மௌனத்தால் உடைந்த காதல் -11

ஆதி சிறிது நேரம்  தன் தாய் ,தந்தையுடன் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்ப .

“டேய் நீயாவது கொஞ்சம் சாப்பிட்டு போடா” என்றார்  சித்ரா.

எதுவும் கூறாமல், அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டு  கிளம்பி இருந்தான்.

போகும்போதே, பழம், ஸ்வீட் என வாங்கிக்கொண்டு சென்றிருக்க.

” எதுக்கு மாப்ள நானே இங்க வீட்டுல என் கையால பசங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி  செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன் ” என்றார்.

” அது இருக்கட்டும் அத்தை .அதை வச்சு கூட சாப்பிடலாம்” என்றவன்  அவருக்கு பழம் வெட்டி கொடுத்தான்.

மாமியாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு , பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது கமலா தான்” என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை!” என்றார்.

“அத்தை என்ன ஆச்சு?”  என பதறினான் ஒன்றும் புரியாமல்,

“இல்ல மாப்ள நீங்க நம்ப  சுதாவை நல்லா தான் பாத்துக்கிறீங்க. இருந்தாலும், கொஞ்ச நாள் நீங்க பிரிஞ்சி இருந்ததுக்கு நான் தானே காரணம் .அதுவும் அன்னிக்கு ஏதோ ஒரு வேகத்துல அவளை கையோட கூட்டிட்டு வந்து இருந்தாலும், பொறுமையா, நிதானமா இருந்திருக்கணும். ஆனா ,நானும் நிதானத்துல  இல்லாம, அவளையும் கோர்ட் வாசப்படி வர இழுத்துட்டு போனது நான் தானே”  என்றார் வேதனையாக.

” அத்தை நீங்க எதுவும் தப்பு பண்ணலையே! ப்ளீஸ்! முடிஞ்சு போனத திரும்பத் திரும்ப பேச வேண்டான்னு யோசிக்கிறேன். ஒரு அம்மாவா உங்க பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு யோசிச்சது தப்பில்ல,ஆன கோர்ட்டு வரைக்கும் போனது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும், அன்னைக்கு அந்த இடத்துல அம்மா பேசும்போது அமைதியா இருந்தது என்னோட தப்பு தானே.

அதை நான் தான் சரி பண்ணனும். சரி பண்ணிடுவேன். இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்.அப்படி ஒன்னு நடக்கலனா நான் இப்ப வரைக்கும் இங்க  சுதாவை  கூட்டிட்டு வந்து இருக்க முடியாது இல்ல.அங்கவும் அவங்களை பேச விட்டு வேடிக்க பார்த்த மாறி தான இருக்கும்..இதுவும் நல்லதுக்கு தான் இனி இதை பேச வேணாம்.” என்றான் .

தாயும் ,கணவனும் பேசுவதை கேட்டாலும், இருவருக்கும் இடையில் வரவில்லை. அவளுக்கு அன்றைய நினைவு மனதில் வந்து வாட்டி வதைக்க  அமைதியாக இருந்தாள்.

” சரி மாப்ள. நீங்க பிள்ளைகளை பார்த்துட்டு இருங்க, நான் சுதா என்ன பன்றானு  பாக்குறேன் “என்றவர் கிச்சனுக்கு  வந்தார்.

“சந்தோஷமா இருக்கியாடி?” என்று மகளிடம் கேட்க.

” எனக்கு என்ன நல்லா தான் இருக்கேன்..”

” என்ன பார்த்து பேசு  சுதா!”

” ஏம்மா எனக்கு என்ன?  “

“நீ நல்லா தான் இருக்க. உன்ன மாப்பிள்ளை நல்லா தான் பார்த்து பாரு எனக்கும் தெரியும் டி. இருந்தாலும், அன்னைக்கு உன்னை நான் கூட்டிட்டு போய் இருக்க கூடாது தானே! அதையே யோசிச்சிட்டு இருக்காத சுதா, வாழ்க்கை இன்பம்,துன்பம் இரண்டும் கலந்து தானே”

” என்னால அதை மறக்க முடியல மா. நான் பழையபடி இருக்க நினைச்சாலும், ஏதோ ஒரு இடத்துல அவரோட மௌனம் என்ன பாதிக்குது. அன்னைக்கு அவர் அமைதியா இருந்தது.. அவங்க அம்மா பேசுறத கேட்டு அமைதியா இருக்கும்போது அப்ப இவரும் என்ன அப்படித்தான் நினைச்சாரோன்னு தோண வைக்குது. என் மூளைக்கு புரியுது அவர் என்ன அப்படி நினைக்கலனு. ஆனா என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது.

அவரோட அமைதி இப்போ வரை என்ன கொலையா கொல்லுது. பழையபடி நான் வரதுக்கு கொஞ்ச நாள் ஆகும். ஆனா, மத்தபடி நான் சந்தோஷமா தான் இருக்கேன். அவரும் என்ன சந்தோஷமா தான் பாத்துக்குறாரு. எந்த பிரச்சனையும் கிடையாது. இந்த வாழ்க்கையை நான் பிள்ளைகளுக்காக வாழல. எனக்காக தான் வாழ்றேன். அவருக்குமே தான் தேவை எனக்கும் தெரியும் .எனக்கும் அவர் தேவை .ஆனா, பழைய படி மாற எனக்கு கொஞ்ச நேரம் வேணும். விடுமா ..இதையே யோசிக்காத நீ பிள்ளைகளை பாரு ” என்றாள்..

“நீ சந்தோஷமா, குடும்பமா இருந்தா எனக்கு அதுவே போதும் டி” என பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு கிளம்பும்போது,” நானே கொண்டு வந்து விடுறேன் அத்தை.வாங்க” என்றவன் மனைவி இடமும் , குழந்தைகளிடமும் சொல்லிவிட்டு தன் மாமியாரை கொண்டு போய் விட.

வீட்டிற்கு சென்று இறங்கும் போதும், மன்னிப்பு வேண்டினார் மனம் கேட்காமல் கமலா.

“நீங்க இதையே யோசிக்க வேணாம். அன்னைக்கு உங்க பொண்ணுக்காக நீங்க யோசிச்சீங்க, அது எந்த வகையிலும் தப்பு கிடையாது. கஷ்டமா இருந்தாலும், நீங்க எந்த தப்பும் செய்யல “என்று அவரை சமாதானம் செய்துவிட்டு வந்திருந்தான்.

இரவு 8 மணிக்கு மேல் சித்ரா போன் செய்து இருந்தார். “இந்தாங்க டா உங்க தாத்தா ,பாட்டி போன் பண்றாங்க”. என்று   குழந்தைகளிடம் கொடுத்தான் .

அவர்களும் வீடியோ கால் என்பதால், அங்கு ஷோபாவில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். சுதா அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருக்க..

வேகமாக அவளை பிடித்து இழுத்து, தன் மடியில் உட்கார வைத்தான்..

” என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”  என நெளிந்தாள்.

” என்ன பண்ற? ஒன்னும் பண்ணலையே !”

” பசங்க இருக்காங்க!” என்றாள்.

” இருக்கட்டும் டி.அவங்க போன் பேசுறாங்க டிஸ்ட்ரப் பண்ண மாட்டாங்க..”

“இன்னைக்கு ஏன் இந்த மாதிரி பிகேவ் பண்றீங்க?”என எரிச்சலானாள்.

இவ்வளவு நேரம் குறும்பாக பேசியவன். இப்பொழுது காதலாக அவளைப் பார்த்து, இன்னும் அவளை தன்னுடன் இறுக்கி அணைத்து  பிடித்தவன் ” ஐ லவ் யூ அம்மு ! ஐ லவ் யூ டி! சுத்தமா என்னால முடியல டி.. என் மனசு உடம்பு ரெண்டுமே, நீ வேணும்னு கேட்குது.. உன் பார்வைக்கு ஏங்கி தவிக்கிறேன். இப்போ கூட என்னோட தேவைக்காக தான் உன் கிட்ட வரேனு நினைக்கும் போது அசிங்கமா இருக்கு டி எனக்கே!” என்று அவன் கூறி கூட முடிக்கவில்லை.

வேகமாக அவன் கன்னத்தில் ஒன்று விட்டிருந்தாள்.

  சத்தம் கேட்டு, பேசிக்கொண்டு இருந்த குழந்தைகளும் திரும்பினர் .

குழந்தைகள் திரும்பியவுடன் அவனிடம் இருந்து, பிரிய முயன்று, அவன் கையை தட்டி விட்டு எழுந்து நிற்க முயன்ற படி நெளிந்தாள். 

தந்தையின் மடியில் தாய் உட்கார்ந்து இருப்பதை பார்த்த குழந்தைகள் எதுவும் பேசாமல் திரும்பி கொண்டனர்.

” என்னடா என்ன சத்தம்?” என்று இந்த பக்கம் கேட்க.

” ஒன்னும் இல்ல பாட்டி”என்று மீண்டும் பேச ஆரம்பித்தனர் இருவரும்..

அவன் அவளை பாவமாக பார்க்க.

அவனை மேலும் கீழும் பார்த்தவள் ,”தப்பு தப்பா பேசிட்டு இருக்கீங்க “என்றவள் வேறு எதுவும் கூறாமல், அவன் கையை வேகமாக தட்டிவிட்டு எழுந்து கொண்டாள்.

அவனுக்கு அவள் அடித்ததில் வலியோ ?வருத்தமோ? அல்ல. அத்தனையும் மீண்டும் கிடைத்துவிட்டது போன்ற ஒரு உணர்வை உணர்ந்தான். போன் பேசி விட்டு வந்த  குழந்தைகளிடம் “தூங்கலாமா ?”என்று கேட்க 

“அப்பா கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கலாம் தூக்கம் வரல.விளையாடலாமா?” என்று கேட்டனர் .

“சரி ” என குழந்தைகள் இருவரையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்தான்.

வெளியில் இருக்கும் ஊஞ்சலில் இவன் நடுவில் உட்கார்ந்து கொண்டு, இருவரையும் ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார வைத்து ,சிறிது நேரம் கதை பேசி கொஞ்சியபடி  ஆட்டிவிட்டான்.

  நேரமாவதை உணர்ந்து ” நாளைக்கு ஸ்கூல் போகணும் உள்ள வாங்க!” என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்று தூங்க வைத்து இருந்தான் .

அதுவரை ஹாலிலேயே இருந்தாள் சுதா.

” அம்மு “என்று அவளிடம் நெருங்க..

அவனை முறைத்து விட்டு வெளியே சென்றாள்.

இவனும் வேகமாக வெளியில் வந்தான். அந்த ஊஞ்சலில் சென்று இப்பொழுது இவள் உட்கார்ந்து கொள்ள. அவள் அருகில் இவன் உட்கார்ந்தவுடன் அடுத்த நொடி அவனது தோளில் சாய்ந்திருந்தாள்.

” எனக்கு என் அம்மு கிடைச்சா போதும்டி .வேற எதையும் எதிர்பார்க்கல”

அவளிடம்  அமைதி.

” ப்ளீஸ் அம்மு! அன்னைக்கு நான் பண்ணது தப்புதான். இல்லைன்னு சொல்ல மாட்டேன் .என்னோட அமைதி உன்னை எந்த அளவுக்கு பாதிக்குதுன்னு எனக்கு புரியுது. ஆனா, என்ன விட்டுடாதடி எனக்கு இப்ப கொஞ்ச நாளா   பயமா இருக்கு அம்மு .நீ என்ன விட்டு விலகி போறன்னு தோணுது. அத்தைக்கிட்ட கூட நீ என்ன விட்டு கொடுக்க விரும்பல டி” என்றான்.

  அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீயும், அத்தையும் பேசினத கேட்டேன்.  நீ என்கிட்ட பழையபடி பேசனும்னு தான் ஆசைப்படுறேன். ஆனா “என்று அவன் மேற்கொண்டு பேச வர..

“நேரமாவது போய் தூங்கலாமா? நாளைக்கு வேலைக்கு போகணும்.” என்றாள்.

‘மேற்கொண்டு தான்  இதைப்பற்றி பேசுவது பிடிக்காமல் தான் இப்படி சொல்கிறாள்’ என்பதை உணர்ந்தவன் .

 

” இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம் டி” என்றான்..

 

இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாகவே சிறிது நேரம் கழிந்தது..

சிறிது நேரத்தில் உறங்கியும் இருந்தாள்.தன்னவளின்  சீரான மூச்சுக்காற்றில்  அவள் உறங்கியதை உணர்ந்தவன். பொறுமையாக அவளை உள்ளே தூக்கிக் கொண்டு சென்று கட்டிலில்  படுக்க வைத்தான்..

அவளிடம் இருந்து விலகும் போது ,”ஐ லவ் யூ ஆதி!” என்றாள் .

அவனுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது. உடலில் உள்ள ரோமங்கள் கூச்செரிந்தது.
இதழ்களில் தானாக புன்னகை மலர்ந்தது . “இன்னைக்கு  தூக்க கலக்கத்துல என்னோட நெருக்கத்தை உணர்ந்து, நீ சொன்ன இந்த லவ் யூ! நீ நினைவோடு இருக்கும்போது சொல்லணும் டி. அதுக்கு தான் உன் ஆதி தவிச்சிட்டு இருக்கேன். உனக்கு தெரியாதுடி.. எனக்கு தான் தெரியும். இப்போ நான் கொடுக்கிற முத்தத்தை நீ தினமும் எனக்கு கொடுத்துட்டு இருந்த அம்மு.. காலைல ஆபீஸ் போறதுக்கு முன்னாடி, அவ்வளவு வேலைக்கு நடுவுலையும் .உன்னோட இருப்பை எனக்கு காட்டுவ..ஆன,இப்போ உன்னோட ஒத்தப் பார்வைக்கு  ஏங்கி தவிக்கிறேன். என்ன ரொம்ப ஏங்க வச்சிடாத அம்மு! ” என்று அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு ,மகிழ்ச்சியில் திக்கு முக்காடியபடி வந்து படுத்தான் ..

அவனுக்கும் நல்ல தூக்கம் தான். தூக்கத்தில் சொல்லி இருந்தாலும், அவளின் அந்த” ஐ லவ் யூ!” அவனுக்கு தேவமிர்தமாக தான்  இனித்தது..
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page