காதல் -24
“மிஸ்டர் சுந்தர், எங்க ப்ளேட் பேங்கில் AB- குரூப் இல்லை. உங்க சைடு ஏதாவது முயற்சி பண்ணிங்கலா?”. என டாக்டர் கேட்க,
சுந்தரும் “எங்க சைட்ல யாருக்கும் இந்த ப்ளேட் குரூப் இல்லை டாக்டர். என் அப்பாக்கு மட்டும் தான் இந்த குரூப். ஆனா இப்ப அவரும் உயிரோட இல்லை சார்” என்று அவர் கண்கலங்க கூறினார்.
அச்சமயம் அருண் அவர்களிடம் நெருங்கி வந்து “சார் நான் வாட்ஸ்ஆப் குரூப்ல சாரோட நிலைமையை பத்தி ஷேர் பண்ணி இருக்கேன். அதில் ஒருத்தருக்கு AB- தான் சார். அவர் இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள வந்துடுவாரு. நீங்க போய் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க டாக்டர்” என்றான் இரத்தம் கிடைத்த மகிழ்ச்சியில்.
மருத்துவரோ “நோ,நோ முதல அந்த ப்ளேட் டோனர் வரட்டும். அவரை செக் பண்ணி தான் நாங்க ப்ளேட் எடுப்போம். அதுக்கு பிறகு தான் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண முடியும். சீக்கிரம் அவங்கள வர சொல்லுங்க. இன்னும் இருபது நிமிசத்துல அவருக்கு நியூ பிளட் ஏத்தணும் இல்லனா அவரை காப்பாற்ற முடியாமல் போயிடும்.” என்று கூறிய மருத்துவர் அங்க இருந்து நகர்ந்து சென்றார்.
அருண் ப்ளேட் டோனருக்கு அழைத்து “ஹலோ எங்க இருக்கீங்க சார்?”. என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அருணிடம் இருந்து போனை பிடிங்கி,
“சார் ப்ளீஸ் எங்க இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரமா வாங்க சார். என் இன்பா உயிர் உங்க கையில தான் இருக்கு. உங்களை கடவுளா நினைச்சி கேக்குறேன் தயவு செய்து சீக்கிரம் வாங்க” என்று கீதா கண்ணீரோடு எதிர்முனையில் இருந்தவரிடம் வேண்டினாள்.
‘அந்த பெண்ணின் குரலும், என் இன்பா’ என்ற வார்த்தையையும் கேட்ட ப்ளேட் டோனர் சற்று அதிர்ந்தே விட்டார்.
‘இது..இது..நம்ம கீத்து குரல் மாதிரியே இருக்கு. அதுவும் இன்பா என்றால் அப்ப நம்ம இன்பாக்கு தான நான் ப்ளேட் குடுக்க வந்து இருக்கேன். அவனுக்கு என்ன ஆச்சி?’ என்று இன்பாவின் மேல் இருந்த கோபத்தை எல்லாம் மறந்து அந்த நபரின் மனம் பதற்றமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவர் நான்கே தாவில் டாக்டர் அறையில் மூச்சி வாங்க நின்றார்.
“யாரு நீங்க? உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணும் என்ற மேனஸ் கூட இல்லையா?”
“சாரி டாக்டர் சாரி. இங்க இன்பராஜா பேஷன்டுக்கு என்னாச்சு. அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்?” என்று அந்த நபர் பயத்துடன் கேட்க,
மருத்துவர் புருவங்களை சுருக்கி “ஆமா நீங்க யாரு?” என்று கேடார்.
அக்கேள்வியில் தடுமாறி போன அந்த நபர் “நான்.. நான் அந்த பேஷன்டுக்கு ப்ளேட் குடுக்க வந்து இருக்கேன்.” என்று கூறினார்.
அதை கேட்டவர் “ஓ மை காட்! சீக்கிரம் வாங்க. அவரு ரொம்ப க்ரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்காரு. பஸ்ட் அவருக்கு நியூ பிளட் ஏத்தணும், வாங்க என் கூட” என்று டாக்டர் முன்னே செல்ல.
அவரை தடுத்து “ஒரு நிமிஷம் டாக்டர், இன்பராஜா இருக்குற ரூமுக்கு போக வேற வழி இருக்க?” என்று கேட்டார்.
டாக்டரோ புரியாமல் “ஏன்” என்று சந்தேகமாக கேட்க.
சற்று தயங்கியபடி “அது எனக்கு அவங்க குடும்பத்தில் இருக்குறவங்களை பார்க்க பிடிக்கவில்லை. உங்களுக்கு தேவை பிளட் தானே வேணும். எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க டாக்டர். பட் என் ராஜாவ காப்பாத்துங்க.” என்ற அந்த நபரின் வார்த்தையில் உண்மையை உணர்ந்த டாக்டர் வேறு வழியில் அழைத்து சென்று பரிசோதித்து அந்த நபர் ரத்தத்தை இன்பாவுக்கு செலுத்தி ஆப்ரேஷனை ஆரம்பித்தார்.
அந்த நபரின் மனதிலோ
‘உனக்காக நான் எதுவும் செய்வேன் என்று அன்னிக்கு நான் சொன்னது உண்மைடா. நீ என் கிட்ட கேட்டியே எனக்காக உன் உயிரை கூட குடுப்பியா என்று? அன்று அதை உன் கண்ணு முன்னாடியே நிருபித்தேன் ராஜா.
ஆனா, நீ கொடுத்த ரத்தம் திரும்பவும் உனக்கு நான் ரத்தம் கொடுக்குற நிலைமை வரும், என நான் நினைக்கவில்லை. நான் உன்கிட்ட அப்படி சண்டை போட்டு இருக்க கூடாதுடா. அதுவும் ஒரு பொண்ணுக்காக.’என்று அந்த நபரின் விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது. ( இந்த நபர் யாருன்னு அப்புறம்..சொல்றேன் Friends 😁 இல்லன்னா..பிளாஷ்பேக்ல உங்களுக்கே தெரியும். அது வரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க😊)
செவிலியர் வெளியே வந்து ராஜாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்ற தகவலை செல்லிவிட்டு சென்றாள்.
அவர்கள் ஏற்பாடு செய்த நபர் வந்துவிட்டதாகவும், ஆப்ரேஷன் ஆரம்பிக்க போகிறோம் என்றும், ஆப்ரேஷன் பார்மில் கையெழுத்து வாங்கி பில் கட்ட சொல்லிவிட்டு சென்றாள்.
கீதா அந்த நபரை பார்த்து நன்றி கூற வேண்டும் என்று சொல்ல, அவங்க யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றாள் நர்ஸ்.
கீதாவுக்கு , இப்போதைக்கு தன்னவன் பிழைத்தால் போதும் என்று கடவுளிடம் பிராத்தனை செய்தாள். அதற்குள் சுந்தர் பில் பணத்தை கட்டிவிட்டு வந்தார்.
வசந்தா தன் கணவனிடம் வந்து பேச தொடங்கினார். “ஏங்க உங்கக்கிட்ட ஒன்னு கேட்கணும்”.
“நீ..என்ன கேட்க போறனு தெரியும் வசந்தா. அதை நான் உனக்கு சொல்வதை விட உன் மருமகள் சொன்னா தான் நம்ம பையன் அந்த பொண்ணு மேல எந்த அளவுக்கு காதல் வைத்து இருக்கிறானு உனக்கு தெரியும்.” என்று கூறும் கணவனை பார்த்து
“நான் புரிஞ்சிக்கிட்டேன்ங்க. ஒருத்தவங்களுக்காக தன் உயிரைக் கூட பத்தி கவலைப்படாமல் அவங்களுக்காக உயிரையும் குடுக்குறவங்க அன்பு தான்ங்க இந்த உலகத்தில் ரொம்ப பெருசு. என் மகன் அந்த பொண்ணு மேல எந்த அளவுக்கு பாசம் வைத்து இருக்கானு புரிஞ்சிக்கிட்டேன். அவனுக்காக நான் என் மனசை மாத்திக்கிட்டேன். ஆனா, எனக்கு இருக்குற சந்தேகம் எப்போ இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு அது எப்படி உங்களுக்கு தெரியும். அன்னிக்கு கூட அவன் சண்டை போடும் போது இதை பத்தி தான் சொல்ல வந்தான். நீங்க தான் தடுத்துட்டீங்க, சரியாங்க.” என்று தெளிவாக பேசும் மனைவியை ஆச்சிரயத்துடன் பார்த்தார்.
பின், “ம் ஆமா வசந்தா. உனக்கு தெரிந்தால் உன்னால தாங்கிக்க முடியாதுனு தான் நான் மறைச்சேன். நான் மட்டும் இல்லை இந்த விஷயம் உன்னை தவிர மீதி எல்லாருக்கும் தெரியும்.” என்று சொல்ல.
“என்னங்க சொல்றீங்க” என்று அதிர்ந்து போனாள்.
சுந்தரோ “அமைதியா இருமா. நம்ம பையனுக்கு நல்ல படியா ஆப்ரேஷன் முடியட்டும். அவன் கண்ணை முழிச்சதும் எல்லாத்தையும் சொல்றேன்.” என்று பொறுமையாக கூறினார்.
அதே சமயம் அருண், கீதாவை அழைத்து “உன்கிட்ட கொஞ்சம் பேசனு ஏஞ்சல்” என்றான்.
ப்ரியாவும் அவர்கள் அருகில் வந்து நிற்க,
“இப்போ என்ன பேச போற அருண். நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன். நீ மேலும் மேலும் கேள்வி கேட்டு என்னை கஷ்ப்படுத்தாதே” என்று கவலையோடு கூறினாள் கீதா.
அருணோ “ப்ளீஸ் ஏஞ்சல் நீ உண்மையை சொல்லலனா எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்குமா. உனக்கும் ராஜா சாருக்கும் என்ன சம்பந்தம். நீ அவருடைய மனைவியா? எப்போ உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு” என கேள்விகளை அடுக்கினான் அருண்.
கீதாவுக்கும் இதற்கு மேல் மறைக்க எதுவும் இல்லை என நினைத்து சொல்ல தொடங்கினாள்.
இவர்களின் பேச்சு வசந்தா,சுந்தர் காதிலும் விழ கீதா தொடர்ந்தாள்.
தன்னவனை பார்த்த முதல் நாளில் இருந்து தன் பிறந்த நாளுக்கு வந்து மகிழ்ச்சியாக இருந்தது வரை சொல்லி முடித்து மீண்டும் தொடர்ந்தாள்.
(ப்ளாஷ் பேக்)
“கீத்து”.. என்று ராஜா சொல்ல.
“ம்ம்ம்”.. என்று கீதா சொல்ல.
மீண்டும் “கீத்து”.. என்று அவன் கூற.
“ம்ம்ம்..சொல்லு டா”.. என்றாள் கீதா.
ராஜாவோ மீண்டும் “கீத்து”.. என்று சொல்ல வர. அதில் கடுப்பான சூரியாவோ,
“டேய் சொல்லி தொலைடா. எப்போ பாரு கீத்து கீத்து கீத்து சொல்லிட்டு, ஏன்டா ராஜா உங்களுக்கு வேற வேலையே இல்லையா? நீ கீத்து சொல்லுவ, அந்த அம்மா, ம்ம் சொல்லுவாங்க. இது தவிர உங்களுக்கு வேற வார்த்தையே கிடைக்காதாடா பேச”. என சூரியா கடுப்பாகினான்.
கீதாவோ “டேய் அண்ணா உனக்கு லவ் வரும் போது எங்க பீலிங் என்னனு தெரியும். அதுவரை உனக்கு எங்களை பார்த்த பொறாமை தான் வரும்” என்று கீதா கடுகடுத்தாள்.
இன்பாவோ கீதாவின் கையை வருடிக்கொண்டு மீண்டும் “கீத்து” என ஆரம்பித்தான்.
இதில் மேலும் சூர்யாவுக்கு ஆத்திரம் வர, இன்பாவின் தலையில் நறுக்கு என்று கொட்டினான்.
கீதாவுக்கு சிரிப்பு தான் வந்தது.
“டேய் ஏன்டா என் தலையில் கொட்டுன.”தலையை தேய்த்துக் கொண்டு மீண்டும் தன்னவளின் கையை பிடித்தான்.
சூரியாவோ “ஏன்டா கேட்க மாட்ட. இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன். நீங்க ரொமான்ஸ் பண்றீங்க. ஏதோ, நீங்க இரண்டு பேரும் பீச்சுக்கு கூப்டிங்கனு வந்தா, பீச்சுக்கும் போகாம, காரை விட்டு வெளியவும் போகாம, ஒரு சின்ன குழந்தையை காரை எடுத்துட்டு வர சொல்லிட்டு, என்னையவே ட்ரைவ் பண்ண சொல்லிட்டு, இங்கே ஓரமா காரை நிக்க வச்சிட்டு யாரோ வருவாங்கனு சொன்னீங்க. அவளும் இன்னும் வரல. ஆனா உங்களுக்கு ரொமான்ஸ் கேட்குதாடா ராஜா” என வராத கண்ணீரை துடைப்பதுப் போல் பாவனைக்காட்டினான்.
ராஜாவோ “மச்சி நடிக்காதடா இன்னிக்கு சண்டே பூகம்பமே வந்தாலும் நீ உன் தூக்கத்தை விட்டு வர மாட்டனு எனக்கு தெரியாதாடா. அதான் உன்னை வர வைக்க ஒரு சின்ன பொய் சொன்னேன்டா. ரம்யாவும் வரானு மட்டும் தான் சொன்னேன். அடுத்த பத்து நிமிஷத்துல நீ என் வீட்டு வாசல்ல காரோட நிக்குற. நானும் ஓகேனு என் ஆளுகூட வந்தேன். ஆனா நீ தான் ரம்யா வீட்டு தெருவுல நிக்குற. நாங்க நிற்க சொல்லலையே” என்று தன் நண்பனை வம்பு இழுத்தான்.
அதை கேட்ட சூரியா அதிர்ச்சியுடன் “என்னது ரம்யா வருவான்னு சும்மா சொன்னியா?” என்று வாயை பிளந்து கேட்க, இருவரும் கையை அடிக் கொண்டு சிரித்தனர்.
“என்னை ஏமாத்திடிங்க. போங்க உங்க கூட நான் பேச மாட்டேன்”
என்று காரை விட்டு இறங்கினான் சூரியா.
கீதாவோ “இன்பா பாவம்டா சூர்யா அண்ணா. போய் சமாதானம் பண்ணு அதுக்குள்ள நான் ரம்யாவுக்கு போன் பண்றேன்” என்று கூறியவள் தோழிக்கு அழைத்தாள்..
இன்பா தன் நண்பனை சமாதானம் செய்ய, சூர்யாவும் தன் நண்பனை மட்டும் போகுமாறு சொல்லிவிட்டு திரும்ப அங்கு ரம்யா அழகாக நடந்துக்கொண்டு வந்தாள்.
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றவனை சொடுக்கு போட்டு தன்நிலைக்கு அழைத்து வந்தாள் ரம்யா.
“போலாமா?”.என்ற வார்த்தையை கேட்டு தன் நண்பனை பார்க்க அங்கு அவன் இல்லாததை பார்த்து காரை பார்க்க இன்பாவும் கீதாவும் கண் அடித்துக்கொண்டு முன் சீட்டில் அமர்ந்து இருந்தனர்.
சூர்யா “ஈஈஈஈ.” என இளித்துக்கொண்டு ரம்யாவுடன் பின் இருகையில் அமர்ந்தான்.
ரம்யாவுக்கும் சூர்யாவை பார்த்ததும் படபடத்த மனதை அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
‘இவ என்ன வேடிக்கை பார்த்துட்டு வரா” என்று அலுத்துக்கொண்டு ராஜாவை பார்த்தவனின் காதில் புகை வட்டம் வட்டமாக வந்தது.
காரை ஓட்டிக் கொண்டு கீதாவின் கையை ஸ்டேரீங் மேல் தன் கையோடு வைத்து வண்டியை ஓட்ட. தன்னவனின் செயலில் வெட்கம் வர, தன் கையை எடுக்க முயன்று தோற்றாள்..
ராஜாவின் பார்வை அவளை ஏதோ செய்வதை உணர்ந்து வெளிப்பக்கம் பார்வை வீசினாள். இதற்கு மேல் கீதாவை இம்சிக்க கூடாது என்று வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் ராஜா.
கடற்கரை வரவும் நால்வரும் பீச்சில் ஒரு ஆட்டம் போட்டு சோர்ந்து வந்து மணலில் அமர்ந்து கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது ‘தன்னை யாரோ உற்று பார்ப்பதுப் போல் உணர்ந்த கீதா, சுற்றும் முற்றும் பார்க்க யாரும் இல்லாமல் போக இங்கு இதற்கு மேல் இருந்தால் சரி வராது என உணர்ந்து வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொன்னாள்.
இன்பா “ஏன் இவ்வளவு சீக்கிரமா? நம்ம வந்து இரண்டு மணி நேரம் தான் ஆகுது கீதா” என்றான்.
“ம் ஆமாடி இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்டி” என்று ரம்யாவும் கூற, சூர்யாவும் சொல்ல வேறு வழியின்றி அமைதியாக அமர்ந்தாள்.
கீதாவின் மௌனத்தையும் கண்ணில் பயத்தையும் பார்த்தவன் போகலாம் என்று மூவரையும் அழைத்துச் சென்றான் ராஜா.
சூர்யாவோ “மச்சி காரை நான் ட்ரைவ் பண்றேன்டா, அப்படியே ரெஸ்டாரன்ட் போகலாம் பசிக்குது” என்றான் சூர்யா.
“ம்”என்று மட்டும் தலையசைத்தான் ராஜா..
ராஜாவின் ம்ம் என்ற சொல்லில் கோபத்தை உணர்ந்தவள் அமைதியாக வந்தாள் கீதா.
ரெஸ்டாரன்டில் காரை நிறுத்தியதும் இன்பா வேகமாக உள்ளே போக, அவனை தொடர்ந்து கீதாவும் போனாள்.
சூர்யா உள்ளே செல்ல ரம்யா தயங்கி நின்றதைக் கண்டு “என்னாச்சு ரம்யா? வா உள்ள போலாம்” என்க.
அவளோ “அது நான் இந்த மாதிரி இடத்துக்கு வந்தது இல்ல” என்று தயங்கினாள்.
அதை கேட்ட சூர்யா மெல்லிய புன்னகையோடு “ஏன் பயப்படுற அதான் நான் இருக்கேன்ல வா” என்று அவன் கையை நீட்ட,
சூர்யா சொன்ன வார்த்தை ‘நான் இருக்கேன்’ என்றதும், நம்பிக்கையுடன் அவனின் கையை முதல் முதலாக பிடித்தாள் ரம்யா.
சூர்யா பழக்கப்பட்ட இடம் போல் அந்த இருட்டில் வேகமாக கம்பீரத்துடன் செல்ல அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சூர்யாவின் மீது முட்டி மோதி விழ போனவளை தன் கைகளால் சுற்றி பிடித்து நின்றான்.
அந்த மின்னிய வெளிச்சத்திலும் இருவரும் கண்களும் சில நிமிடம் பரிமாறிக் கொள்ள, பின் ரம்யாவை நிற்க வைத்துவிட்டு “என் பின்னால் வா” என்று கட்டளைவிட்டு சென்றான்.
அங்கு அவனை பார்க்கும் அனைவரும் சல்யூட் அடிக்க. இவனும் தலையை மட்டும் அசைத்து நடந்து ஒரு அறைக்குள் சென்றனர். ரம்யா சுற்றி முற்றும் பார்த்து பிரம்மித்து போனாள்.
“ஏய் ரம்யா வாடி” என்ற கீதாவின் அழைப்பில் அவள் அருகில் அமந்தாள்.
ரம்யாவோ எதிரே இருந்த ராஜாவை பார்த்துவிட்டு தோழியின் காதில் “என்னடி ராஜா அண்ணா உன் எதிர்க்க உட்கார்ந்து இருக்காரு? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் இல்லைடி” என்று கூறியவள் சமாளிக்கும் பொருட்டு “சரி சாப்பிட உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள்.
ரம்யாவோ “கீதா இங்க எல்லாம் ரொம்ப காட்ஸ்லியா இருக்கும் போலடி, என்கிட்ட அவ்வளவு காசு இல்லையேடி” என்று ரம்யா கூற.
தன் தோழியின் வெகுளிதனமான பேச்சைக் கேட்டு ரசிக்கவே செய்தாள் கீதா.
“என்ன இரண்டு பேரும் மெதுவா பேசிட்டு இருக்கிங்க” என சூர்யா கேட்க.
“அது வந்து சூர்யா” என கீதா பேச்சை தொடங்க, ரம்யா இடையில் புகுந்து “எனக்கு இரண்டு இட்லி ஒரு மசால் வடை போதும்” என்று சொன்னாள்.
அதுவரை இன்பா இவர்கள் பேச்சை காதில் வாங்கினாலும் எங்கோ பார்வையை சொலுத்திக் கொண்டு இருந்தவன் ரம்யா கூறியதை கேட்டு, திரும்பி சூர்யாவை பார்த்து இருவரும் சிரிக்க தொடங்கினார்கள்.
கீதா ரம்யாவிடம் திரும்பி “மானத்தை வாங்கிட்டியேடி” என்று தலையில் கை வைத்துக் கொண்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.
ரம்யா புரியாமல் “ஏன் நான் ஏதாவது தப்பா கேட்டுடேனா? எதுக்கு சிரிக்கிறீங்க” என்று கோபமாக கேட்டாள்.
இன்பா ரம்யாவிடம் திரும்பி ‘நீயும் அப்படியே உன் தோழி போல் தான் நடந்துக்குற.” என்றான்.
“என்ன சொல்றிங்க அண்ணா எனக்கு புரியவில்லை” என்று ரம்யா கேட்க.
“அது வந்துமா ஒரு நாள் நாங்க மூன்று பேரும் இந்த ஹோட்டல்ல சாப்பிட வந்தோம். இதே மாதிரி சாப்பிட என்ன வேணும்னு கேட்டோம். இப்ப நீ சொன்ன பதிலை, அதே மாதிரி தான் கீதாவும் சொன்னா. அதான் எங்களுக்கு சிரிப்பு வந்துடுச்சு” என்று சிரித்துக் கொண்டே கூறியவன் “ஆனால் இங்க இட்லி கிடைக்காதுமா” என்றும் கூறினான்.
அதை கேட்ட ரம்யாவோ “ஓ.. நாங்க இரண்டு பேரும் அந்த அளவுக்கு ஒற்றுமையா இகுக்கோம் அண்ணா” என தன் தோழியை கட்டிக்கொண்டு கூறியவளை ஏக்கத்துடன் பார்த்தான் சூர்யா.
பிறகு, சூர்யாவே நான்கு பேருக்கும் தேவையான உணவுகளை ஆர்டர் செய்தான்.
சாப்பிட்டு முடித்து கிளம்ப ரம்யா திரு திருவென முழித்துக்கொண்டு நின்றாள். சூர்யா என்னவென்று கேட்க, “பில் குடுக்காமல் கிளம்புறிங்க. அப்புறம் நம்மளை மாவு ஆட்ட விட போறாங்க. அய்யோ இங்க தான் இட்லி கூட இல்லையே, அப்புறம் எப்படி மாவு ஆட்ட விடுவாங்க. ஒரு வேளை” என ரம்யா சொல்லும் முன்பே.
கீதா அவள் அருகில் வந்து “ஏய் லூசு அப்படியே என்னை மாதிரியே சொல்றியேடி.” என சொல்ல,
ராஜா தன் கோபத்தை மறந்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான். சூர்யாவும், அதே போல் சிரிக்க ரம்யாவின் ஒரு பார்வையில் அடங்கினான் சூர்யா.
ராஜாவோ “ரம்யா இது சூர்யாவோட ரெஸ்டாரன்ட்மா” என சொல்லில்லதை கேட்ட, ரம்யாவிற்கு அதுவரை இருந்த சந்தோஷம் மொத்தமும் பறி போனது போல் உணர்ந்தாள். அதை சூர்யாவும் கவனித்தான்.
பின் வீட்டை நோக்கி அனைவரும் செல்ல “மச்சி நான் உன்னையும் கீதாவையும் பர்ஸ்ட் இறக்கி விடுறேன். அப்புறம் ரம்யாவை இறக்கிவிட்டு வரேன். அதுக்குள்ள நீங்க பேசிட்டு இருங்க, அப்புறம் உன்னை வீட்ல ட்ராப் பண்றேன்டா” என்றான்.
‘பீச்சில் இருந்து தன் நண்பன் சரியில்லை என்று தோன்றி இப்போது இவர்களுக்கு தனிமை தேவை’ என நினைத்து தனக்கும் தனிமை தேவை என்று உணர்ந்து அவர்களை இறக்கிவிட்டு விட்டு,
அடுத்த தெருவில் இருக்கும் ரம்யா வீட்டுக்கு ஊர்வலமாக வண்டியை செலுத்தியவனை ரம்யா முறைத்து பார்தத்தாள்.
அவள் பார்வைக்காகவே காத்திருந்தவன் போல் காரை ஓரமாக நிறுத்தி “நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ரம்மி”.என்றான்.
அவனது ரம்மி என்ற வார்த்தை ரம்யாவை ஏதோ செய்ய அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல், காரை விட்டு இறங்கி மின்னல் வேகத்தில் வீட்டுக்கு சென்றாள்.
‘நான் இப்ப என்ன இவ கிட்ட கிஸ்ஸா கேட்டேன். மின்னல் வேகத்துல போய்ட்டாள்’ என்று யோசித்துக் கொண்டு வண்டியை கிளப்பினான் சூர்யா.
அங்கே “இன்பா ஏன் கோபமா இருக்க?” என்று கீதா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,
‘நான் ஏன் கோபமா இருக்கனும். நான் கோபமா எல்லாம் இல்லை.” என்றான் கோபத்துடனே.
கீதாவோ “பொய் சொல்ற, பீச்ல இருந்தே நீ கோபமா தான் இருக்க. நான் கவனிச்சிட்டு தான் இருந்தேன்.” என்றாள்.
அதை கேட்ட ராஜாவோ “ஓ, சரி சொல்லு ஏன் அங்கே இருந்து கிளம்பலாம்னு சொன்ன?” என்று ராஜா நேரடியாக விசியத்திற்கு வாந்தான்.
கீதாவோ சற்று தயக்கத்துடன் “இல்ல..டைம் ஆச்சு அதான் இன்பா”.
“நீ பொய் சொல்ற கீத்து” என்று சொல்ல வந்தவன். “கீதா” என்று அழுத்தமாக கூறினான்.
அவனின் கீதா என்ற வார்த்தையை கேட்டவளுக்கு சுறுக்கென்று கோபம் வந்தது “கீதாவா? ஓ கீத்துலா இருந்து கீதாவா? எப்போதுல இருந்து இன்பா நான் கீதாவா ஆனேன். ஆமாடா, எனக்கு பீச்சுல இருக்க பிடிக்கல, அதான் கிளம்ப சொன்னேன்” என்று கோபமாக கத்தினாள்.
இன்பாவுக்கும் அதே கோபம் வந்தது. “அப்படினா நீ பீச்சுக்கே வந்து இருக்க கூடாது கீதா.” என்று மீண்டும் கீதா என்று கூறினான்.
‘தன்னவன் தன்னை மீண்டும் மீண்டும் கீதா..என்று யாரோ ஒருவர் போல் பேச’ அவளுக்கு ஆத்திரமாக வந்தது.
வேண்டும் என்றே தன்னவனை “மிஸ்டர்.ராஜா, நீங்க கூப்பிட்டதும் என் அப்பா கிட்ட சொல்லிட்டு உங்க பின்னாடி வந்தேன் இல்லையா என்ன சொல்லணும்.” என்று அவளும் ஏட்டிக்கு போட்டியாக பேசினாள்.
அவளின் மிஸ்டர்…என்ற வார்த்தையில் அவனுக்கு கோபம் தலைக்கு ஏற… பக்கத்தில் இருந்த கம்பத்தை ஒங்கி ஒரு குத்து விட்டான்.
“இந்த அடி உனக்கு விழ வேண்டியது. பொண்ணுங்களை கை நீட்டி அடிக்குறது ஆம்பளைக்கு அழகு இல்ல என்று நினைக்குறவன் நான். அதை மீற வச்சிடாத.” என்று சீறினான்.
அதற்குள் சூர்யா அங்கு வர “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? கையை காட்டுடா? லூசாடா நீ, வா ஆஸ்பத்திரிக்கு போலாம். கீதா நீ உள்ள போமா இவனுக்கு கோபம் வந்தா இப்படி தான் தன்னை தானே வருத்திப்பான். நான் அவனை பார்த்துக்கிறேன் நீ போமா” என இன்பாவை அழைத்துக்கொண்டு சென்றான் சூர்யா.
தன்னவனின் கோபத்தை முதல் முதலில் கண்டவள் அதுவும் கோபத்தில் தன்னை தானே வருத்தி கொண்டவனை, அவர்கள் சென்ற திசை கண்ணீருடன் பார்த்து நின்றுக்கொண்டு இருந்தாள் கீதா.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
