யாரும் அருகில் இல்லை.
தாரணி அவனை தினமும் தழுவிக் கொண்டு தூங்க வைத்த அந்த பழக்கம் அவன் மனதில் இன்னும் இருந்தது. இப்போது அந்த அன்பு இல்லாததால் அவன் பயத்தில் குலுங்கிக் கொண்டிருந்தான்.
“எனக்கு அம்மாவிடம் போணும்…” என்று அவன் அழுதான்.அவனுடைய கண்ணீர் சிறிய கன்னங்களில் வழிந்தது.
அந்த நேரத்தில் கதவு மெதுவாக திறந்தது.அங்கே நின்று கொண்டிருந்தாள் அந்த பெண் பெயர்
மாளவி.அவள் சில நொடிகள் அமைதியாக அந்த குழந்தையை பார்த்தாள்.ரித்விக் அவளை பார்த்ததும் இன்னும் பயந்து போனான்.
“அம்மா எங்கே…?” என்று அவன் கண்ணீர் மல்க கேட்டான்.
மாளவி மெதுவாக அவன் அருகில் வந்தாள்.அவள் கண்களில் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது… அது கோபமா… வேதனையா… யாருக்கும் புரியாத ஒன்று. அவள் மெதுவாக சொன்னாள்.
“அழாதே…நான் இருக்கேன்…”
ஆனால் ரித்விக் தலையசைத்தான்.
“எனக்கு என் அம்மா வேணும்…” என்று அவன் அழுதான்.
அந்த வார்த்தை மாளவியின் முகத்தை ஒரு நொடி மாற்றியது.அவள் மெதுவாக அவன் முகத்தை பார்த்தாள்.
“அம்மாவா…?”அவள் சிரித்தாள்.
“உனக்கு தெரியுமா… உன் உண்மையான அம்மா யார்…?”
அந்த குழந்தைக்கு எதுவும் புரியவில்லை.
அவன் இன்னும் அழுதுக்கொண்டே இருந்தான்.“அம்மா… அம்மா…” என்று அழைத்தான்.அந்த குரல் அந்த அறையில் எதிரொலித்தது.
மாளவி சில நொடிகள் அமைதியாக நின்றாள்.பிறகு மெதுவாக அவன் தலையை தடவினாள்.அழாதே…
“நாளைக்கு நீ உன் அம்மாவை பார்க்கப் போறே…” என்று அவள் மெதுவாக சொன்னாள்.ஆனால் அவள் மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
நாளைக்கு தான் எல்லாருக்கும் உண்மை தெரியும்…இந்த குழந்தை யாருடையது என்று…
அந்த நேரத்தில் ரித்விக் மெதுவாக அழுதபடியே சோர்ந்து படுத்துக் கொண்டான்.அவன் கண்கள் மெதுவாக மூட ஆரம்பித்தது.ஆனால் அவன் வாயில் இன்னும் ஒரு வார்த்தை மட்டும் வந்தது.
“அம்மா…”அந்த குரல் இருண்ட அறையில் மெல்ல மறைந்தது.
மாளவி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்..
அப்படியே நாட்கள் சென்றது..
ரித்விக் காணாமல் போனது இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.அந்த இரண்டு நாட்கள் தாரணிக்கு இரண்டு வருடம் போல இருந்தது.வீட்டின் ஒரு மூலையில் அவள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். கண்கள் வீங்கியிருந்தது. கண்ணீர் வற்றிப் போயிருந்தாலும் மனம் இன்னும் அழுதுகொண்டே இருந்தது.
“என் பையன் இப்போ எங்க இருக்கான்… சாப்பிட்டானா… தூங்கினானா…” என்று எண்ணிக்கொண்டே அவள் சுவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிஷா அவளிடம் வந்து மெதுவாக
“தாரணி… கொஞ்சம் ஏதாவது சாப்பிடு…” என்று சொல்ல
ஆனால் தாரணி தலையசைத்தாள்.
“என் பையன் கிடைக்காமல் நான் எப்படி சாப்பிடுறது நிஷா…?” என சொல்லும் போதே அவள் குரல் உடைந்து போனது.
அந்த வீட்டில் அந்த இரண்டு நாட்களும் அமைதி மட்டுமே இருந்தது. ஒரு தாயின் மன வேதனை அந்த வீட்டை முழுவதும் நிரப்பி இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் நகரத்தின் மறுபக்கம் ஒரு பெரிய ஹோட்டலில் வேறு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.அது தீரன் – அர்ச்சனா நிச்சயதார்த்தம்.முழு ஹாலும் விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பெரிய தொழில் அதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.அர்ச்சனா அழகான பட்டுப்புடவையில் நின்று கொண்டிருந்தாள். முகத்தில் முழு புன்னகை.ஆனால் அந்த புன்னகை உண்மையானது இல்லை.அது… வெற்றி புன்னகை.
அவள் கண்கள் ஒரு நொடி தீரனை பார்த்தது.தீரன் மேடையில் அமைதியாக நின்று கொண்டிருந்தான். முகத்தில் ஒரு அமைதி.அவன் மனம் வேறு எங்கோ இருந்தது.தாரணி அழுத குரல் அவன் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.
“என் ரித்விக் காணாம போயிட்டான் தீரன்…”அந்த வார்த்தை அவன் மனதை இன்னும் கலக்கிக் கொண்டிருந்தது.
அர்ச்சனா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள்.“என்ன தீரன்… இவ்வளவு அமைதியா இருக்கே…?” என்று மெதுவாக கேட்டாள்.
தீரன் சற்றே தலையசைத்தான்.
“ஒன்னுமில்லை…”
அர்ச்சனா சிரித்தபடி,“இன்று நம்ம வாழ்க்கையில் முக்கியமான நாள்…”
“நீ சந்தோஷமாக இருக்கணும்…” என சொல்லும் போதே அவள் குரலில் ஒரு மறைமுக அழுத்தம் இருந்தது.
அதே நேரத்தில் மேடையில் நிச்சயதார்த்த மோதிரம் கொண்டு வந்தார்கள்.அனைவரும் கைத்தட்டினர்.
“மோதிரம் போடுங்க…” என்று ஒருவர் சொன்னார்.
அர்ச்சனா தனது கையை நீட்டினாள்.
தீரன் சில நொடிகள் அந்த மோதிரத்தை பார்த்தான்.அவன் மனதில் திடீரென்று தாரணி முகம் தோன்றியது.
அவள் கண்ணீர்…
அவள் பயம்…
அவள் குரல்…
ஆனால் அந்த தருணத்தில் அனைவரும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவன் மெதுவாக அர்ச்சனாவின் கையில் மோதிரத்தை போட்டான்.அனைவரும் கைத்தட்ட,
அர்ச்சனா சிரித்தாள்.
அவள் மனதில் ஒரு எண்ணம் மட்டும்.
“இனி தீரன் என்னுடையவன்.ஆனால்…
அந்த நேரத்தில் நகரத்தின் ஒரு பழைய வீட்டில் சிறிய அறையில் உட்கார்ந்து இருந்தான் ரித்விக்.அவன் கண்கள் இன்னும் அழுததால் சிவந்திருந்தது.
“அம்மா…” என்று அவன் மெதுவாக அழைத்தான்.அவனுக்கு தெரியவில்லை.அவனுடைய அம்மா அவனை தேடி கண்ணீர் விடுகிறாள்.
மறுபக்கம் அவனைப் பற்றியே யோசித்து கொண்டிருந்த ஒருவன்…
இப்போது நிச்சயதார்த்த மேடையில் நின்றிருக்கிறான்.
அந்த நேரத்தில் மாளவி கதவின் அருகில் நின்று அவனை பார்த்தாள்.
அவள் மெதுவாக சிரித்தாள்.
“இன்னும் கொஞ்சம் நேரம்,அதுக்கப்புறம் தான் எல்லாருக்கும் உண்மை தெரியும்…”என அவள் நினைக்கும் போதேஅவள் கண்களில் ஒரு பயங்கரமான தீர்மானம் இருந்தது.
விளையாட்டு இப்போ தான் ஆரம்பம்.
யார் அந்த மாளவி?
குழந்தையை கடத்தியது மாளவியா?
அப்போது இது அர்ச்சனாவின் திட்டம் இல்லையா?
தீரன் என்ன செய்யப் போகிறான்?
தாரணி தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறாள்???
